என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ரியல்மி பிராண்டின் புதிய வாட்ச் எஸ் சீரிஸ் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் வாட்ச் எஸ் மற்றும் வாட்ச் எஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை இந்திய சந்தையில் டிசம்பர் 23 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு ரியல்மி சமூக வலைதள பக்கங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய வாட்ச் மாடல்களுடன் ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரியல்மி பிராண்டு இந்த ஆண்டு பல்வேறு ஐஒடி சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது. தற்சமயம் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் ரியல்மி கவனம் செலுத்துகிறது.

முன்னதாக ரியல்மி வாட்ச் எஸ் சீரிஸ் பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அம்சங்களை பொருத்துவரை இது அமேஸ்பிட் வெர்ஜ் லைட் மற்றும் இதர வாட்ச் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. ரியல்மி வாட்ச் எஸ் மாடலில் 1.3 இன்ச் வட்ட வடிவ டிஸ்ப்ளே, 360x360 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த வாட்ச் ஆட்டோ-பிரைட்னஸ் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பெரும்பாலான குறைந்தவிலை ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் வழங்கப்படாத அம்சம் ஆகும். இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கேலக்ஸி சாதனங்களில் கேமிங் அனுபவத்தை மேம்படுத்த புது செயலியை வெளியிட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனம் கேம்டிரைவர் எனும் புது செயலியை வெளியிட்டு இருக்கிறது. இது தேர்வு செய்யப்பட்ட கேலக்ஸி சாதனங்களில் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
சாம்சங் கேம்டெவ் திட்டத்தின் கீழ் இந்த செயலி அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கும் சாம்சங் கேமிங் அனுபவத்தை மேம்படுத்த அறிவித்து இருக்கும் செயலி, மொபைலில் கேமிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களை கவரும்.

தற்சமயம் கேலக்ஸி எஸ்20 அல்லது நோட் 20 சாதனங்களை பயன்படுத்துவோர் கூகுள் பிளே அல்லது சாம்சங் கேலக்ஸி ஸ்டோரில் இருந்து கேம்டிரைவர் செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த செயலி கூகுள், ஏஆர்எம் மற்று்ம குவால்காம் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
தற்சமயம் கால் ஆப் டியூட்டி மொபைல் மற்றும் போர்ட்நைட் போன்ற கேம்களை புதிய கேம்டிரைவர் செயலி சப்போர்ட் செய்கிறது. இந்த செயலி கிராபிக்ஸ் திறனை மொபைலில் மேம்படுத்தி வழங்குவதால், மொபைல் கேமர்களுக்கு இது சிறப்பான அனுபவத்தை வழங்கும்.
சியோமி நிறுவனம் ரோலபில் ஸ்மார்ட்போன் உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனம் ரோலபில் ஸ்மா்ட்போனிற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது. இந்த விண்ணப்பம் அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் கடந்த ஆண்டு சமர்பிக்கப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் இருந்து டிஸ்ப்ளேவை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டது ஆகும்.
இந்த காப்புரிமை 'Terminal with flexible screen' எனும் தலைப்பில் சமர்பிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அனுமதி 2020, அக்டோபர் 29 ஆம் தேதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது சர்வதேச காப்புரிமை அலுவலக தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
காப்புரிமை விவரங்களின் படி இந்த சாதனம் ரோலபில் பிளெக்சிபில் டிஸ்ப்ளே, பின்புறம் இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் ரோலபில் ஸ்கிரீனை அகல வாக்கில் 200 சதவீதம் வரை நீட்டிக்க முடியும்.
முன்னதாக முன்புறம் சுழலும் வகையில் குவாட் கேமரா சென்சார் கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை சியோமி பெற்று இருந்தது. இதுதவிர உள்புறமாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை சீனாவில் பெற்று இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் 110 இன்ச் அளவில் மைக்ரோ-எல்இடி டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் 110 இன்ச் மைக்ரோ-எல்இடி டிவியை அறிமுகம் செய்து உள்ளது. தற்சமயம் இந்த பிரமாண்ட டிவி மாடல் கொரிய சந்தையில் பிரீ-சேல் செய்யப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு வாக்கில் இந்த டிவி சர்வதேச சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.
