என் மலர்
தொழில்நுட்பம்
- ஸ்பேஷியல் கம்ப்யூட்டரை கலை பொருளாக மாற்ற நினைத்ததன் விளைவு தான் கேவியர் எடிஷன் உருவாக காரணம்.
- விஷன் ப்ரோ கேவியர் எடிஷன் 18 கேரட் தங்கத்தால் அழகுபடுத்தப்பட்டு உள்ளன.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-ஐ விஷன் ப்ரோ பெயரில் அறிமுகம் செய்தது. தற்போது துபாயை சேர்ந்த கேவியர் எனும் நிறுவனம் ஆப்பிள் விஷன் ப்ரோ கேவியர் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-ஐ ஸ்பேஷியல் கம்ப்யுட்டர் என்று ஆப்பிள் நிறுவனம் அழைக்கிறது. அதன்படி ஆப்பிள் ஸ்பேஷியல் கம்ப்யூட்டரை கலை பொருளாக மாற்ற நினைத்ததன் விளைவு தான் கேவியர் எடிஷன் உருவாக காரணம் என்று கேவியர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ஆப்பிள் விஷன் ப்ரோ கேவியர் எடிஷன் உருவாக டாம் ஃபோர்டின் ப்ளிப்-அப் மற்றும் குக்கி ஸ்கை மாஸ்க் உள்ளிட்டவைகளை கொண்டு அதிவநீன தொழில்நுட்பம் கொண்ட ஹெட்செட்-ஐ கேவியர் கலை பொருளாக உருவாக்கி இருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ கேவியர் எடிஷன் மற்றும் அதன் பாதுகாப்பு மாஸ்க் உள்ளிட்டவை 18 கேரட் தங்கத்தால் அழகுபடுத்தப்பட்டு உள்ளன. இதற்காக சுமார் 1.5 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த ஹெட்செட்-இன் ஹெட்பேண்ட் கொனொலி லெதர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே லெதர் ரோல்ஸ் ராய்ஸ் வாகனங்களிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது பயன்படுத்துவோருக்கு அதிக சவுகரியமாகவும், சிறப்பான அனுபவத்தையும் வழங்குகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ ஹெட்செட் விலையை 3 ஆயிரத்து 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 87 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய விஷன் ப்ரோ கேவியர் எடிஷன் விலை 39 ஆயிரத்து 900 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 32 லட்சத்து 73 ஆயிரம் என்று துவங்குகிறது. கேவியர் நிறுவனம் இந்த ஹெட்செட்-இன் 24 யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட இருக்கிறது. இவை அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
- கேமிங் டேப்லெட் வெளியீட்டை ஒட்டி இரண்டு போஸ்டர்கள் வெய்போ தளத்தில் வெளியிடப்பட்டது.
- ரெட் மேஜிக் கேமிங் டேப்லெட் 10000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
நுபியா நிறுவனம் ரெட் மேஜிக் பிரான்டில் புதிய கேமிங் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே நிகழ்வில் ரெட் மேஜிக் 8s ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இரு சாதனங்களின் அறிமுக நிகழ்வு ஜூலை 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் புதிய கேமிங் டேப்லெட் பற்றிய விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது.
ரெட் மேஜிக் கேமிங் டேப்லெட் வெளியீட்டை ஒட்டி நுபியா நிறுவனம் இதுவரை இரண்டு போஸ்டர்களை சீன சமூக வலைதளமான வெய்போவில் வெளியிட்டுள்ளது. அதில் முதல் போஸ்டர் டேப்லெட் முன்புற தோற்றம் எப்படி இருக்கும் என்பதை அம்பலப்படுத்துகிறது. இதுதவிர வேறு எந்த தகவலும் முதல் போஸ்டரில் இடம்பெறவில்லை.

மற்றொரு போஸ்டரில் இந்த டேப்லெட் அதிகபட்சமாக 10000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சில நாட்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ரெட்மி மேஜிக் டேப்லெட் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
அதன்படி புதிய ரெட் மேஜிக் கேமிங் டேப்லெட் 12.1 இன்ச் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. பேட்டரி மற்றும் சார்ஜிங் அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் வழங்கப்பட இருக்கும் கேமராக்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
மேலும் இந்த டேப்லெட் 5ஜி வெர்ஷன் வடிவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ரெட் மேஜிக் கேமிங் டேப்லெட் மாடல் ZTE ஆக்சன் பேட் 5ஜி மாடலின் ரிபிரான்டு செய்யப்பட்ட வெர்ஷன் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஆக்சன் பேட் மாடலில் 12.1 இன்ச் LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 10000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் சார்ஜிங், 13MP பிரைமரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
- டெக்னோ பேன்டம் V போல்டு சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது.
