என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- 30 நாட்களுக்கான சோனி லிவ் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சனின் ஒரிஜினல் விலை ரூ.299 ஆகும்.
- சோனி லிவ் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சனை மொபைல் மற்றும் டிவியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா நிறுவனம் புது போஸ்ட்பெய்டு ஆட்-ஆன் பேக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.100 விலைமதிப்பு கொண்ட அந்த பேக் 30 நாட்களுக்கான சோனி லிவ் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சனை இலவசமாக வழங்குகிறது. இந்த புதிய பேக் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய 10 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.
இந்த பேக் மூலம் கிடைக்கும் 30 நாட்களுக்கான சோனி லிவ் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சனை மொபைல் மற்றும் டிவியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். 30 நாட்களுக்கான சோனி லிவ் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சனின் ஒரிஜினல் விலை ரூ.299 அதனை தற்போதைய ஆஃபர் மூலம் ரூ.100க்கு பெற முடியும்.

இதுதவிர ப்ரீபெய்டு பயனர்களுக்கு ஒரு ஆட்-ஆன் பேக்கை வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.82 விலைமதிப்பு கொண்ட அந்த பேக்கின் மூலம் ப்ரீபெய்டு பயனர்கள் 28 நாட்களுக்கான சோனி லிவ் சப்ஸ்கிரிப்சனை பெற முடியும். இதுதவிர 14 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய 4ஜிபி டேட்டாவும் இந்த பேக்கில் வழங்கப்படுகிறது.
- புதிய ஐபேட் ப்ரோ மாடலில் M2 சிப், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் கேமரா அமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டு வரும் என கூறப்படுகிறது.
- புதிய ஐபேட் ப்ரோ செப்டம்பர் அல்லது அக்டோபரில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபேட் ப்ரோ மாடல்களின் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தவில்லை என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அதன் ஐபேட் ப்ரோ வரிசையை புதுப்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபேட் ப்ரோ செப்டம்பர் அல்லது அக்டோபரில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 14.1-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் ஐபேட் ப்ரோ மாடல் வருகிற 2023-ம் ஆண்டு வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
புதிய ஐபேட் ப்ரோ மாடலில் M2 சிப், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் கேமரா அமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டு வரும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் M2 SoC ஆல் இயக்கப்படும் 14.1-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் ஒரு மாடலை உருவாக்குவதாக வதந்தி பரவியது. அது இந்த ஐபேட் ப்ரோ மாடலாகத் தான் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய M2 SoC அதன் முந்தைய சிலிகான் அமைப்பான M1 ஐ விட 18 சதவிகிதம் மேம்படுத்தப்பட்ட CPU செயல்திறன் மற்றும் 35 சதவிகித GPU செயல்திறனை வழங்குகிறது, மேலும் 10-கோர் செயலிகளுடன் ஒப்பிடும்போது 1.9 மடங்கு வேகமாகவும் (CPU) 2.3 மடங்கு வேகமாகவும் (GPU) உள்ளது.
- கடந்த 1995-ம் ஆண்டு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டது.
- கணினி உலகில் ஒரு அங்கமாக இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் நாளையுடன் விடைபெற உள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் வருகிற நாளை (ஜூன் 15) உடன் விடைபெறுகிறது. கடந்தாண்டு இது தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. கடந்த 1995-ம் ஆண்டு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டது. உலகளவில் மக்கள் பரவலாக கணினிகளை பயன்படுத்த தொடங்கிய காலத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூலம் தான் பயனர்கள் தங்களுக்கு தேவையானவற்றை இணைய வழியில் தேடி தெரிந்துகொண்டனர்.
இதையடுத்து இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் படிப்படியாக பல்வேறு அப்டேட்களையும் கண்டது. கடைசியாக கடந்த 2013ம் ஆண்டில் இதன் 11-வது வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு விண்டோஸ் 10 வருகையின் காரணாமாக கடந்த 2015-ம் ஆண்டு வாக்கில் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் என்கிற புதிய பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போதே இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் அடுத்த வெர்ஷனுக்கான அப்டேட்டையும் அந்நிறுவனம் நிறுத்திக் கொண்டது. படிப்படியாக எட்ஜ் பிரவுசரை பயனர்கள் மத்தியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், விண்டோஸ் 11-ன் ஸ்டார்ட் மெனுவில் இருந்து இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை தூக்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் விடைபெற உள்ளது. சுமார் 27 ஆண்டுகளாக கணினி உலகில் ஒரு அங்கமாக இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் நாளையுடன் விடைபெற உள்ளது அதன் பயனர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்துள்ளது.
- ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் விரைவில் புது மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இந்த மாற்றம் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.
ஒன்பிளஸ் ஒன் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒன்பிளஸ் அதன் ஸ்மார்ட்போன்களில் அலர்ட் ஸ்லைடரை வழங்கத் தொடங்கியது. மொபைலின் மேல் இடது விளிம்பில் அமைந்துள்ள இது, திரையைத் திறக்காமலேயே போனின் ஒலி சுயவிவரத்தை சைலண்ட், வைப்ரேட் மற்றும் ரிங் என அமைக்க பயனரை அனுமதிக்கிறது.
இது குறித்து டிப்ஸ்டர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, இந்த நடைமுறை விரைவில் மாறும் என கூறப்படுகிறது. மேலும் அந்நிறுவனம் பிரபலமான அலர்ட் ஸ்லைடரை அதன் முதன்மை மாடல்களுக்கு மட்டும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒன்பிளஸ் நார்டு 2T ஆனது அலர்ட் ஸ்லைடரைக் கொண்ட கடைசி ஒன்பிளஸ் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது. இதையடுத்து அலர்ட் ஸ்லைடர் ஓப்போ ஃபிளாக்ஷிப் சீரிஸ் ப்ரோ மாடல்களில் மட்டுமே வழங்கப்படும். வர இருக்கும் ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் அலர்ட் ஸ்லைடர் இல்லாமல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
- பிசினஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இந்த சலுகையை பெற முடியாது.
- இந்த சலுகை குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப்பில் யுபிஐ பேமண்ட் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக அந்நிறுவனம் அவ்வபோது சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் யுபிஐ மூலம் மூன்று பேருக்கு தலா ஒரு ரூபாய் அனுப்பினால் ரூ.105 வரை கேஷ்பேக் பெறும் வண்ணம் புதிய சலுகை ஒன்றை அந்நிறுவனம் வழங்கி உள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த அசத்தலான கேஷ்பேக் சலுகையை பெறுவது எப்படி என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இந்த சலுகை குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு இந்த சலுகை கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள முதலில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்ய வேண்டும். அதில் பணம் அனுப்பும் ஸ்கிரீனில் கிஃப்ட் ஐகான் இருந்தால் நீங்கள் இந்த சலுகையை பெறமுடியும். இல்லாவிட்டால் இந்த சலுகையை பெறும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்பட வில்லை என்று அர்த்தம்.

* முதலில் உங்கள் போனில் புது வெர்ஷன் வாட்ஸ்அப் செயலி இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அது இருந்தால் மட்டுமே இந்த சலுகையை பெற முடியுமாம்.
* செயலியை குறைந்தபட்சம் 30 நாட்களாவது பயன்படுத்தியிருந்தால் மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கும்.
* பிசினஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இந்த சலுகையை பெற முடியாது.
* வாட்ஸ்அப் செட்டிங்ஸில் உள்ள பேமண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி, பேமண்ட் அக்கவுண்டை செட் அப் செய்ய வேண்டும்.
* பின்னர் அதில் உங்களது வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்.
* அது நிறைவடைந்த உடன் குறைந்தபட்சம் 1 ரூபாயை உங்களது வாட்ஸ்அப்பில் உள்ள மூன்று காண்டாக்ட்டுகளுக்கு அனுப்ப வேண்டும். அவர்களும் பேமண்ட் அக்கவுண்டை செட் அப் செய்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திவிட்டு பணம் அனுப்பவும்.
* அப்படி அவர்கள் பேமண்ட் அக்கவுண்டை செட் அப் செய்யவில்லை என்றால், அதனை செய்த பின்னரே உங்களால் பணம் அனுப்ப முடியும்.
* மூன்று பேருக்கும் பணம் அனுப்பிய பின்னர், ஒவ்வொரு பரிவர்தனைக்கும் 35 ரூபாய் வரையிலான கேஷ்பேக் கிடைக்கும். இதன்மூலம் ரூ.105 வரை பெற முடியும்.
