என் மலர்
கணினி
சோனி நிறுவனத்தின் புதிய PS5 அடுத்த விற்பனை தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
சோனி PS5 கேமிங் கன்சோல் அடுத்த விற்பனை நாளை (மே 13) நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு புதிய PS5 அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஸ்டாக் தட்டுப்பாடு பிரச்சினையில் சோனி சிக்கித் தவித்து வருகிறது. இதன் காரணமாக குறைந்த யூனிட்கள் அவ்வப்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு சோனி PS5 அடுத்த விற்பனை நாளை நடைபெற இருக்கிறது.
விற்பனைக்கு முன்பே இதனை வாங்குவதற்கான முன்பதிவுகள் அமேசான், ஷாப் அட் எஸ்.சி., கேம்ஸ்திஷாப், க்ரோமா, ப்ளிப்கார்ட், விஜய் சேல்ஸ் என பல்வேறு முன்னணி தளங்களில் நடைபெற்று வருகிறது. சோனியின் புதிய PS5 கேமிங் கன்சோல் விற்பனை நாளை மதியம் சரியாக 12 மணிக்கு துவங்க இருக்கிறது. முந்தைய விற்பனைகளை போன்றே இந்த முறையும் விரைவில் முடிந்து விடும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் சோனி PS5 ஸ்டாண்டர்டு வேரியண்ட் ஆன டிஸ்க் எடிஷன் விலை ரூ. 49 ஆயிரத்து 990 என்றும் மற்றொரு வேரியண்ட் ஆன PS5 டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 39 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு வலைதளங்களில் PS5 மாடலுடன் கிரான் டூரிஸ்மோ 7 கேம் சேர்த்து ரூ. 52 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் ரியல்மி பேட் 5ஜி மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி பேட் 5ஜி மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரியல்மி பேட் 5ஜி மாடல் இரண்டு வெவ்வேறு பிராசஸர்களுடன் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல்களை பிரபல டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு உள்ளது.
அதன் படி ரியல்மி அறிமுகம் செய்யப் போகும் பெரிய சாதனமாக ரியல்மி பேட் 5ஜி மாடல் இருக்கும் என தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த டேப்லெட் மாடலின் ப்ரோடோடைப் வெவ்வேறு பிராசஸர்களை கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி பேட் 5ஜி மாடலின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட வேரியண்ட் LCD ஸ்கிரீன், 2.5K ரெசல்யூஷன் கொண்டிருக்கும் மற்றும் 8360mAh பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
புதிய ரியல்மி பேட் 5ஜி மாடல் ஸ்டைலஸ் சப்போர்ட் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ரியல்மி பேட் 5ஜி மாடலின் மற்றொரு வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த வேரியண்ட் உடனே அறிமுகம் செய்யப்படுமா அல்லது ரியல்மி பேட் 5ஜி மாஸ்டர் எக்ஸ்புளோரர் எடிஷன் பெயரில் சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்படுமா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ்பாக்ஸ் ஸ்டிரீமிங் சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ்பாக்ஸ் ஸ்டிரீமிங் சாதனத்தை அடுத்த 12 மாதங்களுக்குள் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்டிரீமிங் சாதனம் கொண்டு பயனர்கள் திரைப்படங்கள், டி.வி. சேவைகள் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் அல்டிமேட் தளத்தில் உள்ள கேம்களை பயன்படுத்த முடியும்.
சாம்சங் நிறுவன டி.வி. மாடல்களில் வழங்குவதற்கென எக்ஸ்பாக்ஸ் கேம் ஸ்டிரீமிங் செயலி ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. எக்ஸ்பாக்ஸ் கிளவுட் கேமிங் பயனர்கள் இனி ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் சாதனங்களில் ஃபோர்ட்னைட் கேமினை இலவசமாக விளையாட முடியும் என மைக்ரோசாப்ட் சமீபத்தில் அறிவித்து இருந்தது.

