என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • ஏஒசி CU34G3S கேமிங் மானிட்டரில் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் உள்ளன.
    • கனெக்டிவிட்டிக்கு யுஎஸ்பி ஹப் 3.2, 2 டிஸ்ப்ளே போர்ட், 2 ஹெச்டிஎம்ஐ போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    ஏஒசி நிறுவனம் தொழில்முறை கேமர்களை குறிவைத்து, CU34G3S வளைந்த கேமிங் மானிட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஏஒசி ஏகான் ப்ரோ 27 இன்ச் QHD 170Hz கேமிங் மானிட்டரை தொடர்ந்து, புதிய மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய கேமிங் மானிட்டர் 3440x1440 ரெசல்யூஷன், அகலமான குவாட் ஹெச்டி 165Hz ரிப்ரெஷ் ரேட், 1ms ரெஸ்பான்ஸ் டைம் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 34 இன்ச் அகலமான குவாட் ஹெச்டி வளைந்த டிஸ்ப்ளே, 21:9, VA டிஸ்ப்ளே தலைசிறந்த நிறங்களை அனைத்து கோணங்களில் இருந்து பார்க்கும் போதும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

     

    இத்துடன் ஏஎம்டி ஃபிரீசின்க் பிரீமியம் டியர்-ஃபிரீ இமர்ஷன் தொழில்நுட்பம் தலைசிறந்த அனுபவத்தை வழங்குகிறது. இதன் மெல்லிய டிசைன் மற்றும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டான்டு, ஃபிரேம்லெஸ் கேமிங் மானிட்டர் சிறப்பான விஷூவல் அனுபவத்தை வழங்குகிறது. கனெக்டிவிட்டிக்கு யுஎஸ்பி ஹப் 3.2, 2 டிஸ்ப்ளே போர்ட், 2 ஹெச்டிஎம்ஐ போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    பயனர்கள் தங்களது லேப்டாப், கேமிங் கன்சோல் அல்லது கேமிங் சிபியு உள்ளிட்டவைகளை எளிதில் இணைக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஏஒசி CU34G3S கேமிங் மானிட்டரில் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் உள்ளன. இது மியூசிக், கேமிங், பொழுதுபோக்கு உள்ளிட்ட பயன்பாடுகளின் போது, தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

    ஏஒசி CU34G3S கேமிங் மானிட்டர் விலை ரூ. 69 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமேசான் வலைதளத்தில் தற்போது இந்த மானிட்டர் ரூ. 41 ஆயிரத்து 090 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஒபன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படுகிறது.
    • ஒன்பிளஸ் ஒபன் ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என தகவல்.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் ஒன்பிளஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    பிரபல டிப்ஸ்டரான மேக்ஸ் ஜம்போர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஒபன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி இந்த பெயரில் அறிமுகமாகும் பட்சத்தில், குறைந்தபட்சம் பெயரளவில் இது வித்தியாசமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்கும்.

     

    இதுவரை வெளியாகி இருக்கும் ரென்டர்களின் படி ஒன்பிளஸ் ஒபன் ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்கள், ஹேசில்பிலாடு டியூனிங், ஃபிளாஷ், பக்கவாட்டில் கேரேகை சென்சார், பன்ச் ஹோல் கேமரா கொண்டிருக்கிறது.

    ஒன்பிளஸ் ஒபன் அறிமுக நிகழ்வு நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது. இதே ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஒன்பிளஸ் ஒபன் ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. சாம்சங் தனது கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடல் ஜூலை 26-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    • இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
    • புதிய ஹாட் 30 5ஜி மாடலின் பின்புறம் கிலாஸ் போன்று காட்சியளிக்கும் டிசைன் கொண்டிருக்கிறது.

    இன்பினிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்றே இந்திய சந்தையில் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கிலாஸ் போன்று காட்சியளிக்கும் பின்புற டிசைன், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் அதற்கான சார்ஜரும் வழங்கப்படுகிறது.


    இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி அம்சங்கள்:

    6.78 இன்ச் 2460x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர்

    மாலி G57 MC2 GPU

    4 ஜிபி, 8 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆன்ட்ராய்டு 13 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, குவாட் எல்இடி ஃபிலாஷ், ஏஐ லென்ஸ்

    8MP செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிலாஷ்

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன் நைட் பிளாக் மற்றும் அரோரா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலை 18-ம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்க இருக்கிறது. அறிமுக சலுகையாக ஆக்சிஸ் வங்கி கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் மாத தவணை முறை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • தேர்வு செய்யப்பட்ட சிறிய குழுவுக்கு மட்டுமே டுவிட்டர் வருவாய் பங்கீடு திட்டம் பயன்படுக்கு வந்துள்ளது.
    • விளம்பர வருவாய் பங்கீடு திட்ட விண்ணப்ப முறை, இதர விவரங்கள் அடங்கிய வலைதளம் விரைவில் துவங்கப்படுகிறது.

    டுவிட்டர் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு விளம்பர தொகையில் ஒரு பங்கு கொடுக்கும் Ad Revenue திட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி பயனர்கள் டுவிட் செய்வதற்கு பணம் பெற துவங்கி உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் வருமானம் பெறுவதற்கு பயனர்கள், தொழில்முறை கிரியேட்டர்கள் டுவிட்டரில் உள்ள விளம்பர வருவாய் பங்கீடு (Ads Revenue Sharing) அல்லது கிரியேட்டர் சந்தா முறை (Creator Subscriptions) திட்டங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பயனர்களுக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் புதிய திட்டம், நிதி நிறுவனமான ஸ்டிரைப் பே-அவுட் சப்போர்ட் கொண்ட அனைத்து நாடுகளிலும் அமலுக்கு வந்துள்ளதாக டுவிட்டர் தெரிவித்து உள்ளது. அதன்படி தற்போதைக்கு இந்திய பயனர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.

     

    பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் டுவிட்டர் விளம்பர வருவாய் பங்கீடு மூலம் 25 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 21 லட்சம் வரை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல பயனர்கள் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரையிலான தொகையை டுவிட்டரிடம் இருந்து வருவாயாக பெற்றுள்ளனர்.

    முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட குழுவுக்கு மட்டுமே டுவிட்டர் வருவாய் பங்கீடு திட்டம் பயன்படுக்கு வந்துள்ளதாக அந்நிறுவம் தெரிவித்து உள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து வருவாய் ஈட்ட, பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தாவில் இணைந்திருக்கவோ அல்லது வெரிஃபைடு நிறுவனங்களாகவோ இருப்பது அவசியம் ஆகும்.

    இத்துடன் கடந்த மூன்று மாதங்களில் குறைந்த பட்சமாக, டுவீட்களுக்கு சுமார் 50 லட்சம் பதிவுகளை (impression) பெற்று இருப்பது அவசியம் ஆகும். இது மட்டுமின்றி டுவிட்டர் நிறுவனத்தின் கிரியேட்டர் மானிடைசேஷன் தரக்கட்டுப்பாடுகளை பயனர்கள் அல்லது கிரியேட்டர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்திருப்பதும் அவசியம் ஆகும்.

    விளம்பர வருவாய் பங்கீடு திட்டத்திற்கான விண்ணப்ப முறை மற்றும் விவரங்கள் அடங்கிய வலைதளம் விரைவில் துவங்கப்படும் என்றும் டுவிட்டர் தெரிவித்துள்ளது. டுவிட்டர் தளத்தில் வருமானம் ஈட்டுவதற்கான புதிய திட்டம் பற்றிய தகவலை கடந்த பிப்ரவரி மாதம் எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். தற்போது டுவிட்டரில் வருவாய் பங்கீடு பெற்றவர்கள், தங்களது வருவாய் விவரங்கள் அடங்கிய ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • ஆக்சிஸ் வங்கி கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தி 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மின்சாதனங்களுக்கு அதிகபட்சம் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் சேவிங் டேஸ் சலுகை விரைவில் துவங்க இருக்கிறது. ஐந்து நாட்கள் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான பொருட்களுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இதில் ஸ்மார்ட்போன், மின்சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    நாளை (ஜூலை 15) துவங்க இருக்கும் ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் ஜூலை 19-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அமேசான் பிரைம் டே சேல் நடைபெற இருக்கும் அதே வேளையில், ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் நடைபெறுகிறது. அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 15 மற்றும் ஜூலை 16-ம் தேதி நடைபெற இருக்கிறது.

