என் மலர்
தொழில்நுட்பம்
- காப்புரிமையில் தற்போது இருக்கும் ஐபேட் மாடல், வடிவம் மாறும் ஷெல் கொண்டிருக்கிறது.
- இரு சாதனங்கள் ஷெல் அருகில் இருக்கும் போது, அவை ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்.
ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால சாதனங்களுக்காக ஏராளமான காப்புரிமை மற்றும் டிரேட்மார்க்-களை பெற்று வருகிறது. அந்த வரிசையில், தற்போது பெற்றிருக்கும் புதிய காப்புரிமை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஆப்பிள் நிறுவனம் 2-இன்-1 டிசைன் கொண்ட ஐபேட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்க டிரேட்மார்க் மற்றும் காப்புரிமை அலுவலகம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் இதுவரை 53 காப்புரிமைகளை பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி புதிய காப்புரிமையில் தற்போது இருக்கும் ஐபேட் மாடல், வடிவம் மாறும் ஷெல் கொண்டிருக்கிறது. இதனுடன் வெளியாகி இருக்கும் புகைப்படத்தின் படி ஐபேட் மேல்புறம் உறுதியாக இணைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் பயனர்கள் ஐபேட்-ஐ எளிதில் கழற்ற முடியும். இதில் உள்ள ஷெல் பல்வேறு வழிகளில் ஸ்டான்ட் போன்று பயன்படுத்த வழி செய்கிறது. காப்புரிமை விவரங்களின் படி இந்த ஐபேட் ஷெல் அசெம்ப்லி வைபை, ப்ளூடூத் மற்றும் அல்ட்ரா வைடுபேன்ட் உள்ளிட்டவைகளை சப்போர்ட் செய்கிறது. இரு சாதனங்கள் ஷெல் அருகில் இருக்கும் போது, அவை ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்.
இதுதவிர, ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் இதர ஐபேட் டிசைன் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளன. அதன்படி புதிய ஐபேட் டிசைன்களில், விர்ச்சுவல் கீபோர்டு மற்றும் ஜெஸ்ட்யூர் டிடெக்ஷன் சப்போர்ட் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஐபேட் டிசைன் பற்றிய காப்புரிமை விவரங்கள், ஆப்பிள் நிறுவனம் தொடர்ச்சியாக புதுமைகளை புகுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது உறுதியாகி இருக்கிறது.
- அமேசான் பிரைம் டே சேல்-க்காக புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
- வெஸ்டிங்ஹவுஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.
வெஸ்டிங்ஹவுஸ் பிரான்டு இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. W2 சீரிசில் இடம்பெற்று இருக்கும் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் 32 இன்ச், 40 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. இத்துடன் குவாண்டம் சீரிசில் 4K GTV மாடல்கள் 50 இன்ச் மற்றும் 55 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன.
அமேசான் உடன் கூட்டணி அமைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் பிரைம் டே சேல்-இன் போது விற்பனை செய்யப்பட உள்ளன. அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 15-ம் தேதி துவங்க இருக்கிறது.
வெஸ்டிங்ஹவுஸ் W2 சீரிஸ் ஆண்ட்ராய்டு டிவி-க்கள்
முற்றிலும் புதிய ஆண்ட்ராய்டு டிவி HD மாடல்கள் ரியல்டெக் தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை 2x 36வாட் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் மூலம் வழங்குகின்றன. இத்துடன் காட்சிகளில் மூழ்க செய்யும் வகையிலான சரவுன்ட் சவுன்ட் தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. இதில் 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளன.

