என் மலர்
தொழில்நுட்பம்
- புதிய போட் ஏர்டோப்ஸ் ஆல்பா மாடலில் 13mm டிரைவர்கள் உள்ளன.
- இதன் சார்ஜிங் கேசில் 300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய நுகர்வோர் மின்சாதன பிரான்டு, போட் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போட் ஏர்டோப்ஸ் ஆல்பா மாடலில் IPX5 சான்று, அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது.
போட் ஏர்டோப்ஸ் ஆல்பா மாடலில் 13mm டிரைவர்கள் உள்ளன. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்துடன், சக்திவாய்ந்த பேஸ் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ்-இல் ENx தொழில்நுட்பம் உள்ளது. இது அழைப்புகளின் போது ஆடியோ தரத்தை மேம்படுத்துகிறது. இதற்காக டூயல் மைக்ரோபோன் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.
ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் ஏர்டோப்ஸ் ஆல்பா, டச் கண்ட்ரோல் வசதியை வழங்குகிறது. இத்துடன் செமி இன்-இயர் டிசைன் கொண்டுள்ளது. இதன் சார்ஜிங் கேசில் 300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 35 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 35 மணி நேரத்திறகு பிளேடைம், பத்து நிமிட சார்ஜிங்கில் இரண்டு மணி நேர பிளேபேக் வசதி வழங்கப்படுகிறது. இதில் உள்ள பீஸ்ட் மோட், லேடன்சியை 50ms வரை குறைக்கும்.
இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை அறிமுக சலுகையாக ரூ. 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. விற்பனனை போட், ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறும். இந்த இயர்பட்ஸ் டார்க் சியான், ஜெட் பிளாக் மற்றும் ஸ்வீடிஷ் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
- வோடபோன் ஐடியா நிறுவனம் பயனர்களுக்கு அசத்தல் சலுகைகளை மிக குறைந்த விலையில் அறிவித்தது.
- புதிய வோடபோன் ஐடியா சலுகைகள் பயனர்களுக்கு டேட்டா பலன்களை வழங்குகின்றன.
வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய பயனர்களுக்கு இரண்டு புதிய சாஷெட்களை அறிவித்து இருக்கிறது. இவை சூப்பர் ஹவர் மற்றும் சூப்பர் டே என்று அழைக்கப்படுகின்றன. இந்த சலுகைகள் பிரீபெயிட் பயனர்கள் தங்களின் தினசரி டேட்டா அளவை கடந்த பிறகும், எவ்வித இடையூறும் இன்றி டேட்டா பயன்படுத்த அனுமதிக்கிறது.

சூப்பர் ஹவர் பேக் விலை ரூ. 24 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பயனர்களுக்கு ஒர மணி நேரத்திற்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. சூப்பர் டே சலுகை விலை ரூ. 49 ஆகும். இதில் ஒரு நாள் வேலிடிட்டியில் 6 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.
டேட்டா தவிர இரு சலுகைகளிலும், வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. சாஷெட் சலுகை என்பதால் இதில், டேட்டா பலன் மட்டுமே வழங்கப்படுகிறது. பயனர்கள் அவசர காலத்திற்கு டேட்டா பயன்படுத்த இவைகளை ரிசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இரு சலுகைகளையும் பெறுவதற்கு பயனர்கள் வேறு ஏதேனும் சலுகையை ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். இந்த சலுகைகளை பயனர்கள் வி அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் செயலியில் ரிசார்ஜ் செய்து கொள்ள முடியும். இரு சலுகைகளும் நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் கிடைக்கிறது.
- நோக்கியா பிரான்டிங்கில் இரண்டு புதிய மொபைல் போன்கள் அறிமுகம்.
- நோக்கியா ஃபீச்சர் போன்களில் யுபிஐ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய நோக்கியா மொபைல் போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. நோக்கியா 110 4ஜி மற்றும் நோக்கியா 110 2ஜி மாடல்கள் 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இரு மாடல்களும் மெல்லிய மற்றும் பிரீமியம் டிசைன் கொண்டிருக்கின்றன.
