search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 27 ஆண்டுகால சேவை முடிவுக்கு வருகிறது
    X

    இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 27 ஆண்டுகால சேவை முடிவுக்கு வருகிறது

    • கடந்த 1995-ம் ஆண்டு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டது.
    • கணினி உலகில் ஒரு அங்கமாக இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் நாளையுடன் விடைபெற உள்ளது.

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் வருகிற நாளை (ஜூன் 15) உடன் விடைபெறுகிறது. கடந்தாண்டு இது தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. கடந்த 1995-ம் ஆண்டு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டது. உலகளவில் மக்கள் பரவலாக கணினிகளை பயன்படுத்த தொடங்கிய காலத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூலம் தான் பயனர்கள் தங்களுக்கு தேவையானவற்றை இணைய வழியில் தேடி தெரிந்துகொண்டனர்.

    இதையடுத்து இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் படிப்படியாக பல்வேறு அப்டேட்களையும் கண்டது. கடைசியாக கடந்த 2013ம் ஆண்டில் இதன் 11-வது வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு விண்டோஸ் 10 வருகையின் காரணாமாக கடந்த 2015-ம் ஆண்டு வாக்கில் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் என்கிற புதிய பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டது.


    அப்போதே இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் அடுத்த வெர்ஷனுக்கான அப்டேட்டையும் அந்நிறுவனம் நிறுத்திக் கொண்டது. படிப்படியாக எட்ஜ் பிரவுசரை பயனர்கள் மத்தியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், விண்டோஸ் 11-ன் ஸ்டார்ட் மெனுவில் இருந்து இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை தூக்கியிருந்தது.

    இந்நிலையில் தற்போது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் விடைபெற உள்ளது. சுமார் 27 ஆண்டுகளாக கணினி உலகில் ஒரு அங்கமாக இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் நாளையுடன் விடைபெற உள்ளது அதன் பயனர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்துள்ளது.

    Next Story
    ×