என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஷாப்பிஃபை உடன் ட்விட்டர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
    • ஷாப்பிங் வசதியை பயனர்கள் பெறுவதற்காக, தனியாக ஒரு ஆப்ஷனை ட்விட்டர் நிறுவனம் அதில் கொண்டுவர உள்ளது.

    உலக அளவில் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர். அந்நிறுவனம் தனது பயனர்களை கவரும் விதமாக பல்வேறு சிறப்பம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது புது அப்டேட்டாக, ட்விட்டர் வாயிலாக அதன் பயனர்கள், நேரடியாக ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும் வசதியை, அந்நிறுவனம் விரைவில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஷாப்பிஃபை உடன் ட்விட்டர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ட்விட்டர் மூலம் இந்த ஷாப்பிங் வசதியை பயனர்கள் பெறுவதற்காக, தனியாக ஒரு ஆப்ஷனை அந்நிறுவனம் அதில் கொண்டுவர உள்ளது. இதன் மூலம் அனைத்து முன்னணி பிராண்ட்களின் பொருட்களையும், இனி ட்விட்டர் வாயிலாக வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஸ்டாக் எக்ஸ் நிறுவனத்துடன் நத்திங் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
    • ஏலத்தில் ஜெயித்தவர்களுக்கு இந்த போன் 35 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும்.

    நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி நடைபெற உள்ள ஈவண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அந்த போன் அறிமுகமாகும் முன்பே விற்பனைக்கு வர உள்ளது. அதன்படி 100 போன்களை மட்டும் அந்நிறுவனம் வெளியீட்டு முன் விற்பனை செய்ய உள்ளது.

    இதற்காக ஸ்டாக் எக்ஸ் நிறுவனத்துடன் நத்திங் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏலத்தின் அடிப்படையில் இந்த 100 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி ஜூன் 21-ந் தேதி ஸ்டாக் எக்ஸின் தொழில்நுட்ப தளமான டிராப் எக்ஸின் இந்த ஏலம் தொடங்கி உள்ளது. இன்றுடன் இந்த ஏலம் முடிவடைய உள்ளது.


    ஏராளமானோர் இந்த ஏலத்தில் கலந்துகொண்டு உள்ளனர். தற்போது வரை இதில் அதிகபட்சமாக ரூ.1.56 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது. ஏலத்தில் ஜெயித்தவர்களுக்கு இந்த போன் 35 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போனின் விலை ரூ.30 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • ஒரிஜினல் ஐபோன் ஒரு புரட்சிகரமான சாதனமாக இருந்தாலும், அதில் கட், காபி, பேஸ்ட் செய்யும் அம்சம் இடம்பெறவில்லை.
    • முதல் ஐபோன் வெளியானதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் மிகவும் புதுமையான கைபேசிகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் ஒரிஜினல் ஐபோனை கடந்த 2007-ம் ஆண்டு வெளியிட்டார். அது வெளியாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிறது. அந்த சாதனம் தான் நவீன ஸ்மார்ட்போன் கான்செப்டின் துவக்கமாக இருந்தது என்றே கூறலாம். முதல் ஐபோன் வெளியானதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் மிகவும் புதுமையான கைபேசியை உருவாக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு வருகின்றன.


    ஒரிஜினல் ஐபோன் ஒரு புரட்சிகரமான சாதனமாக இருந்தாலும், அதில் கட், காபி, பேஸ்ட் செய்யும் அம்சம் இடம்பெறவில்லை. ஆப்பிளின் முதல் ஐபோன் உருவாக்கத்தில் பணியாற்றிய கென் கொசிண்டா என்கிற பொறியாளர், அதற்கான உண்மை காரணத்தை தற்போது 15 ஆண்டுகள் கழித்து வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: "முதல் ஐபோனை உருவாக்கும் போது கட், காபி, பேஸ்ட் செய்யும் அம்சங்களை அதில் புகுத்த எங்களுக்கு போதுமான நேரம் இல்லை. ஐபோனின் கீபோர்டு, ஆட்டோகரெக்‌ஷன் மற்றும் டெக்ஸ்ட் சிஸ்டத்தில் வேலை செய்வதில் மிகவும் பிஸியாக இருந்தோம். வடிவமைப்பு குழுவிற்கு கூட அதை செயல்படுத்த நேரம் இல்லை, அதனால்தான் இந்த அம்சம் ஆப்பிளின் முதல் ஐபோனில் இடம்பெறவில்லை. பின்னரே அது அறிமுகப்படுத்தப்பட்டது" என அவர் கூறியுள்ளார்.

