என் மலர்tooltip icon

    கணினி

    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ 13-இன்ச் மற்றும் 15-இன்ச் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய சாதனங்கள் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MacBookPro2018



    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மாடல்கள் டச் பார் வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

    இரண்டு ஆப்பிள் சாதனங்களிலும் 8-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் 15-இன்ச் மாடலில் 6-கோர்கள் 70% வரை வேகமாக இயங்கும் என்றும் 13-இன்ச் மாடல் முந்தைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடும் போது இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இவற்றுடன் 32 ஜிபி மெமரி, ட்ரூ டோன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருப்பதால் சிறப்பான அனுபவம் பெற முடியும் என்பதோடு மூன்றாம் தலைமுறை கீபோர்டு வழங்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் T2 சிப் கொண்ட முதல் மேக்புக் ப்ரோ மாடல்கள் இது ஆகும். 

    முன்னதாக இந்த சிப் ஐமேக் ப்ரோ மாடலில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சிப் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதியை வழங்குவதோடு, செக்யூர் பூட் மற்றும் என்க்ரிப்டெட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இத்துடன் இந்த சிப் மேக் சாதனங்களில் முதல் முறையாக சிரி (Hey Siri) அம்சத்தையும் வழங்குகிறது.



    15 இன்ச் மேக்புக் ப்ரோ (2018)

    - 6-கோர் இன்டெல் கோர் i7 மற்றும் i9 பிராசஸர்கள்
    - அதிகபட்சம் 2.9 ஜிகாஹெர்ட்ஸ் 4.8 ஜிகாஹெர்ட்ஸ் வரை டர்போ பூஸ்ட்
    - 32 ஜிபி DDR4 மெமரி
    - சக்திவாய்ந்த ரேடியான் ப்ரோ டிஸ்கிரீட் கிராஃபிக்ஸ் மற்றும் 4 ஜிபி வரை வீடியோ மெமரி
    - அதிகபட்சம் 4TB வரையிலான SSD ஸ்டோரேஜ்
    - ட்ரூ டோன் டிஸ்ப்ளே தொழில்நுட்பம்
    - ஆப்பிள் T2 சிப்
    - டச் பார் மற்றும் டச் ஐடி



    13 இன்ச் மேக்புக் ப்ரோ (2018)

    - குவாட்கோர் இன்டெல் கோர் i5 மற்றும் i7 பிராசஸர்கள்
    - அதிகபட்சம் 2.7 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 4.5 ஜிகாஹெர்ட்ஸ் வரை டர்போ பூஸ்ட்
    - இருமடங்கு eDRAM
    - இன்டெல் ஐரிஸ் ப்ளஸ் இன்டகிரேடெட் கிராஃபிக்ஸ் 655 மற்றும் 128 எம்பி eDRAM
    - அதிகபட்சம் 2TB வரை SSD ஸ்டோரேஜ்
    - ட்ரூ டோன் டிஸ்ப்ளே தொழில்நுட்பம்
    - ஆப்பிள் T2 சிப்
    - டச் பார் மற்றும் டச் ஐடி

    புதிய 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ப்ரோ (2018) மாடல்களின் விலை ரூ.1,49,900 ( அமெரிக்காவில் 1799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.1,23,150) மற்றும் ரூ.1,99,900 (அமெரிக்காவில் 2399 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.1,64,220) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

     

    ஆப்பிள் 2018 மேக்புக் ப்ரோ மாடல்களின் விற்பனை இம்மாதத்திலேயே தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் விற்பனையாளர்களிடம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேக்புக் ப்ரோ மாடல்களுக்கு ஏற்ற லெதர் ஸ்லீவ்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கிறது.

    13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ப்ரோ சேடிள் பிரவுன், மிட்நைட் ப்ளு நிறங்களில் லெதர் ஸ்லீவ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை 179 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,260) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் லெதர் ஸ்லீவ்கள் உயர் ரக லெதர் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதோடு மென்மையான மைக்ரோஃபைபர் லைனிங் செய்யப்பட்டுள்ளது. #MacBookPro2018 #Apple
    ஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டெல்லியில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #OPPOFindX



    ஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ஃபைன்ட் X ஸ்மார்ட்போனில் 6.42 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED பானரோமிக் ஆர்க் ஸ்கிரீன், 19:5:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த கலர் ஓஎஸ் 5.1 வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், ஏஐ போர்டிரெயிட்கள், ஏஐ ஸ்கிரீன் ரெக்ஃனீஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 800 சீன்களை கண்டறியும், இதன் ஸ்லைடிங் அம்சம் சுமார் 3,00,000 முறைக்கும் மேல் சோதனை செய்யப்பட்டிருக்கிறது.