மைக்ரோசாப்ட் உருவாக்கி வரும் ஸ்டிரீமிங் ஸ்டிக் தோற்றத்தில் அமேசான் ஃபயர் டி.வி. ஸ்டிக் அல்லது ரோக்கு போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. பயன்களும் அமேசான் ஃபயர் டி.வி. ஸ்டிக் போன்றே திரைப்படங்கள், டி.வி. சேவைகள் மற்றும் கேம்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய எக்ஸ்பாக்ஸ் டி.வி. ஸ்டிக் மற்றும் எக்ஸ்பாக்ஸ் செயலி அடுத்த 12 மாதங்களில் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என கூறப்படுகிறது. இரு திட்டிங்களின் மூலம் எக்ஸ்பாக்ஸ் பயனர் எண்ணிக்கையை வெகுவாக அதிகப்படுத்த முடியும் என்றே தெரிகிறது.
ஏர்டெல் நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஏர்டெல் நிறுவனம் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இரண்டு புது சலுகைகளுடன் மூன்று மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் டேட்டா, அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது. இதுதவிர ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கொண்ட சலுகைகளை வழங்கி வருகிறது.
முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கொண்ட பலன்களை அறிவித்த நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனணும் இதே போன்ற சலுகையை அறிவித்து இருக்கிறது. ஜியோ நிறுவனம் அறிவித்த சலுகைகள் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் டேட்டா மட்டும் வழங்குகிறது.
ஏர்டெல் நிறுவனம் ஒரு மாதத்திற்கான சலுகையில் அதிக விலைக்கு அதிக டேட்டா வழங்குகிறது. இதே போன்று மூன்று மாத சலுகையிலும் அதிக விலைக்கு அதிக டேட்டா வழங்குகிறது.
புது சலுகை விவரங்கள்
ஏர்டெல் ரூ. 399 - தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். 28 நாட்கள் வேலிடிட்டி
ஏர்டெல் ரூ. 839 - தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். 84 நாட்கள் வேலிடிட்டி
இரண்டு ஏர்டெல் சலுகை விவரங்களும் ஏர்டெல் வலைதளம், ஏர்டெல் தேங்ஸ் செயலி மற்றும் அனைத்து செக்பாயிண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சலுகைகளை கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. முன்னதாக ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருந்த நிலையில், தற்போது மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் சலுகைகளை ஜியோ அறிவித்து இருக்கிறது.

புது சலுகை விலை மற்றும் பலன்கள்:
- ரூ. 151 டேட்டா ஆட் ஆன் சலுகை - தினமும் 8GB டேட்டா, ஆக்டிவ் பிளான் நிறைவுபெறும் வரை வேலிடிட்டி
- ரூ. 33 ஒரு மாத சலுகை - தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி எஸ்.எம்.எஸ். மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி
- ரூ. 583 - இரண்டு மாதங்களுக்கான சலுகை - தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி எஸ்.எம்.எஸ். மற்றும் 56 நாட்கள் வேலிடிட்டி
- ரூ. 783 - மூன்று மாதங்களுக்கான சலுகை - தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி எஸ்.எம்.எஸ். மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி
ஒரு மாதம் மற்றும் இரண்டு மாதங்களுக்கான சலுகைகளை தேர்வு செய்வோர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா பலன்களை மூன்று மாதங்களுக்கும் தொடர்ச்சியாக பெற, ஏதேனும் சலுகையில் ரிசார்ஜ் செய்து அக்கவுண்டை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும்.
புதிய பிரீபெயிட் சலுகை விவரங்கள் ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம், மைஜியோ செயலி லமற்றும் அனைத்து செக் பாயிண்ட்களிலும் கிடைக்கிறது.
டுவிட்டர் சமூக வலைதளத்தில் அசத்தலான புது அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. புது அம்சம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
டுவிட்டர் தளத்தில் சர்கில்ஸ் (Circles) என்ற பெயரில் புது அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்டாகிராம் செயலியில் குளோஸ் ஃபிரெண்ட்ஸ் ஷாட்லிஸ்ட் அம்சத்தை போன்றே டுவிட்டர் தளத்தில் வழங்கப்பட்டுள்ள அம்சம் ஆகும். சர்கில்ஸ்-இல் சேர்க்கப்பட்டவர்களால் மட்டுமே உங்களின் டுவிட்களை பார்க்கவோ, ரிப்ளை செய்யவோ முடியும். இது மட்டுமின்றி டுவிட்டர் தளத்தில் எடிட் பட்டன் வசதியும் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
புது அம்சம் மட்டுமின்றி ரிவைஸ் செய்யப்பட்ட ஹெல்ப் செண்டர் பக்கத்தில் டுவிட்டர் சர்கில் அம்சம் பற்றி விரிவாக விளக்கி இருக்கிறது. இது டுவிட்டர் கம்யூணிடிஸ் அல்லது ப்ரோடெக்டட் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்துவதை விட வித்தியாசமானது ஆகும்.

