என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் புதிய ஏர்பாட்ஸ் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வு ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபேட் ப்ரோ, ஐமேக் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஏர்பாட்ஸ் 3 மாடலும் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

     ஆப்பிள் ஏர்பாட்ஸ்  ப்ரோ

    இதுதவிர ஆப்பிள் பென்சில் 3 மாடலும் அறிமுகமாகும் என தெரிகிறது. ஆப்பிள் பென்சில் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோவுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புது ஐபேட் மாடல்கள் மினி எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய ஏர்பாட்ஸ் 3 தோற்றத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. எனினும், புது மாடலில் சிலிகான் டிப்கள் வழங்கப்படுகிறது. இதன் கேஸ் தோற்றத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இந்த விவரங்கள் சீன வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.
    ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியாகும் எல்ஜி நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.


    எல்ஜி நிறுவனம் தொடர் இழப்பு காரணமாக ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறது. எனினும், ஏற்கனவே விற்பனை செய்த ஸ்மார்ட்போன்களுக்கு தொடர்ந்து அப்டேட் வழங்குவதாக அறிவித்தது. அந்த வகையில், எல்ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11, ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்க இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

    - எல்ஜி விங்
    - எல்ஜி வெல்வெட்
    - எல்ஜி வெல்வெட் எல்டிஇ
    - எல்ஜி வி50எஸ்
    - எல்ஜி வி50
    - எல்ஜி ஜி8
    - எல்ஜி கியூ31
    - எல்ஜி கியூ51
    - எல்ஜி கியூ52
    - எல்ஜி கியூ61
    - எல்ஜி கியூ70
    - எல்ஜி கியூ92
    - எல்ஜி கியூ9 ஒன்
    - எல்ஜி ஜி8எக்ஸ்
    - எல்ஜி ஜி8எஸ்
    - எல்ஜி கே52
    - எல்ஜி கே42

     எல்ஜி ஸ்மார்ட்போன்

    ஆண்ட்ராய்டு 12 அப்டேட் பெறும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள்

    - எல்ஜி விங்
    - எல்ஜி வெல்வெட்
    - எல்ஜி வெல்வெட் எல்டிஇ
    - எல்ஜி வி50எஸ்
    - எல்ஜி வி50
    - எல்ஜி ஜி8
    - எல்ஜி கியூ31
    - எல்ஜி கியூ52
    - எல்ஜி கியூ92

    ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பெறும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள்

    - எல்ஜி வெல்வெட்
    - எல்ஜி வெல்வெட் எல்டிஇ
    - எல்ஜி விங்

    ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வுக்கான அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் 20 ஆம் தேதி ஸ்ப்ரிங் லோடெட் (Spring Loaded) நிகழ்வை நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெறுகிறது. இதில் ஐபேட் ப்ரோ, புதிய ஐபேட் மினி, புதிய ஐமேக் மற்றும் ஏர்டேக்ஸ் போன்ற சாதனங்கள் அறிமுகமாகும் என தெரிகிறது.

    ஸ்ப்ரிங் லோடெட்

    ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வு ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளம், யூடியூப் தளங்களில் நேரலை செய்யப்படுகிறது. 

    முன்னதாக ஆப்பிள் ஏப்ரல் மாத நிகழ்வு குறித்த தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், ஆப்பிள் தவறுதலாக நிகழ்வு நடைபெற இருப்பதை அறிவித்தது. அந்த வரிசையில், தற்போது இந்த நிகழ்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆப்பிள் வெளியிட்டு இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் தனது டேப் மாடல்களை விற்பனை செய்ய புது விளம்பர திட்டத்தை அறிவித்து இருக்கிறது.

    சாம்சங் இந்தியா நிறுவனம் ‘Back to School’ திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தில் கேலக்ஸி டேப் மாடல்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. இதில் கேலக்ஸி டேப் எஸ்6 லைட், கேலக்ஸி டேப் ஏ7, கேலக்ஸி டேப் எஸ்7 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்7 பிளஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

     சாம்சங் சலுகை

    இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கேலக்ஸி டேப் எஸ்7 பிளஸ், டேப் எஸ்7, டேப் எஸ்6 லைட் மற்றும் டேப் ஏ7 போன்ற மாடல்களை சாம்சங் வலைதளத்தில் வாங்கினால் அதிகபட்சம் 10 சதவீதம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் பங்கேற்க பயனர்கள் முதலில் Samsung Student Advantage-இவ் லாக் இன் செய்ய வேண்டும். மேலும் பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தினால் அசத்தலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகை ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ப வேறுபடும்.
    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களில் டிஸ்ப்ளே கோளாறு இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.


