என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதிய கேஜெட்டுகள்

நத்திங் போன் 2 முன்பதிவு மற்றும் சலுகை விவரங்கள்

- நத்திங் போன் 2 மாடலில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த நத்திங் ஒஎஸ் 2 வழங்கப்படுகிறது.
- இந்தியாவில் நத்திங் போன் 2 முன்பதிவு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறுகிறது.
நத்திங் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் நத்திங் போன் 2 மாடலினை ஜூலை 11-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. சர்வதேச வெளியீட்டின் போதே, இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், புதிய நத்திங் போன் 2 மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறுகிறது.
முன்பதிவு துவங்கி இருக்கும் நிலையில், நத்திங் போன் 2 மாடலுக்கான ஆஃப்லைன் ஆஃபர்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை தேதி பற்றிய தகவல்களை டிப்ஸ்டர் இஷான் அகர்வால் வெளியிட்டுள்ளார். நத்திங் போன் 2 மாடலுக்கான முன்பதிவு ஜூலை 12-ம் தேதி துவங்கி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரம் ஆகும். விற்பனை ஜூலை 15-ம் தேதி மாலை துவங்குகிறது. முன்னதாக ரிடெயில் விற்பனையாளர்களுக்கு ஜூலை 13-ம் தேதியில் இருந்து யூனிட்கள் வழங்கப்படும்.
நத்திங் போன் 2 மாடலை வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி நத்திங் இயர் ஸ்டிக் மாடல் ரூ. 4 ஆயிரத்து 250 விலையில் கிடைக்கும். இத்துடன் பல்வேறு அக்சஸரீக்களுக்கு அசத்தல் தள்ளுபடியும், அடாப்டர் வாங்கும் போது 50 சதவீதம் தள்ளுபடி, கேஸ்-க்கு 40 சதவீதம் தள்ளுபடி, ஸ்கிரீன் கார்டுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ. 3 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும், எந்தெந்த வங்கி கார்டுகளுக்கு இது பொருந்தும், அதிகபட்சம் எவ்வளவு சலுகை கிடைக்கும் என்பது பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன.
அம்சங்களை பொருத்தவரை புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி, ௩௩ வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், OLED பேனல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, EIS, 50MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த நத்திங் ஒஎஸ் 2, மூன்று ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆப்டிக்கல் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