தற்போதைக்கு பயனர்களால் ஒரு சர்கிலை மட்டுமே உருவாக்க முடியும். ஒரு சர்கிலில் அதிகபட்சமாக 150 பேரை இணைத்துக் கொள்ள முடியும். சர்கிலில் சேர்க்கப்பட்டவர்களின் விவரங்களை சர்கிலை உருவாக்கியவரால் மட்டுமே பார்க்க முடியும். சர்கிலினுள் பதிவிடப்படும் டுவிட்களை ரிடுவிட் செய்ய முடியாது. சர்கில் அம்சம் டுவிட்களை யார் பிடிக்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்தி விடும். எனினும், தகவல்களில் உள்ள மீடியா அல்லது ஸ்கிரீன்ஷாட்களை பயனர்கள் ரி-ஷேர் செய்ய முடியும்.
ஒருமுறை சர்கிலில் சேர்க்கப்பட்டு விட்டால், அதில் இருந்து வெளியேற முடியாது. கலந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் கன்வெர்சேஷனை மியூட் செய்யலாம் என டுவிட்டர் தெரிவித்து உள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் புதிய மோட்டோ ரெவோ 2 சீரிஸ் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை வெவ்வேறு அளவுகள், டிஸ்ப்ளே ரெசல்யூஷனில் ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கின்றன.
அதன்படி ரெவோ 2 சீரிஸ் 32 இன்ச் HD, 40 மற்றும் 43 இன்ச் FHD, 43, 50 மற்றும் 55 இன்ச் 4K ஆண்ட்ராய்டு 11 ஸ்மார்ட் டி.வி.க்கள் ஆகும். இவற்றில் டால்பி ஆடியோ, 24W ஸ்பீக்கர்கள், டூயல் பேண்ட் வைபை மற்றும் டேட்டா சேவர் போன்ற அம்சங்கள் உள்ளன. இதன் 4K டி.வி. மாடல்களில் டால்பி விஷன், டால்பி அட்மோஸ், 4D சவுண்ட், MEMC மற்றும் ALLM அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ZX2 மற்றும் ரெவோ மாடல்களை தொடர்ந்து புது மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதன் அம்சங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா டி.வி. மாடல்களில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ள. எனினும், மோட்டோ டி.வி. மாடல்களில் சற்றே வித்தியாசமான V வடிவ ஸ்டாண்ட் வழங்கப்பட்டு உள்ளது.

மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் அம்சங்கள்:
- 32 இன்ச் 1366x768 HD ரெடி டிஸ்ப்ளே
- 40, 43 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே
- 43, 50, 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
- குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர்
- மாலி G31 MP2 GPU (HD மற்றும் FHD)
- மாலி G52 MP2 GPU (4K)
- 2GB ரேம்
- 8GB மெமரி
- ஆண்ட்ராய்டு டி.வி. 11
- வைபை 802.11 ac (2.4GHz), ப்ளூடூத் Bluetooth, (HD மற்றும் FHD) / 3 (4K) x HDMI போர்ட்கள், 2x USB 2.0, ஈத்தர்நெட்
- 24W பாக்ஸ் ஸ்பீக்கர்கள்
- டால்பி ஆடியோ (HD மற்றும் FHD)
- டால்பி அட்மோஸ் (4K)
விலை விவரங்கள்:
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 32 இன்ச் HD ரெடி டி.வி. ரூ. 13 ஆயிரத்து 999
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 40 இன்ச் FHD டி.வி. ரூ. 20 ஆயிரத்து 990
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 43 இன்ச் FHD டி.வி. ரூ. 23 ஆயிரத்து 990
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 43 இன்ச் 4K டி.வி. ரூ. 26 ஆயிரத்து 990
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 50 இன்ச் 4K டி.வி. ரூ. 31 ஆயிரத்து 990
- மோட்டோரோலா ரெவோ 2 சீரிஸ் 55 இன்ச் 4K டி.வி. ரூ. 37 ஆயிரத்து 999
ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் சலுகைகளுடன் நெட்ப்ளிக்ஸ் சந்தாவை இலவசமாக வழங்குகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஏர்டெல் நிறுவனத்தின் எக்ஸ்-ஸ்டிரீம் பைபர் பிராட்பேண்ட் இணைப்புடன் முதல் முறையாக நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது. இது ஏர்டெல் புரோபஷனல் மற்றும் இன்பிணிட்டி திட்டங்களுடன் வழங்கப்படுகிறது. ஜியோ பைபர் போன்ற போட்டி நிறுவன சலுகைகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மாதம் ரூ. 1,498 கட்டணம் கொண்ட ஏர்டெல் புரோபஷனல் பிளானிற்கு மாறுவோர் மற்றும் அப்கிரேடு செய்வோருக்கு தற்போது நெட்ப்ளிக்ஸ் பேசிக் பிளான் வழங்கப்படுகிறது. மாதம் ரூ. 199 விலையில் கிடைக்கும் நெட்ப்ளிக்ஸ் பேசிக் பிளானை கொண்டு 480ஜ தரவுகளை ஒர்றை ஸ்கிரீனில் பார்த்து ரசிக்க முடியும். இந்த பிளானில் அன்லிமிடெட் டேட்டா, 300Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.

