என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 108MP பிரைமரி கேமராவுடன் சியோமி நிறுவனத்தின் எம்ஐ11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.


    சியோமி நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம்  செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் 6.81 இன்ச் E4 AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், லிக்விட் கூல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 8 ஜிபி ரேம், 128 / 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 108 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெலிபோட்டோ மேக்ரோ லென்ஸ், 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சியோமி எம்ஐ 11

    புதிய சியோமி எம்ஐ 11 ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட், MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி, 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1,  4600 எம்ஏஹெச் பேட்டரி, 55 வாட் பிளாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    சியோமி எம்ஐ11 ஸ்மார்ட்போன் மிட்நைட் கிரே, ஹாரிசான் புளூ மற்றும் பிராஸ்ட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 3999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 44,970 என துவங்குகிறது. 
    கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் அன்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா தொழில்நுட்பத்துடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6 ஸ்மார்ட்போன் 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த பிக்சல் 5 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

    புதிய பிக்சல் ஸ்மார்ட்போனின் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் அன்டர்-ஸ்கிரீன் செல்பி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய அன்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா தொழில்நுட்பம் எவ்வாறு இயங்கும் என்பது பற்றிய விவரங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கும் காப்புரிமையில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. எனினும், இந்த அம்சம் வெளியீட்டு தயார் நிலையில், சீராக இயங்குவதாக கூறப்படுகிறது.

     கூகுள் பிக்சல் 4

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் 6.0 இன்ச் FHD+ 1080x2340 பிக்சல் OLED ஸ்கிரீன், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 4080 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது.

    அன்டர்-டிஸ்ப்ளே செல்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை இசட்.டி.இ. நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும் சியோமி மற்றும் ஒப்போ போன்ற நிறுவனங்கள் இதே தொழில்நுட்பம் கொண்ட மாடல்களின் ப்ரோடோடைப்களை வெளியிட்டு இருக்கின்றன.

    மேலும் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாக இருக்கும் கேலக்ஸி இசட் போல்டு 3 ஸ்மார்ட்போனிலும் அன்டர்-டிஸ்ப்ளே செல்பி கேமரா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஆப்பிள் நிறுவனம் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் வெளியீட்டு விவரங்கள் பல முறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் புதியஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடல் மினி எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் புதிய ஐபேட் தற்போதைய மாடலில் உள்ளதை விட பல மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    புதிய 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் 2021 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களிலும் புதிய ஐபேட் ப்ரோ மாடல் இதே காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டு இருந்தது.

     ஐபேட்

    முந்தைய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஐபேட் ப்ரோ மாடல்களில் 5ஜி எம்எம்வேவ் தொழில்நுட்பத்தை வழங்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த தொழில்நுட்பம் அதிவேக இணைய இணைப்புகளை வழங்கும் திறன் கொண்டது.

    அதன்படி 2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் எம்எம்வேவ் வசதி கொண்ட 5ஜி நெட்வொர்க் திறன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.  இதுதவிர அடுத்த தலைமுறை ஐபேட் ப்ரோ மாடல்களில் OLED ரக டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. 

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 9 சீரிஸ் பிளாக்ஷிப் மாடல்கள் தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் புதிதாக பேஸ் மாடல் மற்றும் ப்ரோ வேரியண்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களில் ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிகிறது.

    புதிய ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     கோப்புப்படம்

    ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்களில் ஒன்பிளஸ் 9 லைட் பல்வேறு அம்சங்கள் ஒரே மாதிரி கொண்டிருக்கும் என தெரிகிறது. அதன்படி அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களில் ஒரே மாதிரியான கேமரா செட்டப், டிஸ்ப்ளே செட்டிங், மென்பொருள் அனுபவம் கொண்டிருக்கும்.

    சர்வதேச சந்தையில் ஒன்பிளஸ் 9 லைட் மாடல் விலை 600 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 44,100 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    டெக்னோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் 1600x720 பிக்சல் HD+ 20:9, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், IMG பவர்விஆர் GE8320 GPU கிராபிக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. 

    இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, டூயல் சிம் ஸ்லாட், வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. 