இத்துடன் நானோ-டெக்ஸ்ச்சர் பாடி மற்றும் பில்ட்-இன் யுபிஐ சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. நோக்கியாவின் பாரம்பரியம் மிக்க உற்பத்தி தரம் மற்றும் வித்தியாசமான ஸ்டைல் உள்ளிட்டவை புதிய மாடல்களிலும் தொடர்கிறது. புதிய நோக்கியா மாடல்களில் பில்ட்-இன் கேமரா, எஸ்டி கார்டு ஸ்லாட், மியூசிக் பிளேயர் மற்றும் ஆட்டோ கால் ரெக்கார்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

நோக்கியா 110 4ஜி (2023) அம்சங்கள்:
1.8 இன்ச் QQVGA ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
QCGA பிரைமரி கேமரா
1450 எம்ஏஹெச் பேட்டரி
ப்ளூடூத் 5.0
3.5mm ஹெட்போன் ஜாக்
மைக்ரோ யுஎஸ்பி 2.0
மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட்
எஸ் 30 பிளஸ் ஒஎஸ்
வயர்டு + வயர்லெஸ் எப்எம் ரேடியோ
2ஜி, 3ஜி, 4ஜி (நானோ சிம், டூயல் சிம் சப்போர்ட்)
IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட்

நோக்கியா 110 2ஜி (2023) அம்சங்கள்:
1.8 இன்ச் QQVGA ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
QCGA பிரைமரி கேமரா
1000 எம்ஏஹெச் பேட்டரி
யுஎஸ்பி கனெக்ஷன், மைக்ரோ யுஎஸ்பி
மைக்ரோ எஸ்டி சப்போர்ட்
எஸ் 30 பிளஸ் ஒஎஸ்
வயர்டு + வயர்லெஸ் எப்எம் ரேடியோ
2ஜி, டூயல் சிம்
IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நோக்கியா 110 4ஜி (2023) மாடல் மிட்நைட் புளூ மற்றும் ஆர்க்டிக் பர்பில் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 110 2ஜி (2023) மாடல் சார்கோல் மற்றும் கிளவுடி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களின் விற்பனை விரைவில் ஆஃப்லைன் ஸ்டோர்களில் துவங்க இருக்கிறது.
- பிளாக்ஷிப் மாடலான BZ50L அதிகபட்சம் 780 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.
- சோனி BZ50L சீரிஸ் சீரான காட்சிகளை வெளிப்படுத்தும் வசதி கொண்டிருக்கிறது.
சோனி இந்தியா நிறுவனம் BZ50L சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. பிரேவியா 4K HDR டிஸ்ப்ளே கொண்டிருக்கும் புதிய சோனி ஸ்மார்ட் டிவி வர்த்தக சூழலுக்கு ஏற்ற வகையில், அதிக உறுதியானதாகவும், தரமுள்ளதாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய BZ50L சீரிஸ் சீரான காட்சிகளை வெளிப்படுத்தும் நுட்பம், அகலமான வியூவிங் ஆங்கில், ஸ்மார்ட் சிஸ்டம் ஆன் சிப் பிளாட்ஃபார்ம் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. பிளாக்ஷிப் மாடலான BZ50L அதிகபட்சம் 780 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சோனி XR பிராசஸிங் வசதி கொண்டுள்ளது. இவை சிறப்பான காட்சி அனுபவத்தை வழங்குகிறது.

இந்த டிஸ்ப்ளேவை சுவற்றில் எளிதில் மாட்டுவதற்கு ஏதுவாக சென்டர் அலைன்மென்ட் ரெயில் கிட் வழங்கப்படுகிறது. இதன் 98 இன்ச் BZ50L டிஸ்ப்ளே அதன் முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும் போது 22 சதவீதம் குறைந்த எடை, 28 சதவீதம் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது.
சோனி BZ50L பிரேவியா டிஸ்ப்ளே அம்சங்கள்:
VESA ஹோல் பிட்ச்
98 இன்ச் ஸ்கிரீன்
HDR சப்போர்ட், HDR10, HLG, டால்பி விஷன்
போர்டிரெயிட் / டில்ட் வசதி
XR டிலைரலூமினஸ் ப்ரோ
காக்னிடிவ் பிராசஸர் XR
XR 4K அப்ஸ்கேலிங்
XR மோஷன் கிலேரிட்டி
டவுன் ஃபேரிங், சைடு பேக்
10 வாட் + 10 வாட் + 10 வாட் + 10 வாட்
ஆண்ட்ராய்டு ஒஎஸ்
32 ஜிபி மெமரி
க்ரோம்காஸ்ட் பில்ட்-இன், ஆப்பிள் ஏர்பிளே
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சோனி BZ50L ஸ்மார்ட் டிவி-யின் விலை ரூ. 2 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை சோனி அதிகாரப்பூர்வ விறப்னை மைங்களில் ஜூலை 28-ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
- ஐகூ நியோ 7 ப்ரோ மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் வசதி உள்ளது.
- ஐகூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெற இருக்கிறது.
ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டாப் எண்ட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. ஐகூ நியோ சீரிசில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் ஐகூ நியோ 7 ப்ரோ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ சாம்சங் E5 AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 1500 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 4013mm² VC கூலிங் மற்றும் மல்டி-லேயர் கிராஃபைட் மூலம் ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் தடுக்கப்படுகிறது. இதில் அதிகபட்சம் 12 ஜிபி வரையிலான ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், பிரத்யேக கேமிங் சிப் வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP சென்சார், 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இது ஸ்மார்ட்போனினை 8 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும்.
புதிய ஐகூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் டார்க் ஸ்டாம், ஏஜி கிளாஸ் பேக் மற்றும் பியர்லெஸ்ஃபிளேம் மற்றும் வீகன் லெதர் பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ஜூலை 18-ம் தேதி வரை அறிமுக சலுகையாக ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் வடிவில் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

ஐகூ நியோ 7 ப்ரோ அம்சங்கள்:
6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
அட்ரினோ 730 GPU
8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் பிலாஷ் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஐகூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 37 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜூலை 15-ம் தேதி அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் விற்பனைக்கு வருகிறது.
- புதிய சேவை திரெட்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புளூஸ்கை, மாஸ்டோடான் போன்ற சேவைகள் துவங்கப்பட்டுள்ளன.
மார்க் ஜூக்கர்பர்க்-இன் மெட்டா நிறுவனம் டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புதிய சமூக வலைதள சேவையை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக இந்த சேவை பற்றிய தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்த நிலையில், மெட்டா நிறுவனத்தின் புதிய சமூக வலைதள சேவை ஜூலை 6-ம் தேதி அறிமுகமாவதாக கூறப்படுகிறது. புதிய சேவை திரெட்ஸ் (threads) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக வெளியான ஸ்கிரீன்ஷாட்களின் படி புதிய திரெட்ஸ் சேவை தோற்றத்தில் இன்ஸ்டாகிராம் போன்றே இருக்கும் என்றும், பயன்பாடுகள் டுவிட்டர் போன்றே இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக சமீபத்தில் உருவாக்கப்பட்ட தளங்களான புளூஸ்கை மற்றும் மாஸ்டோடான் போன்றே, திரெட்ஸ் சேவையும் பரவலான தளமாக இருக்கும் என்று தெரிகிறது.
புதிய சேவை பற்றிய தகவல், தனியார் செய்தி நிறுவனம் சார்பில் வெளியாகி இருக்கிறது. "திரெட்ஸ், இன்ஸ்டாகிராம் செயலி," என்றும், இது ஜூலை 6-ம் தேதி முதல் டவுன்லோடு செய்ய கிடைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய தகவல் கூகுள் பிளே ஸ்டோர் லிஸ்டிங்கிலும் இடம்பெற்று இருக்கிறது.
- ஐஒஎஸ் 17-இல் உள்ள ஸ்டான்ட்பை அம்சத்திற்காக தனியே ஹார்டுவேர் சாதனம் உருவாக்கப்பட்டு இருக்கலம்.
- புதிய டிஸ்ப்ளே லோ-பவர் மோடில் ஸ்மார்ட் ஹோம் சாதனமாக பயன்படும்.
ஆப்பிள் நிறுவனம் புதிதாக எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளே ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேக் கம்ப்யுட்டர்களுக்காக உருவாக்கப்பட்டு வரும் புதிய டிஸ்ப்ளே, லோ-பவர் மோடில் ஸ்மார்ட் ஹோம் டிஸ்ப்ளே போன்றும் பயன்படுத்த முடியும் என்று ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார்.
