என் மலர்tooltip icon

    கணினி

    சோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன் பிரீமியம் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    சோனி நிறுவனம் இந்திய சந்தையில் நான்காம் தலைமுறை WH-1000XM4 வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது WH-1000XM3 மாடலில் வழங்கப்பட்ட தொழில்நுட்பங்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    மேலும் இதில் ஆன்-இயர் டிடெக்ஷன், பல்வேறு சாதனங்களுடன் இணையும் வசதி, அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல், சிறப்பான நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. டூயல் நாய்ஸ் சென்சார் மூலம் மேம்பட்ட நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படுகிறது.

     சோனி ஹெட்போன்

    இதன் ஆடியோ தரத்தை மேம்படுத்த புதிய எட்ஜ்-ஏஐ சார்ந்த டிஎஸ்இஇ எக்ஸ்ட்ரீம் வசதி மற்றும் 360 ரியாலிட்டி ஆடியோ வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    சோனி WH-1000XM4 அம்சங்கள்

    - டிஜிட்டல் நாய்ஸ் கேன்சலிங் வசதி
    - வாய்ஸ் அசிஸ்டண்ட்- அலெக்சா, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி
    - சீரான ஆடியோ அனுபவம் வழங்க அதிநவீன தொழில்நுட்பம்
    - பிராக்சிமிட்டி சென்சார், 2 அக்செல்லரேஷன் சென்சார்கள் 
    - குவிக் அட்டென்ஷன் மோட்
    - ஸ்மார்ட் லிசெனிங் வசதி
    - நீண்ட நேர பேட்டரி பேக்கப்

    சோனி WH-1000XM4 ஹெட்போன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 29,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமேசான், சோனி சென்டர் மற்றும் சோனி பிரத்யேக ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கும் புதிய சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ ரூ. 598 விலையில் புதிய பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சேவைக்கான ஒரு வருட சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. 

    ஐபிஎல் 2020 தொடரை முன்னிட்டு ஏற்கனவே பல சலுகைகளில் ஜியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சேவைக்கான ஒரு வருட சந்தா வழங்கி வருகிறது. இந்த பட்டியலில் ரூ. 598 சலுகை தற்சமயம் இணைந்துள்ளது. 

     கோப்புப்படம்

    ஜியோ ரூ. 598 சலுகை 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ அல்லாத எண்களுக்கு 2000 நிமிடங்கள் வாய்ஸ் கால், ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய சலுகை தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவை கடந்ததும், டேட்டா வேகம் நொடிக்கு 64 கேபியாக குறைக்கப்படுகிறது. இந்த சலுகையில் ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் 14 மற்றும் ஐபேட் ஒஎஸ் 14 இந்தியாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐஒஎஸ் 14 மற்றும் ஐபேட் ஒஎஸ் 14 இயங்குதளங்களை வெளியிடுகிறது. முன்னதாக ஐஒஎஸ் 14 அறிமுகம் செய்யப்பட்டு, இதுவரை பீட்டா வெர்ஷன்களில் வெளியிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய அப்டேட் ஏற்கனவே டவுன்லோட் ஆகி, பயனர்களை இன்ஸ்டால் செய்ய கோருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு இன்ஸ்டால் ஆகதவர்கள் தங்களது சாதனத்தின் செட்டிங்ஸ் பகுதியில் சாப்ட்வேர் அப்டேட் பகுதிக்கு சென்று புதிய இயங்குதளத்தை டவுன்லோட் செய்யலாம்.

     ஐஒஎஸ் 14

    ஐபோன் எஸ்இ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களுக்கு புது அப்டேட் 3.36 ஜிபி அளவு கொண்டுள்ளது. ஐஒஎஸ் 14 வெர்ஷனை டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்த பின் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் பலவிதங்களில் மாற்றப்பட்டு இருப்பதை கவனிக்க முடியும்.

    புதிய ஐஒஎஸ் 14 அப்டேட் ஐபோன் 6எஸ் சீரிஸ், ஐபோன் 7 சீரிஸ், ஐபோன் 8 சீரிஸ், ஐபோன் எக்ஸ், ஐபோன் எக்ஸ்எஸ் சீரிஸ், ஐபோன் 11 சீரிஸ், ஐபோன் எஸ்இ (1&2 மாடல்கள்) உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்படுகிறது. 

    இதேபோன்று ஐபேட் ஒஎஸ் 14 ஐபேட் ஏர் 2 மற்றும் புதிய ஐபேட் ஏர், ஐபேட் மினி 4, ஐபேட் மினி 5, ஐபேட் 5th ஜென், ஐபேட் ப்ரோ மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.
    டொஷிபா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.