     

    சிறப்பு விற்பனையின் போது தள்ளுபடி மட்டுமின்றி ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீதம் உடனடி தள்ளுபடி, ப்ளிப்கார்ட் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அழகுசாதன பொருட்கள், மின்சாதனங்களுக்கு அதிகபட்சம் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு அதிகபட்சம் 75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் ஒரிஜினல்ஸ்-க்கு 80 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வழக்கமான சலுகைகள் தவிர, நள்ளிரவு 12 மணி, காலை 8 மணி, மாலை 4 மணிக்கு ஸ்பிலாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு பொருட்களை வாங்கும் போது பத்து சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்ப்படுகிறது.

    • ஸ்மார்ட்போன் ரென்டர் இன்பினிக்ஸ் கம்யுனிட்டி எக்ஸ் கிளப்-இல் பதிவிடப்பட்டு இருக்கிறது.
    • ரென்டர்களின் படி ஸ்மார்ட்போனின் பின்புற டிசைன் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் சீரிசை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இது தோற்றத்தில் நத்திங் போன் 2 போன்றே காட்சியளிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் கேமிங் சார்ந்த சாதனமாக இருக்கும் என்றும் இதன் டிசைன், தற்போது பிரபலமாக உள்ள நத்திங் போன் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தனது டுவிட்டரில் வெளியிட்ட தகவல்களின் படி புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் "GT" என்று அழைக்கப்படும் என அவர் தெரிவித்து இருந்தார். புதிய ஸ்மார்ட்போன் ரென்டர் இன்பினிக்ஸ் கம்யுனிட்டி எக்ஸ் கிளப்-இல் பதிவிடப்பட்டு இருக்கிறது. ரென்டர்களின் படி ஸ்மார்ட்போனின் பின்புற டிசைன் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    ரென்டரில் இந்த ஸ்மார்ட்போன் இடதுபுறத்தில் டூயல் கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது. இதோடு நத்திங் போன் 2 மாடலில் இருக்கும் எல்இடி ஸ்ட்ரிப்களை போன்றே இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனிலும் டிசைன் அவுட்லைன் இடம்பெற்று இருக்கிறது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனில் இது எல்இடி லைட்களாக இருக்குமா அல்லது வெறும் டிசைன் மட்டும் இப்படி காட்சியளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இன்பினிக்ஸ்-இன் புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை டுவிட்டரில் பார்த்த நத்திங் நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய், டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவின் பதிவுக்கு பதில் அளித்துள்ளார். அதில், "வழக்கறிஞர்களை தயார் நிலையில் வைப்பதற்கான நேரம்" என்று கூறி மகிழ்ச்சியில் சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார்.

    புதிய ஸ்மார்ட்போன் பற்றி இன்பினிக்ஸ் சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று டிப்ஸ்டர் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில், புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    முன்னதாக நத்திங் போன் 1 போன்றே காட்சியளிக்கும் சாதனம் பார்சிலோனாவில் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காணப்பட்டது. இந்த மாடலில் நத்திங் போனில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற எல்இடி மெக்கானிசமும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டொஷிபா M650 4K ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுக சலுகையாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • கேமர்களுக்காக M650 மாடலில் அல்ட்ராவிஷன் 120 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டொஷிபா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய M650 சீரிஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இரண்டு வித அளவுகளில் கிடைக்கிறது. புதிய M650 மாடலில் எலிகன்ட் டிசைன், மெல்லிய பெசல் மற்றும் அனோடைஸ் செய்யப்பட்ட மெட்டல் கட்டமைப்பு உள்ளது.