ப்ரோ டிஸ்ப்ளே XDR மற்றும் ஆப்பிள் ஸ்டூடியோ டிஸ்ப்ளே மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன்களை உருவாக்கும் பணிகளிலும் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஸ்டூடியோ டிஸ்ப்ளே போன்றே புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே ஐஒஎஸ் சாதனத்திற்கான சிப் பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது.

மேலும் இது ஆப்பிள் ஏ13 சிப்-ஆக இருக்கும் என்று தெரிகிறது. ஸ்டூடியோ டிஸ்ப்ளேவின் மென்பொருள் திறன் கேமரா மற்றும் ஸ்பீக்கர் சிஸ்டம் சார்ந்த மேம்படுத்தல்களாகவே உள்ளன. புதிய டிஸ்ப்ளே லோ-பவர் மோடில் ஸ்மார்ட் ஹோம் சாதனமாக பயன்படும். சமீபத்திய ஐஒஎஸ் 17 வெர்ஷனில் ஸ்டான்ட்-பை எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.
இது ஐபோனை கிடைமட்டமாக வைத்து சார்ஜ் செய்யும் போது ஃபுல் ஸ்கிரீன் மோடில் தகவல்களை ஒளிபரப்பும். இது ஸ்மார்ட் டிஸ்ப்ளே மென்பொருளுக்கான முன்னோட்டமாக இருக்கும். ஸ்டான்ட்-பை அம்சம் கொண்டு சற்று தொலைவில் இருந்தும் தகவல்களை படிக்க முடியும். இதனை நைட் ஸ்டான்டு, கவுன்ட்டர் மற்றும் மேசைகளில் வைத்து பயன்படுத்தலாம்.
இந்த மோடில் வைத்து, கடிகாரம், பிடித்தமான புகைப்படங்கள், விட்ஜெட்கள் உள்ளிட்டவைகளும், லைவ் ஆக்டிவிட்டி, சிரி, அழைப்புகள் மற்றும் பெரிய நோட்டிஃபிகேஷன் உள்ளிட்டவைகளுக்கான சப்போர்ட் வழங்கப்படுகிறது. ஐஒஎஸ் 17-இல் உள்ள ஸ்டான்ட்பை அம்சத்திற்காக தனியே ஒரு ஹார்டுவேர் சாதனம் உருவாக்கப்பட்டு இருக்கலம் என்றும் கூறப்படுகிறது.
- புதிய மாடல் கேலக்ஸி S21 FE ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 888 வேரியண்ட் ஆக இருக்கலாம்.
- தற்போதைய கேலக்ஸி S21 FE மாடலில் 12MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களை உண்மையாக்கும் வகையில், இந்த மாடல் கேலக்ஸி S21 FE ஆகவே இருக்கும் என்று தெரிகிறது.
எனினும், புதிய கேலக்ஸி S21 FE மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்படுகிறது. டீசரில் சாம்சங் நிறுவனம் "Faster Just Got Faster," என்று குறிப்பிட்டு இருக்கிறது. எனினும், ஸ்மார்ட்போனின் பெயர் பற்றி எந்த தகவலும் வழங்கவில்லை. இதன் முன்புற டிசைன் தோற்றத்தில் கேலக்ஸி S21 FE போன்று காட்சியளிக்கிறது.

அதன்படி புதிய மாடல் கேலக்ஸி S21 FE ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 888 வேரியண்ட் ஆக இருக்கும் என்றே தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மாடல் முற்றிலும் புதிய நேவி புளூ நிறத்தில் கிடைக்கும் என்று தெரிகிறது. இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 50 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
தற்போது விற்பனை செய்யப்படும் கேலக்ஸி S21 FE மாடலில் 6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ ஃபிலாட் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 12MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு சென்சார், 8MP டெலிபோட்டோ லென்ஸ், OIS, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
- மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
- மோட்டோ ரேசர் 40 சீரிஸ் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா ப்ளிப் போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.9 இன்ச் FHD+ உள்புறம் மடிக்கக்கூடிய போல்டபில் OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் அல்ட்ரா மாடலில் 1-165Hz ரிப்ரெஷ் ரேட், LTPO டிஸ்ப்ளே, ரேசர் 40 மாடலில் 144Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன் உள்ளது.