வெஸ்டிங்ஹவுஸ் W2 சீரிஸ் ஆன்ட்ராய்டு டிவி அம்சங்கள்:
பெசல் லெஸ் டிசைன்
32-இன்ச் HD, 40-இன்ச் FHD மற்றும் 43-இன்ச் FHD
ரியல்டெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி ரோம்
2x 36வாட் பாக்ஸ் ஸ்பீக்கர்கள், சரவுன்ட் சவுன்ட் தொழில்நுட்பம்
வாய்ஸ் வசதி கொண்ட ரிமோட், ஒடிடி தளங்களுக்கான ஹாட்கீ பட்டன்கள்
3xHDMI போர்ட்கள், 2xUSB போர்ட்கள்
ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ்

வெஸ்டிங்ஹவுஸ் 4K குவாண்டம் சீரிஸ் கூகுள் டிவி அம்சங்கள்:
பெசல்-லெஸ் மற்றும் ஏர்-ஸ்லிம் டிசைன்
50-இன்ச் மற்றும் 55-இன்ச் 4K ஸ்கிரீன்
4K டில்ப்ளே மற்றும் HDR 10+
MT9062 பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி மெமரி
2x 48 வாட் டால்பி ஆடியோ ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள்
3x HDMI போர்ட்கள், 2x USB போர்ட்கள்
ப்ளூடூத் மற்றும் வைபை கனெக்டிவிட்டி
வாய்ஸ் வசதி கொண்ட ரிமோட்
கூகுள் டிவி ஒஎஸ்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
வெஸ்டிங்ஹவுஸ் 32-இன்ச் HD டிவி விலை ரூ. 10 ஆயிரத்து 499
வெஸ்டிங்ஹவுஸ் 40-இன்ச் FHD டிவி விலை ரூ. 16 ஆயிரத்து 999
வெஸ்டிங்ஹவுஸ் 43-இன்ச் FHD டிவி விலை ரூ. 17 ஆயிரத்து 999
வெஸ்டிங்ஹவுஸ் 50-இன்ச் 4K டிவி விலை ரூ. 27 ஆயிரத்து 999
வெஸ்டிங்ஹவுஸ் 55-இன்ச் 4K டிவி விலை ரூ. 32 ஆயிரத்து 999
அமேசான் பிரைம் டே சேல்-இன் போது இந்த டிவி மாடல்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த விற்பனை ஜூலை 14-ம் தேதி துவங்கி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
- வோடபோன் ஐடியா நிறுவனம் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- சமீபத்தில் வோடபோன் ஐடியா ரூ. 24 மற்றும் ரூ. 49 விலை கொண்ட சூப்பர் ஹவர் டேட்டா பேக் சலுகைகளை அறிவித்தது.
வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ரூ. 198 மற்றும் ரூ. 204 விலையில் கிடைக்கும் இரு சலுகைகளும் காம்போ / வேலிடிட்டி பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இரு சலுகைகளிலும் டாக்டைம் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகின்றன.
ரூ. 198 சலுகையில் ரூ. 198 மதிப்புள்ள டாக்டைம், அழைப்புகளை மேற்கொள்ள நொடிக்கு 2.5 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்துடன் 50 எம்பி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதே போன்று ரூ. 204 விலையில் கிடைக்கும் மற்றொரு ரிசார்ஜ் சலுகையில் இதே போன்ற பலன்கள் ஒரு மாத கால வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

தற்போதைக்கு இந்த சலுகைகள் மும்பை, குஜராத் மற்றும் டெல்லி பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே உள்ள ரிசார்ஜ் சலுகை வேலிடிட்டி நிறைவு பெறுவதற்குள் ரிசார்ஜ் செய்யவில்லை எனில், இன்கமிங் அழைப்புகள் நிறுத்தப்படும். இதனை தவிர்க்க ஏதேனும் சலுகையில் ரிசார்ஜ் செய்வது அவசியம் ஆகும்.
அதிக பலன்கள் இல்லை என்ற போதிலும் இந்த சலுகைகள் சிம் கார்டை ஆக்டிவேடட் நிலையில் வைத்திருக்க உதவும். மேலும் இன்கமிங் அழைப்புகளை தொடர்ந்து பெற முடியும். சமீபத்தில் தான் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 24 மற்றும் ரூ. 49 விலை கொண்ட சூப்பர் ஹவர் டேட்டா பேக் சலுகைகளை அறிவித்து இருந்தது.
- நத்திங் போன் 2 மாடலில் க்ரிட் டிசைன், விட்ஜெட் சைஸ் மற்றும் கலர் தீம்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.
- இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்ட்ராய்டு ஒஎஸ், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி பேட்ச்கள் வழங்கப்படுகிறது.
நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நத்திங் போன் 2 மாடல் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது நத்திங் போன் 1 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் 6.7 இன்ச் FHD+ 1-120 Hz LTPO OLED ஸ்கிரீன், அதிகபட்சம் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி வரையிலான ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் சார்ந்த நத்திங் ஒஎஸ் 2.0 கொண்டிருக்கும் நத்திங் போன் 2 மாடலில் க்ரிட் டிசைன், விட்ஜெட் சைஸ் மற்றும் கலர் தீம்களை கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்டேட்கள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி பேட்ச்கள் வழங்குவதாக நத்திங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

நத்திங் போன் 2 அம்சங்கள்:
6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ OLED 1-120 Hz LTPO ஸ்கிரீன்
அதிகபட்சம் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
அதிகபட்சம் 12 ஜிபி ரேம்
அதிகபட்சம் 512 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் நத்திங் ஒஎஸ் 2.0
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS
50MP 114 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, 4cm மேக்ரோ ஆப்ஷன்
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே ஆப்டிக்கல் கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
4700 எம்ஏஹெச் பேட்டரி
45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் வைட் மற்றும் டார்க் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 512 மெமரி மாடல் விலை ரூ. 54 ஆயிரத்து 999 ஆதும். ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்கள், இயர் ஸ்டிக் மற்றும் அக்சஸரீக்களை வாங்கும் போது தள்ளுபடி பெற முடியும்.
- பயனர் எண்ணிக்கை பற்றிய விவரங்களை இன்ஸ்டாகிராம் செயலியிலேயே அறிந்து கொள்ள முடியும்.
- இரண்டு மணி நேரத்தில் திரெட்ஸ் ஆப்-ஐ இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்தனர்.
மெட்டா நிறுவனத்தின் திரெட்ஸ் சமூக வலைதள சேவை வெளியான ஐந்து நாட்களில் 100 மில்லியன் பயனர்களை பெற்று அசத்தி இருக்கிறது. மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். இத்தகைய மைல்கல்லை எட்டியதில் திரெட்ஸ் ஆப் சாட்ஜிபிடி-யை பின்னுக்குத் தள்ளியது.
திரெட்ஸ் சேவையின் பயனர் எண்ணிக்கை பற்றிய விவரங்களை இன்ஸ்டாகிராம் செயலியிலேயே அறிந்து கொள்ள முடியும். அறிமுகமான இரண்டு மணி நேரத்தில் திரெட்ஸ் ஆப்-ஐ இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து இருந்தனர்.
பிறகு பயனர் எண்ணிக்கை படிப்படியாக 5 மில்லியன், 10 மில்லியன், 30 மில்லியன் மற்றும் 70 மில்லியன் வரை சீராக அதிகரித்தது. இத்தகைய டவுன்லோட்கள் மூலம் திரெட்ஸ் செயலி, மெட்டா எதிர்பார்ப்புகளை கடந்து அமோக வரவேற்பை பெற்று இருப்பதாக மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
- ஒரே அக்கவுன்டில் பல்வேறு ஆட்-ஆன் சலுகைகளை சேர்த்துக் கொள்வதற்கான வசதி வழங்கப்படுகிறது.
- டேட்டா ஆட்-ஆன் சலுகையில் கிடைக்கும் டேட்டா தீர்ந்த பிறகு டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ரூ. 19 மற்றும் ரூ. 29 விலையில் கிடைக்கும் இரு சலுகைகளும் பயனர்களுக்கு கூடுதல் டேட்டாவினை வழங்குகிறது. இவை முறையே 1.5 ஜிபி மற்றும் 2.5 ஜிபி டேட்டா வழங்குகின்றன.
இரு சலுகைகளுக்கும் எவ்வித வேலிடிட்டியும் இல்லை. எனினும், நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் சலுகை நிறைவடையும் போது, இதற்கான வேலிடிட்டி நிறைவுக்கு வந்துவிடும். இந்த ஆட்-ஆன் டேட்டா பேக் சலுகையில் கிடைக்கும் டேட்டா, ஏற்கனவே உள்ள சலுகையில் வழங்கப்படும் டேட்டா தீர்ந்தால் தான் பயன்படுத்தப்படும்.