    4K மினி எல்இடி டிஸ்ப்ளே, குவான்டம் டாட் கலர், ஃபுல் அரே லோக்கல் டிம்மிங் ப்ரோ கொண்டிருக்கும் M650 மாடல் கிட்டத்தட்ட உண்மைக்கு நிகரான, தலைசிறந்த நிறங்களை பிரதிபலிக்கிறது. இத்துடன் டால்பி விஷன் IQ, HDR10+ அடாப்டிவ் HDR தொழில்நுட்பம் உள்ளிட்டவை சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள REGZA என்ஜின் ZR காட்சிகளின் அடிப்படையில் அவற்றின் தரத்தை ரியல்-டைமில் மேம்படுத்தும்.

     

    கேமர்களுக்காக M650 மாடலில் அல்ட்ராவிஷன் 120 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவியில் டால்பி அட்மோஸ், டயலாக் என்ஹான்சர், 360 சவுன்ட் அப்-ஸ்கேலிங், REGZA பவர் ஆடியோ ப்ரோ வழங்கப்பட்டு இருக்கிறது. இவை சக்திவாய்ந்த பேஸ் மற்றும் அதிக தெளிவான குரல்களை கேட்க வழி செய்கிறது.

    கனெக்டிவிட்டிக்கு HDMI, ப்ளூடூத் ஆடியோ, டூயல் பேன்ட் வைபை மற்றும் யுஎஸ்பி போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த டிவி வாய்ஸ் கன்ட்ரோல் வசதி- அலெக்சா, விடா வாய்ஸ் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    டொஷிபா M650 4K ஸ்மார்ட் டிவி மாடல் ஜூலை 15 முதல் ஜூலை 21-ம் தேதி வரை அமேசான் தளத்தில் சிறப்பு சலுகையாக அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

    அதன்படி இந்த தேதிகளில் 55 இன்ச் M650 4K டிவி ரூ. 54 ஆயிரத்து 999 என்றும் 65 இன்ச் M650 4K மாடல் ரூ. 74 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த டிவியுடன் அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது.

    • ஹானர் மேஜிக் V2 மாடல் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டுள்ளது.
    • இந்த ஃபோல்டபில் போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

    ஹானர் மேஜிக் V2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஹானர் ஃபோல்டபில் போனின் எடை 231 கிராம், தடிமன் 9.9 மில்லிமீட்டர்கள் ஆகும். அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் இதுவரை வெளியான மடிக்கக்கூடிய சாதனங்களில் மிகவும் மெல்லிய மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

    முன்னதாக உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை சியோமி மிக்ஸ் ஃபோல்டு 2 பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சியோமி மிக்ஸ் ஃபோல்டு 2 மாடலின் தடிமன் 11.2 மில்லிமீட்டர்கள், எடை 262 கிராம்கள் ஆகும். புதிய ஹானர் மேஜிக் V2 மாடலில் மிக மெல்லிய சிலிகான் கார்பன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

     

    அம்சங்களை பொருத்தவரை ஹானர் மேஜிக் V2 மாடல் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமரா சென்சார், 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், OIS, மேக்ரோ ஆப்ஷன், 20MP டெலிபோட்டோ கேமரா, OIS, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹானர் மேஜிக் V2 மாடலில் 7.92 இன்ச் மடிக்கக்கூடிய LTPO OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 2344x2156 பிக்சல் ரெசல்யூஷன், 6.43 இன்ச் LTPO டிஸ்ப்ளே, 2376x1060 பிக்சல், ஸ்டைலஸ் சப்போர்ட், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் ஹானர் சூப்பர்சார்ஜ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹானர் மேஜிக் V2 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை RMB 8999, இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 03 ஆயிரம் என்று துவங்குகிறது. 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி கொண்ட ஹானர் மேஜிக் V2 அல்டிமேட் எடிஷன் விலை RMB 11999, இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 37 ஆயிரத்து 300 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • ரியல்மி C53 ஸ்மார்ட்போன் பின்புற கேமரா மாட்யுல், கோல்டு நிற ஆப்ஷன் கொண்டிருக்கிறது.
    • ரியல்மி C53 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்டப், எல்இடி பிளாஷ் கொண்டிருக்கிறது.

    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது C53 ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. ரியல்மி நிறுவனத்தின் C சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதிய ரியல்மி C53 தோற்றத்தில், அதன் முந்தைய வெர்ஷன் போன்றே காட்சியளிக்கிறது.

