என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு எஸ்இ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில், தற்சமயம் ஒன்பிளஸ் நார்டு எஸ்இ மாடலின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு எஸ்இ மாடல் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் நார்டு எஸ்இ மாடல் அடுத்த ஆண்டின் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. எனினும், புதிய நார்டு எஸ்இ பற்றி ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

     ஒன்பிளஸ் நார்டு

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு எஸ்இ மாடலில் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் 65 வாட் பாஸ்ட் சார்ஜர் விவரங்கள் டியுவி சான்றளிக்கும் வலைதளத்தில் வெளியானது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் நார்டு எஸ்இ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் நார்டு எஸ்இ மாடலில் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு என்100 மற்றும் என்10 5ஜி ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்டன. எனினும், இரு மாடல்கள் மற்ற சந்தைகளில் வெளியிடுவது பற்றி ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
    எக்ஸ் ரே மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் தொழில்நுட்பம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு நுரையீரல் எக்ஸ் ரே புகைப்படங்களை கொண்டு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும். 

    டீப்கொவிட் எக்ஸ்ஆர் (DeepCOVID-XR) என அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பம் மெஷின் லெர்னிங் அல்காரிதம் மூலம் இயங்குகிறது. இந்த தொழில்நுட்பம் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை பத்து மடங்கு வேகமாகவும், அதிக துல்லியமாகவும் கண்டறிகிறது.

     கோப்புப்படம்

    இதுபற்றிய ஆய்வு கட்டுரை ரேடியாலஜி இதழில் வெளியாகி இருக்கிறது. இது கொரோனா தவிர வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மருத்துவர்கள் பயன்படுத்தலாம் என இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கும் ஆய்வு குழு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

    இந்த தொழில்நுட்பம் பாதிப்பு இருக்கிறதா என்பதை எளிதில் கண்டறிவதால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை விரைவில் தனிமைப்படுத்தி, அடுத்தக்கட்ட சிகிச்சையளிக்க முடியும்.
    விவோ நிறுவனம் உலகின் மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.


    விவோ நிறுவனம் தனது வி20 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் டிசம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    புதிய வி20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது. மேலும் இது உலகின் மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போன் என விவோ தெரிவித்து இருக்கிறது.

     விவோ வி20 ப்ரோ

    விவோ வி20 ப்ரோ சிறப்பம்சங்கள்

    - 6.44 இன்ச் எப்ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
    - 44 எம்பி செல்பி கேமரா
    - 8 எம்பி அல்ட்ரா வைடு செல்பி கேமரா சென்சார்
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 64 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ்
    - 2 எம்பி மோனோ சென்சார் 
    - பன்டச் ஒஎஸ்11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் விவோ எனர்ஜி கார்டியன் பிளாஷ்சார்ஜ் தொழில்நுட்பம்

    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 9 5ஜி மற்றும் ரெட்மி நோட் 9 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.


    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 9 5ஜி மற்றும் ரெட்மி நோட் 9 4ஜி ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் டாப் எண்ட் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 108 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4820 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 9 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 6.53 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

     ரெட்மி நோட் 9 5ஜி

    இதில் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இவற்றுடன் ரெட்மி நோட் 9 4ஜி வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 6.53 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    சீன சந்தையில் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடல் துவக்க விலை 1599 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 17,940 என்றும் ரெட்மி நோட் 9 5ஜி மாடல் துவக்க விலை 1299 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 14,575 என்றும் ரெட்மி நோட் 9 4ஜி மாடல் 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 11,210 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனங்களை பிஎஸ்என்எல் குறைந்த விலையில் வழங்குகிறது.


    பிஎஸ்என்எல் நிறுவன பாரத் பைபர் பயனர்களுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பாரத் பைபர் பயனர்கள் கூகுள் நெஸ்ட் மினி மற்றும் கூகுள் நெஸ்ட் ஹப் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை முறையே ரூ. 99 மற்றும் ரூ. 199 மாத கட்டணத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

    இதுதவிர மேம்பட்ட பாரத் பைபர் சலுகையினை பயனர்கள் 12 மாதங்கள், 24 மாதங்கள் மற்றும் 36 மாதங்களுக்கு இண்டர்நெட் பேக் தேர்வு செய்யும் போது முறையே 10.5 மாதங்கள், 20.5 மாதங்கள் மற்றும் 30.5 மாதங்களுக்கான கட்டணத்தை செலுத்தினாலே போதுமானது. 

