என் மலர்
கணினி
ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் ஆறு புதிய டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 32 இன்ச் அளவில் துவங்கி 55 இன்ச் வரை கிடைக்கிறது.
இவை இரண்டு ஹெச்டி மற்றும் இரண்டு 4கே மாடல்கள் ஆகும். அழகிய வடிவமைப்பு, மெல்லிய பெசல்கள் மற்றும் சக்திவாய்ந்த பிராசஸர்களுடன் புதிய ஐடெல் டிவி மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

இவற்றின் விலை ரூ. 8999 முதல் துவங்குகிறது. ஐடெல் ஐ சீரிஸ், ஐடெல் சி சீரிஸ் மற்றும் ஐடெல் ஏ சீரிஸ் என மூன்று பிரிவுகளில் கிடைக்கிறது.
ஐடெல் ஐ 155141இ 4கே டிவி விலை ரூ. 34,999 என்றும், ஐடெல் 143101இ விலை ரூ. 24,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐ சீரிஸ் ஹெச்டி மாடல்கள் 43 இன்ச் புல் ஹெச்டி டிவி விலை ரூ. 21,999 என்றும் 32 இன்ச் ஹெச்டி ரெடி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சி சீரிஸ் மாடல்கள் விலை ரூ. 9,499 என்றும் ஏ சீரிஸ் டிவி விலை ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை ஆப்லைன் தளங்களிலும் கிடைக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஹோம்பாட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஹோம்பாட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஹை ஸ்பீடு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்பீக்கர் ஆப்பிள் எஸ்5 பிராசஸர், சிரி தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது வீடு முழுக்க தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை சீராக வழங்கும் திறன் கொண்டுள்ளது.

இதுதவிர புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது ஐபோன்களுடன் இணைந்து இருக்கும் போது தலைசிறந்த அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய ஆப்பிள் ஹோம்பாட் மினி ஸ்பீக்கர் விலை 99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
சோனி நிறுவனம் பிளேஸ்டேஷன் ஸ்டோரில் புதிய மாற்றத்தை கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான சோனி பிளேஸ்டேஷன் 5 கொண்டுவருவதாக தெரிவித்துள்ளது. பிளேஸ்டேஷன் 5 மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. பிளேஸ்டேஷன் ஸ்டோர் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வெளியான தகவல்களில் புதிய பிளேஸ்டேஷன் ஸ்டோர் பிளேஸ்டேஷன் 3 மற்றும் பிளேஸ்டேஷன் விட்டாவுக்கு ஆதரவு வழங்காது. ஆனால் பிளேஸ்டேஷன் 3 மற்றும் பிளேஸ்டேஷன் விட்டா பயனாளிகள் விரும்பினால் அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒஎஸ்-இல் கேம்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பிளேஸ்டேஷன் 4-ல் உள்ள ஆப்ஸ், தீம்ஸ் உள்ளிட்டவைகள் புதிய பிளேஸ்டேஷன் ஸ்டோரில் இருக்காது. மேலும் விஷ்லிஸ்ட்டும் நீக்கப்பட்டு விடும். உங்களுக்கு வேண்டுமானால் விஷ்லிஸ்ட் செய்த கேம்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த மாற்றங்கள் எப்பொழுது செயற்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் நவம்பர் 12 ஆம் தேதி பிளேஸ்டேஷன் 5 (PS5) வெளியிடப்படும் என சோனி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இந்த வாரம் சோனி நிறுவனம் காணொளி ஒன்றை வெளியிட உள்ளது.அதில் PS5-ன் வடிவம் மற்றும் கன்சோல் பற்றிய முழு தகவல்களையும் வெளியிடும் என்று கூறியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் வை சீரிஸ் டிவி மாடல்கள் இந்திய விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஒன்பிளஸ் வை சீரிஸ் டிவி மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இவை 32 இன்ச் ஹெச்டி, 43 இன்ச் புல் ஹெச்டி என இரு மாடல்களில் கிடைக்கிறது.
இரு வேரியண்ட்களிலும் 93 சதவீதம் DCI-PR கலர் கமுட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி ஆக்சிஜன் ஒஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு டிவி பிளாட்பார்மில் இயங்குகிறது. இதனால் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை, கூகுள் பிளே செயலிகள் மற்றும் குரோம்காஸ்ட் போன்ற வசதிகளை பயன்படுத்தலாம்.

