search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
    X

    அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    • ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்று உள்ளது.
    • அசுஸ் ரோக் போன் 6 மாடலை விட அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

    அசுஸ் நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்‌ஷிப் போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அசுஸ் சென்போன் 9 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜுலை 28-ந் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் இந்தியாவில் அசுஸ் 9z என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 5.9 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதில் சைடு மவுண்டட் கைரேகை சென்சார் இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வருகிறது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளது.


    புராசஸரை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி 4,300 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகியவை இதில் இடம்பெற்று உள்ளன.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட அசுஸ் ரோக் போன் 6 மாடலை விட அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கொண்ட இதன் பேஸ் மாடலின் விலை ரூ.60 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×