    • விரைவில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • இதுவரை உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டின் புரபைல் போட்டோ, லாஸ்ட் சீன் மற்றும் நீங்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை அனைவரும் பார்க்கலாம்.

    சமூக வலைதளமான வாட்ஸ்அப்பை மெட்டா நிறுவனம் வாங்கிய பின்னர், அதில் அந்நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வரும் அந்நிறுவனம் தற்போது பயனர்கள் ஆவலோடு கேட்டுக்கொண்டிருந்த ஒரு சிறப்பம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

    அது என்னவென்றால், வாட்ஸ்அப்பில் நீங்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ், புரபைல் போட்டோ, லாஸ்ட் சீன் ஆகியவற்றின் பிரைவசி ஆப்சனில் My contacts except.. என்கிற புதிய அம்சம் தான் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டின் புரபைல் போட்டோ, லாஸ்ட் சீன் மற்றும் நீங்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை அனைவரும் பார்க்கலாம், காண்டாக்டில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம், யாரும் பார்க்கக்கூடாது என்கிற 3 ஆப்சன்கள் மட்டுமே இருந்தது.


    ஆனால் தற்போது சேர்க்கப்பட்டுள்ள மை காண்டாக்ட் எக்சப்ட் என்கிற அம்சம் மூலம் உங்கள் காண்டாக்ட்டில் இருப்பவர்களில் யாருக்கெல்லாம் உங்களது ஸ்டேட்டஸ், புரபைல் போட்டோ, லாஸ்ட் சீன் ஆகியவை காட்டப்பட வேண்டும் என்பதை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும். விரைவில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிரீமியம் சந்தாதாரர்கள் விளம்பர இடையூறு இன்றி பார்க்கலாம்.
    • பிரீமியம் சந்தாதாரர்கள் 4 ஜிபி அளவிலான பைல்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    நடப்பாண்டில் உலகளவில் அதிக எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்பட்ட டாப் 5 செயலிகளில் டெலிகிராமும் ஒன்று. தற்போது இந்த செயலியை உலகம் முழுவதும் சுமார் 70 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டெலிகிராம், அதன் பிரீமியம் கட்டண சேவையை அறிமுகம் செய்துள்ளது. டெலிகிராம் அறிமுகப்படுத்தி உள்ள புதிய பீரிமியம் சேவையை பெற, மாதம் ஒன்றிற்கு ரூ.469 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பீரிமியம் சேவையில் இணையும் சந்தாதாரர்கள், பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பிரீமியம் சந்தாதாரர்கள் 4 ஜிபி அளவிலான பைல்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி பிரத்யேகமான ஸ்டிக்கர்கள், வேகமான தரவிறக்க வசதி உள்பட பல வசதிகள் அவர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரீமியம் சந்தாதாரர்கள் விளம்பர இடையூறு இன்றி பார்க்கலாம் என்றும், வாய்ஸை டெக்ஸ்டாக மாற்றும் அம்சமும் வழங்கப்பட்டு உள்ளது.


    இந்த பிரீமியம் சேவை டெலிகிராமின் 8.8 வெர்ஷனில் தான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த சேவை iOS பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் இதற்கான அப்டேட் இன்னும் விடப்படவில்லை. விரைவில் அனைவருக்கும் இந்த பிரீமியம் சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • குறிப்பிட்ட அளவிலான பயனர்களுக்கு மட்டும் இந்த புதிய அம்சங்கள் பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
    • நோட்டிபிகேஷன் பேனலின் மூலம் ஒரு டுவிட்டை லைக் அல்லது டிஸ்லைக் செய்வதற்கான ஆப்சன்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

    டுவிட்டர், மிகவும் பிரபலமான சமூக வலைதளமாக இருப்பதனால், அது தனது பயனர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் விரைவில் டுவிட்டர் தளத்தில் டிஸ்லைக் மற்றும் எடிட் பட்டன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதற்கான டெஸ்டிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    குறிப்பிட்ட அளவிலான பயனர்களுக்கு மட்டும் இந்த புதிய அம்சங்கள் பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் லைக் அல்லது டிஸ்லைக் அம்சமும் விரைவில் அறிமுகமாக உள்ளது. அதன்படி நோட்டிபிகேஷன் பேனலின் மூலம் ஒரு டுவிட்டை லைக் அல்லது டிஸ்லைக் செய்வதற்கான ஆப்சன்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.