இத்துடன் 20 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ தொழில்நுட்பம், ஒன்பிளஸ் கனெக்ட் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
ஒன்பிளஸ் டிவி மாடல்கள் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு டிவி மாடல்கள் விலை முறையே ரூ. 14,999 மற்றும் ரூ. 24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு விற்பனையின் போது இவற்றின் விலை ரூ. 1000 குறைக்கப்படுகிறது.
அந்த வகையில் இரு மாடல்களையும் ரூ. 13,999 மற்றும் ரூ. 23,999 விலையில் வாங்கிட முடியும். இத்துடன் பல்வேறு வங்கி சார்ந்த சலுகைகள் மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவைகளை பெற முடியும்.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா இசட்எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 32 இன்ச் ஹெச்டி, 40 இன்ச் புல் ஹெச்டி, ரிவோ சீரிஸ் 43 இன்ச், 55 இன்ச் 4கே ஆண்ட்ராய்டு 10 என பல்வேறு மாடல்களில் கிடைக்கிறது.
அனைத்து மாடல்களிலும் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 4கே மாடல்களில் லினென் பினிஷ் இன்டகிரேட் செய்யப்பட்ட சவுண்ட்பார், ரேசர் தின் டிசைன் மற்றும் எண்ட்லெஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

இவற்றில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் எம்டி9602 பிராசஸர், மாலி ஜி52 எம்சி1 ஜிபியு மற்றும் டூயல் பேண்ட் வைபை வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்தியாவில் புதிய மோட்டோ ஸ்மார்ட் டிவி- 32 இன்ச் ஹெச்டி ரெடி மாடல் ரூ. 13,999, 40 இன்ச் புல் ஹெச்டி டிவி ரூ. 19,999, ரெவோ 43 இன்ச் அல்ட்ரா ஹெச்டி மாடல் ரூ. 30,999, ரெவோ 55 இன்ச் அல்ட்ரா ஹெச்டி டிவி ரூ. 40,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி மாடல்களின் விற்பனை அக்டோபர் 15 ஆம் தேதி துவங்குகிறது. இவை ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சவுண்ட்பார் ஸ்பீக்கரை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து உள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் 100 வாட் சவுண்ட்பார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 2 புல் ரேன்ஜ் ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்கள் உள்ளதாக ரியல்மி தெரிவித்து இருக்கிறது. இது மெட்டல் மற்றும் ஸ்கின் போன்ற பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மியின் புதிய சவுண்ட்பாரில் 2 60 வாட் புல் ரேன்ஜ் ஸ்பீக்கர்கள் மற்றும் ட்வீட்டர்கள், 5.25 இன்ச் 40 வாட் சப்வூஃபர் வழங்கப்பட்டு உள்ளது. இவை ஒன்றிணைந்து 2.1 சேனல் அகௌஸ்டிக் சிஸ்டத்தை வழங்குகிறது. இது தரமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

