என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    பேவரைட் போஸ்ட்டுகளை பின் செய்யும் வசதி இன்ஸ்டாகிராமில் அறிமுகம்
    X

    பேவரைட் போஸ்ட்டுகளை பின் செய்யும் வசதி இன்ஸ்டாகிராமில் அறிமுகம்

    • மூன்று போட்டோக்கள் அல்லது ரீல்ஸ்களை பயனர்கள் தங்களது புரஃபைலில் பின் செய்து வைத்துக்கொள்ள முடியும்.
    • முன்னதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களை பின் செய்து வைத்துக்கொள்ளும் அம்சம் மட்டுமே இருந்து வந்தது.

    இன்ஸ்டாகிராம் நிறுவனம் தற்போது கிரிட் பின்னிங் எனும் புது அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி பயனர்கள் தங்களுக்கு பிடித்த பேவரைட் போஸ்ட்டுகளை தங்களது புரஃபைலில் முதலில் வருவது போன்று வைத்துக் கொள்ள முடியும். இதுகுறித்த டெஸ்டிங்கை கடந்த ஏப்ரம் மாதம் தொடங்கிய அந்நிறுவனம் தற்போது அந்த அம்சத்தை பயனர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.

    முன்னதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களை பின் செய்து வைத்துக்கொள்ளும் அம்சம் மட்டுமே இருந்து வந்தது. தற்போது போஸ்ட்டுகள் மற்றும் ரீல்ஸ்களுக்கும் அந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மூன்று போட்டோக்கள் அல்லது ரீல்ஸ்களை பயனர்கள் தங்களது புரஃபைலில் பின் செய்து வைத்துக்கொள்ள முடியும்.


    இந்த அம்சத்தை பயன்படுத்துவது எப்படியென்றால், ஒவ்வொரு போஸ்ட்டுகளின் மேலே வலது பக்கத்தில் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டன் இருக்கும், அதனை செலெக்ட் செய்து அதில் உள்ள பின் டூ யுவர் புரஃபைல் (pin to your profile) என்கிற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அது உங்களது பேவரை போஸ்ட்டுகளை ஹைலைட் செய்ய சொல்லும், அதன் மூலம் செலக்ட் செய்து பின் செய்து கொள்ளலாம்.

    இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது பயனர்களை கவர்வதற்காக தொடர்ந்து விதவிதமான அப்டேட்டுகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. சமீபத்தில் ரீல்ஸ் வீடியோவை 90 விநாடி வரை பதிவேற்றும் அம்சத்தை கொண்டு வந்த அந்நிறுவனம் தற்போது பேவரைட் போஸ்ட்டுகளை பின் செய்யும் அசத்தல் அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×