    புதிய ரியல்மி C53 டீசரில் இந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா மாட்யுல், கோல்டு நிற ஆப்ஷன் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் 108MP பிரைமரி கேமரா வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இந்த பிரிவில் 108MP கேமரா வழங்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

     

    இந்திய சந்தையில் ரியல்மி C53 ஸ்மார்ட்போன் ஜூலை 19-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. ரியல்மி C53 வெளியீட்டை ஒட்டி புதிய மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் அம்சங்களின் டீசர் இடம்பெற்று இருக்கிறது.

    கேமரா மாட்யுல், நிறம் தவிர இந்த ஸ்மார்ட்போன் பாக்சி சேசிஸ் கொண்டிருக்கிறது. இதன் வால்யும் ராக்கர், பவர் பட்டனில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதன் சிம் டிரே இடது புறத்தில் உள்ளது. ரியல்மி C53 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்டப், எல்இடி பிளாஷ் கொண்டிருக்கிறது.

    இதன் முன்புறம் வாட்டர் டிராப் நாட்ச், சற்றே மெல்லிய பெசல்கள், யுஎஸ்பி டைப் சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் கிரில், மைக்ரோபோன் உள்ளிட்டவை ஸ்மார்ட்போனின் கீழ்புறமாக வைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது.
    • ரெட்மி 12 பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் மைக்ரோசைட் மூலம் வெளியாகும்.

    ரெட்மி 12 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டுக்கு முன், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவரங்கள் மைக்ரோசைட் மூலம் வெளியாகி உள்ளது.

    அமேசான் மட்டுமின்றி புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போன் Mi வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அழகிய சாதனம் என்று சியோமி நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது. இதற்காக பாலிவுட் நடிகை திஷா படானியை விளம்பர தூதராக சியோமி நியமனம் செய்து இருக்கிறது.

     

    புதிய ஸ்மார்ட்போனின் டிசைன் க்ரிஸ்டல் கிளாஸ் கொண்டிருக்கும் என்று மைக்ரோசைட்-இல் தெரியவந்துள்ளது. ரெட்மி 12 பற்றிய இதர விவரங்கள் மைக்ரோசைட் மூலம் வரும் நாட்களில் தெரிவிக்கப்பட இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 12 மாடலில் 6.79 இன்ச் Full HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 8MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார், கிளாஸ் பேக், IP53 தர ஸ்பிலாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    • நத்திங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியாகுமா என்ற கேள்விக்கு விடை கிடைத்தது.
    • நத்திங் நிறுவனம் சமீபத்தில் தான் தனது நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

    ஸ்மார்ட்போன் சந்தையில் ஏராளமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. சாம்சங், ஒப்போ, மோட்டோரோலா மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் கவனம் செலுத்த துவங்கிவிட்டன.

    இந்த நிலையில், நத்திங் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யுமா என்ற கேள்விக்கு, அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் பதில் அளித்துள்ளார்.

    அதன்படி நத்திங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் தற்போதைக்கு அறிமுகமாகாது என நத்திங் தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கார்ல் பெய் கூறும் போது,

    "இப்போதைக்கு வாய்ப்பில்லை. தற்போது யாரும் வந்து, எனது போனில் மடிக்கக்கூடிய வசதி வேண்டும் என்று கூறுவதில்லை. உற்பத்தியாளர்கள் பயனர்களிடம் புகுத்த நினைக்கும் கண்டுபிடிப்பகாவே, நான் அவற்றை பார்க்கின்றேன்," என்று தெரிவித்தார்.

    சில நிறுவனங்கள் இதனை உற்பத்தி செய்து வருகின்றன. கிட்டத்தட்ட இவை அனைத்தும் ஒரே மாதிரியே காட்சியளிக்கின்றன. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருப்பதை கார்ல் பெய் எடுத்துரைத்து இருக்கிறார்.