இதில் ப்ளூடூத் 5.0, ஆக்ஸ் இன், லைன் இன், யுஎஸ்பி, ஆப்டிக்கல், ஹெச்டிஎம்ஐ, கோ-ஆக்சியல் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் ரிமோட் கண்ட்ரோல் ஷார்ட் கட் கீ, வாய்ஸ் பிராம்ப்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ரியல்மி 100 வாட் சவுண்ட்பார் விலை ரூ. 6999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது.
ஹானர் பிராண்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது நீண்ட பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது.
ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்திய சந்தையில் ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் வட்ட வடிவ AMOLED ஸ்கிரீன், கிரின் ஏ1 சிப், ப்ளூடூத் 5.1 வசதி கொண்டுள்ளது.
இத்துடன் ஸ்பீக்கர், மைக்ரோபோன், 100 ஸ்போர்ட் மோட்களுக்கான வசதி, ஸ்லீப் டிராக்கிங், இதய துடிப்பு டிராக்கிங் மற்றும் பல்வேறு இதக அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்
- 1.39 இன்ச் 454x454 பிக்சல் AMOLED டச் டிஸ்ப்ளே
- ஹூவாய் கிரின் ஏ1 சிப்
- ப்ளூடூத் 5.1
- 4 ஜிபி மெமரி
- 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட்
- மைக்ரோபோன், ஸ்பீக்கர், ப்ளூடூத் காலிங் வசதி
- MIL-STD 810G சான்று
- 455 எம்ஏஹெச் பேட்டரி
ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ மாடல் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
இந்திய சந்தையில் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. முந்தைய மாடல்களை போன்றே புதிய டிவிக்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்ப்ளிக்ஸ், யூடியூப் போன்ற ஸ்டிரீமிங் செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இவற்றில் அதிகபட்சம் 48 வாட் சவுண்ட்பார் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன் யுஎஸ்பி, ஹெச்டிஎம்ஐ போர்ட்கள், 4கே, புல் ஹெச்டி, ஹெச்டி ரெடி ஆப்ஷன்கள் மற்றும் அதிகபட்சம் 65 இன்ச் அளவில் கிடைக்கிறது. மேலும் ஹெச்டிஆர் 10, மைக்ரோ டிம்மிங் மற்றும் புரோண்டோ போக்கல் ஏஐ என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
நோக்கியா ஸ்மார்ட் டிவி 32 இன்ச் ஹெச்டி ரெடி மாடலின் விலை ரூ. 12,999 என்றும், 43 இன்ச் புல் ஹெச்டி மாடல் ரூ. 22,999 என்றும் 43 இன்ச் 4கே அல்ட்ரா ஹெச்டி மாடல் விலை ரூ. 28,999, 50 இன்ச் 4கே மாடல் ரூ. 33,999, 55 இன்ச் 4கே மாடல் ரூ. 39,999 என்றும் 65 இன்ச் 4கே மாடல் ரூ. 59,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
சோனி நிறுவனம் இந்தியாவில் தனது முதல் 8கே ஸ்மார்ட் டிவி மாடலை பிரீமியம் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
சோனி நிறுவனத்தின் முதல் 8கே ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சோனி ZH8 டிவியில் சோனியின் எக்ஸ்1 அல்டிமேட் பிக்சர் பிராசஸர், டிரைலுமினஸ் டிஸ்ப்ளே, 8கே எக்ஸ்-டென்டட் டைனமிக் ரேன்ஜ் ப்ரோ, எஸ் போர்ஸ் சரவுண்ட் சவுண்ட் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இதில் உள்ள எக்ஸ்1 அல்டிமேட் பிக்சர் பிராசஸர் சோனியின் மிகவும் சக்திவாய்ந்த பிராசஸர் ஆகும். இந்த பிராசஸர் 8கே தரவுகளை மிக சீராக இயக்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த டிவியில் ஆப்ஜக்ட் சார்ந்த சூப்பர் ரெசல்யூஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு காட்சியிலும் நிறம் மற்றும் காண்டிராஸ்ட்களை துல்லியமாக பிரதிபலிக்கிறது.