ரேசர் 40 அல்ட்ரா மாடலில் 3.6 இன்ச் FHD+ வெளிப்புறம் pOLED ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இதன் கவர் ஸ்கிரீன் 1.4 இன்ச் அளவில் உள்ளது. ரேசர் 40 அல்ட்ரா மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ரேசர் 40 மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது. இரு மாடல்களிலும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

மோட்டோரோலா ரேசர் 40 அம்சங்கள்:
6.9 இன்ச் 2640x1080 பிக்சல் ஃபிலெக்ஸ்வியூ FHD+ pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்
1.47 இன்ச் 194x368 பிக்சல், குயிக்வியூ AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர்
அட்ரினோ 644 GPU
8 ஜிபி LPDDR4X ரேம்
256 ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ்
ஆண்ட்ராய்டு 13
டூயல் சிம் ஸ்லாட்
64MP பிரைமரி கேமரா, OIS
13MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன்
32MP செல்ஃபி கேமரா
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை
ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
4200 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங்
5 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா அம்சங்கள்:
6.9 இன்ச் 2640x1080 பிக்சல் ஃபிலெக்ஸ்வியூ FHD+ pOLED LTPO டிஸ்ப்ளே, 1-165Hz ரிப்ரெஷ் ரேட்
3.6 இன்ச் 1056x1066 பிக்சல், குயிக்வியூ AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
அட்ரினோ 730 GPU
8 ஜிபி LPDDR5 ரேம்
256 ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ்
ஆண்ட்ராய்டு 13
டூயல் சிம் ஸ்லாட்
12MP பிரைமரி கேமரா, OIS
13MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன்
32MP செல்ஃபி கேமரா
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை
ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
3800 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங்
5 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
மோட்டோரோலா எட்ஜ் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பேன்டம் பிளாக், கிளாஸ் பேக் மற்றும் விவா மஜென்டா, வீகன் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான், மோட்டோரோலா வலைதளங்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் ஜூலை 15-ம் தேதி துவங்க இருக்கிறது.
மோட்டோரோலா எட்ஜ் 40 மாடல் சேஜ் கிரீன், சம்மர் லிலக் மற்றும் வென்னிலா கிரீம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனையும் ஜூலை 15-ம் தேதி அமேசான், மோட்டோரோலா வலைதளங்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
- ஜியோ 4ஜி ஃபீச்சர் போனுடன் ஜியோ பாரத் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- இந்த மொபைலில் ஜியோ சினிமா ஆப் கொண்டு நிகழ்ச்சிகள், திரைப்படங்களை பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் போன் பிளாட்ஃபார்மை அறிமுகம் செய்தது. இந்த பிரான்டிங்கில் ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் 4ஜி ஃபீச்சர் போன் மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க 250 மில்லியன் ஃபீச்சர் போன் பயனர்களை சென்றடைய ஜியோ இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ஜியோ பாரத் போன் ஸ்மார்ட் ஃபீச்சர் போன் ஆகும். இதில் இண்டர்நெட் பயன்படுத்துவதோடு, யுபிஐ பேமன்ட் மற்றும் ஜியோ பொழுதுபோக்கு செயலிகளை பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது. ஜியோ 4ஜி ஃபீச்சர் போனுடன் ஜியோ பாரத் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் மொபைல் டேட்டா உள்ளிட்டவைகளை குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.

விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் புதிய ஜியோ பாரத் போனின் விலை ரூ. 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 4ஜி ஸ்மார்ட்போன் ஃபீச்சர் போன் மாடல் ரெட் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் ரிடெயில் தவிர இதர பிரான்டுகளும் ஜியோ பாரத் பிளாட்ஃபார்மில் இணைந்து ஜியோ பாரத் போன்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன. ஜியோ பாரத் போன்களின் முதல் பத்து லட்சம் யூனிட்களுக்கான பீட்டா டெஸ்டிங் ஜூலை 7-ம் தேதி துவங்க இருக்கிறது.
ரிசார்ஜ் சலுகை விவரங்கள்:
ரிலையன்ஸ் ஜியோ பாரத் சலுகைகளின் விலை ரூ. 123 முதல் துவங்குகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ஜியோ பாரத் வருடாந்திர சலுகையின் விலை ரூ. 1234 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையிலும் பயனர்களுக்கு தினமும் 0.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.
ஜியோ பாரத் போன் அம்சங்கள்:
ஜியோ பாரத் போனின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தோற்றத்தில் இந்த போன் வழக்கமான ஃபீச்சர் போன்றே காட்சியளிக்கிறது. இதில் சிறிய ஸ்கிரீன், கீபோர்டு மற்றும் ஏராளமான ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளன.
