search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    வோடபோன் ஐடியா சிம் பயனர்களுக்கு குட் நியூஸ்... 100 ரூபாய்க்கு புது பேக் அறிமுகம்
    X

    வோடபோன் ஐடியா சிம் பயனர்களுக்கு குட் நியூஸ்... 100 ரூபாய்க்கு புது பேக் அறிமுகம்

    • 30 நாட்களுக்கான சோனி லிவ் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சனின் ஒரிஜினல் விலை ரூ.299 ஆகும்.
    • சோனி லிவ் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சனை மொபைல் மற்றும் டிவியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வோடபோன் ஐடியா நிறுவனம் புது போஸ்ட்பெய்டு ஆட்-ஆன் பேக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.100 விலைமதிப்பு கொண்ட அந்த பேக் 30 நாட்களுக்கான சோனி லிவ் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சனை இலவசமாக வழங்குகிறது. இந்த புதிய பேக் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய 10 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.

    இந்த பேக் மூலம் கிடைக்கும் 30 நாட்களுக்கான சோனி லிவ் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சனை மொபைல் மற்றும் டிவியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். 30 நாட்களுக்கான சோனி லிவ் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சனின் ஒரிஜினல் விலை ரூ.299 அதனை தற்போதைய ஆஃபர் மூலம் ரூ.100க்கு பெற முடியும்.


    இதுதவிர ப்ரீபெய்டு பயனர்களுக்கு ஒரு ஆட்-ஆன் பேக்கை வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.82 விலைமதிப்பு கொண்ட அந்த பேக்கின் மூலம் ப்ரீபெய்டு பயனர்கள் 28 நாட்களுக்கான சோனி லிவ் சப்ஸ்கிரிப்சனை பெற முடியும். இதுதவிர 14 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய 4ஜிபி டேட்டாவும் இந்த பேக்கில் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×