search icon
என் மலர்tooltip icon

    கணினி

    சாம்சங் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் துவக்க விலை எவ்வளவு தெரியுமா?
    X

    கோப்புப்படம் 

    சாம்சங் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் துவக்க விலை எவ்வளவு தெரியுமா?

    • சாம்சங் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல்.
    • கேலக்ஸி டேப் S9 சீரிசில் ஸ்டான்டர்டு, பிளஸ் மற்றும் அல்ட்ரா வேரியண்ட்கள் உள்ளன.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை ஜூலை 26-ம் தேதி நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z மடிக்கக்கூடிய சாதனங்கள், கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் மற்றும் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டை ஒட்டி புதிய சாதனங்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    இந்த வரிசையில் தற்போது கேலக்ஸி டேப் S9 சீரிஸ் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. இது ஐரோப்பிய சந்தைக்கான விலை ஆகும். கேலக்ஸி டேப் S9 சீரிசில் ஸ்டான்டர்டு, பிளஸ் மற்றும் அல்ட்ரா என மூன்று வேரியண்ட்கள் உள்ளன.

    விலை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி டேப் S9 ( 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி) 929 யூரோக்கள்

    சாம்சங் கேலக்ஸி டேப் S9 ( 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) 1049 யூரோக்கள்

    சாம்சங் கேலக்ஸி டேப் S9 பிளஸ் ( 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) 1149 யூரோக்கள்

    சாம்சங் கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா ( 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) 1369 யூரோக்கள்

    இந்த விலை விவரங்கள் வைபை மாடலுக்கானது ஆகும். இவற்றில் வரிகள் சேர்க்கப்பட்டு விட்டன. சாம்சங் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் விலை ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப வேறுபடும்.

    அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், குவாட் ஸ்பீக்கர் செட்டப், ஆப்டிக்கல் கைரேகை சென்சார், AMOLED 2x WQVGA+ டிஸ்ப்ளே, எஸ் பென் சப்போர்ட், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்படுகிறது. கேலக்ஸி டேப் S9, S9 பிளஸ் மற்றும் S9 அல்ட்ரா மாடல்களில் முறையே 8400, 10,090 மற்றும் 11,200 எம்ஏஹெச் பேட்டரி யூனிட்கள் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×