பயனர்களுக்கு இலவசமாக ரூ.50 வழங்குகிறது வோடபோன் ஐடியா நிறுவனம் - அதனை பெறுவது எப்படி?

பயனர்கள் மத்தியில் வி செயலியை பிரபலப்படுத்தவே அந்நிறுவனம் இவ்வாறு செய்துள்ளது.இந்த புதிய சலுகை மூலம் இலவசமாக ரூ. 50 கேஷ்பேக்கும், 30 ரிவார்ட் காயினும் வழங்கப்படுகிறது.
பயனர்களுக்கு இலவசமாக ரூ.50 வழங்குகிறது வோடபோன் ஐடியா நிறுவனம் - அதனை பெறுவது எப்படி?
Published on

தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா, தற்போது தனது பயனர்களுக்கு புது சலுகை ஒன்றை அறிவித்து உள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான வி ஆப் மூலம் பயனர்கள் ரூ.50 கேஷ்பேக் இலவசமாக பெற முடியும்.

அது எப்படி என்று தற்போது பார்க்கலாம்.

பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் வோடபோன் ஐடியா நிறுவன மொபைல் நம்பருக்கு ரிசார்ஜ் செய்ய வி செயலியை புதிதாக டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.50 கேஷ்பேக்கும், 30 ரிவார்ட் காயின்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பயனர்கள் மத்தியில் வி செயலியை பிரபலப்படுத்தவும், அதன்மூலம் வரும் வருவாயை அதிகரிக்கவும் வோடபோன் ஐடியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com