    ஜப்பானை சேர்ந்த பிரபல பிராண்டான டொஷிபா இந்திய சந்தையில் ஏழு புதிய டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் 32 இன்ச் ஹெச்டி ரெடி மாடலில் துவங்கி 65 இன்ச் 4கே யுஹெச்டி ஸ்மார்ட் டிவிக்கள் அடங்கும்.

    இவை பிரீமியம் யுஹெச்டி யு79 சீரிஸ், யுஹெச்டி யு50 சீரிஸ் மற்றும் ஸ்மார்ட் எல்50 சீரிஸ் என மூன்றுவித சீரிஸ்களில் கிடைக்கின்றன. இதன் யுஹெச்டி டிவிக்களில் டொஷிபாவின் செவோ 4கே ஹெச்டிஆர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை டால்பி விஷன் மற்றும் இதர ஹெச்டிஆர் ஃபார்மேட்களை சப்போர்ட் செய்கின்றன.

     டொஷிபா ஸ்மார்ட் டிவி

    மேலும் இவற்றில் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம், அல்ட்ரா டிம்மிங் தொழில்நுட்பம் மற்றும் ஏஎம்ஆர் பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவிக்கள் விடா ஒஎஸ் கொண்டு இயங்குகின்றன. இத்துடன் இவற்றில் பில்ட் இன் அலெக்சா வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    யு79 சீரிஸ் மாடலில் ஃபுல் அரே லோக்கர் டிம்மிங் டிவி தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. எல்50 சீரிஸ் மாடலில் ஏடிஎஸ் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி சிவோ என்ஜின் பிரீமியம், விடா ஒஎஸ் மற்றும் ஏஎம்ஆர் பிளஸ் தொழில்நுட்பம் உள்ளிட்டவை கொண்டுிருக்கிறது.

    இந்தியாவில் 65யு7980 யுஹெச்டி டிவி விலை ரூ. 66,990 என்றும் 55யு7980 யுஹெச்டி டிவி விலை ரூ. 46990 என்றும் 55யு5050 டிவி விலை ரூ. 36,990 என்பும் 50யு5050 டிவி விலை ரூ. 32,990 என்றும் 43யு5050 டிவி விலை ரூ. 27,990 என்றும் 43எல்5050 டிவி விலை ரூ. 22,490 மற்றும் 32எல்5050 மாடல் விலை ரூ. 12,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    அனைத்து டிவி மாடல்களும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் அமேசான், ப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் டாடா க்ளிக் உள்ளிட்டவைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. 
    வி நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை ரூ. 351 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    வோடபோன் ஐடியாவின் ஒருங்கிணைந்த பிராண்டு வி புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 351 விலையில் கிடைக்கும் புதிய சலுகை வொர்க் ஃபிரம் ஹோம் பிரிவில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இத்துடன் ரூ. 29 சலுகையை மேலும் சில வட்டாரங்களில் வழங்குகிறது.

    பலன்களை பொருத்தவரை புதிய ரூ. 351 பிரீபெயிட் சலுகையில் 100 ஜிபி அதிவேக டேட்டா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதைவிட குறைந்த விலையில் கிடைக்கும் ரூ. 251 சலுகையில் 50 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    புதிய சலுகை வொர்க் ஃபிரம் ஹோம் பிரிவில் கிடைப்பதால், இதில் வாய்ஸ் கால் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்த சலுகை ஆட்-ஆன் பேக் போன்று வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த சலுகை ஆந்திர பிரதேசம், டெல்லி, குஜராத், கேரளா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற வட்டாரங்களில் வழங்கப்படுகிறது.

    இதே சலுகை விரைவில் மற்ற வட்டாரங்களிலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வி ரூ. 29 விலை சலுகையில் 100 எம்பி டேட்டா, ரூ.15 டாக்டைம் உள்ளிட்டவை 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் வாய்ஸ் கால் கட்டணம் நொடிக்கு ரூ. 2.5 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் 6 மாடலுடன் புதிதாக ஃபிட்னஸ் பிளஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் டைம் ஃபிளைஸ் நிகழ்வில் புதிய வாட்ச் சீரிஸ் 6 மாடலுடன் ஃபிட்னஸ் பிளஸ் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஃபிட்னஸ் பிளஸ் ஆப்பிள் வாட்ச் மாடல்களுடன் இணைந்து இயங்குகிறது.

    இது ஆப்பிள் பயனர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் நோக்கில் பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இது உடற்பயிற்சி சார்ந்த அம்சங்கள், பரிந்துரைகள், பயனர் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய விவரங்களை துல்லியமாக வழங்குகிறது.

     ஆப்பிள் ஃபிட்னஸ் பிளஸ்

    ஃபிட்னஸ் பிளஸ் சேவை பயனர்கள் தங்களது வாட்ச், ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் டிவி போன்ற சாதனங்களில் உடற்பயிற்சிகளை தேர்வு செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. இது உடற்பயிற்சியின் போது பயனர் உடலில் ஏற்படும் மாற்றங்களை கணக்கிட்டு தெரிவிக்கிறது.