ஒரே அக்கவுன்டில் பல்வேறு ஆட்-ஆன் சலுகைகளை சேர்த்துக் கொள்வதற்கான வசதி வழங்கப்படுகிறது. எனினும், இவற்றை ரிசார்ஜ் செய்த வரிசையில் தான் பயன்படுத்த முடியும். முதலில் ரிசார்ஜ் செய்த வவுச்சர் தீர்ந்த பிறகு தான், அடுத்த வவுச்சரை பயன்படுத்தலாம். டேட்டா ஆட்-ஆன் சலுகையில் கிடைக்கும் டேட்டா தீர்ந்த பிறகு டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும்.
புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் இரண்டு சலுகைகள் தவிர ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே ரூ. 15, ரூ. 25, ரூ. 61, ரூ. 222 மற்றும் ரூ. 121 விலைகளில் ஆட்-ஆன் சலுகைகளை வழங்கி வருகிறது. இவற்றில் முறையே 1 ஜிபி, 2 ஜிபி, 6 ஜிபி, 50 ஜிபி மற்றும் 12 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இரு சலுகைகலும் ஜியோ வலைதளம் மற்றும் ஜியோ செயலியில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
- நாய்ஸ் ஏர் பட்ஸ் மினி 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மொத்தத்தில் நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
- இதில் உள்ள இன்ஸ்டாசார்ஜ் அம்சம் மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 120 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஏர் பட்ஸ் மினி 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் நாய்ஸ் ஏர் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சீரிசில் இடம்பெற்று இருக்கிறது. கடந்த மாதம் நாய்ஸ் பட்ஸ் ஏரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
இது ஓபன்-ஃபிட் இயர்பட்ஸ் ஆகும். இதில் 13 மில்லிமீட்டர் டிரைவர்கள் உள்ளன. இத்துடன் குவாட் மைக் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அழைப்புகளின் தரத்தை மேம்படுத்துகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 45 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது.
இதில் உள்ள இன்ஸ்டாசார்ஜ் அம்சம் மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 120 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும். இத்துடன் 50 ms லோ லேடன்சி மோட், ஹைப்பர் சின்க் கனெக்ஷன், IPX5 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

நாய்ஸ் ஏர் பட்ஸ் மினி 2 அம்சங்கள்:
13 மில்லிமீட்டர் டிரைவர்கள்
ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி
டச் கண்ட்ரோல்கள்
குவாட் மைக்
45 மணி நேரத்திற்கு பிளேபேக்
ஃபாஸ்ட் சார்ஜிங்
50 ms லோ லேடன்சி
ஹைப்பர் சின்க் தொழில்நுட்பம்
IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
விலை விவரங்கள்:
நாய்ஸ் ஏர் பட்ஸ் மினி 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஜெட் பிளாக், ஸ்னோ வைட், கால்ம் பெய்க் மற்றும் ஸ்பேஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை நாய்ஸ் வலைதளம், ப்ளிப்கார்ட்-இல் இன்று விற்பனைக்கு வருகிறது. அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் விலை ரூ. 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- புதிய ஐமேக் டிஸ்ப்ளே அளவு 32 இன்ச் வரை இருக்கும் என்று தகவல்.
- ஆப்பிள் நிறுவனத்தின் ப்ரோ டிஸ்ப்ளே XDR விலை 4 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அளவில் பெரிய ஐமேக் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கிட்டத்தட்ட 32 இன்ச் அளவு கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
புளூம்பர்க்-இன் மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இந்த ஐமேக் மாடல்கள் அதன் ஆரம்பக்கட்ட பணிகளில் உள்ளதாகவும், இவை 2024 அல்லது 2025 வரை அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்றும் அவர் தெரிவித்தார்.

முந்தைய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 30 இன்ச் வரையிலான டிஸ்ப்ளே கொண்ட பெரிய ஐமேக் மாடல்களை உருவாக்கி வருவதாக தெரிவித்து இருந்தார். ஆப்பிள் நிறுவனத்தின் டாப் என்ட் ப்ரோ டிஸ்ப்ளே XDR மானிட்டர் போன்றே, இதன் டிஸ்ப்ளே அளவு 32 இன்ச் வரை இருக்கும் என்று தற்போதைய தகவல்களில் அவர் தெரிவித்துள்ளார்.