- மெக் டொனால்ட்ஸின் 2 சிக்கன் பர்கர் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்.
- ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்கள் மட்டுமே இந்த ஆஃபரை பெற முடியும்.
ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சியோமி, தற்போது அதன் பயனர்களுக்கு அசத்தல் ஆஃபர் ஒன்றையும் வழங்கி உள்ளது. அதன்படி சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு மட்டுமே இந்த அசத்தல் ஆஃபரை அந்நிறுவனம் வழங்கி உள்ளது.
அதன்படி ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு மெக் டொனால்ட்ஸின் கூப்பன் ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த கூப்பனை வைத்து மெக் டொனால்ட்ஸின் 2 சிக்கன் பர்கர் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை இலவசமாக வாங்கிக் கொள்ள முடியுமாம். இந்த ஆஃபர் தற்போது டர்க்கி நாட்டில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் இதர நாடுகளுக்கும் இந்த ஆஃபர் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்கள் மட்டுமே இந்த ஆஃபரை பெற முடியும். அந்த போனின் விற்பனையை அதிகரிக்கவே இத்தகைய சலுகையை சியோமி நிறுவனம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
- ஜெர்மனியில் உள்ள டசல்டோர்ஃப் பிராந்திய நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
- கே. மிஸ்ரா எல்எல்சி என்ற நிறுவனம்தான் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
காப்புரிமை மீறல் தொடர்பாக சாம்சங் நிறுவனம் தற்போது மற்றொரு சட்டப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது. அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மீதமுள்ள பேட்டரி அளவை கணிக்கும் அல்காரிதத்தைப் தவறாக பயன்படுத்தியதற்காக அந்நிறுவனத்தின் மீது காப்புரிமை மீறல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கே. மிஸ்ரா எல்எல்சி என்ற நிறுவனம்தான் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. சாம்சங் ஸ்மார்ட்போன் பேட்டரி தொழில்நுட்பம் தொடர்பான காப்புரிமையை மீறியதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனியில் உள்ள டசல்டோர்ஃப் பிராந்திய நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கே.மிஸ்ராவின் குற்றச்சாட்டின்படி, ஸ்மார்ட்போனில் மீதமுள்ள பேட்டரி ஆயுளைக் கண்காணிப்பதாக கூறி பயனர்களின் இதர செயல்பாடுகளையும் சாம்சங் நிறுவனம் நோட்டம் விடுகிறது. அது மிகப்பெரிய காப்புரிமை மீறல் என தெரிவித்துள்ளது.
தற்போதைய சாம்சங் கேலக்ஸி சாதனங்களில் உள்ள ஆண்ட்ராய்டு அடிப்படையிலான அம்சம் காப்புரிமைகளை ஒத்து இருப்பதாகவும், முந்தைய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களைக் கொண்டுள்ள சாம்சங் போன்களில் மட்டும் காப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் கே.மிஸ்ரா தரப்பு தெரிவித்துள்ளது. காப்புரிமை சர்ச்சை எப்படிப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- மெட்டாவின் ஸ்மார்ட்வாட்ச்சில், ஒரு கேமரா டிஸ்பிளேவின் கீழ் பகுதியிலும், மற்றொன்று பின்புறத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டது.
- ஸ்மார்ட் பேண்டுகளின் தயாரிப்பில் மெட்டா நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இரட்டை கேமராக்களைக் கொண்ட தனது முதல் ஸ்மார்ட்வாட்ச்சின் தயாரிப்பை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிலன் என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட அந்த ஸ்மார்ட்வாட்ச், அதன் பெரிய டிஸ்பிளே மற்றும் செயல்பாட்டுக் கண்காணிப்பு, மியூசிக் பிளேபேக் மற்றும் செய்தி அனுப்புதல் உள்ளிட்ட அம்சங்களுடன் ஆப்பிள் வாட்சுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இருப்பினும், ஆப்பிள் வாட்ச் போலல்லாமல், வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு கேமரா அமைப்புடன் அந்த ஸ்மார்ட்வாட்சை மெட்டா நிறுவனம் உருவாக்கி வந்ததாம். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மெட்டா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வந்த அந்த ஸ்மார்ட்வாட்ச்சில், ஒரு கேமரா டிஸ்பிளேவின் கீழ் பகுதியிலும், மற்றொன்று பின்புறத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களுடன் தயாராகி வந்த இரட்டை கேமரா ஸ்மார்ட்வாட்ச்சின் தயாரிப்பை மெட்டா நிறுவனம் நிறுத்திவிட்டதாகவும், அதற்கு பதிலாக ஸ்மார்ட் பேண்டுகளின் தயாரிப்பில் அந்நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து மெட்டா நிறுவனம் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
- யுபிஐ பேமன்ட்களில் இனிமேல் கிரெடிட் கார்டுகளையும் இணைக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.