    அதேபோல் வன்முறையைத் தூண்டும் விதமாகவோ, தவறான வார்த்தைகளை டுவிட்டில் பயன்படுத்தி இருந்தாலோ, அதனை பதிவிடும் முன்னரே டுவிட்டரில் ஒரு எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. அதில் எடிட் செய்ய போகிறீர்களா என்கிற ஆப்சனும் வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த அம்சங்கள் அனைத்து பயனர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் பர்பிள், டீப் சீ புளூ, புரோஸ்ட் ஒயிட், ஷேடோ பிளாக் ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
    • நோட் 10S மாடலை கடந்தாண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

    ரெட்மி நிறுவனம் அதன் நோட் 10S மாடலை கடந்தாண்டு மே மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.14,999 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் இதன் 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.15,999 ஆகவும், 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.17,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் தற்போது ரெட்மியின் நோட் 10S மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.14,999 ஆக இருந்த 6ஜிபி + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை தற்போது ரூ.2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ.12,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


    அதேபோல் 6ஜிபி + 128ஜிபி வேரியண்ட் மற்றும் 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட்டின் விலை ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி 6ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ரூ.14,999க்கும், 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ரூ.16,499க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் பர்பிள், டீப் சீ புளூ, புரோஸ்ட் ஒயிட், ஷேடோ பிளாக் ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

    • நகர்ப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 62.4 கோடியாகக் குறைந்துள்ளது.
    • அதே நேரத்தில் கிராமப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 51.8 கோடியாக அதிகரித்துள்ளது.

    இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், வெளியிட்டுள்ள அறிக்கையின் படி. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 16.82 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் புதிதாக 8.1 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

    அதேபோல் மற்றொரு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15.68 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக டிராய்யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது. 35.5 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் ரிலையன்ஸ் ஜியோ முதல் இடத்திலும், 31.61 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் ஏர்டெல் இரண்டாம் இடத்திலும், 22.68 சதவீதத்துடன் வோடபோன் ஐடியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.


    ஏப்ரல் 2022 இறுதியில் இந்திய வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 114.3 கோடியாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 62.4 கோடியாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 51.8 கோடியாக அதிகரித்துள்ளது.

    புதிதாக 16.82 லட்சம் பயனர்களை பெற்றுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 40.5 கோடி மொபைல் சந்தாதாரர்களுடன் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணியில் உள்ளது. புதிதாக 8.1 லட்சம் பயனர்களை பெற்றுள்ள ஏர்டெல் நிறுவனம் 36.11 கோடி சந்தாதாரர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மறுபுறம் 15.68 லட்சம் பயனர்களை இழந்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 25.9 கோடியாக குறைந்துள்ளது.

    பிராட்பேண்ட் சேவைகளைப் பொருத்தவரை ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் 3.31 லட்சம் புதிய சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. ஏர்டெல் நிறுவனம் 71 ஆயிரத்து 297 பிராட்பேண்ட் பயனர்களை பெற்றுள்ளது. பிராட்பேண்ட் சந்தாதாரர்களில் ரிலையன்ஸ் ஜியோவின் சந்தைப் பங்கு 25.85 சதவீதமாகவும், ஏர்டெல் 23.54 சதவீதமாகவும் உள்ளது. ஏப்ரல் 2022 இறுதியில் இந்திய வயர்லைன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2.51 கோடி அதிகரித்துள்ளது. 

    • நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 12-ந் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
    • மெக்சிகோ மற்றும் தென் கொரியாவை சேர்ந்தவர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாது.

    நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி நடைபெற உள்ள ஈவண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அந்த போன் அறிமுகமாகும் முன்பே விற்பனைக்கு வர உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 100 போன்களை மட்டும் அந்நிறுவனம் வெளியீட்டு முன் விற்பனை செய்ய உள்ளது.

    இதற்காக ஸ்டாக் எக்ஸ் நிறுவனத்துடன் நத்திங் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏலத்தின் அடிப்படையில் இந்த 100 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி வருகிற ஜூன் 21-ந் தேதி ஸ்டாக் எக்ஸின் தொழில்நுட்ப தளமான டிராப் எக்ஸின் இந்த ஏலம் தொடங்க உள்ளது. ஜூன் 23-ந் தேதி வரை இந்த ஏலம் நடைபெறும் என கூறப்படுகிறது.