2019 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ப்ரோ டிஸ்ப்ளே XDR விலை 4 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த டிஸ்ப்ளே அதிகபட்சம் ரெட்டினா தரம் கொண்ட தரவுகளை 6K ரெசல்யுஷனில் ஒளிபரப்பும் திறன் கொண்டிருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் இன்டெல் சார்ந்து இயங்கிய 27 இன்ச் மேக் மற்றும் ஐமேக் ப்ரோ மாடல்கள் விற்பனை சமீபத்தில் நிறுவத்தப்பட்டது. மேலும் பெரிய ஸ்கிரீன் கொண்ட ஐமேக் மாடல்களை அறிமுகம் செய்வது பற்றியும் ஆப்பிள் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
- ரெட்மி 12 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது ரெட்மி 12 பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதற்காக சியோமி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசரில், ரெட்மி 12 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 01-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கடந்த மாதம் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் முதல் டீசரில், அந்நிறுவன விளம்பர தூதர் திஷா படானி தனது கையில் மொபைல் வைத்திருக்கும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் கிளாஸ் டிசைன் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இந்த பிளாக்ஷிப் டிசைன் அனைவருக்குமானது என்று சியோமி தெரிவித்து இருக்கிறது.

டீசரில் ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த மாடலில் 6.79 இன்ச் Full HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 8MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார், கிளாஸ் பேக், IP53 தர ஸ்பிலாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்திய சந்தையில் ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அடுத்த மாத வெளியீட்டை தொடர்ந்து, ப்ளிப்கார்ட் மற்றும் Mi வலைதளங்கள், ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
- ரெனோ 10 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் உள்ளது.
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெனோ 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதில் ரெனோ 10, ரெனோ 10 ப்ரோ மற்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடல்கள் அடங்கும். இதில் ப்ரோ பிளஸ் மாடலில் 6.74 இன்ச் 1.5K 120Hz OLED வளைந்த ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெனோ 10 மற்றும் ரெனோ 10 ப்ரோ மாடல்களில் 120Hz FHD+ 120Hz AMOLED ஃபிலெக்சிபில் ஸ்கிரீன் உள்ளது.
ரெனோ 10 மாடலில் டிமென்சிட்டி 7050 பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெனோ 10 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸரும், ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் உள்ளது. புகைப்படங்களை எடுக்க ஒப்போ ரெனோ 10 சீரிசில் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது.

இதன் ஸ்டான்டர்டு மற்றும் ப்ரோ வெர்ஷன்களில் 32MP 2x டெலிபோட்டோ, சோனி IMX709 சென்சார், ப்ரோ பிளஸ் மாடலில் 64MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா உள்ளது. ப்ரோ மாடல்களில் 50MP பிரைமரி கேமரா, ரெனோ 10 மாடலில் 64MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. அனைத்து மாடல்களிலும் 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் உள்ளது.
பேட்டரியை பொருத்தவரை ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடலில் 4700 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ரெனோ 10 மற்றும் ரெனோ 10 ப்ரோ மாடல்களில் 4600 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் சார்ஜிங், ரெனோ 10 மாடலில் 67 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒப்போ ரெனோ 10 மாடல் சில்வரி கிரே, ஐஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ஜூலை 20-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ரெனோ 10 ப்ரோ மற்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடல்கள் சில்வரி கிரே மற்றும் கிளாசி பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 39 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 54 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. விற்பனை ஜூலை 13-ம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற உள்ளன.
- பயர் போல்ட் டெஸ்டினி மாடலில் அதிகபட்சமாக 123 ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.
- ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பீக்கர் கொண்டு நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
இந்திய ஸ்மார்ட்வாட்ச் பிரான்டு பயர் போல்ட் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை டெஸ்டினி எனும் பெயரில் அறிமுகம் செய்தது. புதிய பயர் போல்ட் டெஸ்டினி மாடலில் 1.39 இன்ச் டிஸ்ப்ளே, IP67 தர சான்று, ப்ளூடூத் காலிங் போன்ற வசதிகள் உள்ளன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் உருவாக்கப்பட்ட, வட்ட வடிவம் கொண்ட டயல் கொண்டிருக்கும் பயர் போல்ட் டெஸ்டினி மெட்டாலிக் ஸ்டிராப் உடன் வருகிறது.