    இதன் 3D ஃபேஸ் அன்லாக் வசதி ஓ-ஃபேஸ் ரெக்ஃனீஷன் (O-Face Recognition) என அழைக்கப்படுகிறது. முகத்தில் உள்ள 15,000 முக நுனுக்கங்களை ஸ்கேன் செய்து இந்த தொழில்நுட்பம் இயங்குகிறது. இது வழக்கமான கைரேகை தொழில்நுட்பத்தை விட 20 மடங்கு வேகமாக வேலை செய்கிறது. இதன் 25 எம்பி செல்ஃபி கேமரா இயற்கையாக செல்ஃபிக்களை அழகாக்குகிறது. 

    இத்துடன் 3D லைட்டிங் தொழில்நுட்பம் போர்டிரெயிட்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இத்துடன் ஆப்பிள் அனிமோஜி போன்று 3D ஓமோஜி தொழில்நுட்பம் முக பாவனங்களை பதிவு செய்யும்.






    ஒப்போ ஃபைன்ட் X சிறப்பம்சங்கள்:

    - 6.42 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED 19:5:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 8 ஜிபி ரேம்
    - 256 ஜிபி இன்டெர்னல் மெமகி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓஎஸ் 5.1
    - டூயல் சிம்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் f/2.0, OIS
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
    - 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, DSP மாட்யூல், NXP நாய்ஸ் ரிடக்ஷன்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3,730 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்



    ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் போர்டாக்ஸ் ரெட் மற்றும் கிளேசியர் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் விலை ரூ.59,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 3-ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது. புதிய ஃபைன்ட் X ஸ்மார்ட்போனின் லம்போர்கினி எடிஷன் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் ஜூலை முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்வோருக்கு ரூ.3000 மதிப்பிலான சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 
    ஃபேஸ்புக் மெசன்ஜரில் பயனர்களுக்கு வரும் மெசேஜ் போலி கணக்கில் இருந்து அனுப்பப்பட்டதா என்பதை தெரியப்படுத்தும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. #Facebook
     


    ஃபேஸ்புக்-இன் மெசன்ஜர் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் போலியானதா என்பதை தெரியப்படுத்தும் அம்சம் சோதனை செயய்ப்படுவது தெரியவந்துள்ளது. 

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய அம்சம் ஃபேஸ்புக் மெசன்ஜர் இன்பாக்ஸ்-இல் வரும் குறுந்தகவல்களில் அறிமுகமில்லாத கான்டாக்ட், சமீபத்தில் உருவாக்கப்பட்ட அக்கவுன்ட், ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கிறாரா அல்லது போன் நம்பர் மூலம் மெசன்ஜரை பயன்படுத்துகிறாரா, வசிக்கும் நாடு அல்லது பகுதி என்பது போன்ற கூடுதல் தகவல்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த அம்சம் மூலம் பயனர் தங்களுக்கு வரும் குறுந்தகவல்களுக்கு உடனடியாக பதில் அனுப்ப வேண்டுமா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்க வழி செய்கிறது. இதுகுறித்து மதர்போர்டு சார்பில் வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்ட குறுந்தகவலை அனுப்பியவர் ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்திருக்கவில்லை என்ற தகவலை வெளிப்படுத்தி இருந்தது.

    இத்துடன் கூடுதல் விவரங்களில் குறுந்தகவலை அனுப்பியவர் மெசன்ஜர் செயலியை தனது மொபைல் எண் ரஷ்யாவில் இருந்து உருவாக்கியிருப்பதாகவும், இந்த அக்கவுன்ட் சமீபத்தில் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்களை வழங்குகிறது.

    தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதாகவும், ஆள்மாறாட்டத்தை எதிர்த்து ஃபேஸ்புக் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.  #Facebook #socialmedia
    இன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக இன்டராக்டிவ் ஸ்டிக்கர் சேர்க்கும் புதிய வசதி ஸ்டோரிக்களில் அறிமுகம் செய்துள்ளது.



