search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    இந்தியாவில் ஜியோ ஜிகாஃபைபர் அறிமுகம்
    X

    இந்தியாவில் ஜியோ ஜிகாஃபைபர் அறிமுகம்

    ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேன்ட் சேவையான ஜியோ ஜிகாஃபைபர் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிராட்பேன்ட் சேவை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ ஜிகாஃபைபர் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஃபைபர் டு ஹோம் பிராட்பேன்ட் (FTTH) சேவை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.

    ஜியோவின் பிராட்பேன்ட் சேவைகள் நாடு முழுக்க 1,100 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஜியோ ஜிகாஃபைபருடன் ஜிகாஃபைபர் ரவுட்டர், ஜியோ ஜிகா செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த செட்-டாப் பாக்ஸ் கொண்டு மற்ற ஜிகா டிவி சாதனம் மற்றும் அனைத்து நெட்வொர்க் மொபைல் இணைப்புகளிலும் வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.

    ஜியோ ஜிகாஃபைபர்

    பீட்டா முறையில் சோதனை செய்யப்படுவதை தொடர்ந்து ஜிகாஃபைபர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. நொடிக்கு அதிகபட்சம் 1 ஜிபி வேகம் (1Gbps) வழங்கும் புதிய பிராட்பேன்ட் சேவையானது உலகின் மிகப்பெரிய பசுமைவழி பிராட்பேன்ட் சேவையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பயனர்கள் தங்களின் வி.ஆர். ஹெட்செட்களை ஜியோ ஜிகாஃபைபர் நெட்வொர்க்கில் இணைத்து தகவல்களை 4K ரெசல்யூஷனில் 360 கோணங்களில் பயன்படுத்த முடியும் என ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தைலவர் கிரன் தாமஸ் தெரிவித்தார்.



    ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான முன்பதிவுகள் ஆகஸ்டு 15-ம் தேதி துவங்குகிறது. பயனர்கள் மைஜியோ செயலி மற்றும் ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கு முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான முன்பதிவுகளை பெறும் அடிப்படையில் சேவைகள் வழங்கப்பட இருக்கிறது.

    ஜிகா டிவி சேவையை பொருத்த வரை சந்தாதாரர்கள் வாய்ஸ் கமான்ட் வசதி கொண்ட டிவி ரிமோட் மூலம் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும். ஜியோஃபைபர் இணைப்பு பெற்றிருக்கும் மற்ற டிவிக்களுக்கு கால் செய்ய முடியும் என இஷா அம்பானி தெரிவித்தார். இது ஜியோ நெட்வொர்க்-இன் தலைசிறந்த அனுபவமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோ சேவை துவங்கிய 22 மாதங்களில் சுமார் 21.5 கோடி பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜியோபோன் சாதனத்தை சுமார் 2.5 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
    Next Story
    ×