என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    எதிர்காலத்தில் வெளியாகும் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கூகுள் உற்பத்தி செய்த பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    கூகுள் நிறுவனம் சொந்தமாக சிப்செட் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சிப்செட் வைட்சேப்பல் எனும் குறியீட்டு பெயர் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புதிய சிப்செட் பிக்சல் 6 ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய சிப்செட் ஜிஎஸ் 101 எனும் பெயரில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. கூகுள் சிலிகான் எனும் பெயர் தான் ஜிஎஸ் என குறிக்கப்படுவதாக தெரிகிறது. புதிய சிப்செட் மூலம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களை சார்ந்து இருக்கும் நிலையை குறைக்க கூகுள் முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது.

     பிக்சல் ஸ்மார்ட்போன்

    வைட்சேப்பல் சிப்செட் பிக்சல் போன் மட்டுமின்றி குரோம்புக் சாதனங்களிலும் பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் ஏஆர்எம் சார்ந்த சிப்செட்களை தனது ஐபோன் மற்றும் மேக் சாதனங்களில் வழங்கியது.

    புதிய சிப்செட்களை கூகுள் நிறுவனம் தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங்குடன் இணைந்து உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கூகுள் மற்றும் ஆல்பபெட் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஹார்டுவேர் பிரிவில் பெரும் முதலீடு மற்றும் அதிரடி திட்டங்கள் உள்ளதை சூசகமாக தெரிவித்து இருந்தார். 

    அந்த வகையில் புதிய தகவல் மூலம் கூகுள் உண்மையில் சொந்த பிராசஸர்களை உருவாக்கி வருவதாகவே பல்வேறு முதலீட்டாளர்கள் மற்றும் கூகுள் நிறுவன நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருவோரும் கருதுகின்றனர். 
    எல்ஜி நிறுவனம் மொபைல் போன் சந்தையில் நீடிப்பது குறித்த முக்கிய முடிவை அடுத்த வாரம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    எல்ஜி நிறுவனம் மொபைல் போன் வியாபாரத்தை விரைவில் நிறுத்தலாம் என கூறும் தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும்,  இது குறித்து எல்ஜி சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

    இந்த நிலையில், கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் என்ஜி நிறுவனம் மொபைல் போன் சந்தையில் இருந்து விலகுவது குறித்த அறிவிப்பை அடுத்த வார துவக்கத்தில் வெளியிடலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பு ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

     எல்ஜி மொபைல்

    மொபைல் போன் சந்தையில் கடந்த சில காலாண்டுகளாக எல்ஜி நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனையொட்டி எல்ஜி விரைவில் மொபைல்போன் சந்தையில் இருந்து வெளியேற இருப்பதாக பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தன. 

    மொபைல் போன் வியாபாரத்தை நிறுத்துவது குறித்த அறிவிப்பை தொடர்ந்து அதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்ற வியாபார பிரிவுகளுக்கு மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எப் சீரிசில் இரண்டு புதிய மாடல்களை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது.


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எப்02எஸ் மற்றும் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களை ஏப்ரல் 5 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

    ப்ளிப்கார்ட் தளத்தில் கேலக்ஸி எப்02எஸ் மற்றும் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களின் சில அம்சங்கள் பிரத்யேக வலைப்பக்கத்தில் விவரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி இரு மாடல்களும் வாட்டர்-டிராப் ரக நாட்ச் கொண்டிருக்கிறது. இத்துடன் கேலக்ஸி எப்1 இரு ஸ்மார்ட்போன்களில் உயர்ந்த மாடலாக இருக்கும் என தெரிகிறது.

     சாம்சங் டீசர்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எப்02எஸ் மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், மூன்று பிரைமரி கேமராக்கள், 13 எம்பி பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.

    கேலக்ஸி எப்12 மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, குவாட் கேமரா சென்சார்கள், யுஎஸ்பி டைப் சி போர்ட், எக்சைனோஸ் 850 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
    சியோமி நிறுவனம் புதிய கார்பரேட் லோகோவை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    சியோமி நிறுவனம் புதிய லோகோவை அறிமுகம் செய்தது. புதிய லோகோ உயிரோட்டத்தை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது பிரீமியம் சந்தையில் சியோமியின் கால்தடத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும், பிராண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

    புதிய லோகோவை உலக புகழ்பெற்ற வடிவமைப்பாளர் கென்யா ஹாரா வடிவமைத்து இருக்கிறார். புது லோகோ முந்தைய லோகோவை போன்றே ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கிறது. இதே லோகோ பிளாக் மற்றும் சில்வர நிறங்கள் உயர் ரக சாதனங்களுக்கு பயன்படுத்தப்படும் என சியோமி தெரிவித்து உள்ளது. 

     சியோமி லோகோ

    லோகோ அறிமுகம் செய்ததுடன், சியோமி நிறுவனம் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் வாகன வியாபாரத்தில் களமிறங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதற்கென சியோமி நிறுவனம் முதற்கட்டமாக 10 பில்லியன் யுவான்களை முதலீடு செய்ய இருக்கிறது. இதுதவிர அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது.

