search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Media Player"

    • விஎல்சி மீடியா பிளேயரை உருவாக்கி நிர்வகித்து இருக்கும் வீடியோ லேன், இந்தியாவில் விஎல்சி வலைதளம் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
    • இந்த மல்டிமீடியா பிளேயர் கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.

    தொண்டு நிறுவனமான வீடியோலேன் தனது விஎல்சி மீடியா பிளேயர் இந்தியாவில் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. பாரிஸ் சார்ந்த வீடியோலேன் இந்தியாவில் பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் தனது அதிகாரப்பூர்வ வலைதளம் முடக்கப்பட்ட நிலையில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த வலைதளம் எதற்காக முடக்கப்பட்டது என்ற காரணம் மர்மமாகவே உள்ளது.

    இது குறித்து டிஜிட்டல் லிபர்டீஸ் அமைப்பு சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வலைதளம் முடக்கப்பட்டதற்கான காரணம் கேட்கப்பட்டது. இதில் விஎல்சி வலைதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதற்கான காரணம் பற்றி அரசுக்கு எதுவும் தெரியாது என பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மல்டிமீடியா பிளேயர் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.

    விஎல்சி மீடியா பிளேயருக்கான ஒபன் சோர்ஸ் வலைதளம் இந்தியாவில் பிப்ரவரி 13 ஆம் தேதியில் இருந்து முடக்கப்பட்டு இருக்கிறது என வீடியோலேன் தலைவர் மற்றும் மூத்த டெவலப்பர் ஜீன்-பேப்டிஸ்ட் கெம்ப் தெரிவித்து இருக்கிறார். சில இணைய சேவை வழங்கும் (ISP) நிறுவனங்கள் வலைதளத்தை முடக்கி உள்ளன என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

    "நாங்கள் இந்திய அரசிடம் கேட்டோம், ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை. நாங்கள் சரியான இடத்தில் கேட்கவில்லை என தோன்றுகிறது. எப்படி முறையாக கேட்க வேண்டும் என்று எனக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். சில ISP-க்கள் வலைதளத்தை முடக்கி உள்ளன. ஆனால் சில ISP-க்கள் முடக்கவில்லை. இது உண்மை எனில், இவை அரசின் முடிவுக்கு கட்டுப்படவில்லையா?" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    ×