search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    நத்திங் போன் சார்ந்து புது டிசைன் கொண்ட ஸ்மார்ட்போன் - அசத்தல் டீசர் வெளியீடு!
    X

    நத்திங் போன் சார்ந்து புது டிசைன் கொண்ட ஸ்மார்ட்போன் - அசத்தல் டீசர் வெளியீடு!

    • டெக்னோ போவா 5 4ஜி மாடலில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
    • புதிய ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    டெக்னோ பிரான்டு இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. டெக்னோ போவா 5 சீரிசில் இடம்பெற்று இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில், புதிய ஸ்மார்ட்போன் டீசர் அமேசான் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

    கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் மட்டும் டெக்னோ போவா 5 4ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் Full HD+ பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய டெக்னோ போவை 5 சீரிசில்- டெக்னோ போவா 5 மற்றும் டெக்னோ போவா 5 ப்ரோ என இரு மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    புதிய டெக்னோ போவா 5 சீரிஸ் டீசர்களில், புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் ஆர்ஜிபி எல்இடி லைட்கள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் டிசைன் நத்திங் போன் 1 மற்றும் நத்திங் போன் 2 மாடல்களில் உள்ளதை போன்றே க்ளிம்ப் இன்டர்பேஸ்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன் வழங்கப்பட்டு உள்ளது.

    டெக்னோ போவா 5 4ஜி மாடலில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 10 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் டூயல் 50MP பிரைமரி கேமரா மற்றும் டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதன் முன்புறம் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மேலும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×