இத்துடன் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் டிவி என்பதால், இது ஆண்ட்ராய்டு டிவி ஒஎஸ் கொண்டிருக்கிறது. மேலும் இதில் ஆப்பிள் ஏர் பிளே 2, ஹோம்கிட் மற்றும் பிஎஸ்6 ரெடி போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
சோனி KD-85Z8H 8கே ஸ்மார்ட் டிவி சோனி விற்பனை மையங்கள், ஆன்லைன் தளங்கள் மற்றும் முன்னணி மின்சாதன விற்பனை மையங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 13,99,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கூகுள் மீட் செயலியில் இரண்டு புதிய அம்சங்களை வழங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
கொரோனாவைரஸ் தொற்று காரணமாக உலகின் பெரும்பான்மை நாடுகளில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். வீட்டில் இருந்து பணியாற்றுவோர் அலுவலகத்துடன் தொடர்பில் இருக்க வீடியோ சாட் செயலிகள் பெரிதும் உதவி வருகின்றன.
சமீப காலக்கட்டத்தில் அதிக பிரபல செயலிகளாக உருவெடுத்துள்ள ஜூம், கூகுள், மைக்ரோசாப்ட் ஒவ்வொன்றும் மற்ற செயலிகளுடன் கடும் போட்டியை எதிர்கொள்கின்றன. எனினும், போட்டியில் நிலைத்திருக்க ஒவ்வொரு செயலியிலும் தொடர்ந்து புதுப்புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் கூகுள் மீட் செயலியில் புதிதாக இரண்டு அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதனை கூகுள் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது. இவை அக்டோபர் 8 ஆம் தேதி முதல் பயனர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.
'கூகுள் மீட் செயலியில், அக்டோபர் 8 முதல் Q&A மற்றும் Polls என இரண்டு அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இவை அழைப்புகளின் போது ஒவ்வொருத்தரும் ஆர்வத்துடன் பங்கேற்று இருப்பதை உறுதி செய்யும்' என கூகுள் தனது வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.
அமேசான் ஊழியர்களில் சுமார் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
அமேசான் நிறுவன ஊழியர்களில் சுமார் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது அந்நிறுவன ஊழியர்களில் 1.44 சதவீதம் ஆகும்.
ஊழியர்கள் ஆரோக்கியத்துக்கு அபாயம் ஏற்படுத்தும் வகையில், பெருந்தொற்று காலக்கட்டத்தில் அமேசான் தனது கிடங்குகளை திறந்து வைத்திருந்தது என ஊழியர்களால் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் யூனியன்கள் சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

எனினும், பொது மக்களுக்கு தொற்று ஏற்படும் அபாயத்தை விட அமேசானில் தொற்று அபாயம் 42 சதவீதம் குறைவாகவே இருந்தது என அமேசான் தெரிவித்து இருக்கிறது. நவம்பர் மாத வாக்கில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
பெருந்தொற்று காட்டுத்தீ போல் பரவ அமேசான் அனுமதித்து இருக்கிறது என தொழிலாளர் நல அமைப்பின் இயக்குனர் தான்யா ராஜேந்திரா தெரிவித்து இருக்கிறார்.
மார்ச் 1 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 19 வரையிலான காலக்கட்டத்தில் அமேசானில் பணியாற்றும் 13,72,000 முன்னணி ஊழியர்களில் 19,816 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என அமேசான் தெரிவித்து இருக்கிறது.
கூகுள் மேப்ஸ் செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் டார்ட் மோட் வசதி வழங்கப்பட்டு வருகிறது.
கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்க துவங்கி இருக்கிறது. இந்த அம்சம் தற்சமயம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 11 தளத்தின் கூகுள் மேப்ஸ் வெர்ஷன் 10.51.1 டார்க் மோட் வசதியை வழங்குகிறது. இதுபற்றிய தகவல் ரெடிட் தளத்தில் சில பயனர்கள் தெரிவித்தனர். எனினும், இதே அப்டேட் பயன்படுத்தும் சிலருக்கு டார்க் மோட் வசதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.

அந்த வகையில் புதிய டார்க் மோட் அம்சம் சர்வெர் சார்ந்த ரோல்-அவுட் முறையில் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும் என கூறப்படுகிறது. துவக்கத்தில் இந்த அம்சம் எட்ஜ்-டு-எட்ஜ் யுஐ வசதி கொண்டிருக்கவில்லை என கூறப்படுகிறது.
செயலியின் கீழ்புறத்தில் கருப்பு நிற பார் காணப்படுகிறது. இந்த அம்சம் கூகுள் மேப்ஸ் செயலியின் அப்பியரன்ஸ் டேபில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதில் பயனர்கள் லைட் தீம், டார்க் தீம் அல்லது சிஸ்டம் தீமுடன் சின்க் செய்வது என மூன்று ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.