முன்னதாக 2018 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சாம்சங் நிறுவனம் 146 இன்ச் அளவில் தி வால் எனும் டிவியை அறிமுகம் செய்து இருந்தது. எனினும், இது மாட்யூலர் வடிவில் பிரத்யேகமாக இன்ஸ்டால் செய்யக்கூடிய ஒன்றாக இருந்தது. புதிய 110 இன்ச் மாடல் வழக்கமான டிவி போன்று எளிதில் இன்ஸ்டால் செய்ய முடியும்.
புதிய 110 இன்ச் மைக்ரோஎல்இடி டிவியில் மைக்ரோமீட்டர் அளவு கொண்ட எல்இடி லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள மைக்ரோ-எல்இடி-க்கள் தரமான பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இது நீண்டகாலம் உழைக்கும் என சாம்சங் தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த டிவி 4K HDR தரவுகளை இயக்கும் வசதி கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளேவில் இருந்து பிளாக் மேட்ரிக்ஸ் மற்றும் பெசல்கள் கழற்றப்பட்டுவிட்டதாக சாம்சங் தெரிவித்து உள்ளது. இதில் உள்ள மல்டி-வியூ அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் 55 இன்ச் அளவில் நான்கு வெவ்வேறு தரவுகளை பார்க்க முடியும்.
இந்த டிவி 5.1 சேனல் சவுண்ட் வசதி கொண்டிருக்கிறது. 110 இன்ச் மைக்ரோ-எல்.இ.டி. டிவி மாடல் விலை 156,400 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1.15 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
போட் நிறுவனத்தின் புதிய எனிக்மா ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
போட் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் வாட்ச் எனிக்மா ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக அக்டோபர் மாதத்தில் போட் ஸ்டாம் எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை போட் அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய போட் எனிக்மா ஸ்மார்ட்வாட்ச் 1.54 இன்ச் கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 மாணிட்டரிங், 8 ஸ்போர்ட்ஸ் மோட்கள், 3 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் ப்ளூடூத் 4.2, அழைப்புகள், டெக்ஸ்ட் செடன்டரி அலெர்ட் வைப்ரேஷன், 24/7 இதய துடிப்பு சென்சார், SpO2 / இரத்தத்தின் காற்றோட்டத்தை டிராக் செய்யும் வசதி, உறக்கத்தை மாணிட்டர் செய்யும் வசதி, 8 விதமான ஸ்போர்ட்ஸ் மோட், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
வாட்டர் ரெசிஸ்டண்ட் (3ATM / 30 meters) வசதி கொண்டிருக்கும் வாட்ச் எனிக்மா ரிமோட் கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல் ஆப்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
போட் வாட்ச் எனிக்மா மாடல் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.
சாம்சங் நிறுவனம் 600 எம்பி கேமரா சென்சார் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் ISOCELL 600 எம்பி கேமரா சென்சாரை உருவாக்கி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 108 எம்பி கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சாம்சங் புது சென்சார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதிய 600 எம்பி கேமரா சென்சார் 4கே மற்றும் 8கே ரெக்கார்டிங்கின் போதும் தெளிவான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்தகைய திறன் கொண்ட சென்சாரை உருவாக்க சாம்சங் இன்னும் பல்வேறு தடைகளை கடக்க வேண்டியுள்ளதாக தெரிகிறது.
அந்த வகையில், இந்த சென்சார் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக மேலும் சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. சாம்சங் தற்சமயம் உருவாக்கி வரும் ISOCELL 600 எம்பி சென்சார் 1/0.57 இன்ச் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. இது தற்போதைய சென்சார்களை விட அளவில் மிகப்பெரியது ஆகும்.
சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களில் 108 எம்பி பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் சாம்சங் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் மாடல்களில் 600 எம்பி கேமரா வழங்கப்படாது என்றே தெரிகிறது.
விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
விவோ நிறுவனத்தின் வை51 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய விவோ வை51 ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
விவோ வை51 சிறப்பம்சங்கள்
6.59 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே
குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
8 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
48 எம்பி பிரைமரி கேமரா
8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
2 எம்பி மேக்ரோ கேமரா
16 எம்பி செல்பி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
5000 எம்ஏஹெச் பேட்டரி
18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
புதிய விவோ வை51 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டைட்டானியம் சபையர் மற்றும் க்ரிஸ்டல் சிம்பனி நிறங்களில் கிடைக்கிறது.
