என் மலர்
கணினி
வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்த புதிய பிராண்டிங் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ஒருங்கிணைந்து பிராண்டிங் அறிமுகம் செய்யப்பட்டது. புது பிராண்டு வி என அழைக்கப்படுகிறது.
இது வோடபோன் மற்றும் ஐடியா என இரு பெயர்களின் முதல் எழுத்துக்களை கொண்டது. இது இரு நிறுவனங்களையும் குறிக்கிறது. இதனால் இரு எழுத்துகளை இணைத்து புது பிராண்டின் பெயராக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பிராண்டு அறிவிப்பு ஆன்லைன் நேரலை நிகழ்வின் மூலம் அறிவிக்கப்பட்டது. முன்னதாக 2018 ஆகஸ்ட் 31 ஆம் தேதி இரு நிறுவனங்கள் இணைந்தன. தற்சமயம் இரு நிறுவனங்கள் இணைப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக புது பிராண்டு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதைத் தொடர்ந்து புதிய பிராண்டிங் வலைதளம், செயலி உள்ளிட்டவற்றில் மாற்றப்பட்டு விட்டது. விரைவில் இது புதிய சிம் கார்டு, பில், விளம்பர போர்டு போன்றவற்றிலும் வி பிராண்டிங் பயன்படுத்தப்பட இருக்கிறது. இரு நிறுவனங்கள் கூட்டு, உலகின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களின் இணைப்பு ஆகும்.
புதிய பிராண்டு பல கோடி இந்தியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹானர் பிராண்டின் புதிய ஹண்டர் கேமிங் லேப்டாப் மாடல் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஹானர் ஹண்டர் கேமிங் லேப்டாப் செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை ஹானர் தனது அதிகாரப்பூர்வ வெய்போ அக்கவுண்ட்டில் தெரிவித்து இருக்கிறது.
இதே நிகழ்வில் கேமிங் லேப்டாப் மட்டுமின்றி இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களையும் ஹானர் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை அந்நிறுவனம் 2020 ஐஎஃப்ஏ நிகழ்வில் அறிமுகம் செய்த ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ மற்றும் ஹானர் வாட்ச் இஎஸ் மாடல்களாக இருக்கும் என தெரிகிறது.
புதிய ஹானர் ஹண்டர் கேமிங் லேப்டாப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இதற்கான விளம்பர படத்தின் படி லேப்டாப் ஸ்கிரீனின் பின்பறம் மிளிரும் படியாக லோகோ இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் பேக்லிட் ரக கீபோர்டு வழங்கப்படுகிறது.
ஹானர் ஹண்டர் கேமிங் லேப்டாப் முழு விவரங்கள், விற்பனை தேதி உள்ளிட்டவை செப்டம்பர் 16 ஆம் தேதி நிகழ்வில் அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்பட இருக்கிறது. மேலும் இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
ஏர்டெல் நிறுவனம் அனைத்து எக்ஸ்-ஸ்டிரீம் சலுகைகளிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்குவதாக அறிவித்து உள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது அனைத்து எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் சலுகை பலன்களையும் மாற்றி அமைத்துள்ளது. அந்த வகையில் எக்ஸ்-ஸ்டிரீம் ரூ. 499 சலுகையில் துவங்கி அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனம் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் இணைப்பில் தற்சமயம் ஐந்து சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் துவக்க விலை சலுகை ரூ. 499 என நிர்ணயம் செயய்ப்பட்டுள்ளது. இதில் நொடிக்கு 40 எம்பி வேகத்தில் வழங்கப்படுகிறது.இதைத் தொடர்ந்து ரூ. 799 சலுகையில் நொடிக்கு 100 எம்பி வேகத்தில் வழங்கப்படுகிறது.
இத்துடன் ரூ. 999 சலுகையில் நொடிக்கு 200 எம்பி வேகத்திலும், ரூ. 1499 மற்றும் ரூ. 3999 விலை சலுகைகளில் நொடிக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய சலுகைகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து சலுகைகளுடன் ரூ. 3999 மதிப்புள்ள ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் 4கே ஆண்ட்ராய்டு பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதில் 10 ஆயிரம் திரைப்படங்கள், நேரலை டிவி, ஒடிடி செயலிகளின் ஒரிஜினல் சீரிஸ் மற்றும் அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றன.
