என் மலர்
தொழில்நுட்பம்

கோப்பு படம்
போலி கணக்குகளை போட்டுக் கொடுக்கும் ஃபேஸ்புக் மெசன்ஜர்
ஃபேஸ்புக் மெசன்ஜரில் பயனர்களுக்கு வரும் மெசேஜ் போலி கணக்கில் இருந்து அனுப்பப்பட்டதா என்பதை தெரியப்படுத்தும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. #Facebook
ஃபேஸ்புக்-இன் மெசன்ஜர் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் போலியானதா என்பதை தெரியப்படுத்தும் அம்சம் சோதனை செயய்ப்படுவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய அம்சம் ஃபேஸ்புக் மெசன்ஜர் இன்பாக்ஸ்-இல் வரும் குறுந்தகவல்களில் அறிமுகமில்லாத கான்டாக்ட், சமீபத்தில் உருவாக்கப்பட்ட அக்கவுன்ட், ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கிறாரா அல்லது போன் நம்பர் மூலம் மெசன்ஜரை பயன்படுத்துகிறாரா, வசிக்கும் நாடு அல்லது பகுதி என்பது போன்ற கூடுதல் தகவல்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அம்சம் மூலம் பயனர் தங்களுக்கு வரும் குறுந்தகவல்களுக்கு உடனடியாக பதில் அனுப்ப வேண்டுமா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்க வழி செய்கிறது. இதுகுறித்து மதர்போர்டு சார்பில் வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்ட குறுந்தகவலை அனுப்பியவர் ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்திருக்கவில்லை என்ற தகவலை வெளிப்படுத்தி இருந்தது.
இத்துடன் கூடுதல் விவரங்களில் குறுந்தகவலை அனுப்பியவர் மெசன்ஜர் செயலியை தனது மொபைல் எண் ரஷ்யாவில் இருந்து உருவாக்கியிருப்பதாகவும், இந்த அக்கவுன்ட் சமீபத்தில் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்களை வழங்குகிறது.
தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதாகவும், ஆள்மாறாட்டத்தை எதிர்த்து ஃபேஸ்புக் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. #Facebook #socialmedia
Next Story






