என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- பெரிய அளவிலான ஃபைல்களை அனுப்பும்போது வைஃபையைப் பயன்படுத்துமாறு வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.
- சிறு வணிகங்கள் மற்றும் பள்ளிக் குழுக்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்கள் 2ஜிபி வரையிலான மீடியா ஃபைல்களை ஷேர் செய்யும் அசத்தலான புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பல கட்டங்களாக இந்த அம்சத்தை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது, வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜிபி மீடியா ஃபைல்ஸ் ஷேரிங் அம்சம் தொடர்பான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது. பீட்டா வெர்ஷன் மூலம் நடத்தப்பட்ட விரிவான சோதனைக்குப் பிறகு, வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்கு இந்த அசத்தல் அம்சத்தை வெளியிடுகிறது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், "இப்போது நீங்கள் வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் 2ஜிபி அளவு வரையிலான ஃபைல்களை அனுப்பலாம், இது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இது முந்தைய வரம்பான 100MB-இல் இருந்து அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது சிறு வணிகங்கள் மற்றும் பள்ளிக் குழுக்களுக்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
பெரிய அளவிலான ஃபைல்களை அனுப்பும்போது வைஃபையைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். உங்கள் பரிமாற்றம் எவ்வளவு நேரம் ஆகும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க, பதிவேற்றும் போது அல்லது பதிவிறக்கம் செய்யும் போது கவுண்டரைக் காண்பிப்போம்" என்று வாட்ஸ்அப் நிறுவனம் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.
- டீபாட் எனும் ட்ரோஜான் தான் இதில் 410 செயலிகளை பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அடுத்ததாக எக்ஸ்பாட் எனும் ட்ரோஜான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 1 பில்லியன் முறைக்கு மேல் கூகுள் பிளே ஸ்டோரில் டவுண்லோடு செய்யப்பட்ட 639 பினான்சியல் செயலிகளை டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் கேமிங் செயலிகள் சில பயனர்களின் வங்கிச் சான்றுகளைத் திருடுவதற்காக உருவாக்கப்பட்டவை என பிளீப்பிங் கம்ப்யூட்டர் எனும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியில் மறைந்திருக்கும் மொபைல் பேங்கிங் ட்ரோஜான்கள், நீங்கள் முறையான வங்கி அல்லது நிதிப் பயன்பாட்டைத் தொடங்கும்போது செயல்பட தொடங்குமாம்.
உண்மையான லாகின் பக்கங்களுக்கு பதில் போலியான்வற்றை காண்பித்து பயனர்களின் அக்கவுண்ட் விவரங்களை திருடி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனவாம். இதில் மிகவும் அபாயகரமான டாப் 10 ட்ரோஜான்கள், 1 பில்லியன் முறைக்கு மேல் கூகுள் பிளே ஸ்டோரில் டவுண்லோடு செய்யப்பட்ட 639 பினான்சியல் செயலிகளை டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது.

இதில் அமெரிக்காவை சேர்ந்த பயனர்களுக்கு தான் ஆபத்து அதிகமாம். நான்கில் மூன்று பயனர்கள் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தி தினசரி தங்களது பண பரிவர்தனைகளை செய்துவருவதாக கூறப்படுகிறது. இந்த லிஸ்ட்டில் அதிகபட்சமாக அமெரிக்கர்கள் பயன்படுத்தும் 121 செயலிகளும், இங்கிலாந்தைச் சேர்ந்த 55 செயலிகளும், இத்தாலியின் 43 செயலிகளும், டர்க்கியின் 34 செயலிகளும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 33 செயலிகளும், பிரான்ஸை சேர்ந்த 31 செயலிகளும் உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் இந்தியாவில் 100 மில்லியனுக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்ட போன்பே எனும் பேமண்ட் செயலியும் இத்தகைய ஆபத்தில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. டீபாட் எனும் ட்ரோஜான் தான் இதில் 410 செயலிகளை பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அடுத்ததாக எக்ஸ்பாட் எனும் ட்ரோஜான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- சாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்டு லைட் போனின் விலை தற்போதைய மடிக்கக்கூடிய மாடல்களை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஃபோல்டு மாடலை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. பின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் சாம்சங் ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக கேலக்ஸி இசட் ப்ளிப் மாடலும் வெளியிடப்பட்டது.
அந்த வரிசையில், சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் சீரிஸ் மாடலின் லைட் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த 2 ஆண்டுகளாக தகவல் வெளியானது. பின் அது வதந்தியாக இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை மீண்டும் அறிமுகப்படுத்தும் பணியில் அந்நிறுவனம் மும்முரமாக இறங்கி உள்ளது.

கேலக்ஸி ஃபோல்டு லைட் இசட் சீரிஸ் மாடலாக இருக்காது என கூறப்படுகிறது. இதன் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தற்போதைய தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படும் என்றும், இதில் 7 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் மிக மெல்லிய கிளாஸ் இடம்பெற்றிருக்குமாம்.
இதன் விலை சாம்சங்கின் தற்போதைய மடிக்கக்கூடிய மாடல்களை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங்கின் மடிக்கக்கூடிய போன்களுக்கு அதிக மவுசு உள்ளதால், தற்போது அதனை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.