     கோப்புப்படம்

    இதேபோன்று கூகுள் நெஸ்ட் ஹப் வாங்குவோர் மாதம் ரூ. 199 கட்டணத்தை 12 மாதங்களுக்கு செலுத்த வேண்டும். புதிய பிஎஸ்என்எல் சலுகை அந்நிறுவன வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் தற்சமயம் கூகுள் நெஸ்ட் ஹப் விலை ரூ. 9,999 என்றும் கூகுள் நெஸ்ட் மினி விலை ரூ. 4,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    இந்த சலுகை விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த சலுகை மார்ச் 31, 2021 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை பயனர்கள் பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 

    போக்கோ இந்தியா பிராண்டு புதிய போக்கோ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

    போக்கோ பிராண்டு இந்திய சந்தையில் தொடர்ந்து புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. முன்னதாக போக்கோ எக்ஸ்2 மற்றும் போக்கோ சி3 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், புதிய எப் சீரிஸ் மாடல் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை.

    போக்கோ எப்1 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. போக்கோ எப்2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. போக்கோ எப்2 ப்ரோ முந்தைய போக்கோ எப்1 மாடலின் சரியான அப்டேட் ஆக இருக்காது.

     போக்கோ போன்

    புதிய எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக போக்கோ இந்தியா இயக்குனர் அனுஜ் ஷர்மா மற்றும் பொது மேலாளர் மன்மோகன் ஆகியோர் சமீபத்திய ASK ME ANYTHING நிகழ்வில் தெரிவித்து இருக்கின்றனர்.  

    அந்த வகையில் போக்கோ எப்1 மாடலின் மேம்பட்ட மாடலாக போக்கோ எப்2-வை எதிர்பார்க்கலாம். மேலும் இந்த மாடல் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    போக்கோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    போக்கோ பிராண்டின் புதி எம்3 ஸ்மார்ட்போன் நாளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    அதன்படி புதிய போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. 

     போக்கோ எம்3

    போக்கோ எம்3 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    - 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
    - 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - டெப்த் / மேக்ரோ கேமரா
    - 8 எம்பி செல்பி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    ஹூவாய் நிறுவனத்தின் புதிய மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    ஹூவாய் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இதில் ஒரு மாடல் மேட் எக்ஸ்2 என்றும் மற்றொரு ஹூவாய் ஸ்மார்ட்போன் CDL-AN50 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. இரு மாடல்களும் சீனாவின் TENAA சான்றளிக்கும் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    சீன வலைதளத்தில் மேட் எக்ஸ்2 விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், CDL-AN50 மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் தெரியவந்துள்ளது. மேட் எக்ஸ்2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்பதால் முந்தைய மாடலை விட சிறப்பான ஹின்ஜ் டிசைன், மேம்பட்ட ஹார்டுவேர் வழங்கப்படலாம் என தெரிகிறது.

     ஹூவாய் மேட் எக்ஸ்

    முன்னதாக வெளியான தகவல்களின் படி மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் 8.3 இன்ச் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரெசல்யூஷன், கிரின் 9000 சிப்செட், 5ஜி வசதி, Hi1105, வைபை 6, ப்ளூடூத் 5.1, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் சார்ந்த EMUI 11, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் OLED பேனல், டூயல் கார்டு ஸ்லாட், அதிக ரெசல்யூஷன் செல்பி கேமரா, 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 3900 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படு இருக்கிறது.
    சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் உருவாகும் கேலக்ஸி இசட் ப்ளிப் லைட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது.


    சாம்சங் நிறுவனம் இதுவரை மூன்று மடிக்கக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை மூன்றும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலை விரைவில் மாறலாம் என தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கேலக்ஸி இசட் ப்ளிப் லைட் எனும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சாம்சங் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிக மெல்லிய கிளாஸ் (UTG) தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக தெரிகிறது. 

     கேலக்ஸி இசட் ப்ளிப்

    இதே தொழில்நுட்பம் கேலக்ஸி போல்டு 2 மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் நிறுவனம் மிக மெல்லிய கிளாஸ் உற்பத்திக்கு ஆகும் செலவை குறைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் எதிர்கால மடிக்கக்கூடிய சாதனங்களிலும் இதே கிளாஸ் பயன்படுத்தப்படலாம். 

    குறைந்த விலையில் கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதன் மூலம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மீது கூறப்படும் பெரும் குறையை சரி செய்ய முடியும். 

    2021 ஆண்டு ஜனவரியில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21, எஸ்21 பிளஸ், எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களையும், அதன்பின் கேல்க்ஸி எஸ்21 எப்இ, கேலக்ஸி இசட் போல்டு 3, இசட் ப்ளிப் 3 மற்றும் இசட் போல்டு எப்இ உள்ளிட்ட மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
    விவோ நிறுவனம் புதிய ஒரிஜின் ஒஎஸ் இயங்குதளத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    விவோ நிறுவனம் ஆண்ட்ராய்டு தளத்தை சார்ந்து இயங்கும் ஒரிஜின் ஒஎஸ்-ஐ அறிமுகம் செய்து உள்ளது. இது அந்நிறுவனத்தின் பன்டச் ஒஎஸ்-ஐ விட மேம்பட்ட இயங்குதளம் ஆகும். 

