என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • அளவில் சிறிய ஸ்மார்ட்போன்களை வாங்க நினைப்பவர்களுக்கு ஐபோன்கள் மட்டுமே சிறந்த தேர்வாக இருக்கிறது.
    • ஓராண்டு மற்றும் அதற்கும் பழைய ஸ்மார்ட்போன்கள் தற்போதும் அதிக விலையிலேயே விற்கப்படுகிறது.

    வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் ஸ்மார்ட்போன் நம் வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. சமீப காலங்களில் ஸ்மார்ட்போன்கள் அளவில் பெரிதாகி விட்டன. தற்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்கள், அளவில் நம் கைகளை விட மிக பெரியதாக உள்ளன.

    சந்தையில் அறிமுகமாகும் புது ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானவை 6.0 இன்ச் மற்றும் அதற்கும் பெரிய திரை கொண்டுள்ளன. கையடக்க அளவில் கிடைத்து வந்த மொபைல் போன்கள், இன்று அளவில் பெரிதாகி கொண்டே வருகின்றன. இது ஒருசிலருக்கு பெரிய வடிவமாக உள்ளது.

    அளவில் சிறிய ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டன. மிக சொற்ப ஸ்மார்ட்போன்கள் மட்டுமே ஓரளவு சிறிய அளவில் வெளியாகின்றன. அதிலும் பெரும்பாலான போன்கள் ஆப்பிள் நிறுவனம் வெளியிடுவது தான் எனலாம். இத்தகைய போன்கள் விலை உயர்ந்தவையாக இருப்பதால் சாமானிய மக்களுக்கு எட்டா கனியாக உள்ளது.



    ஆப்பிள் நிறுவன மாடல்கள் ஓராண்டு மற்றும் அதற்கும் பழைய ஸ்மார்ட்போன்கள் தற்போதும் அதிக விலையிலேயே விற்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் புது போன்கள் வெளிவரும் போதும் பழைய போன்கள் ஓரளவே விலை குறைக்கப்படுகிறது, குறிப்பாக ஆப்பிள் இதனை தனது வியாபார தந்திரமாகவே வைத்துள்ளது.

    ஆண்ட்ராய்டு போன்கள் பெரும்பாலும் 6.4 இன்ச் திரை கொண்டுள்ளன. அதிலும் 6.2 மற்றும் 5.8 இன்ச் திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை கூகுள், அசுஸ் என குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே இன்றும் வெளியிடுகின்றன. அளவில் சிறிய ஸ்மார்ட்போன்களை வாங்க நினைப்பவர்களுக்கு ஐபோன்கள் மட்டுமே சிறந்த தேர்வாக இருக்கிறது.

    • பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமினை கூகுள் பிளே ஸ்டோரில் 10 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர்.
    • பப்ஜி மொபைல் கேமின் புது வடிவமாக அறியப்படும் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் டவுன்லோட்களில் அசத்தி வருகிறது.

    பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேம் கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோட்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கிராப்டான் நிறுவனம் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமினை ஆண்ட்ராய்டு தளங்களுக்கென கூகுள் பிளே ஸ்டோரில் கடந்தாண்டு வெளியிட்டது. முன்னதாக இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல் கேமின் புது வடிவமாக அறியப்படும் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் டவுன்லோட்களில் அசத்தி வருகிறது.

    இதுவரை பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமினை கூகுள் பிளே ஸ்டோரில் 10 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர். வெளியிடப்பட்ட ஒரே ஆண்டில் 10 கோடிக்கும் அதிகாமானோர் டவுண்லோட் செய்துள்ளனர். இதையொட்டி பல்வேறு போட்டிகளையும் நடத்த உள்ளதாக கிராப்டான் நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.


    பேட்டில்கிரவுண்ட்ஸ் பயனர்களுக்காக நடத்தப்படும் இந்த போட்டியில் பரிசுகளும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பரிசுக்காக ரூ.6 கோடி வரை அந்நிறுவனம் செலவழிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டிகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்தியாவில் நத்திங் போன் 1 பிளிப்கார்ட் தளம் மூலம் விற்பனைக்கு வர உள்ளது.
    • நத்திங் போனுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள ஈவண்ட்டில் வெளியிட உள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால், அந்த போன் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் இந்தியாவில் இந்த போன் பிளிப்கார்ட் தளம் மூலம் விற்பனைக்கு வர உள்ளது. இந்நிலையில், இந்த போனுக்கான முன்பதிவு இன்று முதல் பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு பாஸ் ஒன்று வழங்கப்படும் அது இருந்தால் மட்டுமே நத்திங் போனை வாங்க முடியும்.


