என் மலர்
புதிய கேஜெட்டுகள்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்21, எஸ்21 பிளஸ் மற்றும் எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்21 மற்றும் எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 6.8 இன்ச் குவாட் ஹெச்டி + குவாட் ஹெச்டி + எல்டிபிஒ ரக டிஸ்ப்ளே, அட்பாடிவ் ரிப்ரெஷ் ரேட் (அதிகபட்சம் 120 ஹெர்ட்ஸ்) வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் இரு மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 875 அல்லது எக்சைனோஸ் 2100 பிராசஸர் சந்தைக்கு ஏற்ப வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் எஸ்21 அல்ட்ரா மாடலுடன் எஸ் பென் ஸ்டைலஸ் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கேலக்ஸி எஸ் சீரிஸ் சிறப்பம்சங்கள்
- எஸ்21 – 6.2 இன்ச் FHD+ இன்பினிட்டி-ஒ எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
- எஸ்21 பிளஸ் – 6.7 இன்ச் FHD+ இன்பினிட்டி-ஒ எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
- எஸ்21 அல்ட்ரா – 6.8 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் எல்டிபிஒ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 875 பிராசஸர் / சாம்சங் எக்சைனோஸ் 2100 பிராசஸர்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1
- எஸ்21 மற்றும் எஸ்21 பிளஸ்– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
- 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
- எஸ்21 அல்ட்ரா – 108 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், OIS
- 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
- 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
- 10 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ்
- 5ஜி SA/NSA, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி 3.1
- 4000 எம்ஏஹெச் பேட்டரி (எஸ்21)
- 4800 எம்ஏஹெச் பேட்டரி (எஸ்21 பிளஸ்)
- 5000 எம்ஏஹெச் பேட்டரி (எஸ்21 அல்ட்ரா)
- பாஸ்ட் சார்ஜிங் வசதி
பேஸ்புக் தளத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
பேஸ்புக் நிறுவனம் பயனர்கள் விர்ச்சுவல் முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து உள்ளது. இதில் பயனர்கள் தங்களது உறவினர்களுக்கு பிரத்யேக வாழ்த்துகளை தீபாவளி ரெடி அவதார்களாக அனுப்பலாம்.
இத்துடன் பயனர்கள் தன் வீட்டில் எவ்வாறு தீபாவளியை கொண்டாடினர் என்பதை விளக்கும் புகைப்படம் அல்லது விளக்கேற்றும் வீடியோக்களை படமாக்கி அதனை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

பின் அவர்களையும் இதே போன்று செய்ய டேக் செய்து சவால் விட முடியும். இவ்வாறு செய்பவர்கள் #DiwaliAtHomeChallenge எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தலாம்.
பயனர் எதிர்கொள்ளும் சவால்களை ஏற்று அதனை தங்களது நியூஸ் பீடில் பகிர்ந்து கொண்டு மற்றவர்களை அதில் டேக் செய்து அவர்களையும் அவ்வாறு செய்ய வலியுறுத்தலாம்.
வழக்கமான தீபாவளி பதிவுகளின் பின்னணியில் தீபாவளி தீம் கொண்ட அவதார்களை இணைத்து கொள்ளலாம். இந்த அம்சம் பேஸ்புக் மொபைல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலிகளில் பயன்படுத்த முடியும்.
சுழலும் ரக திரை கொண்ட சாம்சங் சிரோ ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் தி சிரோ எனும் பெயரில் முற்றிலும் வித்தியாசமான டிவி மாடலை 2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்தது. இது செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் சுழலும் திரை கொண்டிருந்தது.
எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன் தரவுகளை டிவியில் செங்குத்தாக பார்க்கும் வகையில் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டதாக சாம்சங் அறிவித்து இருந்தது. இந்நிலையில், சாம்சங் சிரோ டிவி மாடல் தற்சமயம் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
சிரோ மாடலில் ஆல்-இன்-ஒன் ஸ்டான்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்டான்டின் மீது 43 இன்ச் QLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனை பயனர்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் செங்குத்தாகவோ, கிடைமட்டமாகவோ திருப்பி வைத்து பார்க்கலாம்.

