search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    முதல் போனிலேயே இவ்வளவு பிரச்சனைகளா? - நத்திங் நிறுவனம் மீது குவியும் புகார்கள்
    X

    முதல் போனிலேயே இவ்வளவு பிரச்சனைகளா? - நத்திங் நிறுவனம் மீது குவியும் புகார்கள்

    • நத்திங் போன் 1 வெளியானது முதல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
    • இதற்கு ஹார்ட்வேர் குறைபாடு தான் காரணம் என கூறப்படுகிறது.

    நத்திங் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் முதல் ஸ்மார்ட்போனை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. டிரான்ஸ்பரண்ட் பேக் பேனலுடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பேக் பேனலில் எல்.இ.டி ஸ்டிரிப்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. நோட்டிபிகேஷன்கள் வரும் போது இது ஒளிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

    நத்திங் போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. புராசஸரை பொருத்தவரை இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 778G+ புராசஸரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது.

    இதுதவிர முன்புறம் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. 4,500 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட இதில் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதில் 5ஜி மற்றும் 4ஜி எல்.டி.இ போன்ற கனெக்டிவிட்டி ஆப்சன்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.


    இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், வெளியானது முதல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக இதில் உள்ள ஹார்ட்வேர் குறைபாடு காரணமாக டிஸ்ப்ளேவில் கருப்பு நிறத்திற்கு பதிலாக பச்சை நிறத்தில் காட்சி அளிக்கின்றன. ஒருசிலர் இந்த பிரச்சனை காரணமாக போனை திருப்பு அனுப்பிய போதும் அதற்கு பதிலாக வரும் போனிலும் இதே பிரச்சனை வருவதாக கூறி புலம்புகின்றனர்.

    ஒருசிலருக்கோ செல்ஃபி கேமராவில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பன்ச் ஹோல் செல்பி கேமரா என கூறிவிட்டு அதன் வடிவமே வித்தியாசமாக இருப்பதாக கூறி சிலர் புலம்பி வருகின்றனர். இதற்கெல்லாம் நத்திங் நிறுவனம் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×