என் மலர்tooltip icon

    கணினி

    அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    ஹூவாமி நிறுவனம் இந்திய சந்தையில் அமேஸ்பிட் நியோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ரெட்ரோ ஸ்டைலிங், 1.2 இன்ச் அளவில் சதுரங்க வடிவம் கொண்டுள்ளது. 

    இத்துடன் ஸ்மார்ட்வாட்ச் பேட்டரியை சேமிக்கும் வகையில் பிளாக் அண்ட் வைட் எல்சிடி ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது நேரடி சூரிய வெளிச்சத்திலும் தெளிவாக பார்க்கும் வசதியை வழங்குகிறது. 

     அமேஸ்பிட் நியோ

    இத்துடன் லிப்ட்-டு-வேக் அம்சம், நான்கு பட்டன்கள் கொண்ட பிளாஸ்டிக் பாடி, 24 மணி நேர இதய துடிப்பை டிராக் செய்யும் வசதி, 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

    அமேஸ்பிட் நியோ சிறப்பம்சங்கள்

    - 1.2 இன்ச் எஸ்டிஎன் பிளாக் அண்ட் வைட் டிஸ்ப்ளே
    - அழைப்புகள், குறுந்தகவல், மின்னஞ்சல் நோட்டிபிகேஷன் வசதி
    - ஆக்டிவிட்டி டிராக்கிங் மற்றும் ஸ்லீப் மாணிட்டரிங் வசதி
    - 3 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
    - ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார்
    - ப்ளூடூத் 5.0 எல்இ
    - ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் ஐஒஎஸ் 10
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - 160 எம்ஏஹெச் பேட்டரி

    அமேஸ்பிட் நியோ ஸ்மார்ட்வாட்ச் ரெட், பிளாக் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் மிந்த்ரா வலைதளங்களில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    சியோமி நிறுவனத்தின் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    சியோமி நிறுவனம் எம்ஐ வாட்ச் ரிவால்வ் பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் 46எம்எம் வெர்ஷனில் 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டு உள்ளது. 

    இத்துடன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரேம், 10 ஸ்போர்ட்ஸ் வகைகளை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 5 ஏடிஎம் வாட்டர் ப்ரூஃப் மற்றும் ஜிபிஎஸ் வசதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

     எம்ஐ வாட்ச் ரிவால்வ்

    சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ் சிறப்பம்சங்கள்

    - 1.39 இன்ச் 454×454 பிக்சல் AMOLED ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ப்ளூடூத் 5, ஜிபிஎஸ்
    - ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐஒஎஸ் தளங்களுடன் இயங்கும் வசதி
    - இதய துடிப்பு சென்சாருடன் பல்வேறு இதர சென்சார்கள்
    - ஸ்லீப் டிராக்கிங், பிட்னஸ் டிராக்கிங் மற்றும் 10 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - 420 எம்ஏஹெச் பேட்டரி
    - 14 நாட்கள் பேட்டரி பேக்கப்

    சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ் மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஸ்டிராப், குரோம் சில்வர் மற்றும் நெப்டியூன் புளூ ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், தீபாவளி வரை இது ரூ. 9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
    ப்ளிப்கார்ட் நிறுவனம் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.


    ப்ளிக்கார்ட் நிறுவனம் பிக் பில்லியன் டேஸ் சேல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த விற்பனை விரைவில் துவங்கும் என ப்ளிப்கார்ட் தெரிவித்து உள்ளது.

    முதற்கட்டமாக பிக் பில்லியன் டேஸ் சேல் ப்ளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு விற்பனைக்காக ப்ளிப்கார்ட் எஸ்பிஐ வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதன்படி எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     ப்ளிப்கார்ட்

    இதுதவிர மொபைல் போன் மற்றும் இதர அக்சஸரீக்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் விசேஷ விலை குறைப்பு வழங்கப்படும் என ப்ளிப்கார்ட் தெரிவித்து இருக்கிறது. பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கென பிரத்யேக வலைப்பக்கத்தை ப்ளிப்கார்ட் வெளியிட்டு உள்ளது.

