என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
எல்ஜி நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான 6ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளை துவங்கி இருக்கிறது.
எல்ஜி எலெக்டிரான்க்ஸ் நிறுவனம் 6ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான கூட்டணியை அமைத்து வருவதாக தெரிவித்து உள்ளது. இதற்கென எல்ஜி நிறுவனம் கீசைட் டெக்னாலஜீஸ், கொரியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

ஒப்பந்தத்தின் படி மூன்று நிறுவனங்கள் இணைந்து டெராஹெர்ட்ஸ் சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட இருக்கின்றன. டெராஹெர்ட்ஸ் 6ஜி தகவல் பரிமாற்ற முறையில் மிகமுக்கிய பிரீக்வன்சி பேண்ட் ஆகும்.
முன்னதாக 2019 ஆண்டு எல்டி நிறுவனம் 6ஜி ஆய்வு நிறுவனத்தை கொரியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் கட்டமைத்தது. கீசைட் டெக்னாலஜீஸ் நிறுவனம் 6ஜி டெராஹெர்ட்ஸ் சோதனை உபகரணங்களை வினியோகம் செய்கிறது.
ட்விட்டரில் மேற்கொள்ளப்பட்ட ட்விட் ஒன்று ரூ. 18 கோடிக்கு ஏலம் விடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி மேற்கொண்ட முதல் ட்விட்டர் பதிவு ரூ. 18 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் கிடைத்த தொகையை பிட்காயின்களாக தொண்டு நிறுவனத்திற்கு வழங்குகிறார். ஏல தொகை முழுவதும் உடனடியாக பிட்காயின்களாக மாற்றப்பட்டு நன்கொடையாக வழங்கப்படுகிறது.

மார்ச் 6, 2006 ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட ட்விட்டர் பதிவு என்.எப்.டி. (non-fungible token) ஆக வேல்யுபில்ஸ் எனும் தளத்தில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் கலந்து கொண்ட பிரிட்ஜ் ஆரகிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சினா எஸ்டவி ட்விட்டர் பதிவை ஏலத்தில் வாங்கினார்.
`நீங்கள் வாங்குவது ட்விட்டர் பதிவின் டிஜிட்டல் சான்றிதழ் ஆகும். இதனை கிரியேட்டர் வெரிபை மற்றும் கையொப்பம் இட்டு கொடுப்பதால், இது பிரத்யேகமானதாக மாறுகிறது.' என வேல்யுபில்ஸ் தெரிவித்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் இரண்டு மில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்த பிரேசில் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
பிரேசில் நாட்டின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமான ப்ரோகான்-எஸ்.பி. ஆப்பிள் நிறுவனத்திற்கு 2 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 14,49,26,800 அபராதம் விதித்து உள்ளது. ஐபோன் 12 மாடலுடன் சார்ஜர் வழங்காததே இதற்கு காரணம் என அந்த ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
தவறாக விளம்பரப்படுத்துதல், சார்ஜர் இல்லாமல் சாதனத்தை விற்பது மற்றும் முறையற்ற வாசகங்களை பயன்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு ப்ரோகான்-எஸ்.பி. அபராதம் விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. சார்ஜர் வழங்காமல் இருப்பதால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதை ஆப்பிள் சரியாக விளக்கவில்லை என்றும் ப்ரோகான்-எஸ்.பி. தெரித்து இருக்கிறது.

முன்னதாக ஐபோன் 12 உடன் சார்ஜர் வழங்கப்படாததால், அதன் விலையை குறைக்க ப்ரோகான்-எஸ்.பி. ஆப்பிள் நிறுவனத்திற்கு கேள்வி எழுப்பியிருந்தது. எனினும், ஆப்பிள் சார்பில் எந்த பதிலும் வழங்கப்படாததால் தற்போது அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
“பிரேசில் நாட்டில் கடுமையான நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விதிகள் மற்றும் நிறுவனங்கள் இயங்கி வருவதை ஆப்பிள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த சட்ட விதிகள் மற்றும் நிறுவனங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்” என ப்ரோகான்-எஸ்.பி. ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் பெர்னான்டோ கேபெஸ் தெரிவித்தார்.
