நத்திங் போனை முன்பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளின் முழு விவரம்

நத்திங் போனை வாங்க முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு அந்நிறுவனம் ஏராளமான சலுகைகளையும் வழங்கி உள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் முதலில் கிடைக்கும்.
நத்திங் போனை முன்பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளின் முழு விவரம்
Published on

நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை லண்டனில் நேற்று நடைபெற்ற ஈவண்ட்டில் வெளியிட்டுள்ளது. இந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தியது. அதில் ஒன்று தான் முன்பதிவு. இந்த ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதலில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அப்படி முன்பதிவு செய்தவர்களுக்கு பாஸ் ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. அதனை பெற்றவர்களுக்கு மட்டுமே முதலில் நத்திங் போன் வழங்கப்பட உள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இந்த 2 ஆயிரம் ரூபாய் முன்பதிவு தொகை, போன் வாங்கும்போது அதன் மொத்த விலையில் கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நத்திங் போன் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை வாங்க முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு அந்நிறுவனம் ஏராளமான சலுகைகளையும் வழங்கி உள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு போனில் மொத்த விலையில் இருந்து ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, முன்பதிவு செய்தவர்கள் ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மூலம் நத்திங் போனை வாங்கினால் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உடனடி டிஸ்கவுண்ட் சலுகையும் வழங்கப்பட்டு உள்ளது.

இதுதவிர நத்திங் போனை முன்பதிவு செய்தவர்கள் அந்நிறுவனத்தின் 45வாட் பவர் அடாப்டர் மற்றும் நத்திங் இயர் 1 TWS இயர்போனை ரூ.1000 சலுகையுடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடாப்டர் மற்றும் இயர்போனின் ஒரிஜினல் விலை ரூ.2,999 மற்றும் ரூ.6,999 ஆகும். வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளம் மூலம் நத்திங் போனின் விற்பனை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com