     டெக்னோ ஸ்பார்க் 6 கோ

    ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஹைஒஎஸ் 6.2 கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், கிரேடியன்ட் டிசைன் கொண்டிருக்கிறது. மேலும் 3.5mm ஆடியோ ஜாக், டிடிஎஸ் ஹெச்டி சரவுண்ட் சவுண்ட்,  4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5,  மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

    டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் மிஸ்ட்ரி வைட், ஐஸ் ஜடைட் மற்றும் அக்வா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தயாவில் இதன் விலை ரூ. 8499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதுவித வடிவமைப்பு கொண்ட ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கான்செப்ட் போனின் பேக் பேனல் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும், இதில் ரியாக்டிவ் சென்சிங் எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இது எம்எம்வேவ் சென்சிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பேக் பேனல் நிறத்தை டார்க் புளூ-வில் இருந்து சில்வர் நிறத்திற்கு தானாக மாற்றும். ஸ்மார்ட்போனில் நோட்டிபிகேஷன் வரும் போது இந்த அம்சம் இயங்குகிறது. இத்துடன் பிரீத்திங் மாணிட்டர் எனும் அம்சத்தை ஒன்பிளஸ் அறிவித்து உள்ளது.

     ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் போன்

    இந்த அம்சமும் 5ஜி-யின் அங்கமான எம்எம்வேவ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனர் மூச்சுவிடுவதை டிராக் செய்து பேக் பேனல் நிறத்தை அதற்கு ஏற்ற வகையில் மாற்றுகிறது. புதிய கான்செப்ட் போன் ஒன்பிளஸ் 8டி மாடலை விட அதிக வித்தியாசங்கள் இன்றி உருவாக்கப்பட்டு உள்ளது.

    அசத்தல் அம்சங்கள் நிறைந்த ஐகூ 7 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஐகூ 7 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. டீசரில் ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை. 

    எனினும், டீசர்களின்படி இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார், பின்புறம் பிரத்யேக பினிஷ் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் ஐகூ7 பிஎம்டபிள்யூ ஸ்பெஷல் எடிஷன் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரியவந்து இருக்கிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐகூ 7 ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐகூ 7 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ 5 மாடலுக்கு மாற்றாக மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முந்தைய ஐகூ 5 சீரிஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் புதிய ஐகூ 7 மாடலில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் ஐகூ 7 மாடலுடன் ஐகூ 7 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஹூவாமி நிறுவனம் தனது ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் டிசம்பர் 21 ஆம் தேதியாவில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் 1.65 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஹெச்டி ரெசல்யூஷன், அலுமினியம் பாடி, 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ், ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

    மேலும் இதில் 50-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், spo2 மாணிட்டரிங், ஜிபிஎஸ் வசதி, 90-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பல்வேறு அசத்தலான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2

    அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 சிறப்பம்சங்கள்

    - 1.65 இன்ச் 348X442 பிக்சல் AMOLED 341PPI ஸ்கிரீன்
    - 3D கிளாஸ்
    - ஆண்ட்ராய்டு 5.0 அல்லது ஐஒஎஸ் iOS 10.0 மற்றும் அதற்கும் பின் வெளியான ஒஎஸ் வசதி
    - 90-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் 
    - ஆக்டிவிட்டி டிராக்கிங், ஸ்டெப் கவுண்ட்
    - ஹூவாமி உருவாக்கிய பயோ டிராக்கர்
    - அலுமினியம் அலாய் + பிளாஸ்டிக் பாடி 
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM / 50 Meters)
    - ப்ளூடூத் 5.0 LE, வைபை, ஜிபிஎஸ் 
    - 3 ஜிபி மெமரி 
    - மைக்ரோபோன்
    - 246mAh பேட்டரி 

    அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் டிசம்பர் 21 ஆம் தேதி துவங்குகிறது.

    ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் மாடல் 2021 ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது ஆப்பிள் நிறுவனம் 2019 ஆண்டு அறிமுகம் செய்த ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் விலை குறைந்த மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய லைட் வெர்ஷனில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் மாடல் விலை முந்தைய ஏர்பாட்ஸ் ப்ரோவை விட 20 சதவீதம் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

     ஏர்பாட்ஸ் ப்ரோ

    ஆப்பிள் நிறுவனம் லைட் வேரியண்ட்டை ஏர்பாட்ஸ் ப்ரோ விற்பனை துவங்கியதும் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஏர்பாட்ஸ் ப்ரோ விற்பனையில் அமோக வரவேற்பை பெற்றதே இதற்கு முக்கிய காரணம் என தெரிகிறது.

    ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் உற்பத்தி அடுத்த ஆண்டு துவங்கும் என கூறப்படுகிறது. தோற்றத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் முந்தைய ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இது அக்டோபர் 2019 வாக்கில் ரூ. 24,900 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    இன்ஸ்டாகிராம் லைட் செயலி மீண்டும் வெளியாக இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் லைட் செயலியை வெளியிட துவங்கி இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் பயனர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. 

    புதிய இன்ஸ்டாகிராம் லைட் ஆப் அளவில் 2MB-க்கும் குறைவாகவே இருக்கிறது. அளவில் மிக சிறியதாக இருந்தாலும், செயலி சீராகவும், வேகமாகவும் இயங்கும் என கூறப்படுகிறது. இந்த செயலி லோ-எண்ட் ஸ்மார்ட்போன்களை குறிவைத்து உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    முன்னதாக இதேபோன்ற செயலியை பேஸ்புக் நிறுவனம் 2018 ஆண்டு வாக்கில் மெக்சிகோவில் அறிமுகம் செய்தது. இதுதவிர பேஸ்புக் லைட் செயலியை அந்நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. இதுவும் அளவில் சிறியதாகவே இருந்தது.

    இன்ஸ்டாகிராம் லைட் செயலி இந்தியாவில் தற்சமயம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கிறது. பயனர்கள் இதனை கூகுள் பிளே ஸ்டோர் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம். விரைவில் இந்த செயலி சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    முதற்கட்டமாக இன்ஸ்டாகிராம் லைட் செயலி ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, பங்களா, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கிறது.

    ஒப்போ நிறுவனம் அசத்தல் தோற்றம் கொண்ட புதிய ஸ்லைடு கான்செப்ட் போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய வடிவமைப்பு கொண்ட சாதனங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஒப்போ நிறுவனம் பைண்ட் எக்ஸ் 2021 பெயரில் புதிதாக ரோலபில் கான்செப்ட் போனினை அறிமுகம் செய்தது. 

    இதன் விற்பனை இதுவரை துவங்காத நிலையில் தற்சமயம் ஒப்போ நிறுவனம் ஜப்பானை சேர்ந்த வடிவமைப்பு நென்டோ நிறுவனத்துடன் இணைந்து புதிதாக ஸ்லைடு கான்செப்ட் போனினை உருவாக்கி வருகிறது.

    புதிய ஸ்லைடு போன் மூன்று ஹின்ஜ்களை கொண்டிருக்கிறது. இந்த வடிவமைப்பு போனினை ஏழு வெவ்வேறு அளவுகளில் மடிக்க செய்கிறது. மக்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து முற்றிலும் புதுவிதமான பயன்பாட்டை எதிர்பார்ப்பதால், ஸ்லைடு போன் உருவாக்கப்பட்டு இருப்பதாக ஒப்போ மற்றும் நென்டோ நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

    கான்செப்ட் மாடலில் டக்டு-இன் ரக ஸ்டைலஸ் வழங்கப்படுகிறது. புதிய ஸ்லைடு போன் வெளியாக இன்னும் சில காலம் இருக்கிறது. எனினும், புதிய கான்செப்ட் மாடல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

    முன்னதாக இரு நிறுவனங்களும் இணைந்து ட்ரூ வயர்லெஸ் கான்செப்ட்டை உருவாக்கின. இந்த கான்செப்ட்டில் இயர்போன்கள் கேஸ் அல்லது பவர் ஹப் உடன் இணைந்து கொள்ளும். இது வயர்லெஸ் சார்ஜிங் செய்தபடி ஸ்பீக்கரில் இசையை தொடர்ந்து இயக்கும் திறன் கொண்டிருக்கும்.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனின் லைவ் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாட் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கட்-அவுட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    புது ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9இ போன்ற மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடலில் வித்தியாசமான கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இதில் மூன்று கேமரா சென்சார்களும், பிளாஷ் யூனிட் கேமரா மாட்யூலினுள் வழங்கப்படுகிறது.

     ஒன்பிளஸ் 8டி

    இத்துடன் புது ஸ்மார்ட்போனில் வித்தியாசமான ஒன்பிளஸ் லோகோ காணப்படுகிறது. இது ப்ரோடோடைப் யூனிட் என்பதால் இந்த லோகோ வழங்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தோற்றத்தில் ஸ்மார்ட்போனின் முன்புறம் ஒன்பிளஸ் 8டி போன்றே காட்சியளிக்கிறது.

    புது ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஸ்ரீஷ் ரேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஹெச்டிஆர் வசதி, 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது.
    ×