என் மலர்
புதிய கேஜெட்டுகள்
2021 சிஇஎஸ் நிகழ்வில் நான்கு புது ஸ்மார்ட்போன்களை மோட்டோரோலா அறிமுகம் செய்து இருக்கிறது.
2021 சிஇஎஸ் (சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா) நிகழ்வில் மோட்டோரோலா நிறுவனம் புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
அதன்படி மோட்டோ ஜி சீரிசில் 2021 மோட்டோ ஜி பிளே, மோட்டோ ஜி பவர், மோட்டோ ஜி ஸ்டைலஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கிறது. மோட்டோரோலா ஒன் சீரிசில் மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ் மாடல் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோ ஜி பிளே 2021 மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி பிளே 2021 மாடல் மிஸ்டி புளூ மற்றும் பிளாஷ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 12500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மோட்டோ ஜி பவர் 2021 மாடலில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 3ஜிபி / 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 5000எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங், கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி பவர் 2021 மாடல் குளோவிங் புளூ, போலார் சில்வர் மற்றும் பிளாஷ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை இந்திய மதிப்பில் ரூ. 14600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 678 பிராசஸர், 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.
இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 மாடல் அரோரா பிளாக் மற்றும் அரோரா வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 22100 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ் மாடல் 6.7 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750 ஜி பிராசஸர், 4ஜிபி / 64 ஜிபி மெமரி மற்றும், 6 ஜிபி / 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.
பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் 5ஜி ஏஸ் மாடலிலும் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வொல்கானிக் கிரே மற்றும் பிராஸ்டெட் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 29300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிட்னஸ் பேண்ட் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் பிட்னஸ் பேண்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் பேண்ட் மாடலில் 1.1 இன்ச் AMOLED கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 3 பிரத்யேக உடற்பயிற்சி மோட்கள், ஐபி 68 + 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ரியல்-டைம் இதய துடிப்பு டிராக்கிங் வசதி, எஸ்பிஒ2 சென்சார் மற்றும் 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் 100 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் பேண்ட் சிறப்பம்சங்கள்
- 1.1 இன்ச் 126x294 பிக்சல் AMOLED கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
- நோட்டிபிகேஷன் வசதி
- மியூசிக் கண்ட்ரோல், கேமரா ஷட்டர் கண்ட்ரோல்
- இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 மாணிட்டரிங்
- ஆக்டிவிட்டி டிராக்கிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங்
- உடற்பயிற்சி மோட்கள்
- 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப்
- ப்ளூடூத் 5
- ஐபி68+ 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- 110 எம்ஏஹெச் பேட்டரி
ஒன்பிளஸ் பேண்ட் மாடல் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஒன்பிளஸ் பேண்ட் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
நோக்கியா 6.3 ஸ்மார்ட்போன் என கூறி புது நோக்கியா போன் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 6.3 மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாடலில் வாட்டர் டிராப் நாட்ச், குவாட் கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.45 இன்ச் பிளாட் டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5 எம்எம் போர்ட், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் பின்புறம் வட்ட வடிவ ஹவுசிங்கில் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பவர் பட்டனில் பொருத்தப்படுகிறது. இதன் கீழ் வால்யூம் ராக்கர் வழங்கப்படுகிறது. இடதுபுறத்தில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்படுகிறது. இத்துடன் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது.
புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஒஎஸ் 11 அப்டேட் பெறும் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
ஒப்போ நிறுவனம் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஒஎஸ்11 அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் பீட்டா மற்றும் அதிகாரப்பூர்வ வெர்ஷன்களை பெறும் ஸ்மார்ட்போன்களின் பெயர் இடம்பெற்று இருக்கிறது.
மேலும் உலகின் எந்தெந்த பகுதிகளில் இந்த அப்டேட் வழங்கப்பட இருக்கிறது என்ற விவரங்களையும் ஒப்போ தெரிவித்து உள்ளது. படிப்படியாக வெளியிடப்படுவதால் ஒரே ஒப்போ போன் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த அப்டேட் கிடைக்க சிலகாலம் ஆகும் என தெரிகிறது.