    புதிய ஒஎஸ் பயனர் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதாக விவோ தெரிவித்து உள்ளது. தற்போதைய சூழலில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் சவால்களை சரி செய்யும் வகையில், சிறப்பான வடிவமைப்பு, சீராக இயங்கும் வகையில் இந்த ஒஎஸ் தயாராகி இருக்கிறது.

     ஒரிஜின் ஒஎஸ்

    ஒரிஜின் ஒஎஸ் தளத்தில் டெஸ்க்டாப் சிஸ்டம் மாற்றப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஐகான்கள் மாற்றப்பட்டு எளிய வடிவமைப்பு கொண்டுள்ளது. ஒரிஜின் ஒஎஸ் வேகமாகவும், சீராகவும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய அனிமேஷன்கள் மற்றும் பீட்பேக் உள்ளிட்டவை இயற்கையை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. இது மொபைல் போன்களில் நிஜமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என விவோ தெரிவித்து உள்ளது. விவோ ஒரிஜின் ஒஎஸ் வழங்கப்படும் சாதனங்கள் பற்றிய விவரங்கள் விவோ டெவலப்பர் நிகழ்வில் அறிவிக்கப்பட இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


    ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய், சாம்சங், சியோமி என பல்வேறு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து விட்டன. மேலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 

    சாம்சங் சமீபத்தில் தனது கேலக்ஸி இசட் போல்டு2 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஐபோனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மடிக்கக்கூடிய ஐபோன் பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

     ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்

    எனினும், சீன உற்பத்தியாளர்களான பாக்ஸ்கான் மற்றும் நியூ நிக்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு மடிக்கக்கூடிய போன்களின் மாதிரி வடிவத்தை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய போனினை உருவாக்க திட்டமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    மடிக்கக்கூடிய ஐபோனில் OLED அல்லது மைக்ரோஎல்இடி என இரு வகை டிஸ்ப்ளேக்களில் எதை வழங்கலாம் என பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மடிக்கும் திரை மற்றும் ஹின்ஜ் கொண்ட சாதனங்களை ஆப்பிள் விரைவில் சோதனை செய்ய துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் மைக்ரோஎல்இடி பேனலை தேர்வு செய்யும் பட்சத்தில் உற்பத்தி பணிகளில் பெருமளவு வித்தியாசமான ஒன்றாக இருக்கும். தற்சமயம் மைக்ரோஎல்இடி ரக பேனல்கள் குறைந்த மின்திறனில் அதிக பிரைட்னஸ், சாட்யூரேஷன் வழங்குகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது மேக் ஒஎஸ் பிக் சர் தளத்தில் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட மேக் ஒஎஸ் பிக் சர் இயங்குதளத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை ஆப்பிள் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த கோளாறு சர்வர் சார்ந்த பிரச்சினை என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. 

    கடந்த ஆண்டுகளில் ஆப்பிள் வெளியிட்டதில் மிகப்பெரும் அப்டேட்டாக மேக் ஒஎஸ் பிக் சர் சில நாட்களுக்கு முன் இலவசமாக வெளியிடப்பட்டது. இந்த அப்டேட்டில் புதிய வடிவமைப்பு, சபாரி, மெசேஜஸ், மேப்ஸ் மற்றும் பிரைவசி உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு உள்ளன.

     மேக் ஒஎஸ் பிக் சர்

    மேலும் இந்த ஒஎஸ் ஆப்பிள் நிறுவனத்தின் எம்1 சிப்செட்டிற்காக வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், தற்சமயம் கண்டறியப்பட்டு இருக்கும் பிரச்சினை மேக் சாதனங்களில் மூன்றாம் தரப்பு செயலிகள் எவ்வித சோதனையும் இன்றி சுலபமாக லான்ச் ஆக செய்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    மேக் ஒஎஸ் தளத்தில் கேட்கீப்பர் எனும் அம்சம் செயல்பட்டு வருகிறது. இது அங்கீகரிக்கப்பட்ட மென்பொருளை மட்டுமே மேக் தளத்தில் இன்ஸ்டால் ஆக அனுமதிக்கும். மேலும் இது மால்வேர் உள்ள செயலிகளை கண்டறிந்து அவற்றை சாதனத்திற்குள் அனுமதிக்காது.

    பயனர் தரவுகளை பாதுகாக்கும் வகையில் ஆப்பிள் டெவலப்பர் ஐடி சோதனைகளுடன் தொடர்பு கொண்டுள்ள ஐபி-க்கள் லாக் ஆவதை தடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த ஐபிக்கள் சேகரித்த தரவுகளை மீட்க நடவடிக்கை எடுத்து இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
    ×