என் மலர்tooltip icon

    கணினி

    ஆப்பிள் நிறுவனம் கூகுளுக்கு போட்டியாக தேடுப்பொறி சேவையை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக தேடுப்பொறி சேவையை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேடுப்பொறி பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானதும் இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

    ஐஒஎஸ், ஐபேட்ஒஎஸ் மற்றும் மேக்ஒஎஸ் தளங்களில் கூகுள் டீபால்ட் சர்ச் என்ஜின் சேவையாக தொடர கூகுள் நிறுவனம் பல கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்தி வருகிறது. எனினும், இரு நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்த விவகாரத்தை பிரிட்டன் கூர்ந்து கவனித்து வருவதாக தகவல் வெளியானது.

    ஐஒஎஸ்

    இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் சொந்த தேடுப்பொறி சேவையை உருவாக்க திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்த சேவை சார்ந்த திட்டத்தில் பணியாற்ற பொறியாளர்களை பணியமர்த்த இருக்கிறது. 

    இந்த பட்டியலில் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லெர்னிங் மற்றும் நேச்சுரல் லேங்குவேஜ் பிராசஸிங் போன்ற துறையில் பணியாற்றுவோரையும் ஆப்பிள் பணியமர்த்த இருக்கிறது. இத்துடன் ஐஒஎஸ் 14 மற்றும் ஐபேட்ஒஎஸ் 14 பீட்டா பதிப்புகளின் சர்ச் அம்சத்தில் கூகுள் சர்ச் பின்னுக்கு தள்ளப்படுவதாக கூறப்படுகிறது.  

    தேடுப்பொறி சேவை வழங்குவதில் ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் இடையூறுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு இருப்பதால் விரைவில் இதற்கு தீர்வு காண ஆப்பிள் முயற்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஸ் ஏர் ப்ரோ மாடல் ஏர்பாட்ஸ் ப்ரோ தோற்றத்தில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ரியல்மி நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்ஸ் சந்தையில் பட்ஸ் ஏர் மாடலுடன் கடந்த ஆண்டு களமிறங்கியது. ரூ. 3999 விலையில் ரியல்மி தனது வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் ரியல்மி புதிய இயர்பட்ஸ் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய இயர்பட்ஸ் ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ எனும் பெயரில் அறிமுகமாகும் என்றும் இதில் பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இது பார்க்க ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

     ரியல்மி பட்ஸ்

    புதிய இயர்பட்ஸ் உருவாக்குவதற்கான காப்புரிமை கோரி ரியல்மி சீனாவில் விண்ணப்பித்து இருப்பதாக தெரிகிறது. காப்புரிமையில் புதிய இயர்பட்ஸ் பெயர், அம்சங்கள் பற்றி எந்த தகவல்களும் இடம்பெறவில்லை. எனினும், இது ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்று இயர்டிப்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    பிரீமியம் மாடல் என்ற வகையில் புதிய இயர்பட்ஸ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால், இந்த இயர்பட்சில் பேசிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஏர்டெல் நிறுவன சேவைகளுக்கான கட்டணம் விரைவில் உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


    பாரதி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் பாரதி மிட்டல் இந்தியாவில் டேட்டா சலுகை கட்டணம் மிகக்குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் விரைவில் விலை உயர்வை எதிர்கொள்ள வாடிக்கையாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார்.

    தற்சமயம் பயனர்களுக்கு ரூ. 160 கட்டணத்தில் 16 ஜிபி வழங்கப்படுகிறது. உண்மையில், இந்த விலைக்கு 1.6 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட வேண்டும். அமெரிக்கா அல்லது ஐரோப்பா போன்று இந்தியாவில் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

    ஏர்டெல்

    அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருப்பது போன்று ரூ. 3700  முதல் ரூ. 4400 வரை கட்டணம் வசூலிக்கும் எண்ணில்லை, எனினும், ரூ. 160 விலையில் 16 ஜிபி டேட்டா வழங்குவது கட்டுப்படியாகவில்லை என மிட்டல் தெரிவித்து இருக்கிறார். தற்போதைய சூழலில் ஏர்டெல் 1 ஜிபி டேட்டாவுக்கு ரூ. 8 வசூலித்து வருகிறது. 

    இந்த துறையில் சீரான வியாபாரத்தை மேற்கொள்ள பயனர் ஒருவரிடம் இருந்து மாதம் ரூ. 300 வருவாய் கிடைக்க வேண்டும். எனினும், தற்சமயம் இது மாதத்திற்கு ரூ. 157 ஆக இருக்கிறது.
    இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் 94 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.


    பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் மே மாதத்தில் 56.11 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து இருக்கின்றன. இதே காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக 36.577 லட்சம் வாடிக்கையாளற்களை சேர்த்து இருக்கிறது.

    ஜியோ மட்டுமின்றி பிஎஸ்என்எல் நிறுவனமும் சுமார் 2 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. மே மாத இறுதி வரை டெலிகாம் சந்தையில் வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணித்தை 114.952 கோடிகளில் இருந்து 114.391 கோடிகளாக சரிந்துள்ளது என மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்து உள்ளது.

      ஜியோ

    டிராய் அறிக்கையின் படி பாரதி ஏர்டெல் நிறுவனம் 47.428 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா 47.263 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. அந்த வகையில் இரு நிறுவனங்களும் கூட்டாக சுமார் 94 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. 

    இது ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது அதிகம் ஆகும். ஏப்ரலில் இரு நிறுவனங்களும் கூட்டாக 75 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து இருந்தன. இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கியது முதல் முன்னணி நிறுவனங்கள் தொடர் சரிவை எதிர்கொண்டு வருகின்றன. 
    பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக இணையவழி சேவை ஒன்றை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் இணையவழி தொலைகாட்சி சேவை (இண்டர்நெட் ப்ரோடோகால் டெலிவிஷன்-ஐபிடிவி) துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    புதிய ஐபிடிவி சேவை முதற்கட்டமாக கேரளா மாநிலத்தில் துவங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சேவை இரண்டு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு அதன்பின் வணிக ரீதியில் வெளியிடப்படும் என தெரிகிறது. 

    கேரளா மாநிலத்தின் எர்னாகுளம், அலப்பி மற்றும் த்ரிசூர் என மூன்று வட்டாரங்களில் வழங்கப்பட இருக்கிறது. ஐபிடிவி சேவைக்கான முதற்கட்ட சோதனை ஆகஸ்ட் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 31 வரை நடைபெற இருக்கிறது. 

    பிஎஸ்என்எல் ஐபிடிவி சேவைக்கான சோதனையில் கலந்து கொள்ள செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் விருப்பம் தெரிவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு அனைத்து சேனல்களும் இலவசமாக வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்7 சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி டேப்லெட்களான- கேலக்ஸி டேப் எஸ்7 மற்றும் டேப் எஸ்7 பிளஸ்  சாதனங்களை அறிமுகம் செய்தது. கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா முன்பதிவு துவங்கிய நிலையில், தற்சமயம் கேலக்ஸி டேப் எஸ்7 சீரிஸ் முன்பதிவு துவங்கி உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 வைபை 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 55,999 என்றும், எஸ்7 4ஜி வேரியண்ட் 128 ஜிபி மாடல் விலை ரூ. 63,999 என்றும் கேலக்ஸி டேப் எஸ்7 பிளஸ் 4ஜி வேரியண்ட் விலை ரூ. 79,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

     கேலக்ஸி டேப் எஸ்7

    புதிய சாம்சங் டேப்லெட்கள் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்கள், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி டேப் எஸ்7 பிளஸ் வைபை வேரியண்ட் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 மாடலில் 11 இன்ச் WQXGA எல்டிபிஎஸ் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி (ஆப்ஷனல்), வைபை 6, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட், 8000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 499 மற்றும் ரூ. 777 சலுகைகளுடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவினை இலவசமாக வழங்குகிறது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 499 கிரிகெட் சலுகை மற்றும் ரூ. 777 காலாண்டு சலுகைகளுடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவினை வழங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஜியோ ரூ. 499 மற்றும் ரூ. 777 இரண்டு சலுகைகளிலும் தினமும் 1.5 ஜிபி டேட்டா, ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 777 சலுகையில் மட்டும் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது.

