என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • டுவிட்டரை தொடர்ந்து மெட்டா நிறுவனமும் கட்டண முறையில் வெரிஃபைடு சேவையை வழங்க துவங்கியது.
    • டுவிட்டர் மட்டுமின்றி டெலிகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற தளங்களிலும் இதே போன்ற கட்டண முறை அமலில் இருந்துவருகிறது.

    மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் தனது கட்டண சந்தா முறையை அறிவித்து இருக்கிறது. புதிய கட்டண சந்தா முறையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பணம் கொடுத்து வெரிஃபிகேஷன் பெற முடியும். முன்னதாக இதே போன்ற சேவையை எலான் மஸ்க்-இன் டுவிட்டர் அறிமுகம் செய்தது.

    மெட்டா வெரிஃபைடு சேவை பயனர்களுக்கு புளூ பேட்ஜ் மூலம் அக்கவுண்ட்களை அரசு அடையாள அட்டை மூலம் வெரிஃபை செய்கிறது. இதற்கான கட்டணம் வெப் வெர்ஷனில் மாதம் 11.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 990 என்றும் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் மாத கட்டணம் 14.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,240 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    பிப்ரவரி மாத வாக்கில் இந்த சேவைக்கான டெஸ்டிங் துவங்கிய நிலையில், தற்போது வெளியாகி இருக்கிறது. முன்னதாக ஸ்னாப்சாட் மற்றும் டெலிகிராம் போன்ற சேவைகளிலும் இதேபோன்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சேவையின் மூலம் சமூக வலைத்தள நிறுவனங்கள் வருவாய் ஈட்ட துவங்கி இருக்கின்றன.

    ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மெட்டா வெரிஃபைடு சேவை அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது அமெரிக்கா மற்றும் மேலும் சில நாடுகளில் அறிமுகமாகி இருக்கிறது. முறையான அரசு அடையாள அட்டையுடன் மாத சந்தா செலுத்தும் பட்சத்தில் வெரிஃபைடு வசதி வழங்கப்படும்.

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
    • புதிய பிக்சல் ஃபோல்டு மாடல் மே மாதம் நடைபெற இருக்கும் கூகுள் IO நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்.

    கூகுள் நிறுவனம் தனது சொந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது.

    பிரபல டிப்ஸ்டரான யோகேஷ் பிரர் வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களின் படி பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் விலை 1300-இல் தொடங்கி 1500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 07 ஆயிரத்து 421 முதல் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து 947) வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

     

    இந்த தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விலை சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 4 விலையை விட 500 டாலர்கள் வரை குறைவாகவே இருக்கும். கேலக்ஸி Z ஃபோல்டு 4 ஸ்மார்ட்போன் சாம்சங் அறிமுகம் செய்த கடைசி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் முன்னணி நிறுவனமாக இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனுடன் மிட் ரேன்ஜ் பிக்சல் 7a ஸ்மார்ட்போனினை கூகுள் IO 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி வருகிறது. 2023 கூகுள் IO நிகழ்வு இந்த ஆண்டு மே மாத வாக்கில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் பிக்சல் ஃபோல்டு மற்றும் பிக்சல் 7a ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது.

    புதிய பிக்சல் 7a ஸ்மார்ட்போனின் விலை 450 டாலர்களில் துவங்கி 500 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரத்து 188 என துவங்கி அதிகபட்சம் ரூ. 41 ஆயிரத்து 320 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 6a மாடலின் விலையும் இதேபோன்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Photo Courtesy: How to I Solve | Steve Hemmerstoffer

    • ஏர்டெல் நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • பயனர்களுக்கு வழங்கி வரும் சலுகை பலன்களை ஏர்டெல் அடிக்கடி மாற்றியமைத்து வருகிறது.

    ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு இலவச 5ஜி டேட்டாவை அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் அனுபவிப்பதை ஊக்குவிக்க முடியும் என ஏர்டெல் தெரிவித்து உள்ளது.

    இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டா பெறுவது எப்படி?

    ரூ. 239 மற்றும் இதை விட அதிக தொகை கொண்ட பிரீபெயிட் சலுகை பயன்படுத்துவோர் மற்றும் அனைத்து போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். தகுதியுடைய பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் ஆப் (Airtel Thanks App) சென்று இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.

    பயனர்கள் இனி அதிவேக, பாதுகாப்பு நிறைந்த 5ஜி பிளஸ் சேவையை அனுபவிக்க முடியும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அனைத்து சலுகைகளிலும் டேட்டா கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டதால், பயனர்கள் டேட்டா தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் இன்றி பயன்படுத்தலாம்.

    • வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஐபோனில் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • வாட்ஸ்அப் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வசதி ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதியை கடந்த மாதம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கியது. புதிய அப்டேட் மூலம் பயனர்கள் தங்களின் வாய்ஸ் நோட்-களை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். இந்த அம்சம் தற்போது ஐஒஎஸ் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது.

    வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் 23.5.77 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பயனர்கள் வாய்ஸ் நோட்-ஐ ஸ்டேட்டஸ் ஆக வைக்க செய்கிறது. புதிய அம்சத்தை பெற ஆப் ஸ்டோரில் வாட்ஸ்அப் செயலியை தேர்வு செய்து, அப்டேட் செய்ய வேண்டும். செயலியை அப்டேட் செய்ததும் இந்த வசதி வழங்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.

     

    பயன்படுத்துவது எப்படி?

    - ஐபோனில் வாட்ஸ்அப் செயலியை திறக்கவும்

    - ஸ்கிரீனின் கீழ்புறம் இருக்கும் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை கிளிக் செய்யவும்

    - கீழ்புறத்தில் வலதுபுறமாக இருக்கும் பென்சில் ஐகானை கிளிக் செய்யவும்

    - வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் செய்ய மைக்ரோபோனை கிளிக் செய்யவும்

    - மைக்ரோபோன் ஐகானை கிளிக் செய்த படி மெசேஜை ரெக்கார்ட் செய்யவும். அதிகபட்சம் 30 நொடிகளுக்கு வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் செய்யவும்

    - மெசேஜை ரெக்கார்ட் செய்து முடித்தபின் அழுத்தி பிடித்திருக்கும் மைக்ரோபோன் ஐகானை விட்டுவிட வேண்டும்

    - ரெக்கார்ட் செய்த மெசேஜை ரிவியூ செய்த பின், அனுப்புவதற்கான ஐகானை கிளிக் செய்யவும்

    இவ்வாறு செய்தபின் உங்களின் வாய்ஸ் மெசேஜ் வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு தெரியும்..

    ஆப் ஸ்டோரில் இருக்கும் வாட்ஸ்அப் தளத்தில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய அம்சம் ஐஒஎஸ் பயனர்கள் வாட்ஸ்அப் வீடியோ காலில் இருந்தபடி பல்வேறு டாஸ்குகளை மேற்கொள்ள செய்கிறது.

    • அரசு வியாபாரங்களுக்கு எளிய நடைமுறைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
    • டிஜிட்டல் தனியுரிமை பாதுகாப்பை குடிமக்களுக்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவோ அல்லது பாதுகாப்பு பரிசோதனை செய்யவோ திட்டமிடவில்லை என அரசு தெரிவித்து இருக்கிறது. உள்நாட்டில் மின்னசாதன பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிஜிட்டல் தனியுரிமை பாதுகாப்பை குடிமக்களுக்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களின் படி கைப்பேசிகள் மற்றும் ஒஎஸ் அப்டேட்கள் குறித்து ஆய்வு செய்ய சோதனை செய்ய ஆய்வகங்களை கட்டமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.

    இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதில் அளித்து இருக்கிறது. அதில் அரசு வியாபாரங்களுக்கு எளிய நடைமுறைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது என்றும், 2026 ஆண்டு வாக்கில் மின்னணு உற்பத்தியில் 300 பில்லியன் டாலர்களை எட்ட இலக்கு நிர்ணயம் செய்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது.

    மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ர அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம் பாதுகாப்பு பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என தெரிவித்து இருக்கிறார்.

    பாதுகாப்பான ஒஎஸ் அப்டேட் மற்றும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகள் குறித்த தரக்கட்டுப்பாட்டு பணிகளை பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS) கவனித்துக் கொள்ளும் என இதுகுறித்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    உற்பத்தியாளர்கள், இதர சந்தையை சேர்ந்த பங்குதாரர்களுடன் கூடுதலாக சந்திப்புகளை நடத்திய பின் புதிய விதிகள் விதிக்கப்பட்டு, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இவற்றை ஒரு ஆண்டிற்குள் பின்பிற்ற வேண்டும்.

    • ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பணிநீக்கம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
    • கடந்த ஆண்டு இறுதியில் மெட்டா நிறுவனம் தனது மொத்த ஊழியர்களில் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    மெட்டா நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றி வருவோரில் பலரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் மட்டும் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்த நிலையில், மெட்டா நிறுவனம் மேலும் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. பணிநீக்கம் பற்றிய அறிவிப்பு வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

    பணிநீக்க அறிவிப்புடன், புதிய முடிவு குறித்து மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் ஏப்ரல் மாத இறுதியில் தொழில்நுட்ப குழுக்களில் பணிநீக்கம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் துவங்கும் என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். இந்த நடவடிக்கை காரணமாக மே மாத வாக்கில் பிஸ்னஸ் குழுக்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

    "அடுத்த சில மாதங்களில், org தலைவர்கள் மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவர். இதில் குறைந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள், புதிய ஊழியர்களை பணியில் சேர்த்தல் உள்ளிட்டவைகளை குறைக்கப்பட உள்ளன. குறைந்த பணியாளர்களை பணியமர்த்துவதன் மூலம் எங்களின் பணியமர்த்தும் குழுவை குறைப்பது என்ற கடின முடிவை எடுத்திருக்கிறோம். பணியமர்த்தும் குழு உறுப்பினர்களிடம், அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பற்றி நாளை அறிவிக்க இருக்கிறோம்," என மெட்டா நிறுவனம் சார்பில் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    வரும் மாதங்களில் 5 ஆயிரம் ஓபன் ரோல்களை நீக்க மெட்டா முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை பணிநீக்க நடவடிக்கைகள் தொடரும் என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இழப்பீடு அளிப்பது பற்றி மெட்டா தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    • சியோமி நிறுவனத்தின் 11 லைட் NE 5ஜி ஸ்மார்ட்போன் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் திடீரென வெடிக்க என்ன காரணம் என்பது மர்மமாகவே உள்ளது.

    ஸ்மார்ட்போன்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. கடந்த காலங்களில் சியோமி, ஒன்பிளஸ், சாம்சங் என பல்வேறு பிராண்டு ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறியுள்ளன. அந்த வகையில், தற்போது சியோமி 11 லைட் NE 5ஜி ஸ்மார்ட்போன் வெடித்து இருக்கிறது. பீகார் மாநிலத்தின் சஞ்சீவ் ராஜா என்பவர் பயன்படுத்தி வந்த ஸ்மார்ட்போன் திடீரென வெடித்து, அதில் இருந்து புகை வெளியேறி இருக்கிறது.

     

    சார்ஜர் எதிலும் இணைக்கப்படாத நிலையில், ஸ்மார்ட்போன் வெடித்ததாக கூறி அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சஞ்சீவ் ராஜா தனியார் செய்தி நிறுவனத்துடன் பகிர்ந்து இருக்கிறார். ஸ்மார்ட்போன் வெடித்ததற்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. ஸ்மார்ட்போன் வெடிக்கும் போது கட்டிலில் வைக்கப்பட்டு இருந்ததால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    தற்போது வெடித்துச் சிதறிய சியோமி 11 லைட் NE 5ஜி ஸ்மார்ட்போன் 2021 டிசம்பர் மாத வாக்கில் வாங்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போன் வெடித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போது பேட்டரியில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது. ஸ்மார்ட்போன் வெடித்த சம்பவம் குறித்து சியோமி தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    Source: 91Mobiles

    • ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விலையை அறிவித்தது.
    • ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விலையை அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில் தான், தற்போது ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடல் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃப்ளிப் 4 போன்றே காட்சியளிக்கிறது. சாம்சங் மற்றும் ஒப்போ என இரு நிறுவன ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களும் கிளாம்ஷெல் போன்ற டிசைன் கொண்டிருக்கின்றன. ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் 3.26 இன்ச் கவர் டிஸ்ப்ளே, AMOLED ஸ்கிரீன், செல்ஃபி மிரர் போன்ற அம்சங்கள் உள்ளன.

     

    விலை விவரங்கள்:

    ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா ஸ்டோரில் நடைபெற இருக்கிறது. ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் பர்பில் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் விற்பனை மார்ச் 17 ஆம் தேதி துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் எஸ் வங்கி, ஐசிஐசிஐ, கோடக் வங்கி, எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் முன்னணி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இத்துடன் அதிகபட்சம் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இவைதவிர ஒப்போ வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக எக்சேன்ஜ் அல்லது லாயல்டி போனஸ் ரூ. 5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

     

    ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் அம்சங்கள்:

    6.8 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    3.26 இன்ச் கவர் AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

    மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர்

    8 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    50MP பிரைமரி கேமரா

    இரண்டாவது கேமரா லென்ஸ்

    32MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    4ஜி, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி போர்ட்

    4300 எம்ஏஹெச் பேட்டரி

    44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    • ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தனது ஊழியர்களில் பெரும்பாலானோரை சமீபத்தில் பணிநீக்கம் செய்தது.
    • நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மெட்டா நிறுவனம் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்து இருந்தது.

    ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா அடுத்த சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைபடுத்தும் என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்து இருக்கிறது.

    நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அந்த வரிசையில், தற்போதைய தகவல் உண்மையாகும் பட்சத்தில் இரண்டாவது முறையாக பெரும்பாலானோரை பணிநீக்கம் செய்யும் முதலாவது பெரிய டெக் நிறுவனமாக இருக்கும். இதுபற்றிய அறிவிப்புகள் அடுத்த வாரத்தில் வெளியாகும் என்றும் கூறப்டுகிறது.

    இந்தமுறை பொறியியல் அல்லாத பிரிவுகளை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பணிநீக்கம் மட்டுமின்றி மெட்டா நிறுவனம் சில திட்டங்கள் மற்றும் குழுக்களை நிறுத்தவும் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இதுபற்றிய செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு மெட்டா பதில் அளிக்கவில்லை.

    • இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் விவரங்களை அறிவித்து இருக்கிறது.
    • புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பேட்டரியை ஒரே நிமிடத்தில் 25% வரை சார்ஜ் ஏற்றிவிடும்.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய 260 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 110 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட்சார்ஜ் வசதியையும் அறிவித்து இருக்கிறது. இவற்றை "ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ்" என இன்ஃபினிக்ஸ் அழைக்கிறது. பயனர்களுக்கு இது பாதுகாப்பான மற்றும் ஸ்மார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் அனுபவத்தை வழங்குகிறது.

    4400 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனினை 260வாட் ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ் 7.5 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். மேலும் ஒரே நிமிடத்தில் 25 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றிவிடும்.

    புதிய ஃபாஸ்ட்சார்ஜ் தொழில்நுட்பத்தில் உள்ள சார்ஜிங் ஆர்கிடெக்ச்சர் 4-பம்ப் இண்டெலிஜண்ட் சர்கியுட் டிசைன் கொண்டிருக்கிறது. இது மின் தேவையை கண்டறிந்து அதற்கு எத்தனை பம்ப்கள் தேவை என்பதை பொருத்து சார்ஜ் பம்ப்களை இயக்க செய்கிறது.

     

    இதில் உள்ள மேம்பட்ட 12C ஹை ரேட், 4400 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் மல்டி-எலெக்ட்ரோட் லக் கட்டமைப்பு அதிகபட்சம் 98.5 சதவீத சார்ஜிங்கை செயல்படுத்துவதோடு, பேட்டரி திறனை அதிகரிக்கிறது. ஆயிரம் முறை பேட்டரியை சார்ஜ் செய்த பின்பும் 90 சதவீத திறன் அப்படியே இருக்கும் என இன்ஃபினிக்ஸ் தெரிவித்துள்ளது.

    இந்த சார்ஜரில் மூன்று GaN மெட்டீரியல் PFC + AHB சர்கியூட் ஆர்கிடெக்ச்சர் உள்ளது. இது அதிக திறன், சிறிய அளவில், சேஃப் சார்ஜிங் கண்ட்ரோல் கொண்டிருக்கிறது. இதன் சார்ஜிங் கேபிளில் புதிய இண்டர்ஃபேஸ் ஸ்டிரக்ச்சர் டிசைன் உடன் இமார்கர் ஐடெண்டிஃபிகேஷன் சிப் கொண்டுள்ளது. இது அதிகபட்சம் 13A வரையிலான கரண்ட்-ஐ கடத்தும்.

    இதில் இன்ஃபினிக்ஸ் நிறுவனத்துடன் பிரத்யேக ஃபாஸ்ட் சார்ஜிங் ப்ரோடோகால் கொண்டிருக்கிறது. இது 260 வாட் அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங்கை சாத்தியப்படுத்துகிறது. இதனுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் 110 வாட் வயர்லெஸ் ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ் 16 நிமிடங்களில் சாதனத்தை முழுமையாக சார்ஜ் செய்கிறது.