சியோமி நிறுவனம் எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.
சியோமி நிறுவனம் புதிய எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் ஸ்மார்ட் டிவி சீரிசை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவை 32 இன்ச் ஹெச்டி ரெடி, 43 இன்ச் ஃபுல் ஹெச்டி மாடல்களில் கிடைக்கிறது.
இரு மாடல்களிலும் ஹாரிசான் டிஸ்ப்ளே மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் விவிட் பிக்ச்சர் என்ஜின், மென்பொருள் மற்றும் ஹார்டுவர் அப்டேட்களை கொண்டுள்ளது. இவை டிவி பார்ப்பவர்களுக்கு தலைசிறந்த அனுபவத்தை வழங்குகின்றன.
இவற்றில் பேட்ச் வால், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை சார்ந்த யுஐ வழங்கப்பட்டுள்ளது. இது 16-க்கும் அதிக மொழிகளில் இருந்து சுமார் 23-க்கும் அதிக சேவை வழங்கும் தளங்களில் இருந்து பொழுதுபோக்கு தரவுகளை பரிந்துரை செய்கிறது. இதற்கு ஏஐ மற்றும் டீப் லேர்னிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது.
சியோமி எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 43 இன்ச் சிறப்பம்சங்கள்
- 43 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே
- 1.5GHz குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் -ஏ53 பிராசஸர்
- 750MHz மாலி-450 MP3 ஜிபியு
- 1 ஜிபி DDR4 டூயல் சேனல் ரேம்
- 8 ஜிபி மெமரி
- எம்ஐயுஐ டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
- எம்ஐ குவிக் வேக்
- வைபை, ப்ளூடூத் 4.2
- 3 x HDMI, AV, USB 2.0 x 2, ஈத்தர்நெட்
- 2 x 10W ஸ்பீக்கர்கள், DTS-HD

சியோமி எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 32 இன்ச் சிறப்பம்சங்கள்
- 32 இன்ச் 1366x768 பிக்சல் HD எல்இடி டிஸ்ப்ளே
- 1.5GHz குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் -ஏ53 பிராசஸர்
- மாலி-450 MP3 ஜிபியு
- 1.5 ஜிபி ரேம்
- 8 ஜிபி மெமரி
- எம்ஐயுஐ டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
- எம்ஐ குவிக் வேக்
- வைபை, ப்ளூடூத் 4.2
- 3 x HDMI, AV, USB 2.0 x 2, ஈத்தர்நெட்
- 2 x 10W ஸ்பீக்கர்கள், DTS-HD
புதிய எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 32 இன்ச் மாடல் விலை ரூ. 13,499 என்றும் எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 43 இன்ச் மாடல் விலை ரூ. 22,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய அம்சங்களை வழங்கும் மேம்படுத்தப்பட்ட மை பிஎஸ்என்எல் செயலியை வெளியிட்டு உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ செயலியை புது அம்சங்களுடன் அப்டேட் செய்து இருக்கிறது. புதிய மை பிஎஸ்என்எல் செயலியில் மிக எளிமையான யூசர் இன்டர்பேஸ் வழங்கப்பட்டு உள்ளது.
அப்டேட் ஆன புது செயலியில் ரிவார்ட்ஸ், 4ஜி ஹாட்ஸ்பாட், ஸ்பெஷல் ஆஃபர் மற்றும் ஃபேன்சி நம்பர் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பாரத் ஃபைபர் இணைப்பை முன்பதிவு செய்வதற்கான வசதியும் புதிய செயலியில் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் ஒன் க்ளிக் பில் பே ஆப்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு பயனர்கள் பில் கட்டணம் செலுத்துவது, தங்களின் சலுகையை மாற்றிக் கொள்வது போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.
புதிய பலன்களை பெற சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் விங்ஸ், மை பிஎஸ்என்எல் டியூன்ஸ், பிஎஸ்என்எல் வைபை, பிஎஸ்என்எல் 4ஜி பிளஸ் ணற்றும் மொபிக்விக் செயலியை பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது.
- இதற்கு முதலில் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும்.
- பின் பெயர், மொபைல், மின்னஞ்சல், வாட்டார மற்றும் பயனர் குறியீடு உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு பின் நெக்ஸ்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி லாக்-இன் செய்து மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.