இந்த மொபைல் கொண்டு யுபிஐ பேமன்ட் செய்ய முடியும். இதற்கு ஜியோ பே செயலியை பயன்படுத்த வேண்டும். இத்துடன் ஜியோ சினிமா ஆப் கொண்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும்.
ஜியோ பாரத் போனுடன் ஜியோ சாவன் ஆப் சந்தா வழங்கப்படுகிறது. இதில் சுமார் எட்டு கோடிக்கும் அதிக பாடல்கள் வழங்கப்படுகின்றன. இவைதவிர எப்எம் ரேடியோ, டார்ச்லைட் போன்ற அம்சங்களும் உள்ளன.
- டெக்னோ கேமான் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை கடந்த மாதம் நடைபெற இருந்தது.
- இந்தியாவில் டெக்னோ கேமான் 20 சீரிஸ் மாடல்கள் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
டெக்னோ நிறுவனத்தின் கேமான் 20 மற்றும் கேமான் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில் கேமான் 20 பிரீமியர் 5ஜி டாப் எண்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது டெக்னோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பற்றி அறிவித்து இருக்கிறது.
அதன்படி இந்தியாவில் டெக்னோ கேமான் 20 பிரீமியர் ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலை 7-ம் தேதி துவங்க இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் விற்பனை ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டெக்னோ கேமான் 20 பிரீமியர் 5ஜி அம்சங்கள்:
6.67 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர்
ARM G77 MC9 GPU
8 ஜிபி ரேம்
512 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஹைஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
108MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன்
2MP போர்டிரெயிட் கேமரா
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
ஸ்டீரியோ ஸ்பீக்கர், எஃப்எம் ரேடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
டெக்னோ கேமான் 20 பிரீமியர் 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் செரினிட்டி புளூ மற்றும் டார்க் வெல்கின் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விவரங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
- டுவிட்டரின் இந்த முடிவுக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
- கட்டுப்பாடு மூலம் பயனர்கள் ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டுவிட்டர் பதிவுகளை பார்க்க முடியும்.
டுவிட்டர் நிறுவனம் பயனர்கள் ஒரு நாளில் எத்தனை ட்விட்களை பார்க்க முடியும் என்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. ஏஐ ஸ்டார்ட்அப்-கள் மேற்கொள்ளும் தகவல் திருட்டு தான் இதற்கு முக்கிய காரணம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் தற்காலிக கட்டுப்பாடு மூலம் பயனர்கள் ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டுவிட்டர் பதிவுகளை பார்க்க முடியும். டுவிட்டரின் இந்த முடிவுக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றிய அறிவிப்பு கடந்த சனிக்கிழமை எலான் மஸ்க் அறிவித்து இருந்தார்.
அதன்படி வெரிஃபைடு பெற்று இருக்கும் டுவிட்டர் பயனர்கள் ஒரு நாளில் 6 ஆயிரம் பதிவுகளை பார்க்க முடியும். வெரிஃபைடு பெறாத பயனர்கள் நாள் ஒன்றுக்கு 600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் நாள் ஒன்றுக்கு 300 பதிவுகளை பார்க்க முடியும்.

"தகவல் திருட்டு மற்றும் சிஸ்டம் தவறாக கையாளுவது உள்ளிட்டவைகளை எதிர்கொள்ளும் நோக்கில், நாங்கள் தற்காலிக கட்டுப்பாடுகள்- வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 6 ஆயிரம் பதிவுகள் / வெரிஃபைடு இல்லா பயனர்கள் தினமும் 600 பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 300 அக்கவுன்ட்களையும் பார்க்க முடியும்," என்று எலான் மஸ்க் டுவிட் செய்து இருந்தார்.
பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மற்றொரு பதிவில், எலான் மஸ்க் வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 8 ஆயிரம் பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத பயனர்கள் தினமும் 800 பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 400 பதிவுகளையும் பார்க்க முடியும் என்று தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையையும் எலான் மஸ்க் மீண்டும் மாற்றினார். தற்போது வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 10 ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாதவர்கள் தினமும் ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 500 பதிவுகளை பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.