    கோப்புப்படம்

    ஜியோ ரூ. 499 கிரிகெட் சலுகையில் தினமும் 1.5 ஜிபி என மொத்தம் 84 ஜிபி டேட்டா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ ரூ.777 சலுகையில் தினமும் 1.5 ஜிபி மற்றும் 5 ஜிபி கூடுதல் டேட்டா என மொத்தம் 131 ஜிபி டேட்டா, ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஜியோ அல்லாத எண்களுக்கு 3 ஆயிரம் நிமிடங்கள் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    இரு சலுகைகளில் ரீசார்ஜ் செய்யும் போது பயனர்களுக்கு ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கப்படுகிறது. எனினும், இதை பயன்படுத்த ஏதேனும் சலுகையை வருடம் முழுக்க ரீசார்ஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
    சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ டிவி ஹாரிசான் எடிஷன் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது எம்ஐ டிவி ஹாரிசான் எடிஷன் மாடலை செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இது சியோமி நிறுவனத்தின் முதல் பிரீமியம் டிவி மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சியோமி நிறுவன வலைதத்தில் புதிய ஸ்மார்ட் டிவி அம்சங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த டிவி சியோமியின் பேட்ச்வால் மற்றும் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய டிவி மாடல் வெளியாகி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சியோமி புதிய டிவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

      எம்ஐடிவி ஹாரிசான் எடிஷன்

    புதிய எம்ஐ டிவி ஹாரிசான் எடிஷன் பண்டிகை கால விற்பனையை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டீசரில் புதிய ஸ்மார்ட் டிவி வெளியீட்டு தேதி மற்றும் சில அம்சங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த டிவி பேட்ச்வால் லான்ச்சரில் 5 ஆயிரம் செயலிகளை இயக்குவதற்கான வசதி வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய எம்ஐ டிவி மாடலில் குவிக் வேக் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இதை கொண்டு டிவியை ஸ்டான்ட்பை மோடில் இருந்து வேகமாக ஸ்விட்ச் ஆன் செய்ய முடியும். முன்னதாக சியோமி டிவி மாடல்களில் குவிக் வேக் அம்சம் இல்லாததை பலர் குற்றச்சாட்டாக தெரிவித்து வந்தனர்.
    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் ப்ரோ எக்ஸ் மாடலில் புது அம்சம் ஒன்றை அறிமுகம் செய்து உள்ளது.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் ப்ரோ எக்ஸ் மாடலினை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அறிமுக நிகழ்வில் இந்த சாதனத்தில் வழங்கப்பட இருக்கும் அம்சம் பற்றி மைக்ரோசாப்ட் அறிவித்து இருந்தது. அந்த வகையில், தற்சமயம் ஐ ப்ரோடெக்ட் எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது வீடியோ காலிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

    இதை கொண்டு சர்பேஸ் ப்ரோ எக்ஸ் பயனர்கள் அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடியுமாம். இதன் காரணமாக பயனர்கள் கேமராவை பார்க்கும் போது அவர்களது கண்களும் அதன் சென்சார்களையே பார்த்து கொண்டிருக்கும். 

     மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ எக்ஸ்

    மைக்ரோசாப்ட் எஸ்கியூ1 பிராசஸரில் வழங்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு திறன் வீடியோ கால்களின் போது பயனர் திரையை பார்த்து கொண்டிருக்கும் வகையில் மாற்றியமைக்க வழி செய்கிறது. இதனால் பயனர்கள் சர்பேஸ் ப்ரோ எக்ஸ் கேமராவை நேரடியாக பார்த்துக் கொண்டிருப்பதை போன்றே தெரியும் என மைக்ரோசாப்ட் தெரிவித்து உள்ளது. 

    முன்னதாக இந்த அம்சம் விண்டோஸ் இன்சைடர் திட்டத்தில் இருந்த பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம் இது மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ எக்ஸ் பயன்படுத்தி வரும் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தை பயனர்கள் தானாக ஆஃப் செய்து கொள்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது. 

    இந்த அம்சம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ், ஸ்கைப் மற்றும் இதர சேவைகளில் சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் வீடியோ கால் மிகவும் அவசியமான அம்சமாக மாறிவிட்டதால், இது பயன்தரும் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. 

    ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளில் அதிரடி மாற்றம் செய்திருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளில் அதிரடி மாற்றம் செய்திருக்கிறது. அதன்படி ஏர்டெல் ரூ. 448, ரூ. 499, ரூ. 599 மற்றும் ரூ. 2698 உள்ளிட்ட பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவினை வழங்கி வருகிறது. 

    தற்போதைய அப்டேட் மூலம் நான்கு ஏர்டெல் பிரீபெயிட் சலுகைகளுடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கப்படுகிறது.

    முன்னதாக ஏர்டெல் ரூ. 401 பிரீபெயிட் சலுகையுடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசமாக வழங்கப்பட்டது. இந்த சலுகை தற்சமயம் 28 நாட்களுக்கு 30 ஜிபி டேட்டா வழங்குகிறது. ஏற்கனவே இந்த சலுகையில் 3 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

     ஏர்டெல்

    டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா கொண்டு ஏழு மல்டிப்ளெக்ஸ் திரைப்படங்கள், பிரத்யேக ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்கள், டிஸ்னி பிளஸ் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் குழந்தைகள் விரும்பும் நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க முடியும். இந்த சேவைக்கான வருடாந்திர சந்தா ரூ. 399 ஆகும். 