தற்போதைய நெட்ப்ளிக்ஸ் மட்டுமின்றி அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் போன்றவைகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் இன்பினிட்டி பிளானிற்கு அப்கிரேடு அல்லது மாறுவோருக்கு நெட்ப்ளிக்ஸ் பிரீமியம் பிளான் வழங்கப்படும். ஏர்டெல் இன்பினிட்டி பிளான் கட்டணம் ரூ. 3 ஆயிரத்து 999 ஆகும். இத்துடன் வழங்கப்படும் நெட்ப்ளிக்ஸ் பிரீமியம் பிளான் மாத கட்டணம் ரூ. 649 ஆகும்.
ஏர்டெல் இன்பினிட்டி பிளானில் அன்லிமிடெட் டேட்டா, 1Gbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இத்துடன் அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்ப்ளிக்ஸ் பிரீமியம், எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் மற்றும் பல்வேறு இதர சலுகைகள் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் பிராட்பேண்ட் பிளான்களுடன் நெட்ப்ளிக்ஸ் சேவையை ஆக்டிவேட் செய்ய, ஏர்டெல் தேங்ஸ் செயலியின் கீழ்புறமாக ஸ்கிரால் செய்து என்ஜாய் யுவர் ரிவார்ட்ஸ் (Enjoy your rewards) பகுதியில் டிஸ்கவர் தேங்ஸ் பெனிஃபிட் (Discover Thanks Benefit) ஆப்ஷனில் உள்ள நெட்ப்ளிக்ஸ் ஐகானை கிளிக் செய்து
கிளைம் (Claim) மற்றும் புரோசீட் (Proceed) ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.
வி நிறுவனம் 31 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புது பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் மூன்று புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 98, ரூ. 195 மற்றும் ரூ. 319 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரூ. 98 பிரீபெயிட் சலுகையில் 200MB டேட்டா, அன்லிமிடெட்ட வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்கள் 15 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. வி ரூ. 195 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ். மற்றும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 319 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 2GB தினசரி டேட்டா வழங்குகிறது.
வி ரூ. 195 மற்றும் ரூ. 319 சலுகைகள் 31 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கின்றன. இவற்றை தேர்வு செய்வோருக்கு வி மூவிஸ் மற்றும் டி.வி. ஆப் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. வி ரூ. 319 சலுகையில் பின்ஜ் ஆல் நைட் பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது.

இத்துடன் இதே சலுகையில் வீக்-எண்ட் ரோல் ஓவர் பலன்களும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் ரூ. 319 சலுகையில் 2GB பேக்கப் டேட்டா ஒவ்வொரு மாதமும் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.
இவை தவிர வி நிறுவனம் ரூ. 29 மற்றும் ரூ. 39 விலையில் 4ஜி டேட்டா வவுச்சர்களை அறிவித்து இருக்கிறது. இவற்றில் முறையே 2GB மற்றும் 3GB டேட்டா வழங்கப்படுகின்றன. ரூ. 29 சலுகையில் இரண்டு நாட்களும், ரூ. 39 சலுகையில் ஏழு நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றன.
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி ஸ்மார்ட் டி.வி. X FHD மாடலை அறிமுகம் செய்தது. இது 40 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. மேலும் இத்துடன் குரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. ரியல்மி ஸ்மார்ட் டி.வி. மாடல் பெசல் லெஸ் டிசைன் கொண்டிருக்கிறது.