இந்த பிரேம் உறுதியான சின்க் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பட்டன் அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 360x360 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் கொண்டு நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இத்துடன் ஏராளமான வாட்ச் ஃபேஸ்கள், பத்துக்கும் மேற்பட்ட மெனு ஸ்டைல்கள் உள்ளன. இவை வாட்ச்-இன் தோற்றத்தை கஸ்டைமஸ் செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. மேலும் ஏராளமான உடல் நல டிராகிங் வசதிகள் இந்த வாட்ச்-இல் உள்ளது. இதை கொண்டு ஸ்லீப், SpO2 லெவல், ஹார்ட் ரேட் உள்ளிட்டவைகளை டிராக் செய்யலாம்.
பயர் போல்ட் டெஸ்டினி மாடல் அதிகபட்சமாக 123 ஸ்போர்ட்ஸ் மோட்களை டிராக் செய்யும் என்று பயர் போல்ட் தெரிவித்து இருக்கிறது. புதிய வாட்ச் IP67 தர சான்று கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், வானிலை விவரங்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல் வசதிகள் உள்ளன.
இந்திய சந்தையில் புதிய பயர்போல்ட் டெஸ்டினி ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1999 என்று நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் விற்பனை பயர் போல்ட் வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பெய்க், பிளாக், பின்க் மற்றும் சில்வர் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
- தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் ஸ்டிக்கர் சர்ச் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
- புதிய ஸ்டிக்கர் டிரே மூலம் எளிதில் விரும்பிய ஸ்டிட்க்கர்-ஐ அனுப்பிடலாம்.
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் புதிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த அம்சம் ஸ்டிக்கர் சஜெஷன் என்று அழைக்கப்படுகிறது. கூகுள் பிளே பீட்டா 2.23.14.16 வெர்ஷனில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
2018 ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகள் உருவாக்கும் ஸ்டிக்கர்களை இம்போர்ட் செய்து பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது. இவ்வாறு செய்து குறிப்பிட்ட எமோஜிக்களை பயனர்கள் பயன்படுத்த முடியும். தற்போது வாட்ஸ்அப்-இல் வழங்கப்படும் புதிய ஸ்டிக்கர் சஜெஷன் அம்சம் எப்படி இயங்குகிறது என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் ஸ்டிக்கர் சர்ச் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. புதிய பீட்டா அப்டேட்-இல் புதிய ஸ்டிக்கர் டிரே கீபோர்டின் மேல்புறத்தில் காணப்படும். இந்த டிரே-இல் எமோஜியுடன் தொடர்புள்ள ஸ்டிக்கர்கள் இடம்பெற்று இருக்கும். இதன் மூலம் பயனர்கள் சூழலுக்கு ஏற்ற சரியான ஸ்டிக்கர்-ஐ தேர்வு செய்து அனுப்ப முடியும்.
இந்த அம்சம் உங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள பில்ட்-இன் ஸ்டிக்கர் ஸ்டோரில் இருந்து கப்பி (Cuppy) ஸ்டிக்கர் பேக்-ஐ டவுன்லோடு செய்து, சாட் பாரில் எமோஜியை டைப் செய்ய வேண்டும். ஸ்டிக்கர் சஜெஷன் அம்சம் செயல்படுத்தப்பட்டு இருந்தால், புதிய ஸ்டிக்கர் டிரே மூலம் எளிதில் விரும்பிய ஸ்டிட்க்கர்-ஐ அனுப்பிடலாம்.
தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டாவில் தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் மேலும் அதிக பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டிக்கர் சஜெஷன் மட்டுமின்றி வாட்ஸ்அப் நிறுவனம், தனது செயலியில் வழங்குவதற்கு பல்வேறு புதிய அம்சங்களை டெஸ்டிங் செய்து வருகிறது.