    இந்த போனை முன்பதிவு செய்ய ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும், அந்த தொகையை செலுத்தினால் தான் பாஸ் வழங்கப்படும். இந்த 2 ஆயிரம் ரூபாய் முன்பதிவு தொகை, போன் வாங்கும்போது அதன் மொத்த விலையில் கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை 30 ஆயிரம் என கூறப்படுகிறது. அறிமுகமாகும் போது தான் அதன் ஒரிஜினல் விலை என்ன என்பது தெரியவரும்.

    • சாம்சங் கேலக்ஸி M32 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இருவித ஆப்ஷன்களில் வருகிறது.
    • 6000mAh பேட்டரி, 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி என பல்வேறு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு உள்ளன.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M32 மாடல் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. சாம்சங் கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இருவித ஆப்ஷன்களில் வருகிறது.

    அறிமுகமானபோது இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ. 14 ஆயிரத்து 999 எனவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ. 16 ஆயிரத்து 999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.


    இந்நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.2 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 12 ஆயிரத்து 999-க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 14 ஆயிரத்து 999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி M32 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதம், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், குவாட் கேமரா செட் அப், 20MP செல்பி கேமரா, 6000mAh பேட்டரி, 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    • வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வி செயலியில் 20 மொழி பாடல்கள் உள்ளன.
    • காலர் டியூன் சந்தாதாரர்கள் வி ஆப் மியூசிக்கை எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வோடபோன் ஐடியா (வி) நிறுவனத்தின் சந்தாதாரர்கள் போன் செய்யும் போது வழக்கமாக வரும் 'ட்ரிங் ட்ரிங்' ஒலிக்கு மாற்றாக தாங்கள் விரும்பும் பாடல்களை தேர்வு செய்து, அவற்றை இன்கமிங் அழைப்புகளுக்கு செட் செய்யும் வசதியை பெற்று உள்ளனர். இதன்மூலம் பயனர்கள் அவர்களுக்கு விருப்பமான பாடல்களை தேர்வு செய்து வைத்துக் கொள்ளலாம்.

    வி செயலியில் விளம்பர தொந்தரவு இன்றி சமீபத்திய ஹிட் பாடல்களில் துவங்கி ஏராளமான பாடல்கள் ஹெச்.டி. தரத்தில் வழங்கப்படுகிறது. இதில் 20 மொழி பாடல்கள் உள்ளன. பத்து பிரிவுகளில் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த பாடல்களை பயனர்கள் தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


    காலர் டியூன் சந்தாதாரர்கள் வி ஆப் மியூசிக்கை எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய பாடல்களை காலர் டியூனாக வைக்க பயனர்கள் மாதாந்திர அடிப்படையில் சந்தா கட்டி பயன்படுத்தலாம்.

    அப்படி காலர் டியூனுக்கான மாதாந்திர சந்தா விலை ரூ. 49-இல் இருந்து துவங்குகிறது. இது மூன்று மாதத்திற்கு ரூ. 99, ஒரு வருடத்துக்கு ரூ. 249 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. காலர் டியூன் சேவையில், இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்து கொள்ளும் வசதியும் கூடுதலாக வழங்கப்படுகிறது.

    • 80W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.
    • ரெனோ 8 ப்ரோ பிளஸ் மாடல் இந்தியாவில் ரெனோ 8 ப்ரோ என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

    ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகக்கூடும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் வெளியீட்டு தேதி லீக் ஆகி உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் 18-ந் தேதி வெளியிடப்படும் என தெரிகிறது. மேலும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் மாடல் இந்தியாவில் ரெனோ 8 ப்ரோ என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    வெண்ணிலா ரெனோ 8 ஸ்மார்ட்போன், 6.43-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் டைமென்சிட்டி 1300 SoC புராசசரைக் கொண்டுள்ளது. 80W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. பின்புறத்தில் 50MP + 2MP + 2MP என டிரிபிள் கேமரா அமைப்பையும் முன்பக்கத்தில் 32MP கேமராவையும் கொண்டுள்ளது.