போக்கோ பிராண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எப்3 ஸ்மார்ட்போன் இந்த தேதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
போக்கோ பிராண்டு தனது போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனினை மார்ச் 22 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. விர்ச்சுவல் முறையில் நடைபெறும் நிகழ்வில் புது எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. இந்த நிலையில், இதே நிகழ்வில் போக்கோ எப்3 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
போக்கோ எப்3 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே40 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய சாதனங்கள் அறிமுகம் பற்றி போக்கோ குளோபல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து போக்கோ எப்3 ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் போக்கோ எப்3 மாடல் மார்ச் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம். போக்கோ வெளியிட்ட தகவல்களின்படி போக்கோ எக்ஸ்3 ப்ரோ வெளியீடு மட்டுமே இதுவரை உறுதி செய்யப்பட்டு உள்ளது.
எனினும், போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடலின் மற்றொரு வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம். சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடலில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், 48 எம்பி குவாட் கேமரா சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படும் என தெரிகிறது.
சிறுவர்கள் மட்டும் பயன்படுத்தும் அம்சங்கள் நிறைந்த இன்ஸ்டாகிராம் புது வெர்ஷன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
குழந்தைகள் மட்டும் பயன்படுத்தக்கூடிய புது இன்ஸ்டாகிராம் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இது 13 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்களுக்காக உருவாக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புது செயலி பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் துணை தலைவர் விஷால் ஷா தனது ஊழியர்களுக்கு எழுதிய பதிவின் விவரங்கள் தனியார் செய்து நிறுவனத்திற்கு கிடைத்து இருக்கிறது. அதன்படி இன்ஸ்டாகிராமின் ஹெச்1 பிரியாரிட்டி பட்டியலில் புது செயலி சேர்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சிறுவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான, அதே சமயம் நேர்மையாகவும் பணியாற்றி 13 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய இன்ஸ்டாகிராம் செயலியை உருவாக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறுவர்களுக்கு பாதுகாப்பான தளமாக மாற்றுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டது.
புது செயலி யூடியூப் கிட்ஸ் போன்றே செயல்படும். இதில் சிறுவர்களுக்கான தரவுகள் வழக்கத்தைவிட அதிகளவு இடம்பெற்று இருக்கும். புதிய இன்ஸ்டாகிராம் பார் கிட்ஸ் செயலி இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி மற்றும் பேஸ்புக் துணை தலைவர் பவ்னி திவாஞ்சி ஆகியோர் மேற்பார்வையில் உருவாகிறது.
ஸ்மார்ட்போன் சந்தையில் உலகின் மூன்றாவது பெரும் நிறுவனமாக சீனாவை சேர்ந்த நிறுவனம் உருவெடுக்கும் என கூறப்படுகிறது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல ஆண்டுகளாக சியோமி நிறுவனம் முன்னணி இடத்தில் உள்ளது. தற்போதைய தகவல்களின் படி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி நிறுவனம் 2021 ஆண்டு மூன்றாவது இடத்தை பிடிக்கும் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஹூவாய் நிறுவனம் மூன்றாவது பெரும் நிறுவனமாக இருக்கிறது.
ஹூவாய் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சியோமி நிறுவனம் உலகின் மூன்றாவது பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக உருவெடுக்கும் என ஸ்டிராடஜி அனாலடிக்ஸ் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆசியா பசிபிக், மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய சந்தைகளில் சியோமி கவனம் ஈர்த்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் 2021 ஆண்டிற்குள் சியோமி உலகின் மூன்றாவது பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனம் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது. இந்தியா மற்றும் ரஷ்ய சந்தைகளில் சியோமி நிறுவனம் அபார வளர்ச்சியை பெற்று வருகிறது. இதேபோன்று மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய சந்தைகளிலும் சியோமி சாதனங்கள் அதிகளவு விற்பனையாகி வருகின்றன.