    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி நோட் சீரிஸ் மாடல்கள் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் பெறும் முதல் சியோமி ஸ்மார்ட்போன்கள் ஆகும். எனினும், புதிய நோட் 10 சீரிசின் பெரும்பாலான யூனிட்களில் டிஸ்ப்ளே கோளாறு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    பாதிக்கப்பட்ட யூனிட்களில் ஸ்கிரீன் ப்ளிக்கர் மற்றும் ஸ்கிரீன் பயனற்று போவதாக பலர் தங்களின் சமூக வலைதள அக்கவுண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். தொடர் குற்றச்சாட்டு ஏற்பட்டதை  ஒப்புக் கொண்ட சியோமி நிறுவனம் விரைவில் இதனை சரி செய்வதாக அறிவித்து இருக்கிறது. 

     ரெட்மி நோட் 10

    இந்த பிரச்சனை நோட் 10 சீரிஸ் பயன்படுத்துவோரில் 0.001 சதவீதம் பேருக்கு தான் ஏற்பட்டுள்ளது. எனினும், இதனை விரைந்து சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என தனியார் நிறுவனத்திற்கு அளித்த பதிலில் சியோமி தெரிவித்து உள்ளது.

    ரெட்மி நோட் 10 சீரிசில் ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்கள் உள்ளன. இவை அனைத்திலும் AMOLED டிஸ்ப்ளே, அதிகபட்சம் 108 எம்பி பிரைமரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றின் துவக்க விலை ரூ. 11,999 ஆகும்.
    பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து வழங்கிய சலுகையை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது.


    பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 398 விலையில் அன்லிமிடெட் சலுகையை அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த சலுகை விளம்பர நோக்கில் ஜனவரி மாத வாக்கில் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 9 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த சலுகை மேலும் 90 நாட்களுக்கு வழங்கப்படும் என பிஎஸ்என்எல் தெரிவித்து உள்ளது.

     கோப்புப்படம்

    அதன்படி பிஎஸ்என்எல் பிரீபெயிட் சலுகை ஏப்ரல் 10 ஆம் தேதி துவங்கி ஜூலை 8 வரை வழங்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு பிஎஸ்என்எல் சென்னை வட்டாரத்துக்கான ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. பிஎஸ்என்எல் ரூ. 398 சலுகை பலன்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    பலன்களை பொருத்தவரை பிஎஸ்என்எல் ரூ. 398 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், அன்லிமிடெட் டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் இலவச அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை பிரீமியம் எண்கள், ஐஎன் எண்கள், சர்வதேச எண்களுக்கு பொருந்தாது.
    ஐகூ பிராண்டின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.


    ஐகூ 7 லெஜண்ட் மற்றும் ஐகூ நியோ 5 மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த நிலையில், பல்வேறு விலை பட்டியலில் வித்தியாசமான ஐகூ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக இந்தியாவுக்கான ஐகூ பிராண்டு தலைவர் ககன் அரோரா தெரிவித்து இருக்கிறார்.

    இதைத் தொடர்ந்து ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட புது ஐகூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ நியோ 5 மாடலிலும் இதே பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ஐகூ ஸ்மார்ட்போன்

    அந்த வகையில் புதிய மாடல் ஐகூ நியோ 5 மாடலாக இருக்குமா அல்லது முற்றிலும் புது ஸ்மார்ட்போனாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்திய சந்தையில் ஐகூ நியோ 5 மாடல் ரி-பிராண்டு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஐகூ 5 நியோ மாடலில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 870 பிளஸ் பிராசஸர், 8 ஜிபி ரேம், 66 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, OIS, LED பிளாஷ், 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி மோனோ சென்சார் உள்ளது. இத்துடன் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎல் 2021 கிரிகெட் தொடரை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


