search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஐபோன் 14 சீரிஸ் - ஆப்பிள் நிறுவனத்திற்கு முதல் முறை - என்ன தெரியுமா?
    X

    ஐபோன் 14 சீரிஸ் - ஆப்பிள் நிறுவனத்திற்கு முதல் முறை - என்ன தெரியுமா?

    • ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் தனது புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது ஐபோன் சீரிஸ் மாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

    ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் வெளியீடு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் முன்பே, புதிய ஐபோன் மாடல்கள் வெளியீட்டின் போதே உற்பத்தியும் துவங்கி விடும் என தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னணி ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் தனது ஐபோன் 14 உற்பத்தியை சீனாவில் துவங்கும் போதே இந்திய சந்தையிலும் துவங்கும் என தெரிவித்து இருக்கிறார். சீனா மற்றும் இந்தியாவில் ஐபோன் 14 உற்பத்தி இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் துவங்குகிறது.


    புது ஐபோன்கள் வெளியீட்டை தொடர்ந்து இந்திய உற்பத்தியும் துவங்க இருப்பது இதுவே முதல் முறை ஆகும். வழக்கமாக புது ஐபோன் வெளியான இரு காலாண்டுக்கு பின்பு தான் இந்தியாவில் அதன் உற்பத்தி துவங்கும். புதிய ஐபோன் 14 மாடல்களின் உற்பத்தி தமிழ் நாட்டில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    இரண்டாவது காலாண்டு வருவாய் அறிக்கையின் படி ஆப்பிள் நிறுவன வருவாய் இந்தியாவில் இருமடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தான் ஆப்பிள் தனது புது ஐபோன்களை இந்திய சந்தையில் உற்பத்தி செய்ய முடிவு எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் போது புது ஐபோன்களின் விலை கணிசமாக குறையவும் வாய்ப்புகள் உண்டு.

    தற்போதைய தகவல்களின் படி புதிய ஐபோன் 14 மாடல் விலை 799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 63 ஆயிரத்து 200 முதல் துவங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்யலாம். இவை அனைத்திலும் 120Hz ப்ரோமோஷன் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

    Next Story
    ×