    இத்துடன் சிறப்பு விற்பனையில் வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தொலைகாட்சி மற்றும் பெரிய சாதனங்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் எக்சேன்ஜ் சலுகை மற்றும் கூடுதல் வாரண்டி உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
    அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு அதிபர் டிரம்ப் விதித்த தடை உத்தரவுக்கு நீதிபதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

    அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் அதிபர் டிரம்ப்பின் உத்தரவிற்கு அந்நாட்டு நீதிபதி இடைக்கால தடை விதித்து இருக்கிறார். புதிய உத்தரவு காரணமாக நவம்பர் மாதம் தேர்தல் முடிந்த பின் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

    டிக்டாக் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்றுக் கொண்டு அமெரிக்க மாவட்ட நீதிபதி கார்ல் நிகோல்ஸ் அதிபர் டிரம்ப்பின் தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். 

     டொனால்ட் டிரம்ப்

    டிக்டாக் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் அதிபரின் தடை உத்தரவு முதல் சட்டத்திருத்த உரிமைகளை மீறுவதோடு வர்த்தகத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுவதாக கூறினர்.

    முன்னதாக அமெரிக்காவில் சீனாவை பூர்வீகமாக கொண்டு இயங்கும் டிக்டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட செயலிகள் அந்நாட்டு பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தை முன்வைத்து இவற்றை தடை செய்ய டிரம்ப் உத்தரவிட்டார்.
    ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி ஸ்மார்ட் டிவி 55 இன்ச் மாடலை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. இது உலகின் முதல் SLED 4கே ஸ்மார்ட் டிவி என ரியல்மி தெரிவித்து உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ரியல்மி மற்றும் ஜான் ரூமேன்ஸ் இணைந்து உருவாக்கி இருக்கின்றன.

    SLED டிஸ்ப்ளே தொழில்நுட்பம் கொண்ட ரியல்மி ஸ்மார்ட் டிவி 4கே 55 இன்ச் மாடல் டியுவி ரெயின்லேண்ட் லோ புளூ லைட் சான்று பெற்று இறுக்கிறது. OLED டிவிக்கள் தவிர இந்த சான்று பெற்ற ஒரே டிவி இது ஆகும்.

     ரியல்மி ஸ்மார்ட் டிவி

    புதிய ரியல்மி டிவி மாடல் மற்ற ரக டிவிக்களை விட சிறப்பான அனுபவத்தை வழங்குவதோடு, கண்களுக்கும் பாதுகாப்பானது ஆகும். புதிய டிவியுடன் ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் நிற்கும் புகைப்படத்தை அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். 

    அந்த வகையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல் அக்டோபர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விமானங்களில் டெலிகாம் சேவையை வழங்க இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விமானங்களினுள் இணையம் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற சேவையை வழங்குவதற்கான பிரத்யேக ரீசார்ஜ் சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் கட்டணம் ரூ. 499 முதல் துவங்குகிறது.

    ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட 22 விமான நிறுவன விமானங்களில் பயணம் செய்யும் போது, புதிய இன்-பிளைட் கனெக்டிவிட்டி சலுகைகளை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

    புதிய சலுகைகள் பற்றிய அறிவிப்புடன், ரூ. 1101 மற்றும் ரூ. 1201 சர்வதேச ரோமிங் சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ மாற்றி அமைத்து இருக்கிறது. அந்த வகையில் இரு சர்வதேச ரோமிங் சலுகைகளிலும் வைபை காலிங் வசதி வழங்கப்படுகிறது. 

     கோப்புப்படம்

    ஜியோவின் இன்-பிளைட் கனெக்டிவிட்டி சலுகைகள் ரூ. 499, ரூ. 699 மற்றும் ரூ. 999 விலையில் கிடைக்கின்றன. இவை ஒரு நாள் வேலிடிட்டி கொண்டுள்ளன. ரூ. 499 சலுகையில் 250 எம்பி டேட்டா, 100 நிமிடங்களுக்கு அவுட்கோயிங் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. 

