search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஏலத்துக்கு வந்த ஒரிஜினல் ஐபோன் - ரூ. 28 லட்சத்துக்கு விற்பனையாகி அசத்தல்
    X

    ஏலத்துக்கு வந்த ஒரிஜினல் ஐபோன் - ரூ. 28 லட்சத்துக்கு விற்பனையாகி அசத்தல்

    • ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை மிக விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • 2007 ஆம் ஆண்டு வாக்கில் முதல் ஐபோன் மாடலை ஸ்டீவ் ஜாப்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்தார்.

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தலைமுறை 2007 ஐபோன் மாடல் 35 ஆயிரம் டாலர்கள், ரூ. 28 லட்சம் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் பிரிக்கப்படாத 2007 ஐபோன் மாடல் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. 2007 ஜனவரி 9 ஆம் தேதி அப்போதைய ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை அறிமுகம் செய்தார்.

    முதல் தலைமுறை ஐபோன் மாடலில் தொடுதிரை வசதி, ஐபாட், கேமரா, பிரவுசிங் வசதி மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஐபோன் அறிமுக நிகழ்வு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மேக்வொர்ல்டு கன்வென்ஷனில் நடைபெற்றது. இந்த மாடலில் தொடுதிரை, 2MP கேமரா, விஷூவல் வாய்ஸ் மெயில், வெப் பிரவுசர் போன்ற அம்சங்கள் உள்ளன.


    2007 ஜூன் மாத வாக்கில் ஐபோன் மாடல் விற்பனைக்கு வந்தது. ஐபோன் 4ஜிபி மாடல் விலை 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 39 ஆயிரத்து 884 என்றும் 8 ஜிபி மாடல் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 47 ஆயிரத்து 877 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆர்ஆர் ஆக்‌ஷன் நிறுவனம் சிறிதளவும் பிரிக்கப்படாத ஐபோன் பாக்ஸ்-ஐ ஏல விற்பனைக்கு அறிவித்து இருந்தது. இந்த ஐபோன் ஸ்கிரீனில் 12 ஐகான்கள் இடம்பெற்று இருந்தது. ஆகஸ்ட் 18 ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற ஏலம் "ஆப்பிள், ஜாப்ஸ் மற்றும் கம்ப்யுட்டர் ஹார்டுவேர்" தலைப்பில் நடைபெற்றது. இதில் மொத்தம் 70-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

    இதே ஏலத்தில் ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியக் தனது கையால் சோல்டரிங் செய்த 1 சர்கியுட் போர்டு, 6 லட்சத்து 77 ஆயிரத்து 196 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இத்துடன் திறக்கப்படாத முதல் தலைமுறை ஐபாட் 5ஜிபி மாடல் 25 ஆயிரம் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×