2021 சீன ஸ்மார்ட்போன் விற்பனையாளர்களுக்கான ஆண்டாக இருக்கும். சியோமி மட்டுமின்றி ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்கள் ஆசியா பசிபிக் பகுதிக்கான முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெறலாம் என ஸ்டிராடஜி அனாலடிக்ஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குனர் லிண்டா சு தெரிவித்தார்.
விவோ நிறுவனத்தின் வி சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு புதிய அம்சங்கள் நிறைந்த ஒஎஸ் அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.
விவோ நிறுவனம் தனது வி17 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கி வருகிறது. புது அப்டேட் பன்டச் ஒஎஸ் 11 யுஐ உடன் வழங்கப்படுகிறது. விவோ வி17 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 சார்ந்த பன்டச் ஒஎஸ் 9.2 ஒஎஸ் உடன் 2019 டிசம்பர் வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக இந்தியாவில் மட்டும் இந்த அப்டேட் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற பகுதிகளிலும் இந்த அப்டேட் வழங்கப்படலாம்.
புதிய பன்டச் ஒஎஸ் அப்டேட் அளவில் 3.43 ஜிபியாக இருக்கிறது. இந்த அப்டேட் PD1948F_EX_A6.70.8 எனும் பில்டு நம்பர் கொண்டுள்ளது. விவோ வி17 பயன்படுத்துவோர் புது அப்டேட் மாற்றங்களை ஸ்கிரீன்ஷாட் வடிவில் ட்விட்டரில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

சிலர் புது அப்டேட் பிழைகள் நிறைந்துள்ளது என குற்றஞ்சாட்டி வருகின்றனர். எதுவாயினும் புது அப்டேட் வேண்டும் என நினைப்போர் இந்த அப்டேட்டை டவுன்லோட் செய்யலாம். இவ்வாறு செய்ய ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சிஸ்டம் அப்டேட் ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம்.
விவோ வி17 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அதிகபட்சம் 8ஜிபி ரேம், 12ஜிபி மெமரி, 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. இத்துடன் 48 எம்பி குவாட் கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. முன்னதாக விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனிற்கும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நார்டு மாடலில் சிறு கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டை ஒன்பிளஸ் மீண்டும் வழங்க துவங்கி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஆக்சிஜன் ஒஎஸ்11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டை ஒன்பிளஸ் நார்டு மாடலுக்கு இந்த மாத துவக்கத்தில் வழங்கியது. பின் இந்த அப்டேட்டில் கோளாறு இருப்பதாக கூறி அப்டேட் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தியது.
தற்போது பிழை சரி செய்யப்பட்டதை தொடர்ந்து புது ஆண்ட்ராய்டு அப்டேட் மீண்டும் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது. அதன்படி ஒன்பிளஸ் நார்டு மாடலுக்கு ஆக்சிஜன் ஒஎஸ்11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் மீண்டும் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்டு மாடலில் ஆண்ட்ராய்டு 10 வைத்திருப்போருக்கு தற்போதும் புது அப்டேட் அளவு 2.9 ஜிபியாகவே இருக்கிறது. ஏற்கனவே ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ்-ஐ அப்டேட் செய்தவர்களுக்கு இந்த அப்டேட் வெறும் 11 எம்பி தான்.
