search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    26 ஜிபி ரேம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் - வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    26 ஜிபி ரேம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் - வெளியீடு எப்போ தெரியுமா?

    • இந்திய சந்தையில் 26 ஜிபி ரேம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
    • புதிய ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம்.

    ஸ்மார்ட்போன்களில் 8 ஜிபி ரேம் வழங்கும் போக்கு, காலாவதியாகி விட்டது. விரைவில் 16 ஜிபி ரேம் கொண்ட மாடல்களும் இந்த வரிசையில் இணைந்துவிடும் என்று தெரிகிறது. சமீபத்தில் ஒபிளஸ் குழுமம் (ஒப்போ, ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி) 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது.

    எனினும், இந்த நிறுவனங்களுக்கு முன்பாகவே ரெட் மேஜிக் 8S ப்ரோ ஸ்மார்ட்போன் 24 ஜிபி ரேம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை பெற்று அசத்தியது. அதிகபட்ச ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் எனும் பெருமையை ரெட் மேஜிக் மாடல் விரைவில் இழக்கும் என்று தெரிகிறது. இன்பினிக்ஸ் நிறுவனம் அதிகபட்சமாக 26 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதுபற்றிய தகவலை பரல் குக்லானி தெரிவித்துள்ளார். மேலும் இந்திய சந்தையில் 26 ஜிபி ரேம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை இந்த மாடல் பெறும் என்றும்தெரிவித்துள்ளார். இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக இந்தியாவிலும், அதன்பிறகு சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் புதிய GT கேமிங் சீரிசில் இடம்பெற்று இருக்கும். இதே சீரிசில் GT 10 ப்ரோ பிளஸ் மாடலும் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இந்த மாடல் இநதிய சந்தையில் விற்பனைக்கு வராது என்று கூறப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 7000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என்றும், இதில் 260 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதே ஸ்மார்ட்போனின் 160வாட் சார்ஜிங் கொண்ட வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க 100MP பிரைமரி கேமரா, இரண்டு 8MP லென்ஸ் வழங்கப்படலாம்.

    Next Story
    ×