    ரூ. 699 சலுகையில் 500 எம்பி டேட்டாவும், ரூ. 999 சலுகையில் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் 100 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. 

    புதிய சலுகைகளில் இன்கமிங் அழைப்புகள் வழங்கப்படவில்லை. எனினும், இன்கமிங் எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
    ட்விட்டர் டைரக்ட் மெசேஜ் சேவையில் வாய்ஸ் மெசேஜ் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ட்விட்டர் சேவையில் வாய்ஸ் ட்வீட்ஸ் எனும் புதிய அம்சம் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் பயனர்கள் ஆடியோ மெசேஜ் மூலம் தங்களது கருத்துக்களை பதிவிட முடியும். 

    தற்சமயம் இந்த அம்சத்தை நீட்டித்து ட்விட்டர் டைரக்ட் மெசேஜஸ் சேவையில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வழி செய்கிறது. இதற்கான இன்டர்பேஸ் வாய்ஸ் ட்வீட்ஸ் அம்சத்திற்கு வழங்கப்பட்டதை போன்றே காட்சியளிக்கிறது. 

     ட்விட்டர்

    ட்விட்டரில் ஒருவருக்கு டிஎம் செய்யும் போது, வலது புறத்தில் டெக்ஸ்ட் பாக்ஸ் காணப்படும். அதனை க்ளிக் செய்ததும் வாய்ஸ் மெசேஜை உருவாக்க முடியும். இவ்வாறு செய்யும் போது, ஆடியோ ரெக்கார்டிங் நிறுத்துவதற்கான ஆப்ஷன் வழங்கப்படுகிறது. 

    மேலும் வாய்ஸ் மெசேஜை அனுப்பும் முன், அதனை சரிபார்க்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இதனால் ரெக்கார்ட் செய்த ஆடியோவை ஒருமுறை முழுமையாக கேட்டு, பின் அதனை அனுப்ப முடியும். மறுபுறம் ஆடியோ மெசேஜை பெறுபவர், அதனை பிளே / பாஸ் செய்து கேட்கலாம்.

    முதற்கட்டமாக இந்த அம்சம் பிரேசில் நாட்டில் சோதனை செய்யப்படுகிறது. சோதனை வெற்றிகரமாக நிறைவுற்றால், சர்வதேச அளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் தங்களின் டிஎம் சேவையில் வாய்ஸ் மெசேஜ் வசதியை ஏற்கனவே வழங்கி வருகின்றன.
    வாட்ஸ்அப் செயலியில் புதிதாக அசத்தல் அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.20.201.1 வெளியாகி இருக்கிறது. புதிய பீட்டா பதிப்பில் எக்ஸ்பைரிங் மீடியா எனும் புதிய அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. இது ஸ்னாப்சாட் மற்றும் டெரிகிராம் செயலிகளில் உள்ள டிஸ்-அபியரிங் மீடியா அம்சம் போன்றே செயல்படுகிறது.

    இதில் உள்ள மீடியா பிரிவில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஜிஃப் உள்ளிட்டவை அடங்கும். இந்த அம்சம் வாட்ஸ்அப் ஏற்கனவே சோதனை செய்து வரும் எக்ஸ்பைரிங் மெசேஜஸ் போன்றே இயங்கும்.

     வாட்ஸ்அப்

    இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்ததும், ஆட் மீடியா பட்டன் அருகில் புதிய ஐகான் தெரியும். அதனை க்ளிக் செய்ததும், குறிப்பிட்ட மீடியா எக்ஸ்பைரிங் மீடியாவாக அனுப்பப்படும். இதனை பெறுபவர் பார்த்தால், அதன் பின் சாட் பாக்சில் இருந்து காணாமல் போய்விடும்.

    தற்சமயம் காணால் போகும் மீடியாவை குறிக்கும் தகவல் இடம்பெறவில்லை. மேலும் பயனர் பெற்ற மீடியாவை ஸ்கிரீன்ஷாட் எடுத்தாரா என்பதை குறிக்கும் தகவல் இடம்பெறவில்லை. தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதனால் இது ஸ்டேபில் அப்டேட்டில் கிடைக்க சில காலம் ஆகும் என தெரிகிறது.
    2020 ஆண்டின் நிகழ்வுகளை கச்சிதமாக எடுத்துரைக்கும் ஐந்து புதிய எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.