    இன்ஸ்டாகிராம் செயலியில் கேள்விகளை புதுவிதமாக ஸ்டிக்கர் வடிவில் கேட்கச் செய்யும் அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு இன்ஸ்டா ஸ்டோரிக்களில் ஸ்டிக்கர் வடிவில் கேள்விகளை கேட்க முடியும்.

    புதிய அம்சம் கொண்டு இன்ஸ்டா வாசிகள் தங்களை பின்தொடர்வோரிடம் மிக எளிமையாக உரையாட முடியும். முன்னதாக மே மாதத்தில் இன்டராக்டிவ் எமோஜி ஸ்லைடரை ஸ்டிக்கரில் கருத்து கணிப்பு வடிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

    இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டோ அல்லது வீடியோவை எடுத்ததும் ஸ்டிக்கரில் உங்களது கேள்வியை சேர்க்க வேண்டும். இனி கேள்வியை புகைப்படம் அல்லது வீடியோவின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைத்து கொள்ள முடியும். 

    அடுத்து உங்களை பின்தொடர்வோர், நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்கள் உங்களது ஸ்டோரியை பார்த்து அவற்றுக்கு பதில் அனுப்ப முடியும். ஒரு கேள்விக்கு அவர்களால் எத்தனை முறை வேண்டுமானாலும் பதில் அனுப்ப முடியும். 



    பின்தொடர்வோர் உங்களுக்கு அனுப்பும் பதில்களை ஸ்டோரி வியூவரில் பார்க்க முடியும். அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அனுப்ப, குறிப்பிட்ட கேள்வியை க்ளிக் செய்ய வேண்டும். பதில் அனுப்பும் பட்சத்தில் உங்களது பதில் ஸ்டோரி பகுதியில் இடம்பெறும். 

    உங்களின் பதில்களை கேள்வி கேட்டிருப்போரின் வியூவர் பட்டியலில் அனுப்ப முடியும் என்றாலும், இதனை ஸ்டோரியில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு ஸ்டோரியில் பகிர்ந்து கொள்ளப்படும் போது உங்களது நண்பரின் புகைப்படம் மற்றும் யூசர்நேம் தெரியாது.

    இன்ஸ்டாகிராம் புதிய அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது செயலியை அப்டேட் செய்து புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விலை குறைந்த சர்ஃபேஸ் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேப்டாப் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விலை குறைந்த 2-இன்-1 நோட்புக் சர்ஃபேஸ் கோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய சர்ஃபேஸ் கோ ஆப்பிளின் 6-ம் தலைமுறை ஐபேட் மாடலுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.

    6-ம் தலைமுறை ஐபேட் போன்று சர்ஃபேஸ் கோ மாடலில் உண்மையான சர்ஃபேஸ் புக் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் சில அம்சங்கள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக புதிய சாதனத்தின் விலையை குறைக்க முடிந்தது.

    வடிவமைப்பை பொருத்த வரை புதிய சாதனம் பார்க்க வழக்கமான சர்ஃபேஸ் புக் போன்றே காட்சியளிக்கிறது. இதன் ஸ்கிரீன் அளவு லேப்டாப் அல்லது நோட்புக் சாதனங்களை கடந்து டேப்லெட் போன்ற தோற்றத்தை வழங்குகிறது. முழுமையான மெட்டல் யூனிபாடி மற்றும் முன்பக்கம் டெம்ப்பர்டு கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ மாடலில் 10.0 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே மற்றும் 500 கிராம் எடை கொண்டிருக்கிறது. ஐபேட் போன்றே புதிய சர்ஃபேஸ் கோ மாடலிலும் சர்ஃபேஸ் கோ மைக்ரோசாஃப்ட் இன் சர்ஃபேஸ் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது.



    இந்த டேப்லெட் அல்லது நோட்புக் சாதனம் 7-ம் தலைமுறை கோல்டு பிராசஸர் 4415Y, ஃபேன்-லெஸ் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குவதோடு 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஃபிளாஷ் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    கனெக்டிவிட்டியை பொருத்த வரை 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. சர்ஃபேஸ் கோ நோட்புக் மாடலில் கீபேட் மற்றும் டிராக்கர் பயன்களை வழங்கும் கேஸ் வழங்கப்படுகிறது.

