என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அறிந்து கொள்ளுங்கள்
ஒரே ஆண்டில் 10 கோடி டவுன்லோட்களை கடந்தது பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா
- பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமினை கூகுள் பிளே ஸ்டோரில் 10 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர்.
- பப்ஜி மொபைல் கேமின் புது வடிவமாக அறியப்படும் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் டவுன்லோட்களில் அசத்தி வருகிறது.
பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேம் கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோட்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கிராப்டான் நிறுவனம் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமினை ஆண்ட்ராய்டு தளங்களுக்கென கூகுள் பிளே ஸ்டோரில் கடந்தாண்டு வெளியிட்டது. முன்னதாக இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல் கேமின் புது வடிவமாக அறியப்படும் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் டவுன்லோட்களில் அசத்தி வருகிறது.
இதுவரை பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமினை கூகுள் பிளே ஸ்டோரில் 10 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர். வெளியிடப்பட்ட ஒரே ஆண்டில் 10 கோடிக்கும் அதிகாமானோர் டவுண்லோட் செய்துள்ளனர். இதையொட்டி பல்வேறு போட்டிகளையும் நடத்த உள்ளதாக கிராப்டான் நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.
பேட்டில்கிரவுண்ட்ஸ் பயனர்களுக்காக நடத்தப்படும் இந்த போட்டியில் பரிசுகளும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பரிசுக்காக ரூ.6 கோடி வரை அந்நிறுவனம் செலவழிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டிகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.