    விருப்பமுள்ளவர்கள் ஸ்டாக் எக்ஸ் தளத்தில் அக்கவுண்ட் ஓபன் செய்து இந்த ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏலத்தில் ஜெயித்தவர்களுக்கு இந்த போன் 35 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மெக்சிகோ மற்றும் தென் கொரியாவை சேர்ந்தவர்கள் இந்த ஏலத்தில் கலந்துகொள்ள முடியாது என கூறப்பட்டுள்ளது.

    • 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும்.
    • மத்திய அமைச்சரவை தற்போது 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    5ஜி தொலைதொடர்பு சேவை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்தியாவில் தற்போது வரை, 4ஜி அலைக்கற்றை மூலம் இணைய சேவை மற்றும் தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2022 இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சரவை தற்போது 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. வருகிற ஜூலை மாதத்திற்குள் இந்த ஏலத்தை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


    இந்நிலையில் 5ஜி சேவை குறித்து மத்திய தகவல் தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். மார்ச் 2023க்குள் இந்தியாவில் 5ஜி சேவைகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என அவர் கூறினார்.

    • விலையேற்றம் அனைத்து ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஜியோ போனை 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, அதன் போனின் ப்ரீபெய்டு ரீசார்ஜ் விலையை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜியோ போனை 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அதன் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய ரூ.155 பிளானின் விலை ரூ.186 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல் 28 நாள் வேலிடிட்டி உடன் கூடிய ரூ.185 பிளானின் விலை ரூ.222 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில் தினமும் 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. 336 நாள் வேலிடிட்டி உடன் கூடிய ரூ.749 பிளானின் விலை தற்போது ரூ.899 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.


    ஜியோ போனை வாங்க வாடிக்கையாளர்கள் ரூ.1999, ரூ.1499 மற்றும் ரூ.749 ஆகிய 3 பேக்குகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து வாங்கலாம். இதில் ரூ.749 திட்டத்தின் விலையை மட்டும் தற்போது அந்நிறுவனம் ரூ.899 ஆக உயர்த்தி உள்ளது. இந்த விலையேற்ற அனைத்து ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்ட் பிளான்களின் விலைகளை விரைவில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாம். இந்த ஆண்டு தீபாவளிக்குள் மேற்கண்ட நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை 10 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தலாம் என கூறப்படுகிறது. 

    • வாட்ஸ்அப்பில் வலம் வரும் போலியான மெசேஜ் உடன் பிரதமர் மோடியின் புகைப்படம், சோனி லிவ் ஓடிடி தளத்தின் லோகோ உள்ளிட்டவை இணைக்கப்பட்டு உள்ளது.
    • இந்த ஊழல் தொடர்பான தகவல் இந்தியா டெக் டுடே மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் எராளம், அவர்களை குறிவைத்து வாட்ஸ்அப்பில் ஒரு ஊழல் நடைபெற்று வருகிறது. இந்த ஊழல் தொடர்பான தகவல் இந்தியா டெக் டுடே மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் பணியாற்றும் நபர் ஒருவருக்கு கே.பி.சி. ஜியோ லக்கி டிரா என்கிற பெயரில் அனுப்பப்படும் மெசேஜில் ரூ. 25 லட்சம் பரிசு வழங்கும் போட்டி நடத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்த மெசேஜ் உடன் மேற்கண்ட சலுகையில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாட்ஸ்அப் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    தகவல்களை வாட்ஸ்அப்பில் அனுப்பியதும், பணம் சம்பந்தப்பட்ட பயனரின் வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது போன்று வரும் மெசேஜ்களுக்கு பயனர்கள் யாரும் பதில் அனுப்ப வேண்டாம் என சைபர் பிரிவு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    வாட்ஸ்அப்பில் வலம் வரும் போலியான மெசேஜ் உடன் பிரதமர் மோடியின் புகைப்படம், சோனி லிவ் ஓடிடி தளத்தின் லோகோ உள்ளிட்டவை இணைக்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் உள்ள தகவல்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் எழுதப்பட்டு இருக்கிறது. மேலும் இது போன்ற மெசேஜ் ஏதும் வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு சைபர் பிரிவு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    ×