- முதலில் ரூபே கிரெடிட் கார்டுகளுக்கு மட்டும் யுபிஐயில் இணைக்கும் வசதி வழங்கப்படுமாம்.
யுபிஐ பேமன்ட்களின் செயல்பாடுகளில் முக்கிய முன்னேற்றமாக, கிரெடிட் கார்டுகளையும் யுபிஐ செயலிகளில் இணைக்கும் வசதி விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது முன்னதாக யுபிஐ பேமன்ட்களில் டெபிட்கார்டுகளை மட்டும் இணைக்கும் வசதி இருந்தது. இனிமேல் கிரெடிட் கார்டுகளையும் இணைக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.
முதலில் ரூபே கிரெடிட் கார்டுகளுக்கு மட்டும் யுபிஐயில் இணைக்கும் வசதி வழங்கப்படும் எனவும் அதன்பின் மாஸ்டர் கார்டு, விசா போன்ற கிரெடிட் கார்டுகளுக்கு அந்த வசதி நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுவரை பயனர்கள் டெபிட் கார்டுகளை மட்டும்தான் இணைத்திருக்க முடியுமாம்.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அது முடிந்த பின் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திதாஸ் தாஸ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பயனர்களின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் டெபிட் கார்டுகள் அல்லது நடப்பு கணக்குகளை யுபிஐ பேமன்டில் இணைத்துக்கொள்ளும் வசதி தற்போது இருந்து வருகிறது.
இனிமேல் கிரெடிட் கார்டுகளையும் பயனர்கள் யுபிஐ செயலியில் இணைத்துக் கொள்ளும் வசதி கொண்டு வரப்பட உள்ளது. முதலில் ரூபே கிரெடிட் கார்டுகளுக்கும் பின்னர் படிப்படியாக மாஸ்டர் கார்டு, விசா போன்ற மற்ற கிரெடிட் கார்டுகளுக்கும் அந்த வசதி நீட்டிக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.
- மூன்று போட்டோக்கள் அல்லது ரீல்ஸ்களை பயனர்கள் தங்களது புரஃபைலில் பின் செய்து வைத்துக்கொள்ள முடியும்.
- முன்னதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களை பின் செய்து வைத்துக்கொள்ளும் அம்சம் மட்டுமே இருந்து வந்தது.
இன்ஸ்டாகிராம் நிறுவனம் தற்போது கிரிட் பின்னிங் எனும் புது அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி பயனர்கள் தங்களுக்கு பிடித்த பேவரைட் போஸ்ட்டுகளை தங்களது புரஃபைலில் முதலில் வருவது போன்று வைத்துக் கொள்ள முடியும். இதுகுறித்த டெஸ்டிங்கை கடந்த ஏப்ரம் மாதம் தொடங்கிய அந்நிறுவனம் தற்போது அந்த அம்சத்தை பயனர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.
முன்னதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களை பின் செய்து வைத்துக்கொள்ளும் அம்சம் மட்டுமே இருந்து வந்தது. தற்போது போஸ்ட்டுகள் மற்றும் ரீல்ஸ்களுக்கும் அந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மூன்று போட்டோக்கள் அல்லது ரீல்ஸ்களை பயனர்கள் தங்களது புரஃபைலில் பின் செய்து வைத்துக்கொள்ள முடியும்.