- டெக்னோ பேன்டம் V ப்ளிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் FCC வலைதளத்தில் லீக் ஆனது.
டெக்னோ பேன்டம் V போல்டு மாடல் மூலம் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையின் பட்ஜெட் பிரிவில் டெக்னோ களமிறங்கியது. மற்ற முன்னணி பிரான்டுகளை போன்றில்லாமல், டெக்னோ பிரான்டு விலை உயர்ந்த, டாப் என்ட் சாதனங்களை உருவாக்கவில்லை. மாறாக பட்ஜெட் பிரிவில் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்பட்ட டெக்னோ பேன்டம் V போல்டு சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், டெக்னோ நிறுவனம் புதிய ப்ளிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் டெக்னோ பேன்டம் V ப்ளிப் அல்லது பேன்டம் V யோகா பெயர்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் FCC வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி டெக்னோ பேன்டம் V ப்ளிப் ஸ்மார்ட்போன் AD11 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. பேன்டம் V ப்ளிப் மாடல் வைபை, ப்ளூடூத், 5ஜி கனெக்டிவிட்டி வசதி கொண்டுள்ளது.
டெக்னோ பேன்டம் V ப்ளிப் 5ஜி மாடலில் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக டூயல் பேட்டரி செட்டப் இருக்கும். இதில் ஒரு பேட்டரி 1165 எம்ஏஹெச், மற்றொரு பேட்டரி 2735 எம்ஏஹெச் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் அதிகபட்சம் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் மர்மமாகவே உள்ளன.
டெக்னோ பேன்டம் V ப்ளிப் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டெக்னோ பேன்டம் V ப்ளிப் மாடல் ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹைஒஎஸ் 13, 64MP பிரைமரி கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
- சாட் ஹிஸ்ட்ரியை அதிவேகமாக டிரான்ஸ்பர் செய்வதற்காக புதிய அம்சம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் இயங்க வேண்டியது அவசியம் ஆகும்.
வாட்ஸ்அப் செயலியில் சாதனங்கள் இடையே சாட் டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளும் அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதனை செய்துமுடிக்க ஸ்மார்ட்போனினை ரிசெட் செய்யவோ அல்லது கூகுள் டிரைவை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
இந்த நிலையில், மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் வாட்ஸ்அப் சாட் ஹிஸ்ட்ரியை பாதுகாப்பாகவும், அதிவேகமாகவும் டிரான்ஸ்பர் செய்வதற்காக புதிய அம்சத்தினை அறிவித்து இருக்கிறது. ஆனால் இதற்கு இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் இயங்கவேண்டியது அவசியம் ஆகும்.

கடந்த சில மாதங்களாக டெஸ்டிங் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அம்சம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனினை ரிசெட் செய்யவோ அல்லது கூகுள் டிரைவ் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
சாட்களை டிரான்ஸ்பர் செய்வது எப்படி?
- இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் கொண்டிருப்பது, வைபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- சாட் டிரான்ஸ்பர் செய்ய லொகேஷன் எனேபில் செய்யப்பட்டு இருப்பதும் அவசியம் ஆகும்.
- பழைய ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சாட் -- சாட் டிரான்ஸ்ஃபர் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.
- புதிய ஸ்மார்ட்போன் மூலம், பழைய ஸ்மார்ட்போனின் திரையில் காணப்படும் கியூஆர் கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும். இனி சாட்-களை தேர்வு செய்து அனுப்பலாம்.
- டிரான்ஸ்பர் ஆக வேண்டிய புதிய ஸ்மார்ட்போனில் தகவல்களை பெறுவதற்கு Accept ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி சாட் டிரான்ஸ்பர் முடிக்கப்பட்டு விடும்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் சாட் டிரான்ஸ்பர் வசதி இரு சாதனங்களிடையே நடைபெறுகிறது. சாட் டிரான்ஸ்பின் போது தகவல்கள் என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அதிக ஃபைல் சைஸ் கொண்ட தரவுகளை அனுப்ப முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- வோடபோன் ஐடியா ரூ. 839 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
- இதில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்குகிறது. புதிய பிரீபெயிட் சலுகை விலை ரூ. 839 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 17 விலையில் சோட்டா ஹீரோ பேக் சலுகைகளை அறிவித்த நிலையில், தற்போது இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் புதிய சலுகை வி செயலியில் இருந்து ரிசார்ஜ் செய்யும் வகையில் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில், பயனர்கள் இதனை வலைதளம் மற்றும் இதர செயலிகளில் ரிசார்ஜ் செய்ய முடியாது.