    ஐபிஎல் 2021 கிரிகெட் தொடர் இன்று (ஏப்ரல் 9) துவங்குகிறது. இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு ஐபிஎல் சார்ந்த சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ஜியோபோன் பயனர்களுக்கு பிரத்யேகமாக ஜியோ கிரிகெட் செயலி இலவசமாக வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் ஸ்கோர் அப்டேட்கள், போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ. 401 விலையில் துவங்கி ரூ. 2599 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் விலை உயர்ந்த சலுகை ஒரு வருடத்திற்கான வேலிடிட்டி கொண்டுள்ளது. இவை அனைத்திற்கும் இலவச வருடாந்திர டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி  சந்தா வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    ரூ. 401 சலுகையில் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 598 சலுகையில் 56 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

    ரூ. 777 சலுகை 84 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, கூடுதலாக 5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. ரூ. 2599 சலுகையில் 365 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், கூடுதலாக 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    50 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் விற்பனைக்கு வந்த சம்பவம் குறித்து லின்க்டுஇன் விளக்கம் அளித்துள்ளது.


    பேஸ்புக் சேவையை பயன்படுத்தும் சுமார் 53.3 கோடி பயனர் விவரங்கள் இணையத்தில் லீக் ஆன சம்பவம் சமீபத்தில் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது லின்க்டுஇன் பயனர் விவரங்களும் இணையத்தில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சுமார் 50 கோடி பயனாளிகளின் விவரங்கள் இணையத்தில விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

     கோப்புப்படம்

    பயனாளிகள் பெயர், லின்க்டுஇன் ஐடி, மொபைல் போன் நம்பர், பாலினம், சமூக வலைதள அக்கவுண்ட்களின் ஹைப்பர்லின்க் உள்ளிட்ட விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

    `இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ள தகவல்கள் பல்வேறு வலைதளங்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. இவற்றில் பயனர் விவரங்கள் பார்க்க முடிகிறது. எனினும், இவை எதுவும் லின்க்டுஇன் மூலம் வெளியாகவில்லை.' என லின்க்டுன் தெரிவித்து உள்ளது.
    எல்ஜி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் வழங்குவது குறித்த முக்கிய தகவலை வழங்கியுள்ளது.


    எல்ஜி நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, சில ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களை தொடர்ந்து வழங்குவதாக எல்ஜி தற்போது அறிவித்து இருக்கிறது. முந்தைய அறிவிப்பிலேயே எல்ஜி குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு தொடர்ச்சியாக அப்டேட் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தது.

      எல்ஜி ஸ்மார்ட்போன்

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் எல்ஜி நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட சில மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் எல்ஜி தென் கொரிய வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

    எந்தெந்த மாடல்களுக்கு ஒஎஸ் அப்டேட் வழங்கப்படும் என எல்ஜி அறிவிக்கவில்லை. எனினும், அப்டேட் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப வேறுபடும். இதே தகவல் எல்ஜி அமெரிக்க வலைதளத்திலும் இடம்பெற்று இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் மொபைல் பேம்ன்ட் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் தனது மொபைல் பேமண்ட் சேவையை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு 2019 வாக்கில் வெளியானது. தற்போது சீன சந்தையில் ஒன்பிளஸ் பே சேவை பிரத்யேகமாக வழங்கப்பட்டு வருகிறது. 

     ஒன்பிளஸ்

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் பே சேவை மற்ற பகுதிகளிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது மொபைல் பேமண்ட் சேவைக்கான டிரேட்மார்க் பெற விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் ஒன்பிளஸ் பே எப்போது அறிமுகமாகும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், டிரேட்மார்க் கிடைத்துவிட்டதால், விரைவில் ஒன்பிளஸ் பே சேவை ஒன்பிளஸ் பயனர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூகுள் தேடுப்பொறி சேவையில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் டூடுள் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் இன்று வெளியிட்டு இருக்கும் டூடுள் பொது மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்துகிறது. பொதுநல நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கும் டூடுளுடன் `முகக்கவசம் அணியுங்கள். உயிர்களை காப்பாற்றுங்கள்' என கோரும் தகவல் இடம்பெற்று இருக்கிறது.

     கூகுள் டூடுள்

    இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாகி இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றக்கோரி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான தேவை அதிகரித்து உள்ளது.

    விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேஷ டூடுளில் கூகுள் எழுத்துக்கள் உருவங்களாக வடிவமைக்கப்பட்டு முகக்கவசம் அணிந்து இருப்பது போன்று உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் `முகக்கவசங்கள் மிகவும் முக்கியமானவை. முகக்கவசம் அணிந்து உயிர்களை காப்பாற்றுங்கள்' எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது.
    ×