     

    இதில் பிரத்யேக அளவில் சிறிய சென்சிடிவ் காயில்கள் உள்ளன. வழக்கமான காயில்களில் உள்ளதை விட குறைந்த காயில்கள், ஒரே அளவில் அகலமான காயில்களை கொண்டிருக்கின்றன. இந்த சார்ஜ் ஸ்டேஷனில் சைலண்ட் ஏர் கூலிங் வழங்கும் ஃபேன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ் வயர்டு மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குகிறது. இத்துடன் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், பைபாஸ் சார்ஜிங், மல்டி-ப்ரோடோால் சார்ஜிங் வசதியும் உள்ளது. வயர்டு மற்றும் வயர்லெஸ் டூயல் ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் இது தலைசிறந்த சார்ஜிங் அனுபவத்தை வழங்குகிறது.

    புதிய ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ் தொழில்நுட்பம் இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கிறது. புதிய இன்ஃபினிக்ஸ் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    • ப்ளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டே சிறப்பு விற்பனை தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • சிறப்பு விற்பனையில் வழங்கப்பட இருக்கும் சலுகை விவரங்கள் டீசர்களாக வெளியாகி உள்ளன.

    ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் மற்றும் ஓர் சிறப்பு விற்பனை "பிக் சேவிங்ஸ் டேஸ் சேல்" பெயரில் நடைபெற இருக்கிறது. மார்ச் 11 ஆம் தேதி துவங்க இருக்கும் சிறப்பு விற்பனை மார்ச் 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. எனினும், ப்ளிப்கார்ட் பிளஸ் பயனர்கள் மார்ச் 10 ஆம் தேதியை சிறப்பு விற்பனையில் பொருட்களை வாங்கிட முடியும்.

    சிறப்பு விற்பனையில் வழங்கப்பட இருக்கும் முழு சலுகை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், எந்தெந்த மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்பட உள்ளது என்ற டீசர் வெளியாகி இருக்கிறது. அதில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்கள் ரூ. 70 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

     

    கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சில மாடல்களுக்கும் அசத்தலான சலுகைகள் வழங்கப்பட உள்ளன. புதிதாக ஐபோன் வாங்க திட்டமிடுவோர் இந்த சிறப்பு விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஐபோன் மட்டுமின்றி பிக்சல் 6a ஸ்மார்ட்போன் ரூ. 26 ஆயிரத்து 999 விலையிலும், பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் 7 மாடல்கள் முறையே ரூ. 67 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 46 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    முன்னதாக பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் 7 ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ. 84 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 59 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நத்திங் போன் (1) மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 25 ஆயிரத்து விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதே போன்று ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கும்.

    • ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் அமோக விற்பனையை பதிவு செய்கின்றன.
    • கவுண்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் 2022 ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

    2022 ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு தலைசிறந்த ஒன்றாக அமைந்து இருந்ததாக ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் கணிசமான பங்குகளை பெற்று இருக்கிறது.

    உலகளவில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 ஸ்மார்ட்போன்களில் எட்டு மாடல்கள் ஐபோன் ஆகும். 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆக இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்கின்றன.

    இந்த பட்டியலில் ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 12, ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் SE 2022 உள்ளிட்ட மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் சாம்சங் நிறுவனத்தின் இரண்டு எண்ட்ரி லெவல் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இடம்பிடித்துள்ளன. கவுண்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ஐபோன் 13 உள்ளது.

     

    2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் A15 பயோனிக் சிப் உள்ளது. ஒட்டுமொத்த ஐபோன் விற்பனையில் 28 சதவீதம் ஐபோன் 13 மாடல் ஆகும். ஐபோன் 14 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் 13 மாடலுக்கு அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு காரணமாக இதன் விற்பனை அதிகரித்து இருக்கும் என தெரிகிறது.

    சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஐபோன் 13 அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆக இருந்துள்ளது. இந்த பட்டியலில் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. 2022 ஆண்டு ப்ரோ மேக்ஸ் சீரிஸ் விற்பனை ப்ரோ மற்றும் பேஸ் வேரியண்ட்களை விட அதிகமாக இருந்துள்ளது.

    சாம்சங்கின் கேலக்ஸி A13 மாடல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் நான்காவது இடத்திலும், ஐபோன் 13 ப்ரோ மாடல் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஐபோன் 12 மாடல் ஆறாவது இடம், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் முறையே ஏழு மற்றும் எட்டாவது இடங்களை பிடித்துள்ளன.

    ஐபோன் SE 2022 மாடல் ஒன்பதாவது இடமும், சாம்சங் கேலக்ஸி A03 மாடல் பத்தாவது இடத்தை பிடித்துள்ளன. அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன் மாடல்களில் எட்டு இடங்களை பிடித்திருக்கும் முதல் நிறுவனமாக ஆப்பிள் உள்ளது.

    ×