வடிவம் மற்றும் அமைப்பு தவிர இது வழக்கமான சாம்சங் ஸ்மார்ட் டிவி போன்றே இயங்கும். மொபைல் தரவுகளை டிவியில் பார்க்க விரும்பும் போது திரை செங்குத்தாக திரும்பி கொள்ளும். இது செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களை இயக்கும் போது பயனுள்ள அம்சமாக இருக்கும்.
இந்த டிவியின் முன்புறம் 4.1 சேனல் 60வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் தலைசிறந்த பேஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. சாம்சங் சிரோ மாடல் நேவி புளூ நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய சாம்சங் சிரோ ஸ்மார்ட் டிவி மாடல் விலை ரூ. 1,24,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு எஸ்இ மாடல் ஸ்மார்ட்போனினை சத்தமின்றி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனினை சில மாதங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து நார்டு என்10 5ஜி மற்றும் நார்டு என்100 போன்ற ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்தது.
அந்த வரிசையில் ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு எஸ்இ எனும் ஸ்மார்ட்போனை சத்தமின்றி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய நார்டு எஸ்இ ஸ்மார்ட்போன் எபா எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இது ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு எஸ்இ மாடலில் வார்ப் சார்ஜ் 65, ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 4500 எம்ஏஹெச் பேட்டரியை 40 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.
இதுதவிர நார்டு எஸ்இ ஸ்மார்ட்போனில் AMOLED பேனல் மற்றும் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே அளவு பற்றி எந்த தகவலும் இல்லை. ஒன்பிளஸ் நார்டு எஸ்இ ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த மேக் மினி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த மேக் மினி மாடல் ஆப்பிள் One More Thing நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட மேக்புக் ஏர் போன்றே மேக் மினி மாடலிலும் ஆப்பிள் நிறுவனத்தின் அதிநவீன எம்1 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய அதிநவீன எம்1 5நானோமீட்டர் முறையில் உருவான முதல் கம்ப்யூட்டிங் சிப் ஆகும். இதில் 16 மில்லியன் டிரான்சிஸ்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது உலகின் அதிவேக கோர் ஆகும். இதில் 8 கோர் சிபியு மற்றும் 8 கோர் ஜிபியு வழங்கப்பட்டு உள்ளது.

மேக் மினி மாடலில் 3 மடங்கு வேகமான சிபியு, 8 கோர் ஜிபியு வழங்கப்பட்டு இருக்கிறது. இது முன்பை விட ஆறு மடங்கு வேகமான கிராபிக்ஸ் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் நியூரல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை புதிய மேக் மினி மாடலில் ஈத்தர்நெட், யுஎஸ்பி 4 / தண்டர்போல்ட், ஹெச்டிஎம்ஐ 2.0, யுஎஸ்பி ஏ, ப்ரோ டிஸ்ப்ளே எக்ஸ்டிஆர் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. புதிய மேக் மினி மாடல் விலை 699 டாலர்கள் முதல் துவங்குகிறது.
சாம்சங் நிறுவனம் தனது பிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் வெளியீட்டில் புதிய திட்டத்தை தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் 2021 கேலக்ஸி எஸ் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வழக்கத்தை விட முன்கூட்டியே அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வெளியீட்டை முன்கூட்டியே நடத்துவதன் மூலம் ஹூவாய் மற்றும் ஆப்பிள் நிறுவன போட்டியை சிறப்பாக எதிர்கொண்டு பங்குகளை அதிகப்படுத்த சாம்சங் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் ஜோ பிடன் அதிபரானதும் சீன நிறுவனங்களுக்கு தற்போது இருக்கும் நிலையில் சில தளர்வுகள் வழங்கப்படலாம் என தென் கொரிய சிப் உற்பத்தி துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த காரணங்களை முன்வைத்து சாம்சங் தனது புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ் பிளாக்ஷிப் மாடல்களை அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி எஸ் சீரிஸ் பிளாக்ஷிப் மாடல்கள் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்பட்டு வந்தன.
எனினும், புதிய பிளாக்ஷிப் எஸ்21 சீரிஸ் வெளியீடு பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தற்போதைய சூழலில் சாம்சங் சீன நிறுவனங்களான சியோமி, ஒப்போ உள்ளிட்டவைகளின் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.
எல்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
எல்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் டபிள்யூ11, டபிள்யூ31 மற்றும் டபிள்யூ31 பிளஸ் என மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
இவற்றில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் புல் விஷன் ஸ்கிரீன், 8 எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கின்றன.