    ஆப்பிள் புதிய ஃபிட்னஸ் பிளஸ் சேவைக்கான கட்டணம் மாதம் 9.99 டாலர்கள் என்றும் வருடாந்திர கட்டணம் 79.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ஆப்பிள் வாட்ச் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச் சீரிஸ் 6 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஆப்பிள் நிறுவனம் தனது டைம் ஃபிளைஸ் நிகழ்வில் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வாட்ச் மாடலில் இரத்தத்தில் உள்ள காற்றோட்ட அளவுகளை கணக்கிடும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 15 நொடிகளில் இரத்தத்தில் உள்ள காற்றோட்ட அளவுகளை கணக்கிட்டு தெரிவிக்கும் திறன் கொண்டுள்ளது.

    இதற்கென வாட்ச் மாடலில் உள்ள சென்சார்கள் மற்றும் சிவப்பு நிற மின்விளக்குகள் பயன்படுத்தப்படுவதாக ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. இரத்தத்தில் உள்ள காற்றோட்ட அளவுகளை காண்பிக்க பிரத்யேக செயலியை ஆப்பிள் வாட்ச் கொண்டுள்ளது.

    புதிய வாட்ச் மாடலில் உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை மிகத்துல்லியமாக வழங்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு மருத்துவ குழுமங்களுடன் இணைந்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலில் எஸ்6 ரக பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் வாட்ச் எஸ்இ

    இது முந்தைய பிராசஸரை விட வேகமாக இருப்பதுடன் பல்வேறு அதிநவீன அம்சங்களை வழங்குகிறது. இத்துடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் முன்பைவிட மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய வாட்ச் முன்பை விட அதிக வாட்ச் ஃபேஸ்களை கொண்டுள்ளது. 

    புதிய சீரிஸ் 6 மாடலுடன் ஆப்பிள் நிறுவனம் வாட்ச் எஸ்இ மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் எஸ்இ மாடலில் எஸ்5 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    சர்வதேச சந்தையில் புதிய ஆப்பிள் வாட்ச் புளூ அலுமினியம், நியூ கிராஃபைட் மற்றும் பிராடக்ட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கென பல்வேறு பிரத்யேக பேண்ட் மற்றும் ஸ்டிராப்களில் கிடைக்கிறது. 

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலின் விலை 399 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 29367 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடல் துவக்க விலை 279 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 20535 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 
    அமேசான் நிறுவனத்தின் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையில் விரைவில் அமிதாப் பச்சன் குரல் அறிமுகமாகிறது.

    இந்தியாவில் முன்னணி இ காமர்ஸ் நிறுவனமாக விளங்கும் அமேசான் இந்தியா, அமிதாப் பச்சனுடன் இணைந்து அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது.

    அதன்படி அலெக்சா சேவையில் அமிதாப் பச்சன் குரல் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்கென அமிதாப் பச்சன் அமேசான் நிறுவனத்துடன் பணியாற்றுகிறார். அமிதாப் பச்சன் குரல் மட்டுமின்றி அவரது ஜோக்குகள், அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை மற்றும் பேச்சு மொழி உள்ளிட்டவை அலெக்சாவில் வழங்கப்பட இருக்கிறது. 

     அமேசான் அலெக்சா

    பயனர்கள் அலெக்சாவிடம் ஏதேனும் கேள்வி கேட்டு அமிதாப் பச்சன் குரலில் அதற்கான பதிலை பெற்றுக் கொள்ளலாம். இந்த அம்சம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்பட இருக்கிறது. இது அமேசான் எக்கோ, ஃபயர் டிவி ஸ்டிக், அலெக்சா செயலி மற்றும் இதர மூன்றாம் தரப்பு சாதனங்களிலும் வழங்கப்பட இருக்கிறது.
    விவோ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விவோ நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை விவோ வாட்ச் எனும் பெயரில் சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகமாகிறது.

    இதற்கான டீசர்களின்படி புதிய விவோ வாட்ச் வட்ட வடிவ டையல், இரண்டு பட்டன்கள் மற்றும் ஆடியோ பிளேபேக் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. 

     விவோ வாட்ச்

    இந்த வாட்ச் 42 எம்எம் / 46 எம்எம் என இருவித மாடல்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் வட்ட வடிவ AMOLED டையல், ஸ்டீல் பாடி ரப்பர் மற்றும் லெதர் ஸ்டிராப் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இத்துடன் 5 ஏடிஎம் தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.

