search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    டூயல் கேமராவுடன் கூடிய ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பை திடீரென நிறுத்தியது மெட்டா நிறுவனம்
    X

    டூயல் கேமராவுடன் கூடிய ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பை திடீரென நிறுத்தியது மெட்டா நிறுவனம்

    • மெட்டாவின் ஸ்மார்ட்வாட்ச்சில், ஒரு கேமரா டிஸ்பிளேவின் கீழ் பகுதியிலும், மற்றொன்று பின்புறத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டது.
    • ஸ்மார்ட் பேண்டுகளின் தயாரிப்பில் மெட்டா நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இரட்டை கேமராக்களைக் கொண்ட தனது முதல் ஸ்மார்ட்வாட்ச்சின் தயாரிப்பை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிலன் என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட அந்த ஸ்மார்ட்வாட்ச், அதன் பெரிய டிஸ்பிளே மற்றும் செயல்பாட்டுக் கண்காணிப்பு, மியூசிக் பிளேபேக் மற்றும் செய்தி அனுப்புதல் உள்ளிட்ட அம்சங்களுடன் ஆப்பிள் வாட்சுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இருப்பினும், ஆப்பிள் வாட்ச் போலல்லாமல், வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு கேமரா அமைப்புடன் அந்த ஸ்மார்ட்வாட்சை மெட்டா நிறுவனம் உருவாக்கி வந்ததாம். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மெட்டா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வந்த அந்த ஸ்மார்ட்வாட்ச்சில், ஒரு கேமரா டிஸ்பிளேவின் கீழ் பகுதியிலும், மற்றொன்று பின்புறத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டது.


    இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களுடன் தயாராகி வந்த இரட்டை கேமரா ஸ்மார்ட்வாட்ச்சின் தயாரிப்பை மெட்டா நிறுவனம் நிறுத்திவிட்டதாகவும், அதற்கு பதிலாக ஸ்மார்ட் பேண்டுகளின் தயாரிப்பில் அந்நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து மெட்டா நிறுவனம் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

    Next Story
    ×