    • ஐகூ 10 ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
    • விரைவில் இதன் வெளியீட்டுத் தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐகூ நிறுவனம் அதன் 10 சீரிஸ் ஸ்மார்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஏற்கனவே ஐகூவின் 10 ப்ரோ மாடலின் விவரங்கள் லீக்கான நிலையில், தற்போது ஐகூ 10 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கசிந்துள்ளன. அதன்படி 6.78-இன்ச் OLED பேனல், 120Hz புதுப்பிப்பு வீதம், முழு-ஹெச்டி பிளஸ் ரெசொலியூசன் மற்றும் DC டிம்மிங் ஆதரவு உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், ஐகூ 10 ஸ்மார்ட்போன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இதில் 1/1.5-இன்ச் அளவுள்ள 50MP பின்புற கேமரா உடன் வரும் என இந்த போன் குறித்த விவரங்கள் ஏற்கனவே லீக் ஆகியது.


    இந்நிலையில், ஐகூ நிறுவனம் அதன் 10 சீரிஸ் ஸ்மார்ட்போனில் டைமென்சிட்டி 9000+ பிராசஸரை இணைத்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் டைமென்சிட்டி 9000+ பிராசஸருடன் வரும் முதல் ஸ்மார்ட்போனாக ஐகூ 10 சீரிஸ் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதைத் தவிர இந்த ஸ்மார்ட்போனில் உள்ள பிற அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஐகூ 10 ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதன் வெளியீட்டுத் தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி UI கோ எடிஷன் இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 8MP பிரைமரி கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா உடன் வருகிறது.
    • இதில் 5000mAh பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    ரியல்மி நிறுவனம் அதன் புதிய C30 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்டதைப் போல், புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போனில் 6.5 இனச் ஹெச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே, 60Hz புதுப்பிப்பு வீதம், 120Hz டச் சேம்ப்லிங் ரேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புராசஸரை பொருத்தவரை C30 மாடல் ஸ்மார்ட்போன் யுனிசாக் T612 பிராசஸரைக் கொண்டுள்ளது.

    இதில் அதிகபட்சம் 3GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி UI கோ எடிஷன் இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 8MP பிரைமரி கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா உடன் வருகிறது. ரியல்மி C30 ஸ்மார்ட்போனில் வெர்டிகல் ஸ்டிரைப் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் 5000mAh பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.


    ரியல்மி C30 மாடல் ஸ்மார்ட்போன் பேம்பூ கிரீன், லேக் புளூ மற்றும் டெனிம் பிளாக் ஆகிய மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2GB ரேம், 32GB மெமரி கொண்ட மாடலின் விலை ரூ. 7 ஆயிரத்து 499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் 3GB ரேம், 32GB மெமரி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ. 8 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி, பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களிலும், ஆப்லைன் ஸ்டோர்களிலும் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் 'Back to School' சலுகை ஏற்கனவே துவங்கிவிட்டது.
    • இந்த சலுகை வருகிற செப்டம்பர் மாதம் வரை அமலில் இருக்கும்.

    ஆப்பிள் நிறுவனம் அதன் வருடாந்திர 'Back to School' சலுகையை தற்போது இந்திய பயனர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட ஐபேட் மற்றும் மேக்புக் மாடல்களுக்கு சிறப்பு சலுகையை பெற முடியும்.

    இச்சலுகையின் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் (ஜென் 2) மற்றும் 6 மாதங்களுக்கான ஆப்பிள் மியூசிக் சந்தாவை இலவசமாக பெற முடியும். அத்துடன் ஆப்பிள் கேர் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஏர்பாட்ஸ் ஜென் 3 மாடலுக்கு அப்கிரேடு செய்யும் போது ரூ. 6, 400 செலுத்தினால் போதுமாம். இதேபோல் ஏர்பாட்ஸ் ப்ரோ வாங்குபவர்கள் ரூ. 12, 200 செலுத்த வேண்டும்.