    கூடுதலாக பயனர்களுக்கு வயர்லெஸ் ப்ளூடூத் மவுஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. எனினும் இவற்றுக்கு வாடிக்கையாளர்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ நோட்புக் விலை 399 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.27,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தற்சமயம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ப்ரிட்டன், அயர்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்த்ரியா, பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே, சுவீடன், போலாந்து, இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் முன்பதிவு செய்யப்படுகிறது.

    இதேபோன்று ஜப்பான், சிங்கப்பூர், கொரியா, தாய்வான், மலேசியா, தாய்லாந்து, ஹாங் காங் மற்றும் சீனாவில் விரைவில் முன்பதிவு துவங்கும் என கூறப்படுகிறது. எனினும் புதிய சர்ஃபேஸ் கோ இந்திய வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஓஎஸ் ஹை சியரா 10.13.6 இயங்குதளம் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய அப்டேட் வழங்கும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஆப்பிள் நிறுவனம் மேக் ஓஎஸ் ஹை சியரா 10.13.6 வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் ஏர்பிளே 2 மல்டி-ரூம் ஆடியோ சப்போர்ட் வழங்குகிறது. இதை கொண்டு வீட்டின் ஆடியோவை இயக்க முடியும். ஏர்பிளே 2 வசதி கொண்ட ஸ்பீக்கர்களை கொண்டு பல்வேறு ஏர்பிளே 2 வசதி கொண்ட ஸ்பீக்கர்களில் ஒரே சமயத்தில் இசையை பிளே செய்ய முடியும்.

    இந்த அப்டேட்-இல் சில அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, பாதுகாப்பு அப்டேட்களும் செய்யப்பட்டுள்ளன. மேக் ஓஎஸ் மோஜேவ் வெளியாக இருக்கும் முன் இறுதியாக வெளியாகும் இறுதி அப்டேட் ஆக இது இருக்கும் என கூறப்படுகிறது.



    - மேக் ஓஎஸ் ஹை சியரா 10.13.16 இயங்குதளம் மூலம் ஏர்பிளே 2 மல்டி-ரூம் ஆடியோ சப்போர்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த அப்டேட் அனைத்து பயனர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

    - வீட்டில் உள்ள ஆடியோ சிஸ்டத்தை இயக்க முடியும். ஏர்பிளே 2 வசதி கொண்ட ஸ்பீக்கர்கள் மூலம் பல்வேறு ஏர்பிளே 2 ஸ்பீக்கர்களில் ஒரே சமயத்தில் இசையை ஒலிக்கச் செய்ய முடியும். 

    - சிலவகை கேமராக்களில் எடுக்கப்பட்ட AVCHD புகைப்படங்களை அறிந்துகொள்ளாமல் இருக்கும் பிழை சரி செய்யப்பட்டு இருக்கிறது.

    - ஜிமெயிலில் இருந்து மற்ற கணக்குகளுக்கு மின்னஞ்சல் அனுப்பும் போது ஏற்படும் பிழை சரி செய்யப்பட்டு இருக்கிறது.
    டெல் நிறுவனத்தின் ஏலியன்வேர் 15 மற்றும் 17, டெல் ஜி சீரிஸ் ஜி3, ஜி7 மற்றும் இன்ஸ்பிரான் 24 5000 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.



    டெல் நிறுவனத்தின் புதிய லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டெல் ஏலியன்வேர் 15 மற்றும் 17, டெல் ஜி சீரிஸ் ஜி3, ஜி7 மற்றும் இன்ஸ்பிரான் 24 5000 மாடல்களில் ஏலியன்வேர் லேப்டாப்களில் இன்டெல் கோர் i9 பிராசஸர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    டெல் ஏலியன்வேர் 8th ஜென் இன்டெல் கோர் i5, i7 மற்றும் i9 பிராசஸர் என வெவ்வேறு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவை ஏலியன்வேர் க்ரியோ-டெக் வெர்ஷன் 2.0 மூலம் இன்ஜினியரிங் செய்யப்பட்டுள்ளது. இதன் கூலிங் சிஸ்டம் 50% மெல்லியதாகவும், சிபியு-வில் வேப்பர் சேம்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் கூடுதலாக ஏலியன்வேர் கிராஃபிக்ஸ் ஆம்ப்ளிஃபையரை சேர்த்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் Nvidia GeForce GTX 1080 கிராஃபிக்ஸ் மற்றும் 8 ஜிபி DDR5 GPU ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. புதிய ஏலியன்வேர் 15 மற்றும் 17 மாடல்களில் 80 குவாட்ரிலான் லைட்டிங் 13 விதங்களில் பிரத்யேகமாக லைட்டிஙஅ சோன்கள் 20 நிறங்களில் கிடைக்கிறது.