பலன்கள்:
வோடபோன் ஐடியா ரூ. 839 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்கப்படுகிறது. இவைதவிர இந்த சலுகையில் மேலும் சில பலன்களும் வழங்கப்படுகிறது.
அதன்படி நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டா வழங்கப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை பயன்படுத்தாத டேட்டாவினை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
வி மூவிஸ் மற்றும் டிவி ஆப் பிரீமியம் சந்தா இந்த சலுகையுடன் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 2ஜிபி வரையிலான டேட்டா பேக்கப் வழங்கப்படுகிறது. இதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லை. இந்த சலுகை வி வலைதளம் மற்றும் அதிகாரப்பூர்வ செயலியில் வழங்கப்படுகிறது.
- இயர்படஸ் பற்றிய அறிவிப்பை தொடர்ந்து இதன் விலை விவரங்கள் லீக் ஆகி உள்ளது.
- ரியல்மி இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் என்று டூயல் டோன் நிறங்களில் கிடைக்கும்.
ரியல்மி நிறுவனத்தின் பட்ஸ் வயர்லெஸ் 3 நெக்பேன்ட் இயர்போன் மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய இயர்போனின் வெளியீட்டு தேதி, குறிப்பிட்ட சில அம்சங்கள் பற்றிய தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி இந்தியாவில் ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 3 நெக்பேன்ட் மாடல் ஜூலை 6-ம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசரில் புதிய நெக்பேன்ட் இயர்போன் 13.6mm டைனமிக் பாஸ் டிரைவர்கள் மற்றும் 30db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

புதிய ரியல்மி இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் என்று டூயல் டோன் நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த வயர்லெஸ் நெக்பேன்ட் இயர்போன் ரியல்மி நார்சோ 60 மற்றும் நார்சோ 60 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரியல்மியின் புதிய இயர்படஸ் பற்றிய அறிவிப்பை தொடர்ந்து இதன் விலை விவரங்கள் லீக் ஆகி உள்ளது.
அதன்படி ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 3 நெக்பேன்ட் மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 999-க்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று டிப்ஸ்டரான சுதான்ஷூ அம்போர் தெரிவித்து இருக்கிறார். மேலும் அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ்-க்கு தள்ளுபடி வழங்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 3 நெக்பேன்ட் அறிமுகமாகும் நிகழ்விலேயே நார்சோ 60 மற்றும் நார்சோ 60 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்திய சந்தையில் ரியல்மி நார்சோ 60 சீரிஸ் விலை ரூ. 17 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கும் என்று தெரிகிறது.
- சாம்சங் ஒடிசி OLED G9 மானிட்டரில் மேம்பட்ட நியோ குவான்டம் பிராசஸர் ப்ரோ உள்ளது.
- இந்த மானிட்டரில் கோர்-சின்க் மற்றும் கோர் லைட்னிங் பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.
சாம்சங் இந்தியா நிறுவனம் ஒடிசி OLED G9 கேமிங் மானிட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேமிங் மானிட்டர் நியோ குவான்டம் பிராசஸர் ப்ரோ கொண்டிருக்கிறது. 49-இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் சாம்சங் ஒடிசி OLED G9 கேமிங் மானிட்டரில் 1080R கர்வேச்சர், டூயல் குவாட் ஹை டெஃபனிஷன் (DQHD) 5120x1440 பிக்சல் ரெசல்யூஷன் உள்ளது.
இரண்டு QHD ஸ்கிரீன்களை அருகில் வைத்துக் கொண்டு பயன்படுத்துவதை போன்ற அனுபவத்தை இந்த மானிட்டர் கொடுக்கும். கேமர்கள் இந்த மானிட்டரில் 0.03ms கிரே-டு-கிரே ரெஸ்பான்ஸ் டைம் மற்றும் 240Hz ரிப்ரெஷ் ரேட் பெறமுடியும். இந்த மெல்லிய மானிட்டர் அழகிய டிசைன் மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கிறது.

இத்துடன் கோர்சின்க் மற்றும் கோர் லைட்னிங் பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இவை கேமிங்கின் போது அதிக தரமுள்ள கிராஃபிக்ஸ்-ஐ வெளிப்படுத்துவதோடு தலைசிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. இதில் பில்ட்-இன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருப்பதால், காட்சிகளுக்கு ஏற்ற ஆடியோவையும் மானிட்டரிலேயே கேட்க முடியும்.
