என் மலர்

  அறிந்து கொள்ளுங்கள்

  இந்தியாவில் ஐபோன் 14 உற்பத்தி எப்போ தொடங்குது தெரியுமா?
  X

  இந்தியாவில் ஐபோன் 14 உற்பத்தி எப்போ தொடங்குது தெரியுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யும் ஐபோன் 14 மாடல்களை இந்தியாவிலும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
  • புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாத துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிவிக்கப்பட உள்ளன.

  ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் தனது ஐபோன் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. எனினும், இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் ஐபோன் 14 சீரிஸ் இந்திய உற்பத்தியில் ஆப்பிள் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி சீனாவில் உற்பத்தியான ஐபோன் 14 யூனிட்கள் விற்பனைக்கு வந்ததும், இந்த மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

  இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் அக்டோபர் அல்லது நவம்பர் மாத வாக்கில் இந்தியாவில் ஐபோன் 14 கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். அதன்படி தீபாவளி பண்டிகை காலத்தில் இந்திய சந்தையில் ஐபோன் 14 விற்பனைக்கு வரும். ஐபோன் உற்பத்தி துவங்கும் முன் அவை ஆப்பிள் நிறுவனத்தின் ரகசிய தர கட்டுப்பாட்டை பூர்த்தி செய்ய வேண்டும். இதனை சீனா தவிர மற்ற சந்தைகளில் இதனை சாத்தியப்படுத்துவது எளிய காரியம் கிடையாது.


  ஐபோன் உற்பத்தியில் ஆப்பிள் எதிர்பார்க்கும் வசதிகள் எதுவும் தற்போது சரியாக பின்பற்றப்படுவதில்லை. பணியிடத்தில் மோசமான நிலையை காரணம் காட்டி ஊழியர்கள் போராட்டம் நடத்திய சம்பவங்கள் முன்னதாக அரங்கேறி இருக்கின்றன. அந்த வகையில் இது போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு ஆப்பிள் உற்பத்தியாளரான பாக்ஸ்கான் ஐபோன் 14 இந்திய உற்பத்தியை சீன யூனிட்கள் விற்பனைக்கு வந்த பின் துவங்க முடிவு செய்துள்ளது.

  இந்திய சந்தையில் ஐபோன் மாடல்களுக்கு தொடர்ந்து அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை அடுத்து உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாகவும் இந்தியா விளங்குகிறது. இதை கொண்டு ஐபோன் விற்பனையை பன்மடங்கு அதிகரித்துக் கொள்ள ஆப்பிள் திட்டமிட்டு வருகிறது.

  Next Story
  ×