    டெல் ஜி3 15 மற்றும் ஜி7 15 மாடல்களில் 15 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இவை Nvidia GeForce GTX 10 சீரிஸ் GPU-க்கள், 8th ஜென் இன்டெல் கோர் பிராசஸர்கள், தெர்மல் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்கள், இன்டெலிஜென்ட் கன்டென்ட் ப்ரியாரிடைசேஷன் மென்பொருள், ஆன்டி-கிளேர் ஐ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    டெல் ஜி3 15 மாடலில் 8th ஜென் இன்டெல் கோர் i7 சிபியு-க்கள், NVIDIA GeForce GTX 1050 Max-Q டிஸ்க்ரீட் ஜிபியுக்கள், டூயல் ஃபேன்கள் மற்றும் டூயல் டிரைவ்களுடன் எஸ்எஸ்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஜி3 15 மாடல்கள் டெல் சீரிஸ் மாடல்களின் மிகவும் மெல்லிய மாடல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    இந்த லேப்டாப்களில் ஸ்மார்ட்பைட் மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது. இகு கேமிங் மற்றும் வீடியோ தரவுகள், பெரிய ஃபைல்களை டவுன்லோடு செய்யும் போது சீராக இயங்குவதை உறுதி செய்யும். ஜி7 15 மாடல்கள் புத்தம் புதிய கோர் i9 பிராசஸர்கள், NVIDIA GeForce GTX 1060 Max-Q வடிவமைப்பு கொண்டுள்ளது.

    டெல் இன்ஸ்பிரான் 24 5000 ஆல்-இன்-ஒன் டிரைவர்கள் மல்டி-என்டெர்டெயின்மென்ட் வழங்க ஏதுவாக ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளது. இவை இன்டெர் 8th கோர் பிராசஸர்கள், அதிகபட்சம் 32 ஜிபி DDR4 மெமரி, 4 ஜிபி GDDR5 NVIDIA GeForce GTX 1050, இன்டெல் ஆப்டேன் மெமரி வழங்கப்பட்டுள்ளது. 23.8 இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் IPS டிஸ்ப்ளே, ஆன்டி-கிளேர் மற்றும் FHD ரெசல்யூஷன் கொண்டுள்ளது.

    விலை:

    டெல் ஜி3 15 கேமிங் லேப்டாப் விலை ரூ.80,990
    டெல் ஜி7 15 கேமிங் லேப்டாப் விலை ரூ.1,24,690
    ஏலியன்வேர் 15 லேப்டாப் விலை ரூ.1,46,890 முதல் துவங்குகிறது
    ஏலியன்வேர் 17 லேப்டாப் விலை ரூ.2,08,790
    இன்ஸ்பிரான் 24 5000 ஆல்-இன்-ஒன் விலை ரூ.91,690 

    டெல் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கும் புதிய லேப்டாப் மாடல்களின் விற்பனை ஜூலை 6-ம் தேதி முதல் ஆன்லைனிலும், ஜூலை 13-ம் தேதி முதல் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேன்ட் சேவையான ஜியோ ஜிகாஃபைபர் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிராட்பேன்ட் சேவை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ ஜிகாஃபைபர் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஃபைபர் டு ஹோம் பிராட்பேன்ட் (FTTH) சேவை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.

    ஜியோவின் பிராட்பேன்ட் சேவைகள் நாடு முழுக்க 1,100 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஜியோ ஜிகாஃபைபருடன் ஜிகாஃபைபர் ரவுட்டர், ஜியோ ஜிகா செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த செட்-டாப் பாக்ஸ் கொண்டு மற்ற ஜிகா டிவி சாதனம் மற்றும் அனைத்து நெட்வொர்க் மொபைல் இணைப்புகளிலும் வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.