    சியோமியின் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் வாகன வியாபாரத்திற்கான தலைமை செயல் அதிகாரியாக சியோமி தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான லெய் ஜூன் பொருப்பேற்கிறார். 
    பயனாளர் விவரங்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்த விவகாரம் குறித்து மொபிகுவிக் விளக்கம் அளித்து இருக்கிறது.

    மொபிகுவிக் சேவையை பயன்படுத்துவோரில் சுமார் 35 லட்சம் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்து இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர் ராஜசேகர் ராஜாரியா தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்த செய்திகள் பரவலாக வெளியாகி வருகிறது. 

    பயனாளிகள் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்த விவகாரம் குறித்து பதில் அளித்த மொபிகுவிக், இணையத்தில் வெளியாகி வரும் தகவல்களில் உண்மையில்லை என தெரிவித்து உள்ளது. 

     மொபிகுவிக்

    எனினும், பயனர் தகவல்கள் விற்பனைக்கு வந்து இருப்பதாக பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஹேக்கரான ராபர்ட் பேடிஸ்ட்-ம் தெரிவத்து இருக்கிறார். இணைய வரலாற்றில் மிகப்பெரும் டேட்டா லீக் இது என அவர் தெரிவித்தார். மொத்தம் 36,099,759 தரவுகள் மொத்தம் 8.2 டெராபைட் அளவு கொண்டுள்ளன. இவை மொத்தம் 1.5 பிட்காயின்கள் அதாவது 84 ஆயிரம் டாலர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    `பாதுகாப்பு வல்லுநர்கள் என கூறிக் கொண்டு தகவல்களை வெளியிட்டு இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் முழு ஆய்வு நடத்தப்பட்டது. எங்கள் தரப்பில் எவ்வித பாதுகாப்பு முறைகேடும் நடைபெறவில்லை. எங்களின் பயனர் விவரங்கள் முழுவதும் பாதுகாப்பாக இருக்கிறது,' என மொபிகுவிக் தனியார் நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 ப்ரோ மேட் பிளாக் ஆப்ஷன், மேம்பட்ட போர்டிரெயிட் மோட் அம்சங்களுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இம்முறை ஐபோன் 13 சீரிசில் ஐபோன் 13 ப்ரோ மாடல் புதிதாக மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய ஐபோனில் மேம்பட்ட போர்டிரெயிட் மோட் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

     ஐபோன் 12

    புதிய நிறம் மட்டுமின்றி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கோட்டிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது கோட்டிங் ஐபோனின் பின்புற பேனலில் கைரேகை அதிகம் பதியாமல் பார்த்துக் கொள்ளும் என தெரிகிறது. இந்த வடிவமைப்பு ஐபோன் 13 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மட்டும் வழங்கப்படலாம்.

    ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் டிஸ்ப்ளேவின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் இத்துடன் பேஸ் ஐடி அம்சமும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் எக்ஸ்60 5ஜி மோடெம் வழங்கப்படும் என தெரிகிறது.
    2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஒருவருக்கு தேவைப்படும் சிறந்த ஸ்மார்ட்போனை தேடுவது சிக்கலான காரியம் தான். ஆனால், பரிந்துரைகளால் ஓரளவு சிறந்த மாடலை தேர்வு செய்ய முடியும். அந்த வகையில் பயனர்கள் வழங்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் 2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த பட்டியலில் சிறந்த ஸ்மார்ட்போனாக ஒரு மாடல் தேர்வு செய்யப்படாமல் பேட்டரி பேக்கப், டிஸ்ப்ளே என பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சிறந்த ஐபோன் மாடலாக ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் தேர்வாகி இருக்கிறது. இது 5ஜி வசதி கொண்டிருப்பதால் இந்த பட்டத்தை பெற்று இருக்கிறது.

    இதுமட்டுமின்றி மற்ற மாடல்களை விட நீண்ட நேர பேட்டரி பேக்கப், பெரிய டிஸ்ப்ளே, சிறப்பான கேமரா உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இந்த ஆண்டுக்கான சிறந்த ஐபோன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

     கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா

    2021 ஆண்டுக்கான சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி தேர்வாகி இருக்கிறது. பெரிய டிஸ்ப்ளே மட்டுமின்றி, எஸ் பென் வசதி, குறைந்த விலை உள்ளிட்ட அம்சங்களால் இது சிறந்த ஆண்ட்ராய்டு போன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

    சிறந்த பட்ஜெட் போன் என்ற பிரிவில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நார்டு என்10 5ஜி தேர்வாகி இருக்கிறது. பட்ஜெட் பிரிவில் சிறப்பான 5ஜி வசதி வழங்கியதால் இந்த மாடல் சிறந்த பட்ஜெட் போனாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
    ஹெச்பி நிறுவனம் குறைந்த விலை குரோம்புக் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஹெச்பி நிறுவனம் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய குரோம்புக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய குரோம்புக் மாடல்களின் விலை ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி ரூ. 30 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    புது குரோம்புக் மாடல்களின் சரியான வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இவை 2021 ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால், குறைந்த விலை குரோம்புக் மாடல்கள் நல்ல வரவேற்பை பெறும் என தெரிகிறது.

