வெளியீட்டுக்கு முன்பே ரூ.1.5 லட்சத்துக்கு ஏலம் போன நத்திங் ஸ்மார்ட்போன்

ஸ்டாக் எக்ஸ் நிறுவனத்துடன் நத்திங் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏலத்தில் ஜெயித்தவர்களுக்கு இந்த போன் 35 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும்.
வெளியீட்டுக்கு முன்பே ரூ.1.5 லட்சத்துக்கு ஏலம் போன நத்திங் ஸ்மார்ட்போன்
Published on

நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி நடைபெற உள்ள ஈவண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அந்த போன் அறிமுகமாகும் முன்பே விற்பனைக்கு வர உள்ளது. அதன்படி 100 போன்களை மட்டும் அந்நிறுவனம் வெளியீட்டு முன் விற்பனை செய்ய உள்ளது.

இதற்காக ஸ்டாக் எக்ஸ் நிறுவனத்துடன் நத்திங் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏலத்தின் அடிப்படையில் இந்த 100 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி ஜூன் 21-ந் தேதி ஸ்டாக் எக்ஸின் தொழில்நுட்ப தளமான டிராப் எக்ஸின் இந்த ஏலம் தொடங்கி உள்ளது. இன்றுடன் இந்த ஏலம் முடிவடைய உள்ளது.

ஏராளமானோர் இந்த ஏலத்தில் கலந்துகொண்டு உள்ளனர். தற்போது வரை இதில் அதிகபட்சமாக ரூ.1.56 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது. ஏலத்தில் ஜெயித்தவர்களுக்கு இந்த போன் 35 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போனின் விலை ரூ.30 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com