    ஜியோ ஜிகாஃபைபர்

    பீட்டா முறையில் சோதனை செய்யப்படுவதை தொடர்ந்து ஜிகாஃபைபர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. நொடிக்கு அதிகபட்சம் 1 ஜிபி வேகம் (1Gbps) வழங்கும் புதிய பிராட்பேன்ட் சேவையானது உலகின் மிகப்பெரிய பசுமைவழி பிராட்பேன்ட் சேவையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பயனர்கள் தங்களின் வி.ஆர். ஹெட்செட்களை ஜியோ ஜிகாஃபைபர் நெட்வொர்க்கில் இணைத்து தகவல்களை 4K ரெசல்யூஷனில் 360 கோணங்களில் பயன்படுத்த முடியும் என ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தைலவர் கிரன் தாமஸ் தெரிவித்தார்.



    ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான முன்பதிவுகள் ஆகஸ்டு 15-ம் தேதி துவங்குகிறது. பயனர்கள் மைஜியோ செயலி மற்றும் ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கு முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான முன்பதிவுகளை பெறும் அடிப்படையில் சேவைகள் வழங்கப்பட இருக்கிறது.

    ஜிகா டிவி சேவையை பொருத்த வரை சந்தாதாரர்கள் வாய்ஸ் கமான்ட் வசதி கொண்ட டிவி ரிமோட் மூலம் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும். ஜியோஃபைபர் இணைப்பு பெற்றிருக்கும் மற்ற டிவிக்களுக்கு கால் செய்ய முடியும் என இஷா அம்பானி தெரிவித்தார். இது ஜியோ நெட்வொர்க்-இன் தலைசிறந்த அனுபவமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோ சேவை துவங்கிய 22 மாதங்களில் சுமார் 21.5 கோடி பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜியோபோன் சாதனத்தை சுமார் 2.5 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
    சாம்சங் நிறுவனத்தின் தி ஃபிரேம் 2018 சீரிஸ் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய சாம்சங் டிவி மாடல்களின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சாம்சங் எலெக்ட்ரிகானிக்ஸ் நிறுவனத்தின் 2018 சீரிஸ் தி ஃபிரேம் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட அம்சங்கள், புதிய கஸ்டமைசேஷன் வசதிகள் மற்றும் 800-க்கும் அதிகமான கலை வடிவங்கள் புதிய ஃபிரேம் டிவி-க்களில் வழங்கப்பட்டுள்ளன. இவை உங்களின் வீட்டு அறையை அழகிய கேலரியாக மாற்றிவிடும்.

    4K யு.ஹெச்.டி. ஸ்கிரீன் மற்றும் ஹெச்.டி.ஆர்.10 பிளஸ் கொண்டிருப்பதோடு, பயனர்கள் தங்களின் வைபை மற்றும் சாம்சங் அக்கவுன்ட் விவரங்களை மொபைல் போனில் இருந்து ப்ளூடூத் லோ எனெர்ஜி வழியாக பரிமாற்றம் செய்யும் வசதியை வழங்குகிறது. 

    இத்துடன் சாம்சங்-இன் ஸ்மார்ட் ஹப் மெனு வழங்கப்பட்டு இருப்பதால், பல்வேறு ஸ்ட்ரீமிங் சேவைகள், கன்சோல்கள் மற்றும் நேரலை டிவி உள்ளிட்டவற்றை இயக்க வழி செய்கிறது. இத்துடன் யுனிவர்சல் கைடு டிவி பயன்படுத்துவோருக்கு ஏற்ப தகவல்களை வழங்கும்.

    டிவி மாடல்களை பொருத்த வரை உலகின் அதிக கலை வடிவங்களை சாம்சங் ஆர்ட் ஸ்டோர் வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் சாம்சங் ஆர்ட் ஸ்டோரில் நியூ யார்க் டைம்ஸ்-இல் இருந்து 30 வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படங்களை சாம்சங் சேர்க்கப்பட்டது.