     ஹெச்பி குரோம்புக்

    அம்சங்களை பொருத்தவரை புது ஹெச்பி குரோம்புக் மாடலில் 14 இன்ச் ஹெச்டி 1366x768 பிக்சல், 2-செல் 45Wh பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 10 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கும். கனெக்டிவிட்டிக்கு இரண்டு யுஎஸ்பி டைப் சி போர்ட்கள், ஒரு யுஎஸ்பி டைப் ஏ போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர், ப்ளூடூத் 5, வைபை வழங்கப்படலாம்.

    இத்துடன் இன்டெல் செலரான் என்4020 பிராசஸர், இன்டகிரேட் செய்யப்பட்ட UHD iGPU கிராபிக்ஸ், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி eMMC ஸ்டோரேஜ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் ரியல்மி 8 5ஜி மாடல் இந்திய வெளியீடு பற்றிய தகவலை தெரிவித்தார்.


    ரியல்மி 8 சீரிஸ் 5ஜி வேரியண்ட் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்றன. இந்த தகவலை ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் உறுதிப்படுத்தி இருக்கிறார். முன்னதாக ரியல்மி 8 சீரிஸ் 5ஜி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. 

    புதிய ரியல்மி 8 சீரிஸ் 5ஜி வேரியண்ட் அம்சங்கள் மேம்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. 5ஜி மாடல்கள் உருவாக்கும் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரியல்மி 8 5ஜி விவரங்கள் தாய்லாந்து நாட்டின் ஒளிபரப்பு மற்றும் தொலைதொடர்பு கமிஷன் வலைதளத்தில் வெளியானது.

     ரியல்மி 8 5ஜி

    ரியல்மி 8 சீரிஸ் 5ஜி வேரியண்ட் இறுதிக்கட்ட சோதனையில் இருப்பதாகவும், விரைவில் இவை வெளியாகும் என்றும் மாதவ் சேத் தெரிவித்தார். இவற்றின் வெளியீட்டு தேதி மற்றும் விலை பற்றி எந்த தகவலையும் அவர் வழங்கவில்லை.
    ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம் அதிக தொகைக்கு ஏலம் போனது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.


    ஸ்டீவ் ஜாப்ஸ் 1973 ஆம் ஆண்டு கைப்பட எழுதிய விண்ணப்ப படிவம் இந்திய மதிப்பில் ரூ. 1.2 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தை ஐக்கிய ராஜ்ஜியத்தை சேர்ந்த சார்டர்பீல்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டது. ஏலம் பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்கி மார்ச் 24 ஆம் தேதி நிறைவுற்றது. 

     ஸ்டீவ் ஜாப்ஸ்

    ஒற்றை பக்கம் கொண்ட விண்ணப்ப படிவத்தை போர்ட்லாந்தின் ரீட் கல்லூரியில் இருந்து நின்றதும் சமர்பித்தார். முன்னதாக இதேபோன்று ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்ப படிவத்தை 2018 ஆம் ஆண்டு தொழில்நுட்ப தொழில்துறை உரிமையாளர் ஏலத்தில் வாங்கினார்.

    இந்த விண்ணப்பம் ஆப்பிள் இணை நிறுவனர் கைப்பட எழுதிய முதல் படிவம் ஆகும். இதனை அவர் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கும் முன் எழுதினார். முன்னதாக ஸ்டீப் ஜாப்ஸ் கையெழுத்திட்ட பிளாப்பி டிஸ்க் இந்திய மதிப்பில் ரூ. 60 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் வெளியீடு பற்றி புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. முந்தைய ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்திலேயே புது ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வந்தன. அந்த வரிசையில், இந்த ஆண்டு புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் மாதத்திலேயே அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    2021 ஐபோன் சீரிஸ், கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் 12 சீரிசின் மேம்பட்ட மாடல்கள் ஆகும். இவை சிறிய டிஸ்ப்ளே நாட்ச், சிறப்பான அல்ட்ரா வைடு கேமராக்கள், அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் பெரும்பாலான தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. எனினும், இதுபற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

     ஐபோன் 12 மினி

    கடந்த ஆண்டு வினியோக பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஐபோன் 12 வெளியீட்டு நிகழ்வே அக்டோபர் மாதத்தில் தான் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 மாடல்கள் அக்டோபர் மாத இறுதியிலும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 12 மினி மாடல்கள் நவம்பர் மாத வாக்கில் விற்பனைக்கு வந்தன. 

    இந்த ஆண்டு துவக்கம் முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களின் பிளாக்ஷிப் மாடல்களை வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே அறிமுகம் செய்து வருகின்றன. சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ், ரோக் போன் 5, ஒன்பிளஸ் 9 சீரிஸ் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கின்றன. அந்த வகையில், இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனமும் இணையலாம் என தெரிகிறது.
    ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.


    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் 8டி புதிய விலை அந்நிறுவன வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ரூ. 40,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ரூ. 42,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலை 8 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கானது ஆகும்.

     ஒன்பிளஸ் 8டி

    விலை குறைப்பு மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுவதால், இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 

    இந்தியாவில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஒரே ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது.
    ×