search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இனி போட்டோவையும் ரீல்ஸாக பதிவிடலாம் - இன்ஸ்டாகிராமில் வருகிறது புது அம்சம்
    X

    இனி போட்டோவையும் ரீல்ஸாக பதிவிடலாம் - இன்ஸ்டாகிராமில் வருகிறது புது அம்சம்

    • தற்போது ரீல்ஸில் வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும்.
    • விரைவில் வர உள்ள புது அப்டேட்டின் மூலம் போட்டோக்களையும் வீடியோவாக எடிட் செய்து பதிவிடலாம்.

    இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிக்டாக்கிற்கு மாற்றான இந்திய செயலிகள் பிளே ஸ்டோரில் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனமும் டிக்டாக் செயலிக்கு மாற்றாக தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அம்சத்தை வழங்கி வருகிறது.

    இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் என்பது வீடியோ-மியூசிக் ரீமிக்ஸ் சேவை ஆகும். இது இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரிஸ் பகுதியில் வழங்கப்படுகிறது. தற்போது ரீல்ஸில் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் இனி புகைப்படங்களை தொகுத்து அதற்கு பின்னணியில் பாடல்களை ஒலிக்கவிட்டு ரீல்ஸாக பதிவிட முடியும் என்கிற புதிய அம்சத்தை அந்நிறுவனம் பயன்பாட்டுக்கு கொண்டுவர் உள்ளது.


    தற்போது ரீல்ஸில் வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும். விரைவில் வர உள்ள புது அப்டேட்டின் மூலம் போட்டோக்களையும் வீடியோவாக எடிட் செய்து பதிவிடலாம். இதற்காக விதவிதமான டெம்ப்ளேட்களையும் அந்நிறுவனம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×