    இதன் மூலம் பயனர்கள் ஒவ்வொரு அறையின் சூழலுக்கு ஏற்ப பிரத்யேக படங்களை தி ஃபிரேமில் செட் செய்ய முடியும். இத்துடன் பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியும் இந்த டிவியில் சேர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட யூசர் இன்டர்ஃபேஸ் மூலம் பயனர்கள் வசிக்கும் அறையின் நிறத்துக்கு ஏற்பட கேலரிக்களில் ஒன்றை தேர்வு செய்ய முடியும்.

    டிவி பயன்படுத்தப்படாத நிலையில் மோஷன் மற்றும் பிரைட்னஸ் சென்சார்கள் தி ஃபிரேம்-ஐ டிவியில் இருந்து கலை வடிவமாக மாற்றி, ஸ்கிரீன் பிரைட்னஸ்-ஐ அறையில் உள்ள சூழலுக்கு ஏற்ப கச்சிதமாக மாற்றியமைக்கும்.

    சாம்சங் நிறுவனத்தின் 2018 தி ஃபிரேம் டிவி மாடல்களின் முன்பதிவு சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் துவங்கியுள்ளது. அமெரிக்காவில் 55 இன்ச் வேரியன்ட் விலை 1999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,37,255) என்றும் 65 இன்ச் மாடல் விலை 2799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,92,185) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    லெனோவோ நிறுவனத்தின் HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
     



    லெனோவோ நிறுவனம் HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன் லெனோவோ நிறுவனத்தின் HX03 கார்டியோ மற்றும் HX03F ஸ்பெக்ட்ரா பேன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் OLED மோனோக்ரோம் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    இந்த டிஸ்ப்ளே ஆக்டிவிட்டி, நேரம், தேதி மற்றும் பல்வேறு தகவல்களை வழங்குகிறது. இதில் இதய துடிப்பு சென்சார் வழங்கப்படாத நிலையில், 60 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 8 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய HX06, பில்ட்-இன் ஸ்டான்டர்டு யுஎஸ்பி போர்ட் கொண்டிருக்கிறது. 

    இதை கொண்டு நேரடியாக கம்ப்யூட்டர் அல்லது யூஎஸ்பி சார்ஜர் மூலம் மிக எளிமையாக சார்ஜ் செய்ய முடியும். இதற்கு எவ்வித கூடுதல் கேபிள்களும் தேவைப்படாது.



    லெனோவோ HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் சிறப்பம்சங்கள்:

    - 0.87 இன்ச் 128x32 பிக்சல் OLED டிஸ்ப்ளே
    - ஸ்டெப்கள், தூரம், எரிக்கப்பட்ட கலோரிக்கள், உறக்கம் உள்ளிட்டவற்றை டிராக் செய்யும்
    - அழைப்பு ரிமைன்டர்கள், நோட்டிஃபிகேஷன்கள்
    - இன்ஃபர்மேஷன் ரிமைன்டர், சைலன்ட் அலாரம்
    - கைரோ சென்சார், வைப்ரேஷன் மோட்டார்
    - வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP67)
    - எடை: 20 கிராம்
    - ப்ளூடூத் 4.2 LE
    - ஆன்ட்ராய்டு 4.4 மற்றும் அதற்கும் புதிய இயங்குதள சாதனங்களில் பயன்படுத்த முடியும்
    - ஐஓஎஸ் 8.0 மற்றும் அதற்கும் புதிய இயங்குதள சாதனங்களில் பயன்படுத்த முடியும்
    - 60 எம்ஏஹெச் பேட்டரி

    லெனோவோ HX06 ஸ்மார்ட்பேன்ட் கருப்பு நிறம் கொண்டிருப்பதோடு, மாற்றக்கூடிய ரிஸ்ட் ஸ்டிராப்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் லெனோவோ HX06 ஸ்மார்ட்பேன்ட் விலை ரூ.1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    கிளவுட்வாக்க்ர் டெக் ஸடார்ட்-அப் நிறுவனம் இந்தியாவின் முதல் 4K ரெடி ஃபுல் ஹெச்டி டிவி மாடலை ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்துள்ளது.




    கிளவுட்வாக்கர் டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனது கிளவுட் டிவி X2 மாடல்களில் புதிய டிவிக்களை அறிமுகம் செய்துள்ளது. 

    ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம், குவாட்-கோர் ARM கார்டெக்ஸ் பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது. ரூ.14,990 முதல் துவங்கும் ஸ்மார்ட் டிவி மாடல்கள் 32 இன்ச் மற்றும் 55 இன்ச் என இருவித டிஸ்ப்ளேக்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிளவுட் டிவி X2 மாடலில் டிஸ்கவரி இன்ஜின் கொண்டிருக்கிறது. இவை பல மணி நேரங்கள் ஓடக்கூடிய வீடியோக்களை பயனர் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கும். மேம்படுத்தப்பட்ட புதிய சூப்பர் ரிமோட் இன்-பில்ட் ஏர் மவுஸ் மூலம் பாயின்ட் மற்றும் க்ளிக் நேவிகேஷன் வசதியை வழங்குகிறது.



    இதன் பேசிக் அம்சங்களை பொருத்த வரை வயர்லெஸ் மீடியா மூலம் மொபைலில் இருக்கும் தரவுகளை டிவி திரையில் பகிர்ந்து கொள்ள முடியும், மொபைல் ஸ்கிரீன் மிரரிங், எக்ஸ் லூமினஸ் டிஸ்ப்ளே, பாக்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் பில்ட்-இன் வை-பை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மூவி பாக்ஸ் செயலியை பயன்படுத்த வாழ்நாள் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    கிளவுட்வாக்கர் நிறுவனம் ஏற்கனவே வளைந்த 4K டிவிக்கள், ஃபிளாட் 4K டிவிக்கள் மற்றும் ஃபுல் ஹெச்டி டிவிக்களை விற்பனை செய்கிறது. ஃபுல் ஹெச்டி டிவி சீரிஸ் நான்கு வேரியன்ட்கள் 50-இன்ச், 39-இன்ச் மற்றும் 32-இன்ச் ஸ்கிரீன் அளவுகளில் கிடைக்கிறது. 50-இன்ச் ஸ்கிரீன் மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.29,999 முதல் துவங்குகிறது.

    முந்தைய கிளவுட்வாக்கர் டிவி மாடல்களில் டால்பி டிஜிட்டல் சவுன்ட் தொழில்நுட்பம், ப்ளூடூத் மற்றும் டூயல்-பேன்ட் வைபை தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் புதிய 4K-ரெடி டிவி மாடல்களிலும் இந்த அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய சர்ஃபேஸ் டேப்லெட் சார்ந்த விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.




    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மர்மமான சர்ஃபேஸ் சாதனம் குறித்த விவரங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கசிந்து வருகிறது. ஆன்ட்ரோமெடா என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வரும் சர்ஃபேஸ் டேப்லெட் சார்ந்த விவரங்ள் இதுவரை காப்புரிமைகள், அறிக்கைகள் மற்றும் இயங்குதள விவரங்களில் கசிந்து வந்தது.

    இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் டூயல் டிஸ்ப்ளே வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்சமயம் மைக்ரோசாஃப்ட் நிறுவன அறிக்கைகளில் இந்த சாதனம் பாக்கெட் சர்ஃபேஸ் சாதனமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

    ஆன்ட்ரோமெடா திட்டம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினுள் ரகசியமாக உருவாக்கப்படுவதாகவும், இதன் வெளியீடு சந்தையில் புதிதாகவும், சீர்குலைக்கும் சாதனமாக ஒட்டுமொத்த சர்ஃபேஸ் சாதனங்களுக்கு உதாரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் மொபைல் மற்றும் கம்ப்யூட்டரிடையே இருக்கும் பிரிவை குறைக்கும் என கூறப்படுகிறது.



    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆன்ட்ரோமெடா இதுவரை உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதில் ராப்-அரவுன்ட் டிஸ்ப்ளே சாதனம் முழுமையாக திறக்கப்படும் போது ஹின்ஜ் மற்றும் டிஸ்ப்ளே பகுதியை மறைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தில் வழங்குவதற்கான ஸ்டைலஸ்-ஐ மைக்ரோசாஃப்ட் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. 

    இதன் ப்ரோடோடைப் சாதனத்தில் ஸ்டைலஸ்கள் மற்றும் நோட்பேட் போன்ற செயலிகள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் இந்த சாதனத்தில் ஏ.ஆர்.எம். பிராசஸர்கள் வழங்கப்பட இருக்கிறது. இவற்றில் இன்டெல் அல்லது குவால்காம் சிப்செட்களில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×