எல்ஜி டபிள்யூ31 மற்றும் டபிள்யூ31 பிளஸ் மாடல்களில் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. எல்ஜி டபிள்யூ11 மாடலில் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
எல்ஜி டபிள்யூ31 மாடலில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று டபிள்யூ சீரிஸ் மாடல்களிலும் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் எல்ஜி டபிள்யூ11, டபிள்யூ31 மற்றும் டபிள்யூ31 பிளஸ் மாடல்கள் மிட்நைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9490, ரூ. 10,990 மற்றும் ரூ. 11,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
எல்ஜி நிறுவனத்தின் ரோலபில் ஸ்மார்ட்போன் மாடல் இந்த பெயரில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
எல்ஜி நிறுவனம் தனது ரோலபில் ஸ்மார்ட்போனிற்கான பெயரை ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்து இறுக்கிறது. அந்த வகையில் ரோலபில் ஸ்மார்ட்போனிற்கு எல்ஜி ஸ்லைடு எனும் பெயரை பயன்படுத்த விண்ணப்பித்து இருக்கிறது.
முன்னதாக எல்ஜி நிறுவனம் எல்ஜி ரோலபில் எனும் ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை பதிவு செய்து இருந்தது. எல்ஜி நிறுவனத்தின் புதிய ரோலபில் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் எல்ஜி எக்ஸ்புளோரர் பிராஜக்ட் திட்டத்தின் கீழ் உருவான இரண்டுவாது மாடல் என கூறப்படுகிறது. எல்ஜி ஸ்லைடு மற்றும் எல்ஜி ரோலபில் இரு வெவ்வேறு மாடல்களாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி எல்ஜி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
முந்தைய தகவல்களின் படி எல்ஜி ரோலபில் ஸ்மார்ட்போன் பிராஜக்ட் பி திட்டத்தில் உருவாகி வருவதாக கூறப்பட்டு இருந்தது. பிராஜக்ட் பி திட்டத்தின் கழ் உருவாகும் ஸ்மார்ட்போனிற்கு எல்ஜி ரோல், டபுள் ரோல், டூயல் ரோல், பை ரோல் மற்றும் ரோல் கேன்வாஸ் போன்ற பெயர்களை பயன்படுத்தவும் பெயர் பதிவு செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
எல்ஜி எக்ஸ்புளோரர் திட்டத்தின் கீழ் உருவான முதல் ஸ்மார்ட்போனாக எல்ஜி விங் மாடல் ஸ்வைவெல் ரக ஸ்கிரீன அமைப்புடன் வெளியானது. சமீபத்தில் இந்த மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் 4ஜி வசதியுடன் நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 6300 பீச்சர் போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 6300 மாடல்களை 4ஜி வசதியுடன் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரண்டு பழைய மாடல்களும் ஸ்வீடன் நாட்டு டெலிகாம் வலைதளத்தில் இருந்து லீக் ஆகி இருக்கிறது.
அதன்படி இரண்டு நோக்கியா மாடல்களிலும் 4ஜி எல்டிஇ வசதி வழங்கப்படுகிறது. 2000 ஆண்டுகளில் மிகவும் பிரபலமான மாடல்களாக நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 6300 இருந்தன. தற்சமயம் இவை புதுப்பிக்கப்பட்டு 4ஜி வசதியுடன் மீண்டும் அறிமுகமாக இருக்கின்றன.