ஒப்போ கலர்ஒஎஸ் 11 ஸ்டேபில் அப்டேட்
ஒப்போ பைண்ட் எக்ஸ்2, பைண்ட் எக்ஸ்2 ப்ரோ, பைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஆட்டோமொபைல் லம்போர்கினி எடிஷன், ஒப்போ எப்17 ப்ரோ, ரெனோ 4எப், ஒப்போ ஏ93, ரெனோ 4 ப்ரோ 5ஜி, ரெனோ 4 ப்ரோ 4ஜி, ரெனோ 4 4ஜி, ரெனோ 4 லைட், ரெனோ 3 ப்ரோ 4ஜி, ரெனோ 3 4ஜி மற்றும் ஒப்போ ஏ72 உள்ளிட்ட மாடல்கள் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11 ஸ்டேபில் அப்டேட் பெற இருக்கின்றன.

ஒப்போ எப்11, ஒப்போ எப்11 ப்ரோ மற்றும் எப்11 ப்ரோ மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் மாடல்களுக்கு இன்று முதல் இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் அப்டேட் வழங்கப்படுகிறது. இதேபோன்று ஒப்போ ஏ52, ஒப்போ ஏ9 மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்படுகிறது.
ஜனவரி 26 ஆம் தேதி முதல் ரெனோ 2எப், ரெனோ 10எக்ஸ் ஜூம் மாடலுக்கும், ஒப்போ எப்15 மாடலுக்கு ஜனவரி 29 ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் மேக்ஸ் வயர்லெஸ் ஹெட்போன் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 59,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை உயர்ந்த சாதனங்கள் பிரிவில் இந்த ஹெட்போன் அறிமுகமாகி இருக்கிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனின் குறைந்த விலை வேரியண்ட்டை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. ஹெட்போனின் விலையை குறைக்க புதிய மாடலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி புதிய ஹெட்போன் அலுமினியம் இயர்கப் மற்றும் ஸ்டீல் ஹெட்பேண்ட்-க்கு மாற்றாக பிளாஸ்டிக் மூலப்பொருளாக பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. தற்போதைய ஹெட்போன் மெஷின் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட அலுமினியம் இயர்கப் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஹெட்பேண்ட் கொண்டிருக்கிறது.
புதிய வயர்லெஸ் ஹெட்போன் விலை 350 டாலர்கள் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 25 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த விலையில் புது ஆப்பிள் ஹெட்போன் சோனி WH-1000XM4 மற்றும் போஸ் குவைட்கம்பர்ட் 35 II போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 ப்ரோ மாடல் சாம்சங் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் 2021 ஐபோன் சீரிஸ் மாடல்களில் இரு டாப் எண்ட் வெர்ஷன்களில் சாம்சங் நிறுவனத்தின் OLED பேனல்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர இந்த ஆண்டு வெளியாகும் நான்கு மாடல்களிலும் OLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
எனினும், இரு ஐபோன்களில் மட்டும் LTPO ரக OLED பேனல்கள் வழங்கப்படலாம் என்றும் இவற்றை சாம்சங் டிஸ்ப்ளே உற்பத்தி செய்து வழங்கும் என கூறப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் 12 மாடலில் எல்ஜி மற்றும் சாம்சங் நிறுவனங்களின் டிஸ்ப்ளே பயன்படுத்தப்படலாம் என கூறப்பட்டது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனம் LTPO OLED பேனல்களை வழங்க முடியாது என கூறப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு வெளியாகும் அனைத்து ஐபோன்களிலும் ஆப்பிள் நிறுவனம் LTPO OLED பேனல்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கென பேனல்களை உற்பத்தி செய்வதில் எல்ஜி நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், பேட்டரி பேக்கப் குறையலாம் என்ற காரணத்தால் இது வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்த அம்சம் ஐபோன் 13 ப்ரோ மாடலில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஒப்போ ரெனோ 5 சீரிசில் ரெனோ 5 5ஜி, ரெனோ 5 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ 5 ப்ரோ பிளஸ் 5ஜி போன்ற மாடல்களை கொண்டுள்ளது.