- அடுத்து ஃபேன்சி நம்பர், ஒன் க்ளிக், பே பில்ஸ் மற்றும் பல்வேறு அம்சங்களை இயக்க முடியும்.
சியோமியின் ரெட்மி பிராண்டு 10 எம்எம் டிரைவர் கொண்ட ரெட்மி இயர்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனுடன் ரெட்மி இயர்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ரெட்மி இயர்போன் ஹை-ரெஸ் ஆடியோ, 10 எம்எம் சவுண்ட் டிரைவர்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் இன்-லைன் மைக், மல்டி-ஃபன்ஷன் பட்டன், அலுமினியம் அலாய் பாடி, சிலிகான் மற்றும் 1.25 எம்எம் நீள கேபிள் வழங்கப்பட்டு இருக்கிறது. அலுமினியம் சவுண்ட் சேம்பர், 10 எம்எம் டைனமிக் டிரைவர் வழங்கப்பட்டு இருக்கிறது. பிளே/பாஸ் மியூசிக், அழைப்புகளை ஏற்க / நிராகரிக்க பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.

சிலிகான் இயர்பிளக், மெஷ் ஆன்டி-இயர்வேக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆக்ஸ் ஜாக், அலுமினியம் பாடி, பிரீமியம் பில்டு கொண்டிருக்கிறது. இதன் எடை 13 கிராம் எடை கொண்டது.
புதிய ரெட்மி இயர்போன்கள் பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 399 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஜியோ ஃபைபர் புது சலுகைகள் முன்பை விட குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்தியாவில் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் புதிதாக 30 நாட்கள் இலவச டிரையல் சலுகையும் வழங்கப்படுகிறது. சந்தையில் போட்டியை எதிர்கொண்டு அதிக வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
புதிய ஜியோ ஃபைபர் சலுகைகள் ரூ. 399 விலையில் துவங்குகின்றன. இதில் நொடிக்கு 30 எம்பி வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி புதிய சலுகைகள் விலை ரூ. 699, ரூ. 999, ரூ. 1499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இதில் ரூ. 999 மற்றும் அதிக விலை கொண்ட சலுகைகளுடன் ஒடிடி செயலிகளுக்கான வசதி வழங்கப்படுகிறது.

அனைத்து புதிய சலுகைகளிலும் அன்லிமிட்டெட் இணைய வசதி, வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பழைய சலுகைகள் எதுவும் தற்சமயம் நீக்கப்படவில்லை. தற்போதைய ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் புது சலுகைகளை தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
ஜியோ ஃபைபர் சலுகைகளுடன் நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜியோசினிமா, ஜீ5, சோனி லிவ், வூட், ஆல்ட் பாலாஜி, சன் நெக்ஸ்ட், ஷிமாரூ, லயன்ஸ்கேட் பிளே மற்றும் ஹொய்சொய் உள்ளிட்ட ஒடிடி செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்படுகின்றன.
வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 46 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.
வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 46 விலையில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. இதில் லோக்கல் ஆன்-நெட் நைட் நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இதனால் பகலில் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் அல்லது டேட்டா பலன்களை பயன்படுத்த தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
புதிய ரூ. 46 விலை சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. ரூ. 46 சலுகையிலும் வோடபோன் ஐடியா ஏற்கனவே வழங்கி வரும் ரூ. 24 வவுச்சரில் கிடைக்கும் பலன்களே வழங்கப்படுகிறது. எனினும், ரூ. 24 விலை சலுகை 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

முதற்கட்டமாக வோடபோன் ரூ. 46 விலை சலுகை கேரளா வட்டாரத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய சலுகையில் 100 லோக்கல் ஆன்-நெட் நைட் நிமிடங்கள் வழங்குகிறது. இத்துடன் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் நொடிக்கு 2.5 பைசா கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
நைட் காலிங் அழைப்புகள் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. புதிய ரூ. 46 விலை சலுகை ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.