    ஏர்டெல் ரூ. 448 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், 28 நாட்களுக்கு 3 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 499 சலுகையில் இதே பலன்கள் வழங்கப்படுகிறது. எனினும், இது முதல் முறை ஏர்டெல் சேவையில் இணைவோருக்கானது ஆகும்.

    ஏர்டெல் ரூ. 599 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 2698 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 2 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.  

    ஏர்டெல் நிறுவனம் தனது டிஜிட்டல் டிவி வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்டிரீம் பிரீமியம் சந்தாவினை இலவசமாக வழங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


    ஏர்டெல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட ஏர்டெல் டிஜிட்டல் டிவி சந்தாதாரர்களுக்கு ஒரு வருடத்திற்கான எக்ஸ்டிரீம் பிரீமியம் சந்தாவை  இலவசமாக வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் குறுந்தகவல் அனுப்பி தகவல் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

    எக்ஸ்டிரீம் சந்தா இலவசமாக வழங்கப்பட்ட பயனர்கள் சிலர் இந்த சலுகை பற்றிய தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். ஏர்டெல் சார்பில் அனுப்பப்பட்டுள்ள குறுந்தகவலில் எக்ஸ்டிரீம் பிரீமியம் சந்தா 365 நாட்களுக்கு ஆக்டிவேட் செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    ஏர்டெல் எக்ஸ்டிரீம் சந்தாவில் பயனர்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும்  ஏர்டெல் எக்ஸ்டிரீம் ஸ்மார்ட் ஸ்டிக் மூலம் பல்வேறு தரவுகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை எக்ஸ்டிரீம் பாக்ஸ் அல்லது ஸ்மார்ட் ஸ்டிக் இல்லாத பயனர்களுக்கும் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

      ஏர்டெல் எக்ஸ்டிரீம்

    சில தினங்களுக்கு முன் ஏர்டெல் நிறுவனம் புதிய எக்ஸ்டிரீம் ஃபைபர் ஹோம் பிராட்பேண்ட் சேவையை பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஆயிரம் ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்தது. இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட எக்ஸ்டிரீம் ஃபைபர் சலுகைகளில் குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இலவச டேட்டா அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் சலுகைகள் மட்டுமின்றி பிரீபெயிட் சலுகைகளிலும் வழங்கப்படுகிறது. மேலும் ஆயிரம் ஜிபி இலவச டேட்டா ஆறு மாதம் வேலிடிட்டி கொண்டது ஆகும். இதன் சலுகை விலை ரூ. 799 முதல் துவங்குகிறது. இதில் 12 மாதங்களுக்கு அமேசான் பிரைம் சந்தா, ஏர்டெல் எக்ஸ்டிரீம் மற்றும் விண்க் மியூசிக் சேவை வழங்கப்படுகிறது.
    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பட்ஸ் கிளாசிக் இயர்போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
     

    ரியல்மி பட்ஸ் கிளாசிக் மாடல் இயர்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய இயர்போன் ரியல்மி சி12 மற்றும் ரியல்மி சி15 ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ரியல்மி பட்ஸ் கிளாசிக் இன்-லைன் ரிமோட் மற்றும் ஹால்ஃப் இன்-இயர் வடிவமைப்பு கொண்டுள்ளது. மேலும் இது பயனர்கள் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 

     ரியல்மி பட்ஸ் கிளாசிக்

    இதில் 14.2 எம்எம் ஆடியோ டிரைவர், பில்ட்-இன் ஹெச்டி மைக்ரோபோன் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்பட்டு உள்ளது. புதிய பட்ஸ் கிளாசிக் மாடலை எளிதில் மடித்து வைத்துக் கொள்ள ஸ்டிராப் ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது. இது இயர்டிப்களுக்கு மாற்றாக ஹால்ஃப் இன்-இயர் வடிவமைப்பு கொண்டுள்ளது. 

    இந்தியாவில் புதிய ரியல்மி பட்ஸ் கிளாசிக் மாடல் விலை ரூ. 399 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 24 ஆம் தேதி துவங்குகிறது. புதிய ரியல்மி பட்ஸ் கிளாசிக் சியோமி நிறுவனத்தின் எம்ஐ இயர்போன்ஸ் பேசிக் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
    ×