டெலிகாம் வலைதள விவரங்களின் படி நோக்கியா 8, நோக்கியா 9, நோக்கியா 4.2, நோக்கியா 3.2, நோக்கியா 5.3, நோக்கியா 7.2, நோக்கியா 2720 ப்ளிப், நோக்கியா 8.3, நோக்கியா 3.4, நோக்கியா 2.4 மற்றும் நோக்கியா 225 4ஜி உள்ளிட்டவை வைபை காலிங் வசதி வழங்கப்படுகிறது.
இதுதவிர சமீபத்திய ஆப்பிள், சாம்சங், ஹூவாய், ஒன்பிளஸ், சியோமி மற்றும் இதர நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் வைபை காலிங் சேவை வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் டபிள்யூ21 5ஜி ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பெரும்பாலும் கேலக்ஸி இசட் போல்டு 5ஜி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி புதிய டபிள்யூ21 5ஜி மாடலில் 7.6 இன்ச் QXGA+ இன்பினிட்டி ஒ டைனமிக் AMOLED ஸ்கிரீன், சாம்சங் மிக மெல்லிய கிளாஸ் மற்றும் 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி பிளெக்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் டூயல் நானோ சிம் வசதி, புதிய க்ளிட்டர் கோல்டு நிறம் வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி டபிள்யூ21 5ஜி சிறப்பம்சங்கள்
- 7.3 இன்ச் 2208x1768 பிக்சல் QXGA+ 22.5:18 இன்பினிட்டி ஒ டைனமிக் AMOLED மெயின் டிஸ்ப்ளே
- 6.23 இன்ச் 2260x816 பிக்சல் 25:9 ஹெச்டி+ சூப்பர் AMOLED இன்பினிட்டி ப்ளெக்ஸ் கவர் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 12 ஜிபி LPDDR5 ரேம்
- 512 ஜிபி (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.5
- டூயல் சிம்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8, PDAF, OIS
- 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, PDAF, OIS
- 12 எம்பி 120° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 10 எம்பி கவர் மற்றும் 10 எம்பி செல்பி கேமரா, f/2.2
- ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11ax, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் வையர்டு மற்றும் 11 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி டபிள்யூ21 5ஜி மாடல் விலை 3 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2,23,535 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முன்பதிவு நவம்பர் 20 ஆம் தேதி துவங்குகிறது.
நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன் குறைந்த விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ஏர் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இயர்போன் தொடுதிரை வசதி கொண்டுள்ளது. இதை கொண்டு மியூசிக் கண்ட்ரோல், அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது, சிரி அல்லது கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட சேவைகளை இயக்க முடியும்.
இதில் உள்ள 13 எம்எம் டைனமிக் டிரைவர்கள் தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இதில் ப்ளூடூத் 5, ஐபிஎக்ஸ்4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் இயர்பட்ஸ் 4 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

நாய்ஸ் ஏர் பட்ஸ் அம்சங்கள்
- ப்ளூடூத் 5
- 13 எம்எம் டைனமிக் டிரைவர்கள்
- ஸ்மார்ட் டச் கண்ட்ரோல்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட்
- இயர்பட்களில் 45 எம்ஏஹெச் பேட்டரி
- சார்ஜிங் கேசில் 500 எம்ஏஹெச் பேட்டரி
- யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட்
நாய்ஸ் ஏர் பட்ஸ் ஐசி வைட் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமேசான் மற்றும் நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் கிடைக்கிறது.
பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் ஐபோன்களில் அசத்தல் அம்சம் புது அப்டேட்டில் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஒஎஸ் அப்டேட் பார்வை குறைபாடு கொண்டவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற உதவுகிறது. இந்த அம்சம் பார்வையற்றவர்கள் அருகில் மனிதர்கள் எத்தனை தூரத்தில் உள்ளனர் என்பதை கணக்கிட்டு தெரிவிக்கிறது.
மக்கள் அருகில் இருப்பதை கண்டறிவதுடன் மக்கள் எத்தனை தூரத்தில் உள்ளனர் என்ற தகவலையும் இந்த அம்சம் தெரிவிக்கிறது. இந்த அம்சம் ஒஎஸ்14.2 அப்டேட் கொண்ட ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் பயன்படுத்த முடியும்.

இந்த அம்சம் ஆப்பிள் நிறுவனத்தின் ஏஆர்கிட் சார்ந்த ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி பிளாட்பார்மில் இயங்குகிறது. ஏஆர்கிட் 4-இல் புத்தம் புதிய டெப்த் அப்ளிகேஷன் ப்ரோகிராமிங் இன்டர்பேஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது லிடார் ஸ்கேனர் மூலம் டெப்த் விவரங்களை அறிந்து கொள்ளும்.
பின் அறிந்து கொண்ட விவரங்களை துல்லியமாக கணக்கிட்டு பயனர்களுக்கு தெரிவிக்கிறது. ஆப்பிள் நிறுவனம் சமீபத்திய ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபேட் ப்ரோ போன்ற சாதனங்களில் அதிநவீன லிடார் ஸ்கேனரை வழங்கி இருக்கிறது.