    • இந்திய சந்தையில் IMAX சான்று பெற்ற தரவுகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மட்டுமே வழங்குகிறது.
    • ஹெச்பி என்வி X360 15 மாடலில் ஏஐ இமேஜ் சிக்னல் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹெச்பி நிறுவனம் தனது என்வி சீரிஸ் லேப்டாப் மாடல்களில் புதிய வெர்ஷனை இணைத்துள்ளது. புதிய ஹெச்பி என்வி X360 15 லேப்டாப், இன்டெல் மற்றும் ஏஎம்டி என இருவித பிராசஸர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் ஏஐ சார்ந்து இயங்கும் அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த லேப்டப்-இல் உள்ள டிஸ்ப்ளே, கணினிகளுக்காக முதல் முறை சான்று பெற்றுள்ளன.

    புதிய ஹெச்பி என்வி X360 15 மாடலின் டாப் வேரியண்டில் IMX என்ஹான்ஸ்டு சான்று பெற்று இருக்கிறது. சந்தையில் இதுபோன்ற சான்று பெற்ற முதல் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள IMAX என்ஹான்ஸ்டு சான்று கொண்ட டிஸ்ப்ளே, ஆஸ்பெக்ட் ரேஷியோவை நீட்டித்து வழங்குகிறது.

     

    இத்துடன் IMAX தியட்ரிக்கல் சவுன்ட் மிக்ஸ் வசதி உள்ளது. இது டிடிஎஸ் X தொழில்நுட்பத்தின் விசேஷ டியூனிங்கை பயன்படுத்தி, சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதன் டிஸ்ப்ளே கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது என சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் டச் மற்றும் பென் இன்புட் வசதிகளை கொண்டுள்ளது.

    தற்போது இந்திய சந்தையில் IMAX சான்று பெற்ற தரவுகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மட்டுமே வழங்கி வருகிறது. எனினும், ஹெச்பி இந்தியா ஒடிடி தளத்துடன் கூட்டணி தொடர்பாக எந்த தகவலையும் வழங்கவில்லை. ஹெச்பி என்வி X360 15 மாடலில் ஏஐ இமேஜ் சிக்னல் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இது பயனர்கள் சிஸ்டத்தை விட்டு தூரமாக நடந்து சென்றதை கண்டறிந்து, தானாக லாக் செய்து விடும். பிறகு, பயனர்கள் லேப்டாப் அருகில் வருவதை உணர்ந்து, அதனை தானாக அன்லாக் செய்து விடும். ஹெச்பி பிரெசன்ஸ் 2.0 அம்சம் கொண்டு வீடியோ அழைப்புகளை மேம்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

    ஹெச்பி என்வி X360 15 அம்சங்கள்:

    15.6 இன்ச் FHD+ OLED, 500-நிட்ஸ் HDR, IMAX என்ஹான்ஸ்டு சான்று கொண்ட டிஸ்ப்ளே

    5MP IR கேமரா, டூயல் மைக்ரோபோன்

    பேங் &ஆல்ஃபுசன் டூயல் ஸ்பீக்கர்கள்

    வைபை 6E, ப்ளூடூத் 5.3

    4-செல் 55 வாட் ஹவர் லி-அயன் பாலிமர் பேட்டரி

    65 வாட் அல்லது 90 வாட் அடாப்டர்

    இன்டெல் கோர் i5-1335U i7-1355U பிராசஸர்

    ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ் அல்லது NVIDIA GeForce RTX3050 GPU

    8 ஜிபி, 16 ஜிபி LPDDR5 ரேம்

    2 தன்டர்போல்ட் 4 போர்ட்கள்

    ஏஎம்டி வேரியண்ட்

    ஏம்டி ரைசன் 5 7530U அல்லது ஏஎம்டி ரைசன் 7 7730U பிராசஸர்

    ஏஎம்டி ரேடியான் கிராஃபிக்ஸ்

    8 ஜிபி, 16 ஜிபி LPDDR4X ரேம்

    10Gbps யுஎஸ்பி சி போர்ட்

    விலை விவரங்கள்:

    ஹெச்பி என்வி X360 15 2-இன்-1 லேப்டாப் விலை ரூ. 78 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் விற்பனை ஹெச்பி ஆன்லைன் மற்றும் ஹெச்பி வொர்ல்டு ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது. இந்த லேப்டாப் நைட்ஃபால் பிளாக் மற்றும் நேச்சுரல் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஹெச்பி என்வி லேப்டாப் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் கடலில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ×