search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மொபிகுவிக்
    X
    மொபிகுவிக்

    பயனர் விவரங்கள் விற்பனைக்கு வந்த விவகாரம் - மொபிகுவிக் விளக்கம்

    பயனாளர் விவரங்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்த விவகாரம் குறித்து மொபிகுவிக் விளக்கம் அளித்து இருக்கிறது.

    மொபிகுவிக் சேவையை பயன்படுத்துவோரில் சுமார் 35 லட்சம் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்து இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர் ராஜசேகர் ராஜாரியா தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்த செய்திகள் பரவலாக வெளியாகி வருகிறது. 

    பயனாளிகள் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்த விவகாரம் குறித்து பதில் அளித்த மொபிகுவிக், இணையத்தில் வெளியாகி வரும் தகவல்களில் உண்மையில்லை என தெரிவித்து உள்ளது. 

     மொபிகுவிக்

    எனினும், பயனர் தகவல்கள் விற்பனைக்கு வந்து இருப்பதாக பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஹேக்கரான ராபர்ட் பேடிஸ்ட்-ம் தெரிவத்து இருக்கிறார். இணைய வரலாற்றில் மிகப்பெரும் டேட்டா லீக் இது என அவர் தெரிவித்தார். மொத்தம் 36,099,759 தரவுகள் மொத்தம் 8.2 டெராபைட் அளவு கொண்டுள்ளன. இவை மொத்தம் 1.5 பிட்காயின்கள் அதாவது 84 ஆயிரம் டாலர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    `பாதுகாப்பு வல்லுநர்கள் என கூறிக் கொண்டு தகவல்களை வெளியிட்டு இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் முழு ஆய்வு நடத்தப்பட்டது. எங்கள் தரப்பில் எவ்வித பாதுகாப்பு முறைகேடும் நடைபெறவில்லை. எங்களின் பயனர் விவரங்கள் முழுவதும் பாதுகாப்பாக இருக்கிறது,' என மொபிகுவிக் தனியார் நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளது.
    Next Story
    ×