இந்த அம்சத்தை பயன்படுத்துவது எப்படியென்றால், ஒவ்வொரு போஸ்ட்டுகளின் மேலே வலது பக்கத்தில் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டன் இருக்கும், அதனை செலெக்ட் செய்து அதில் உள்ள பின் டூ யுவர் புரஃபைல் (pin to your profile) என்கிற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அது உங்களது பேவரை போஸ்ட்டுகளை ஹைலைட் செய்ய சொல்லும், அதன் மூலம் செலக்ட் செய்து பின் செய்து கொள்ளலாம்.
இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது பயனர்களை கவர்வதற்காக தொடர்ந்து விதவிதமான அப்டேட்டுகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. சமீபத்தில் ரீல்ஸ் வீடியோவை 90 விநாடி வரை பதிவேற்றும் அம்சத்தை கொண்டு வந்த அந்நிறுவனம் தற்போது பேவரைட் போஸ்ட்டுகளை பின் செய்யும் அசத்தல் அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மிக்ஸிடு ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகப்படுத்துவதற்காக பிரத்யேகமான ஈவண்டை ஆப்பிள் நிறுவனம் நடத்த உள்ளதாம்.
- மிக்ஸிடு ரியாலிட்டி ஹெட்செட்டின் விலை ரூ.3 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் அதன் மிக்ஸிடு ரியாலிட்டி ஹெட்செட்டை அண்மையில் நடைபெற்ற WWDC 2022 ஈவண்ட்டில் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்நிறுவனம் அதில் வெளியிடவில்லை. அதன் வெளியீடு தாமதம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய தகவல்படி, ஆப்பிள் நிறுவனம் அந்த ஹெட்செட்டை அடுத்தாண்டு துவக்கத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவல்களை சீனாவை சேர்ந்த ஆய்வாளரான மிங் சி கு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் மிக்ஸிடு ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகப்படுத்துவதற்காக பிரத்யேகமான ஈவண்டை ஆப்பிள் நிறுவனம் நடத்த உள்ளதாகவும், அதன் முன்பதிவு அடுத்தாண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் WWDC எனும் டெவலப்பர்கள் மாநாட்டுக்கு முன்னதாகவே இந்த ஹெட்செட் விற்பனைக்கு வந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார். தயாரிப்பில் சில சிக்கல்களை சந்தித்ததன் காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதன் விலை 3 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- ஆப்பிள் நிறுவனம் OLED டிஸ்பிளேக்களுடன் கூடிய அதன் முதல் ஐபேட் புரோ மாடல்களை வருகிற 2024-ம் ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
- ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே சமீபத்திய ஆப்பிள் போன்கள் மற்றும் ஆப்பிஸ் வாட்ச்களில் OLED டிஸ்பிளேக்களை பயன்படுத்தி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தில் ஐபேடுகள் மற்றும் மேக்புக்குகளுக்கு ஏற்றவாறு பெரிய OLED டிஸ்பிளேக்களை சாம்சங் நிறுவனம் தயாரித்து சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்கால ஆப்பிள் தயாரிப்புகளுக்கான ஆர்டர்களை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு சாம்சங் நிறுவனம் இத்தகைய முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் OLED டிஸ்பிளேக்களுடன் கூடிய அதன் முதல் ஐபேட் புரோ மாடல்களை வருகிற 2024-ம் ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாடல்களுக்கு தான் சாம்சங் நிறுவனம் டிஸ்பிளேக்களை தயாரிக்க உள்ளதாம். ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபேட் மற்றும் மேக்புக் டிஸ்பிளேக்களை மினி-LED டிஸ்பிளேக்களாக கடந்தாண்டு மாற்றியது, விரைவில் வர உள்ள OLED டிஸ்பிளே அதன் அடுத்த கட்டமாக இருக்கும் என தெரிகிறது.

மினி-LED டிஸ்பிளேக்களை போல் அல்லாமல் OLED டிஸ்பிளேக்கள் செல்ஃப் எமிட்டிங் பிக்சல்களை கொண்டிருக்கும். இதற்கு பேக் லைட்டிங் தேவைப்படாது. மேலும் இது காண்ட்ராஸ்ட் ரேசியோவை அதிகப்படுத்தவும், பேட்டரி லைஃபை அதிகரிக்கவும் உதவுமாம். ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே சமீபத்திய ஆப்பிள் போன்கள் மற்றும் ஆப்பிஸ் வாட்ச்களில் இந்த OLED டிஸ்பிளேக்களை பயன்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.