இவற்றில் தற்சமயம் ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி மாடல் மட்டும் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஜனவரி 18 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் விற்பனை மற்றும் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ரெனோ 5 ப்ரோ 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் OLED வளைந்த டிஸ்ப்ளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் பிராசஸர்
- அதிகபட்சம் 12 ஜிபி ரேம்
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி டெப்த் கேமரா
- 32 எம்பி செல்பி கேமரா
- 4350 எம்ஏஹெச் பேட்டரி
- 65 வாட் பாஸ்ட் சார்ஜிங்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாத துவக்கத்தில் ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் இந்திய மதிப்பில் ரூ. 38,200 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் இந்திய மதிப்பில் ரூ. 42,700 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9டி 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9டி 5ஜி ஸ்மார்ட்போன் சர்வதேச வெளியீடு ஜனவரி 8 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்து உள்ளது. மேலும் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களும் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ரெட்மி வெளியிட்டிருக்கும் டீசரின் படி புதிய ஸ்மார்ட்போன் மூன்று கேமராக்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 5ஜி மாடலின் சர்வதேச வேரியண்ட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 9டி 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர்
- 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4X ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 8 எம்பி 118° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 13 எம்பி செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i)
- 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பொங்கல் பண்டிகைக்கு அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2021 நிகழ்வு ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறும் என சாம்சங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வு கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி அன்பேக்டு 2021 நிகழ்வுக்கான டீசரில் புதிய கேமரா மாட்யூல் படத்துடன் ‘Welcome to the Everyday Epic’ எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் முற்றிலும் புது வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் வைலட், கிரே, வைட் மற்றும் பின்க் போன்ற நிறங்களிலும், எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போன் வைலட், சில்வர் மற்றும் பிளாக் நிறங்களிலும், எஸ்21 அல்ட்ரா மாடல் சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
புதிய கேலக்ஸி எஸ்21 மற்றும் எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் 8 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி வெர்ஷன்களிலும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வெர்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எஸ் பென் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது விரும்புவோர் தேர்வு செய்யும் அக்சஸரீயாக இது வழங்கப்படும் என தெரிகிறது.
சியோமி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட குறைந்த விலை ரெட்மி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட புது ரெட்மி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இதே பிராசஸர் கொண்ட எம்ஐ11 ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
தற்சமயம் சியோமி எம்11 ஸ்மார்ட்போனை தொடர்ந்து எம்ஐ 11 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை.

ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் உருவாகும் ஸ்மார்ட்போன் ரெட்மி கே40 ப்ரோ என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 700 சீரிஸ் பிராசஸர் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன் ரெட்மி கே40 எனும் பெயரில் அறிமுகமாகும் என தெரிகிறது.
புதிய ரெட்மி கே40 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் தவிர, அதிக ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, AMOLED பேனல், 50 எம்பி சோனி IMX786 சென்சார், பன்ச் ஹோல் செல்பி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட சியோமி எம்ஐ 11 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது. இத்துடன் வளைந்த எட்ஜ் டிஸ்ப்ளே, 2K AMOLED பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சியோமி எம்ஐ 10ஐ இந்திய வெளியீடு ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை சியோமி நிறுவனத்தின் இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் தளத்தில் அறிவித்து இருக்கிறார். இது இந்தியாவுக்கென உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் என அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார்.
புதிய சியோமி ஸ்மார்ட்போன் 108 எம்பி கேமரா கொண்டிருக்கும் என்றும் இது அமேசான் மற்றும் எம்ஐ ஸ்டோர் தளங்களில் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சியோமி எம்ஐ 10ஐ சிறப்பம்சங்கள்
- 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
- அட்ரினோ 619 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
- 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.75, LED பிளாஷ்
- 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)
- 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 4820mAh பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனின் ஆடம்பர எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஆடம்பர பொருட்களை விற்பனை செய்யும் ரஷ்யா பிராண்டு கேவியர் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இது சுத்தமான தங்கத்தால் உருவான ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்து உள்ளது.
சர்வதேச சந்தையில் இந்த ஹெட்போன் விலை 1,08,000 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 80 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஹெட்போன் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உருவாக்கப்பட்டு இருப்பதாக கேவியர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த ஹெட்போனின் இயர்கப்கள் சுத்தமான தங்கத்தால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் உருவாக்கும் ஹெட்போனில் இயர்கப்கள் அலுமினியம் கொண்டு உருவாக்கப்படுகின்றன. மேலும் மெஷ் ஹெட்பேண்ட் பகுதி மிகவும் அரிய லெதர் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கேவியர் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன் வைட் அல்லது பிளாக் ஹெட்பேண்ட் நிறத்தில் கிடைக்கிறது. எனினும், இயர்கப்கள் இரு வேரியண்ட்களிலும் தங்க நிறம் கொண்டிருக்கும். முன்னதாக ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன் இந்திய சந்தையில் ரூ. 59,900 எனும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.