போட் நிறுவனத்தின் துணை பிராண்டு எடிக்ட் இந்திய சந்தையில் ஆடியோ சாதனங்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
இந்தியாவின் முன்னணி ஆடியோ நிறுவனங்களில் ஒன்றான போட் எடிக்ட் எனும் பெயரில் துணை பிராண்டை துவங்கி இருக்கிறது. புதிய எடிக்ட் பிராண்டு அமேசானுக்காக உருவாக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்த வகையில் எடிக்ட் ஆடியோ சாதனங்கள் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறன. புதிய எடிக்ட் பிராண்டு வயர்லெஸ் ஹெட்போன்களில் துவங்கி ஸ்பீக்கர்கள் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை ரூ. 299 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 1299 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

எடிக்ட் இஇபி01 வையர்டு இயர்போன் விலை ரூ. 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி இடபிள்யூஇ01 வயர்லெஸ் இயர்போன் ரூ. 799, இடபிள்யூஇ01 வயர்லெஸ் நெக்பேண்ட் ரூ. 999, இஎஸ்பி01 வயர்லெஸ் ஸ்பீக்கர் விலை ரூ. 1099, இடபிள்யூஹெச்01 வயர்லெஸ் ஹெட்போன் விலை ரூ. 1299 என்றும் இடிடபிள்யூஎஸ்01 ட்ரூ வயர்லெஸ் இயர்போன் ரூ. 1299 விலைகளில் கிடைக்கின்றன.
எடிக்ட் பிராண்டின் விலை உயர்ந்த இடிடபிள்யூஎஸ்01 இருக்கிறது. மேலும் இதுவே விலை குறைந்த ட்ரூ வயர்லெஸ் இயர்போன் ஆகும். ரூ. 1299 விலையில் கிடைக்கும் புதிய வயர்லெஸ் இயர்போன் 3.5 மணி நேர பேக்கப் வழங்குகிறது.
இத்துடன் 8 எம்எம் டைனமிக் டிரைவர்கள், டிஜிட்டல் டிஸ்ப்ளே பேட்டரி இன்டிகேட்டர் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி, டச் கண்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனம் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் நாளை (செப்டம்பர் 2) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட் விலையில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் எல்சிடி டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீன், 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

ரெட்மி 9ஏ சிறப்பம்சங்கள்:
- 6.53 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன்
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
- ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
- 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- ஸ்பிலாஷ் ப்ரூஃப்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ வாட்ச் ரிவால்வ் மற்றும் எம்ஐ பேண்ட் 5 சாதனங்கள் விரைவில் அறிமுகமாக இருக்கின்றன.
சியோமியின் எம்ஐ வாட்ச் ரிவால்வ் மற்றும் எம்ஐ பேண்ட் 5 சாதனங்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. புதிய எம்ஐ வாட்ச் ரிவால்வ் எம்ஐ வாட்ச் கலர் மாடலின் ரீபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். முன்னதாக இந்த வாட்ச் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போதைய தகவல்களின் படி இந்தியா வரும் பட்சத்தில், சியோமி நிறுவனம் இந்தியா கொண்டு வரும் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஐ வாட்ச் போன்றே புதிய எம்ஐ பேண்ட் 5 மாடலும் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இரு அணியக்கூடிய சாதனங்களின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எம்ஐ பேண்ட் 5 ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 20 நாட்களுக்கு பேட்டப் வழங்கும் என்றும் இதில் 11 வெவ்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள், வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
புதிய எம்ஐ பேண்ட் 5 சியோமி ஏற்கனவே அறிமுகம் செய்த எம்ஐ பேண்ட் 4 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். சீனாவில் இந்த ஃபிட்னஸ் பேண்ட் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனம் ரகசியமாக உருவாக்கி வரும் ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையை தொடர்ந்து டிவி மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் போன்றவற்றை அறிமுகம் செய்து, தொழில்நுட்ப சந்தையில் தனது சாதனங்கள் பிரிவை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் களமிறங்க ஒன்பிளஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய கிட்டத்தட்ட ஒரு வருடமாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை முன்னாள் ஒன்பிளஸ் ஊழியர் ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து புதிய ஒன்பிளஸ் வாட்ச் பற்றிய விவரங்கள் ஐஎம்டிஏ (இன்போகாம் மீடியா டெவலப்மென்ட் அத்தாரிட்டி) வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதில் புதிய ஒன்பிளஸ் வாட்ச் டபிள்யூ301ஜிபி எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது வாட்ச் மாடலை எப்போது வெளியிடும், அதன் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தவலும் இல்லை. எனினும், ஒரு வருடத்திற்கும் மேலாக உருவாக்கப்படுவதால், விரைவில் அது அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம்.