சாம்சங் ஒடிசி OLED G9 மானிட்டரில் மேம்பட்ட நியோ குவான்டம் பிராசஸர் ப்ரோ உள்ளது. இந்த சிப்செட் டீப் லெர்னிங் அல்காரிதம் கொண்டு புகைப்படங்களை சிறப்பாக மேம்படுத்தி, அசத்தலான காட்சிகளை காண்பிக்க செய்கிறது. இந்த மானிட்டர் ஸ்மார்ட் டிவி அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்ன்ட் மற்றும் தலைசிறந்த சினிமா தரத்தை வழங்குகிறது.
இதில் உள்ள AMD FreeSync பிரீமியம் ப்ரோ கேம்பிளேவை மேம்படுத்தி சீரான அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் டிஸ்ப்ளே-HDR ட்ரூ பிளாக் 400 தொழில்நுட்பம் பிரகாசமான நிறங்களை, அதிக தெளிவாக பிரதிபலிக்கிறது. இத்துடன் ஆட்டோ சோர்ஸ் ஸ்விட்ச் பிளஸ் அம்சம் கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங் பயன்பாடுகளுக்கு ஏற்ப தானாக செட்டிங்களை மாற்றிக் கொள்கிறது.
இந்திய சந்தையில் சாம்சங் ஒடிசி OLED G95SC மானிட்டர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்தத்து 99 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கேமிங் மானிட்டர் விற்பனை சாம்சங் ஷாப், அமேசான் மற்றும் முன்னணி மின்சாதன விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது.
- ஒப்போ ரெனோ 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை ஒட்டி மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒப்போ ரெனோ 10 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. முன்னதாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிசில், ஒப்போ ரெனோ 10, ரெனோ 10 ப்ரோ மற்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடல்கள் இடம்பெற்று இருந்தன.
இந்திய சந்தையில் ஒப்போ ரெனோ 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதில் ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என்று டீசரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் வெளியீடு விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், இதன் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.

பிரபல டிப்ஸ்டரான அபிஷேக் யாதவ் ஒப்போ ரெனோ 10 சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலை விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒப்போ ரெனோ 10 5ஜி மாடல் விலை ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கும் என்றும், ரெனோ 10 ப்ரோ விலை ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் விலை ரூ. 50 ஆயிரத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது.
ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ நிறுவன வலைதளங்களில் புதிய ஒப்போ ரெனோ 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை ஒட்டி மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த வலைதளத்தில் புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியீட்டு தேதி அப்டேட் செய்யப்படவில்லை. எனினும், இவை ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் இந்திய வேரியன்டில் 64MP டெலிபோட்டோ போர்டிரெயிட் கேமரா, OIS, 50MP சோனி IMX890 சென்சார், OIS, 8MP சோனி IMX355 வைடு ஆங்கில் கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மற்ற மாடல்களிலும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
- நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடல் பிரத்யேக கேமிங் மோட் மற்றும் 50ms லோ லேடன்சி வசதி உள்ளது.
- இந்த இயர்பட்ஸ் சார்கோல் பிளாக் மற்றும் ஸ்னோ வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நாய்ஸ் பட்ஸ் ஏரோ பெயரில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. மெல்லிய மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கும் நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடலில் க்ரோம் அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த இயர்பட்ஸ் அழகிய தோற்றம் மற்றும் அசத்தலான ஆடியோ அனுபவம் வழங்குகிறது.
இசை ப்ரியர்கள், கேமர்கள் மற்றும் பலருக்கும் பயனளிக்கும் அம்சங்களை இந்த இயர்பட்ஸ் கொண்டிருக்கிறது. நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடலில் உள்ள பிரத்யேக கேமிங் மோட் மற்றும் 50ms லோ லேடன்சி வசதியை வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ்-ஐ முழு சார்ஜ் செய்தால் 45 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

இத்துடன் 13mm டிரைவர்கள், ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஹைப்பர்சின்க் தொழில்நுட்பம் இயர்பட்ஸ்-ஐ வேகமாக ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. இத்துடன் IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடலின் விலை ரூ. 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் சார்கோல் பிளாக் மற்றும் ஸ்னோ வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜூலை 1-ம் தேதி துவங்குகிறது.