    2020 ஆண்டு பற்றி யாரிடம் கேட்டாலும், இது மிகவும் மோசமான ஆண்டு என்றே கூறுவர். சமூக வலைதள டிரெண்டுகளும் 2020 பாதிப்புகளை குறிக்கும் வகையிலேயே இருக்கின்றன.

    இந்த ஆண்டு துவங்கியது முதல் உலகில் நடைபெறும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் இந்த ஆண்டு தான் மிகவும் மோசமானது என அனைவரையும் சொல்ல வைக்கிறது.

    அந்த வகையில், 2020 ஆண்டில் அனைவரின் பொதுவான மன ஓட்டத்தை எடுத்துரைக்கும் ஐந்து புதிய எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள. எனினும், புதிய எமோஜிக்களை பெற 2021 வரை காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மொபைல் போன்களில் எமோஜிக்களை அனுமதிக்கும் யுனிகோட் கன்சார்டியம், ஐந்து புதிய எமோஜிக்களை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. 

     எமோஜி

    புதிய எமோஜிக்கள்:  ஃபேஸ் இன் கிளவுட் - முகம் மேகத்தில் இருப்பதை குறிக்கும், ஃபேஸ் எக்சேலிங் - பெருமூச்சு விடுதல், அமைதி போன்றவற்றை குறிக்கும்,  ஃபேஸ் வித் ஸ்பைரல் ஐஸ் - குழப்பம், பிரச்சினை, ஐயோ போன்றவற்றை குறிக்கும், ஹார்ட் ஆன் ஃபையர் - 2020 ஆண்டில் ஒருவர் நினைத்தது, நிறைவேறாததை குறிக்கும், மென்டிங் ஹார்ட்- சூழல்களில் முன்னேற்றம் ஏற்படுவதை குறிக்கின்றன.

    இந்த எமோஜிக்கள் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப எந்த சூழலிலும் பயன்படுத்த முடியும். இவை 2020 ஆண்டிற்காக உருவாக்கப்படவில்லை. எனினும், இவை இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்வுகளை நினைவில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கின்றன. 
    டால்பி அட்மோஸ் வசதி கொண்ட இந்தியாவின் முதல் சவுண்ட்பார் மாடலை ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.


    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் ஜெப்-ஜூக் பார் 9700 ப்ரோ டால்பி அட்மோஸ் சவுண்ட்பாரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது டால்பி அட்மோஸ் வசதி கொண்ட இந்தியாவின் முதல் சவுண்ட்பார் மாடல் ஆகும். டால்பி அட்மோஸ் வசதியுடன் பொழுதுபோக்குகளில் புரட்சியை ஏற்படுத்த சப்வூஃபர் கொண்ட சவுண்ட்பார் மாடல் ஆகும்.

    ஒருவர் விரும்பும் பொழுதுபோக்கு எதுவாக இருந்தாலும், அதற்கு டால்பி அட்மோஸ் சிறந்தது. ஜெப்-ஜூக் பார் 9700 ப்ரோ டால்பி அட்மோஸ் சவுண்ட்பார் மூலம் மெய்மறந்த அதிவேக ஒலி அனுபவத்தை வீட்டிலேயே பெற முடியும்.

    பொதுவாக மல்டி சேனல் சரவுண்ட் ஸ்பீக்கர்களில் வயர்கள் சிக்கலாகி சிரமத்தை ஏற்படுத்தும். இந்த சவுண்ட் பார் அதுபோன்ற சிக்கல்களைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மிக எளிமையான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த சவுண்ட் பார் மூலம் முப்பரிமாண ஒலி அனுபவத்தை துல்லியமாக நீங்கள் பெற முடியும். 

     ஜெப் ஜூக் பார் 9700 ப்ரோ

    குறிப்பாக எந்த சிக்கலான வயர்களும் இல்லாமல், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் வகையில், எல்லா விதமான அறையிலும் அமைக்கக்கூடிய வகையில் இந்த சவுண்ட் பார் உள்ளது.

    "ஜெப்-ஜூக் பார் ப்ரோ டால்பி அட்மோஸ்" 16.51cms சப் வூபஃர் டிரைவருடன் உரத்த சத்தமுள்ள மற்றும் பஞ்சி பேஸ் அனுபவத்துடன் வருகிறது. சவுண்ட்பார் குவாட் 5.71 cms மற்றும் டூயல் 5.08 cms டிரைவருடன் வருகிறது, இதன்மூலம் தெளிவான ஆடியோ மற்றும் அதிவேக ஆடியோவைக் அனுபவிக்க முடியும்.

    சவுண்ட்பாரில் தொந்தரவு இல்லாத அமைப்பு மட்டுமின்றி யுஎஸ்பி / ஆக்ஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹெச்டிஎம்ஐ (ஏஆர்சி) அல்லது ஆப்டிகல் இன்புட், டூயல் ஹெச்டிஎம்ஐ இன்புட், ஒரு ஹெச்டிஎம்ஐ அவுட்புட்டுடன் வருகிறது.

    புதிய ஜெப் ஜூக் பார் 9700 ப்ரோ டால்பி அட்மோஸ் சவுண்ட்பார் முன்னணி ப்ளிப்கார்ட் தளத்தில் 2020 செப்டம்பர் 21 முதல்  விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.17,999/- என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யும் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் திடீரென தனது முடிவை மாற்றி கொண்டார்.


    சீனாவின் டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்த செயலிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் கையெழுத்திட்டார். 

    இந்த தடை உத்தரவின் படி டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும். அதனைத் தொடர்ந்து டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் ஆகஸ்ட் 20 முதல் தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்து இருந்தது. 

     டிக்டாக்

    இதற்கான ஆணையை அமெரிக்க வர்த்தகத்துறை வெளியிட்டு இருந்தது.  அதாவது எந்தவொரு ஆப் ஸ்டோரிலும் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவது நிறுத்தப்படும் என அமெரிக்க வர்த்தகத்துறை  குறிப்பிட்டு இருந்தது. 

    இந்நிலையில், முக்கிய திருப்பமாக டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை ஒருவாரத்திற்கு தள்ளிவைப்பதாக அமெரிக்க வர்த்தக்த்துறை தெரிவித்துள்ளது. 

    ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் டிக்டாக் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால், தடை தள்ளிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    ஆரக்கிள் நிறுவனத்துடன் பைட்டேன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால், அமெரிக்காவில் தடையில் இருந்து டிக்டாக் தப்பிக்கும் என தெரிகிறது.
    இந்தியாவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுக்கான விலை திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது.

    டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா கட்டணம் ரூ. 365 ஆக மாற்றப்பட்டு உள்ளது. முன்னதாக இதன் விலை ரூ, 399 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    புதிய விலை குறைப்பு கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியன் பிரிமீயர் லீக் 2020 (ஐபிஎல்) தொடர் இன்று (செப்டம்பர் 19) துவங்க இருக்கிறது. இந்நிலையில், இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி

    2020 ஐபிஎல் கிரிகெட் தொடருக்கான அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஸ்டிரீமிங் பார்ட்னராக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இருக்கிறது. இதன் காரணமாக ஐபிஎல் 2020 போட்டிகளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நேரலையில் ஸ்டிரீமிங் செய்ய இருக்கிறது.

    விசா அல்லது மாஸ்டர்கார்டு கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை ரூ. 365 எனும் விலையில் பெற முடியும். கிரெடிட் கார்டு இல்லாதவர்கள் டெபிட் கார்டு, யுபிஐ ஐடி, பேடிஎம் அல்லது நெட்பேங்கிங் போன்ற சேவைகளை பயன்படுத்தி ரூ. 399 விலையில் பெற முடியும்.
    ×