    இவைதவிர தொடர்ச்சியான இதய துடிப்பு சென்சார், ஜோவி வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் மைக்ரோபோன், என்எஃப்சி, பில்ட் இன் மெமரி அதிகபட்சம் 18 நாட்களுக்கான பேட்டரி லைஃப் கொண்டிருக்கும் என தெரிகிறது. விவோ வா்ச் மாடலில் விவோ ஒஎஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 49 விலையில் 2 ஜிபி டேட்டா வழங்கும் பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.


    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 49 விலையில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய சலுகை முதற்கட்டமாக 90 நாட்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்சமயம் இந்த சலுகை சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    90 நாட்களுக்கு கிடைக்கும் புதிய சலுகை செப்டம்பர் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ரூ. 49 சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 100 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது. 

     கோப்புப்படம்

    இதன் பின் மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால்களுக்கு நிமிடம் ஒன்றுக்கு 45 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாய்ஸ் கால் மட்டுமின்றி இந்த சலுகையில் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகை நவம்பர் 29 ஆம் தேதி வரை கிடைக்கும் என பிஎஸ்என்எல் அறிவித்து இருக்கிறது.

    முன்னதாக இதே வட்டாரங்களில் பிஎஸ்என்எல் ரூ. 1499 விலையில் வருடாந்திர சலுகையை அறிமுகம் செய்தது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 250 நிமிடங்கள் வரை வழங்கப்படுகிறது. இத்துடன் 24 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ் பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மாடல் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்ப்போம்.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் மாடல்கள் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளது. 

    கடந்த சில ஆண்டுகளாக வீடியோ கேம் கன்சோல்கள் வெளியாகாமல் இருந்தது. முந்தைய எக்ஸ்பாக்ஸ், எக்ஸ்பாக்ஸ் ஒன் உள்ளிட்டவை 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன. 

     எக்ஸ்பாக்ஸ்

    இந்திய சந்தையில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மாடல் விலை ரூ. 49,990 என்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் மாடல் விலை ரூ. 34,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு கன்சோல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்குகிறது. 

    இதன் விற்பனை நவம்பர் 10 ஆம் தேதி துவங்குகிறது. எக்ஸ்பாக்ஸ் உடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் 24 மாதங்களுக்கான எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் அல்டிமேட் இலவசமாக வழங்குகிறது. இத்துடன் இஏ பிளே எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

    புதிய கன்சோல்களுடன் அசாசின்ஸ் கிரீட் வல்ஹாலா, கியர்ஸ் டேக்டிக்ஸ், டர்ட் 5 மற்றும் வாட்ச் டாக்ஸ் லீஜியன் போன்று புது வீடியோ கேம்களும் வெளியாகின்றன.
    கூகுள் நிறுவனம் மால்வேர் கண்டறியப்பட்ட செயலிகளை தனது பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளது.


    கூகுள் பிளே ஸ்டோரில் மால்வேர் அடங்கிய ஆறு செயலிகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, பிளே ஸ்டோரில் இருந்து அவை உடனடியாக நீக்கப்பட்டு உள்ளது. ஜோக்கர் என அழைக்கப்படும் இந்த மால்வேர் ஏற்கனவே ஜூலை மாத வாக்கில் 11 செயலிகளில் கண்டறியப்பட்டது.

    தற்சமயம் ஆறு செயலிகளில் இந்த மால்வேர் இருப்பதாக பிரேடியோ எனும் சைபர்செக்யூரிட்டி ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்து கூகுளுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறது. மால்வேர் கண்டறியப்பட்ட செயலிகள் பிளே ஸ்டோரில் சுமார் 2 லட்சம் டவுன்லோட்களை பெற்று இருந்தன.

     கோப்புப்படம்

    ஜோக்கர் என்ற மால்வேர் பிலீஸ்வேர் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இது தீங்கு விளைவிக்கும் பாட் ஆகும். இந்த மால்வேர் மொபைல்களில் தேவையற்ற க்ளிக்களை மேற்கொண்டு கட்டணம் வசூலிக்கும் பிரீமியம் சேவைகளில் சேர்க்கும் தன்மை கொண்டது.

    சேஃப்டி ஆப்லாக், கன்வீனியன்ட் ஸ்கேனர் 2, புஷ் மெசேஜ் - டெக்ஸ்டிங் மற்றும் எஸ்எம்எஸ், எமோஜி வால்பேப்பர், செப்பரேட் டாக் ஸ்கேனர் மற்றும் ஃபிங்கர்பிட் கேம்பாக்ஸ் என்ற செயலிகளில் ஜோக்கர் மால்வேர் கொண்டிருந்ததால், பிளே ஸ்டோரில் நீக்கப்பட்டு இருக்கின்றன.

    இந்த செயலிகளை ஏற்கனவே இன்ஸ்டால் செய்தவர்கள் இவற்றை அன்-இன்ஸ்டால் செய்வதே சிறந்தது என பிரேடியோ அறிவுறுத்தி உள்ளது.
    ×