என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் மற்றும் மேக்புக் தயாரிப்புக்கு உதவிக்கரம் நீட்டும் சாம்சங்
    X

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் மற்றும் மேக்புக் தயாரிப்புக்கு உதவிக்கரம் நீட்டும் சாம்சங்

    • ஆப்பிள் நிறுவனம் OLED டிஸ்பிளேக்களுடன் கூடிய அதன் முதல் ஐபேட் புரோ மாடல்களை வருகிற 2024-ம் ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
    • ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே சமீபத்திய ஆப்பிள் போன்கள் மற்றும் ஆப்பிஸ் வாட்ச்களில் OLED டிஸ்பிளேக்களை பயன்படுத்தி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தில் ஐபேடுகள் மற்றும் மேக்புக்குகளுக்கு ஏற்றவாறு பெரிய OLED டிஸ்பிளேக்களை சாம்சங் நிறுவனம் தயாரித்து சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்கால ஆப்பிள் தயாரிப்புகளுக்கான ஆர்டர்களை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு சாம்சங் நிறுவனம் இத்தகைய முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் OLED டிஸ்பிளேக்களுடன் கூடிய அதன் முதல் ஐபேட் புரோ மாடல்களை வருகிற 2024-ம் ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாடல்களுக்கு தான் சாம்சங் நிறுவனம் டிஸ்பிளேக்களை தயாரிக்க உள்ளதாம். ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபேட் மற்றும் மேக்புக் டிஸ்பிளேக்களை மினி-LED டிஸ்பிளேக்களாக கடந்தாண்டு மாற்றியது, விரைவில் வர உள்ள OLED டிஸ்பிளே அதன் அடுத்த கட்டமாக இருக்கும் என தெரிகிறது.


    மினி-LED டிஸ்பிளேக்களை போல் அல்லாமல் OLED டிஸ்பிளேக்கள் செல்ஃப் எமிட்டிங் பிக்சல்களை கொண்டிருக்கும். இதற்கு பேக் லைட்டிங் தேவைப்படாது. மேலும் இது காண்ட்ராஸ்ட் ரேசியோவை அதிகப்படுத்தவும், பேட்டரி லைஃபை அதிகரிக்கவும் உதவுமாம். ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே சமீபத்திய ஆப்பிள் போன்கள் மற்றும் ஆப்பிஸ் வாட்ச்களில் இந்த OLED டிஸ்பிளேக்களை பயன்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×