- சாம்சங் கேலக்ஸி S21 FE மாடல் 2022 ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
- சாம்சங் கேலக்ஸி S21 FE மாடலின் ஸ்னாப்டிராகன் வேரியன்ட் விவரங்கள் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் 2023 மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. சில நாடுகளில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S21 FE மாடலை மீண்டும் அறிமுகம் செய்ய இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது பற்றிய தகவலை டிப்ஸ்டரான தருன் வட்சா வெளியிட்டுள்ளார். சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S21 FE மாடலை 2022 ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது.

இதில் எக்சைனோஸ் 2100 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி S21 FE மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S21 FE மாடலின் ஸ்னாப்டிராகன் வேரியன்ட் அடுத்த மாதம் (ஜூலை) அறிமுகமாகும் என்று வட்சா தெரிவித்துள்ளார்.
ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட கேலக்ஸி S21 FE விலை ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. பிராசஸர் தவிர இந்த ஸ்மார்ட்போன் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே கூறப்படுகிறது.
- ஒப்போ K11 ஸ்மார்ட்போனின் படங்கள் FCC வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
- மிட் ரேன்ஜ் பிரிவில் 100 வாட் சார்ஜிங் வசதி பெறும் முதல் ஒப்போ ஸ்மார்ட்போன் இது என தகவல்.
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாக இருக்கும் ஒப்போ K11 ஸ்மார்ட்போன் அந்நறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஒப்போ K10 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் TENAA வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது.
இந்த வரிசையில் தற்போது சீனாவின் 3சி தளத்தில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களிலேயே ஃபைன்ட் X6 ப்ரோ, ரெனோ 10 ப்ரோ மற்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்களில் மட்டுமே அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி மிட் ரேன்ஜ் பிரிவில் 100 வாட் சார்ஜிங் வசதி பெறும் முதல் ஒப்போ ஸ்மார்ட்போன் என்ற பெருமையை K11 பெறும் என்று எதிர்பார்க்கலாம். சீனாவின் 3சி லிஸ்டிங்கின் படி ஒப்போ K11 ஸ்மார்ட்போன் PJC110 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டிருக்கும் என்றும் VCBAHBCH அடாப்டர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஒப்போ K11 ஸ்மார்ட்போனின் படங்கள் FCC வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் வலதுபுறம் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் இடம்பெற்று இருக்கிறது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 782G பிராசஸர்
6 ஜிபி, 8 ஜிபி, 12 ஜிபி ரேம்
128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி
50MP பிரைமரி கேமரா, OIS
8MP அல்ட்ரா வைடு லென்ஸ்
2MP மேக்ரோ சென்சார்
16MP செல்ஃபி கேமரா
5000 எம்ஏஹெச் பேட்டரி
100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- இந்தியாவில் பேட் 6 மாடலின் ஸ்டான்டர்டு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய சியோமி டேப்லெட் விவரங்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
சியோமி நிறுவன டேப்லெட் மாடல்கள் தொடர்ந்து விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சமீபத்தில் சியோமி அறிமுகம் செய்த பேட் 6 மாடல் கடந்த வாரம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது. சியோமி பேட் 6 மாடலில் அசத்தலான ஹார்டுவேர் உள்ளது. இதன் விலை கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சீனா போன்று இல்லாமல், இந்தியாவில் பேட் 6 மாடலின் ஸ்டான்டர்டு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இதன் டாப் எண்ட் சியோமி பேட் 6 ப்ரோ மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், இந்த நிலை விரைவில் மாறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும், புதிய டேப்லெட் சியோமி பேட் 6 மேக்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

மேலும் இந்த டேப்லெட் விவரங்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சியோமி நிறுவனத்தின் சர்வதேச சந்தை வெளியீடுகளில் புதிய டேப்லெட் ஆக சியோமி பேட் 6 மேக்ஸ் இணைய இருக்கிறது. ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் இந்த டேப்லெட் 230778KB5BC எனும் மாடல் நம்பருடன் பட்டியலிடப்பட்டு உள்ளது.
ப்ளூடூத் லிஸ்டிங்கில் சியோமி பேட் 6 மேக்ஸ் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என்று மட்டும் எதிர்பார்க்க முடியும். சர்வதேச சந்தையில் சியோமி பேட் 6 மேக்ஸ் சியோமி பேட் 5 ப்ரோ 12.4 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகமாகிறது. மேலும் இது சியோமி பேட் 6 ப்ரோ மாடலின் ரிபிரான்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
அம்சங்களை பொருத்தவரை சியோமி பேட் 6 மேக்ஸ் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 8600 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.