மேலும் இதில் ஆண்ட்ராய்டு டி.வி. 11 ஓ.எஸ்., ஆட்டோ லோ லேடன்சி, குரோம்காஸ்ட் பில்ட் இன் உள்ளது. யூடியூப், நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் சேவைகளுக்கான ஷார்ட்கட் பட்டன்களை கொண்ட ரிமோட் இந்த டி.வி.யுடன் வழங்கப்படுகிறது. மேலும் இதில் 24W திறன் கொண்ட ஸ்பீக்கர்கள் உள்ளன.
ரியல்மி ஸ்மார்ட் டி.வி. X FHD 40 மற்றும் 43 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 22 ஆயிரத்து 999 என்றும் ரூ. 25 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த டி.வி. மாடல்கள் ரியல்மி, ப்ளிப்கார்ட் வலைதளங்களில் மே 4 ஆம் தேதி விற்பனைக்கு வருகின்றன. ஆப்லைன் தளங்களில் இவற்றின் விற்பனை மே 5 ஆம் தேதி துவங்குகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு சீரிசில் முதல் இயர்பட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது முதல் நார்டு சீரிஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, 94ms அல்ட்ரா லோ லேடன்சி, 12.4mm டைட்டானியம் டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இவை தலைசிறந்த bass அனுபவத்தை வழங்குகின்றன.
இயர்பட் மிக கச்சிதமாக காதுகளில் பொருந்திக் கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனினும், இதில் இயர் டிடெக்ஷன் அம்சம் வழங்கப்படவில்லை. இந்த இயர்பட்ஸ் மெட்டாலிக் தோற்றம் கொண்டிருக்கின்றன. புதிய ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் IP55 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

இதன் இயர்பட் ஒவ்வொன்றும் 4.8 கிராம் எடை கொண்டிருக்கிறது. இதனால் காதுகளில் அணிந்து கொள்ள சவுகரியமாக இருக்கும். இதனுடன் மூன்று அளவுகளில் சிலிகான் இயர்பிளக் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகின்றன. இதன் இயர்பட்கள் 7 மணி நேரத்திற்கு ஸ்டாண்ட் அலோன் பிளேபேக் வழங்கும். இதில் உள்ள பிளாஷ் சார்ஜ் அம்சம் பத்து நிமிட சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.
ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் மாடல் பிளாக் ஸ்லேட் மற்றும் வைட் மார்பில் நிறங்களில் கிடைக்கின்றன. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 10 ஆம் தேதி துவங்குகிறது.
சியோமி நிறுவனம் தனது NEXT நிகழ்வில் புதிய 55 இன்ச் ஸ்மார்ட் டி.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் NEXT நிகழ்வில் OLED விஷன் 55 ஸ்மார்ட் டி.வி.-யை அறிமுகம் செய்து இருக்கிறது. இது சியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கும் முதல் 4K OLED டி.வி. மாடல் ஆகும். இதில் IMAX என்ஹான்ஸ்டு, டால்பி விஷன் IQ மற்றும் ரியாலிட்டி ஃபுளோ MEMC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டி.வி.யில் 30W எட்டு ஸ்பீக்கர் செட்டப் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி உள்ளது.
இத்துடன் 4.6mm மிக மெல்லிய ஃபிரேம், மெல்லிய பெசல் லெஸ் டிசைன் மற்றும் 97 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. இந்த டி.வி.யில் ஃபார்-ஃபீல்டு மைக்குகள் உள்ளன. இவற்றை கொண்டு கூகுள் அசிஸ்டண்ட் சேவையை இயக்க முடியும்.

சியோமி OLED விஷன் டி.வி. 55 இன்ச் அம்சங்கள்:
- 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K OLED டிஸ்ப்ளே
- குவாட் கோர் கார்டெக்ஸ் A73 மீடியாடெக் பிராசஸர்
- மாலி-G52 MC1 GPU
- 3GB ரேம்
- 32GB மெமரி
- ஆண்ட்ராய்டு டி.வி. 11 மற்றும் பேட்ச்வால்
- ஃபார்-ஃபீல்டு மைக்
- வைபை 6 802.11 ax (2.4GHz / 5GHz), ப்ளூடூத் 5
- 3 x HDMI 2.1, eARC, 2 x USB, ஆப்டிக்கல், ஈத்தர்நெட், AUX போர்ட்
- 30W (8 ஸ்பீக்கர் செட்டப்), டால்பி அட்மோஸ், DTS-X
புதிய சியோமி OLED விஷன் 55 டி.வி. விலை ரூ. 89 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 19 ஆம் தேதி துவங்குகிறது. இந்த டி.வி.யுடன் மூன்று ஆண்டுகளுக்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது. இதனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போதும், மாத தவணை முறையை தேர்வு செய்யும் போதும் ரூ. 6 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.