    ஆப்பிள் எட்யுகேஷன் விலை சலுகைகள் கல்லூரி மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் 'Back to School' சலுகை ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்த சலுகை வருகிற செப்டம்பர் மாதம் வரை அமலில் இருக்கும்.

    மேக்புக் ஏர் M2 மாடலை வாங்குவோர் ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் ஜென் 2 மாடலை இலவசமாகவும், ரூ. 10 ஆயிரம் தள்ளுபடியும் பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல் மேக்புக் ப்ரோ 13 இன்ச் மாடலுக்கும் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடியும், மேக்புக் ப்ரோ 14 இன்ச் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடியும், மேக்புக் ப்ரோ 16 இன்ச் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

    ஐமேக் மாடலை வாங்குவோருக்கு ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் ஜென் 2 இலவசமாக வழங்கப்படுவதோடு, ரூ. 12 ஆயிரம் தள்ளுபடியும் கிடைக்கிறது. இதேபோல் ஐபேட் ஏர் மாடலுக்கு ஏர்பாட்ஸ் ஜென் 2 இலவசமாக வழங்கப்படுவதோடு, ரூ. 4 ஆயிரம் தள்ளுபடியும் கிடைக்கிறது. 

    • பயனர்கள் தங்களின் செல்பி வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டுமாம்.
    • பயனர்களின் வயதை கணக்கிட்டு அதற்கேற்றார்போல் அவர்களுக்கு தேவையான கண்டெண்ட்டுகளை காண்பிக்க திட்டமிட்டுள்ளது.

    முன்னணி சமூக வலைதளமாக திகழும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இலவசமாக பதிவிறக்கம் செய்து, யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றிருப்பது சில சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன. ஏனெனில் இதில் வரும் 18+ பதிவுகளை அனைவரும் பார்க்கக்கூடிய சூழல்களும் இருக்கின்றன. குறிப்பாக சிறுவர்களுக்கு இது ஆபத்தாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த விரைவில் புதிய அம்சம் ஒன்றை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளது.


    Yoti என்ற தொழில்நுட்பம் மூலம் பயனர்களின் வயதை கணக்கிட்டு அதற்கேற்றார்போல் அவர்களுக்கு தேவையான கண்டெண்ட்டுகளை காண்பிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பயனர்கள் தங்களின் செல்பி வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டுமாம். யோடி தொழில்நுட்பம் மூலம் அந்த வீடியோவில் உள்ள பயனர்களின் வயதை கணக்கிட்டு அதற்கு ஏற்றார் போல் வீடியோக்களை காண்பிக்கும் என கூறப்படுகிறது. வயதை சரிபார்த்த உடன் அது தொடர்பான வீடியோ மெட்டா மற்றும் யோடி தொழில்நுட்பத்தில் இருந்து நீக்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி + 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.9 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது.
    • அதேபோல் 8ஜிபி + 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.10 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது.

    ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக சாம்சங் இருந்து வருகிறது. தற்போது அதன் குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. சாம்சங் கேலக்ஸி M52 5ஜி மாடல் ஸ்மார்ட்போனின் விலை தான் தற்போது இந்த அளவு குறைக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது இதன் 6ஜிபி + 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.29,999 ஆகவும், 8ஜிபி + 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.31.999 ஆகவும் இருந்தது. தற்போது 6ஜிபி + 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.9 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ.20,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.


    அதேபோல் 8ஜிபி + 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.10 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ.21,999 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் சாம்சங் கேலக்ஸி M52 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால் மட்டுமே இந்த ஆஃபரை பெற முடியும்.

    • ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமானபோதும் இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டது.
    • நத்திங் போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள ஈவண்ட்டில் வெளியிட உள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் 2 வாரங்களுக்கு மேல் இருந்தாலும், அந்த போன் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.

    அதில் ஒன்றைப் பற்றி தான் தற்போது பார்க்கப்போகிறோம். நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை எப்படி இருக்கும் என்பதை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அழைப்பிதழ் முறையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.


    புது நிறுவனம் என்பதனால் உடனடியாக லட்சக்கணக்கிலான போன்களை தயாரிக்க முடியாது. அதனை கருத்தில் கொண்டு முதலில் அழைப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக உற்பத்தி கூடியதும். அழைப்பிதழையும் அதிக அளவில் கொடுத்து விற்பனையை அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமானபோதும் இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×