அமேசான் தளத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஆப்பிள் டேஸ் பெயரில் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. இந்த விற்பனையில் ஐபோன் 12 சீரிஸ், ஐபேட் மினி, மேக்புக் ப்ரோ என பல்வேறு சாதனங்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அமேசானில் ஆப்பிள் டேஸ் விற்பனை மார்ச் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஐபோன் 12 மினி மாடல் ரூ. 67100 துவக்க விலையில் கிடைக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 2800 குறைவு ஆகும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 6 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஐபோன் 11 ப்ரோ விலை ரூ. 79,900 என மாறி இருக்கிறது. இதுதவிர ஐபேட் மாடல்களுக்கு ரூ. 9 ஆயிரம் வரையிலான சேமிப்பு, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறப்பு தள்ளுபடி, கேஷ்பேக் தவிர, ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ப வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது இன் சீரிசில் புது ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் சீரிசில் இரண்டு ஸ்மார்ட்போன்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. தற்போது இன் சீரிசில் புது ஸ்மார்ட்போன் இன் 1 பெயரில் அறிமுகமாக இருக்கிறது. இந்த மாடல் மார்ச் 19 ஆம் தேதி அறிமுகமாகும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து உள்ளது.
இதற்காக மைக்ரோமேக்ஸ் வெளியிட்டு இருக்கும் டீசர்களை கொண்டு பார்க்கும் போது, புது மாடல் மல்டிமீடியா சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் எந்த விவரங்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

எனினும், இந்த மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட இன் 1பி மற்றும் இன் நோட் 1 மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. முந்தைய இன் நோட் 1 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் 4 ஜிபி ரேம் கொண்டிருந்தது.
இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 உற்பத்தி குறித்து புதிய தகவலை அறிக்கையின் மூலம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் ஐபோன் 12 உற்பத்தி துவங்கி இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன் விரைவில் இந்தியாவில் ஐபோன் 12 உற்பத்தி துவங்கும் என தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்காக ஐபோன் 12 உற்பத்தியை இந்தியாவில் துவங்குவதில் பெருமை கொள்கிறோம் என ஆப்பிள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து உள்ளது. எனினும், எந்த நிறுவனம் இந்த பணிகளை மேற்கொள்கிறது என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்தியாவில் இயங்கி வரும் தாய்வானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் உள்ள ஆலையில், ஐபோன் 12 உற்பத்தியை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. எனினும், இதனை ஆப்பிள் மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
சீனாவில் மேற்கொள்ளப்படும் உற்பத்தியை பெருமளவு குறைக்கும் நடவடிக்கைகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. வாஷிங்டன் மற்றும் பீஜிங் இடையிலான வர்த்தக போட்டியே இதற்கு முக்கிய காரணம் ஆகும். முன்னதாக பாக்ஸ்கான் நிறுவனம் ஐபேட் மற்றும் மேக்புக் உற்பத்தியை சீனாவில் இருந்து வியட்நாமிற்கு மாற்றுவதாக தகவல் வெளியானது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடல் உற்பத்தியை குறைக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மினி மாடலுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒட்டுமொத்த ஐபோன் 12 மினி உற்பத்தியை 20 சதவீதம் வரை குறைக்க ஆப்பிள் திட்டமிடுகிறது என கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்தம் 7.5 கோடி ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படலாம். இதில் புதிய ஐபோன் 12 சீரிஸ் மற்றும் சில பழைய மாடல்களும் இடம்பெறுகிறது. முந்தைய கணிப்புகளின் படி 9.6 கோடி யூனிட்கள் உற்பத்தி செய்யப்படலாம் என கூறப்பட்டது.

அமெரிக்காவில் புதிய ஐபோன் 12 சீரிஸ் முந்தைய ஐபோன் 11 சீரிசை விட அதிக யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. ஐபோன் 12 மாடல் அதிக யூனிட்களும், ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் உள்ளிட்டவை கடந்த ஆண்டு ப்ரோ வேரியண்ட்களை விட அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.
2021 முதல் காலாண்டில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 11,140 கோடி டாலர்களை வருவாயாக ஈட்டி உள்ளது. ஐபோன் உற்பத்தியை குறைப்பதோடு, பபுதிய மேக்புக் மாடல்களின் உற்பத்தியை மே அல்லது ஜூன் மாத வாக்கில் துவங்க ஆப்பிள் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.






