என் மலர்

  அறிந்து கொள்ளுங்கள்

  மின் கட்டணம் செலுத்தனுமா? பெண்ணிடம் நூதனமாக பேசி ரூ. 7 லட்சத்தை பறித்த மோசடி கும்பல்!
  X

  மின் கட்டணம் செலுத்தனுமா? பெண்ணிடம் நூதனமாக பேசி ரூ. 7 லட்சத்தை பறித்த மோசடி கும்பல்!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் சைபர் குற்றத்தில் சிக்கி ரூ. 7 லட்சம் வரை இழந்துள்ளார்.
  • மின்துறையில் இருந்து குறுந்தகவல் அனுப்புவது போல் மோசடி பேர்வழிகள் மும்பை பெண்மணியை ஏமாற்றியுள்ளனர்.

  மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்த 65 வயது பெண்மணி சைபர் ஊழலில் சிக்கி ரூ. 7 லட்சம் வரை இழந்துள்ளார். மின் கட்டணத்தை செலுத்தவில்லை என பெண்மணிக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதற்கு பதில் அளித்த பெண்மணி ஹேக்கர்களிடம் சிக்கி, தனது பணத்தை இழந்திருக்கிறார்.

  மின் கட்டணம் செலுத்தவில்லை என ஹேக்கர்கள் அனுப்பிய குறுந்தகவலை நம்பி, அவர்களை பாதிக்கப்பட்ட பெண் தொடர்பு கொண்டிருக்கிறார். மறுபுறம் பெண்மணிக்கு பதில் அளித்த ஹேக்கர்கள் பெண்ணின் கணினியில் டீம் வியூவர் (வேறொரு இடத்தில் இருந்தபடி மற்றவர் கணினியை இயக்கச் செய்யும் சேவை) எனும் செயலியை இன்ஸ்டால் செய்யக் கூறி இருக்கின்றனர்.

  இதை கேட்ட பெண், ஹேக்கர்களிடம் தனது கணினியை பயன்படுத்த அனுமதித்துள்ளார். இவ்வாறு செய்த சிறிது நேரத்தில், பெண்மணியின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் எடுக்கப்பட்டதை கூறும் நோட்டிஃபிகேஷன்கள் வந்துள்ளது. இதை பார்த்த பெண்மணி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இருக்கிறார்.

  வங்கி பரிவர்த்தனைகள் குறித்து எஸ்பிஐ வங்கியை சேர்ந்த குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்தேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மின் கட்டண பாக்கி இருப்பதை கூறும் எஸ்எம்எஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மொபைல் போனிற்கு வந்துள்ளது. இவ்வாறு வந்த எஸ்எம்எஸ்-இல் பணத்தை திரும்பி செலுத்த தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் நம்பர் இடம்பெற்று இருக்கிறது. இதில், மின் கட்டண பாக்கியை செலுத்தாத பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

  இதன் காரணமாக அந்த பெண் எஸ்எம்எஸ்-இல் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்தே ஹேக்கர்கள் நூதனமாக பேசி பெண்ணிடம் இருந்து அவரின் கணினியை பயன்படுத்தும் வசதியை பெற்றுள்ளனர். இவ்வாறு செய்த பின் பாதிக்கப்பட்ட பெண்ணின் வங்கியில் இருந்து ரூ. 4 லட்சத்து 62 ஆயிரத்து 959, ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 89 ஆயிரம் பரிவர்த்தனைக்கான எஸ்எம்எஸ் வந்துள்ளது.

  இதை பார்த்து அதிர்ந்து போன பெண் உடனே எஸ்பிஐ வங்கியை தொடர்பு கொண்டு மோசடி பரிவர்த்தனைகள் பற்றி புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அந்தேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் பலருக்கு நடந்துள்ளன. இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

  Next Story
  ×