எல்ஜி நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகின்றன.
எல்ஜி நிறுவனத்தின் கே42 மற்றும் கே52 ஸ்மார்ட்போன்கள் இந்திய பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. இரு மாடல்களும் LM-K420YMW மற்றும் LM-K520YMW மாடல் நம்பர் கொண்டிருக்கின்றன. இவை எல்ஜி கே42 மற்றும் எல்ஜி கே52 பெயர்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.
இந்திய பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதால் இவை விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் ஏற்கனவே மத்திய அமெரிக்காவிலும் எல்ஜி கே52 ஸ்மார்ட்போன் ஐரோப்பாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன.
சிறப்பம்சங்களை பொருத்தவரை எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கட்-அவுட், மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

இத்துடன் 3D சவுண்ட் என்ஜின், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட், 4000 எம்ஏஹெச் பேட்டரி, MIL-STD-810G சான்று வழங்கப்பட்டு இருக்கிறது.
எல்ஜி கே52 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் புல் விஷன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 8 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த தகவல் மோட்டோ ட்விட்டர் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனிற்கென ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக வலைப்பக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அறிமுக தேதி, நேரம் மட்டும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஐரோப்பிய சந்தையில் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1640 பிக்சல் IPS டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனில் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
கனெக்டிவிட்டிக்கும் வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 4ஜி எல்டிஇ உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இதன் விலை 199 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 17,400 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் உருவாகி வருகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் விவரங்ள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
அதன்படி புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என்றும் இது ஜனவரி 14 ஆம் தேதி மற்ற இரு கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்21 சீரிசில் கேலக்ஸி எஸ்21 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடல் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.
தற்போதைய தகவல்களின் படி கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் SM-G991U எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டின் போதே ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் லஹியானா எனும் குறியீட்டு பெயர் கொண்ட பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த பிராசஸர் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் ஆக இருக்கும் என தெரிகிறது. புதிய ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு அறிமுகமான ஸ்னாப்டிராகன் 865 பிராசஸரின் மேம்பட்ட சிப்செட் ஆகும்.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்தது. தற்சமயம் ரெட்மி நோட் 9 சீரிஸ் 5ஜி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றிய விவரங்கள் கூகுள் பிளே கன்சோலில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் எம்ஐ 10ஐ எனும் பெயரில் அறிமுகமாகும் என தெரிகிறது. சியோமி எம்ஐ 10ஐ மாடல் இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல் உண்மையாகும் பட்சத்தில் சியோமி எம்ஐ 10ஐ மாடல் இந்தியாவின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. சீன சந்தையில் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடல் இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையின் மிட் ரேன்ஜ் பிரிவில் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். பிரைமரி சென்சாருடன் 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 6.67 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 4800 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சார்ஜிங், பக்கவாட்டில் கைரேகை சென்சார், என்எப்சி வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஸ்மார்ட்போன் சந்தையில் 2021 ஆண்டு 5ஜி மொபைல் போன்கள் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கும். சாம்சங், ரியல்மி, சியோமி மற்றும் இதர நிறுவனங்கள் குறைந்த விலை 5ஜி மாடல்களை அறிமுகம் செய்வதில் முக்கிய பங்காற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி ஏ42 5ஜி மாடல் சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இது தற்சமயம் ஐரோப்பிய சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது.

புதிய ஸ்மார்ட்போனின் CAD ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அதன்படி புதிய சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்றும் இவை ஒவ்வொன்றும் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் மற்ற மாடல்களில் காணப்படுவதை போன்று பெரிய கேமரா பம்ப் கொண்டிருக்காது. எனினும், கேமரா சென்சார்களுடன் எல்இடி பிளாஷ் வழங்கப்படுகிறது. இத்துடன் கேமராக்கள் அருகில் சென்சார் ஒன்று காணப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் இன்பினிட்டி வி நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், AMOLED ஸ்கிரீன், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.






