என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • ஐபாட்-ஐ விற்பனை செய்ய 61.98 சதவீதம் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்தனர்.
    • ஒரிஜினல் ஐபாட் மாடலை ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்தார்.

    ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு சாதனங்கள் தொழில்நுட்ப துறையை திரும்பி பார்க்க செய்திருக்கின்றன. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஒரிஜினல் ஐபாட் மாடல் அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 2001-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபாட் மாடல் திறக்கப்படாத நிலையில் ஏலத்திற்கு விற்பனைக்கு வந்தது.

    இதனை ரேலி என்ற நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. ஏலத்தில் பங்கேற்றவர் திறக்கப்படாத நிலையில் இருந்த ஒரிஜினல் ஐபாட் மாடலை 29 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 24 லட்சம் கொடுத்து வாங்கி இருக்கிறார். ரேலி என்ற தளம் பயனர்கள் மதிப்பு மிக்க பொருட்களை வாங்க வழி செய்கிறது. 2021-ம் ஆண்டு இந்த ஐபாட் மாடல் 5 ஆயிரம் பங்குகளாக பிரிக்கப்பட்டு ஒரு பங்கின் விலை 5 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

     

    தற்போது இந்த ஐபாட்-ஐ விற்பனை செய்ய 61.98 சதவீதம் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்தனர். இத்தனை விலை கொடுத்து ஒரிஜினல் ஐபாட் மாடலை யார் ஏலத்தில் வாங்கினார்கள் என்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அறிமுகத்தின் போது இந்த ஐபாட் மாடல் போர்டபில் மியூசிக் பிளேயர்கள் பிரிவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

    ஒரிஜினல் ஐபாட் மாடலை ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்தார். மெல்லிய டிசைன், பல்வேறு புதுமை மிக்க அம்சங்கள் (அன்றைய தேதிக்கு) உள்ளிட்டவை இசை பிரியர்களை பெரிதும் கவர்ந்தது. அன்று இதன் விலை 399 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டதும், அதிகம் பேர் வாங்கியதால் பிரபலமான சாதனமாக இது மாறியது.

    • ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி ரக்கட் டேப்லெட் மீடியாடெக் டிமென்சிட்டி 720 5ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி மாடலில் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    5ஜி கனெக்டிவிட்டி கொண்ட உலகின் முதல் ரக்கட் டேப்லெட்- ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி 32000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் 2 ஆயிரத்து 720 மணி நேரத்திற்கு ஸ்டான்ட்-பை வழங்கும்.

    பிரீமியம் ரக்கட்ட டேப்லெட் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் புதிய ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி வரையிலான ரேம் (12 ஜிபி ரேம், 12ஜிபி வரை நீட்டிக்கும் வசதி), மீடியாடெக் டிமென்சிட்டி 720 5ஜி பிராசஸர், MIL-STD-810H சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் IP68 மற்றும் IP69K சான்று பெற்றுள்ளது.

     

    இதில் வழங்கப்படும் 32000 எம்ஏஹெச் பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 48MP பிரைமரி கேமரா, 20MP நைட் விஷன் சென்சார் மற்றும் மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது.

    புதிய ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி மாடலின் விலை 999.97 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 82 ஆயிரத்து 681 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • இந்தியாவில் கணினி இறக்குமதிக்கு மத்திய அரசு அவசரகதியில் கட்டுப்பாடுகளை அறிவித்தது.
    • நவம்பர் 1-ம் தேதியில் இருந்து இதுபோன்ற சாதனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி பெற வேண்டும்.

    லேப்டாப், டேப்லெட் மற்றும் கணினிகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், இந்தியாவில் லேப்டாப் மற்றும் கணினிகளை இறக்குமதி செய்வதற்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என கடந்த வியாழன் கிழமை அன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    இந்த அறிவிப்புக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதைய அறிவிப்பில் தற்போதுள்ள சாதனங்களை அக்டோபர் 31-ம் தேதி வரை இறக்குமதி செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. நவம்பர் 1-ம் தேதியில் இருந்து இதுபோன்ற சாதனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும்.

     

    கணினி சார்ந்த சாதனங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு அவசரகதியில் கட்டுப்பாடுகளை அறிவித்ததை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சந்தையை சார்ந்து கட்டுப்பாடுகளை மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.

    சர்வதேச சந்தையில் கணினி துறையில் முன்னணியில் விளங்கி வரும் ஆப்பிள், டெல் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் பாதிக்கப்படுகின்றன. புதிய கட்டுப்பாடுகள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அரசு திட்டமிடுவதாக அறிவித்து இருக்கிறது. இதுதவிர உற்பத்தியில் சீனாவுடனான போட்டியை எதிர்கொள்ளவும் இந்த திட்டம் வழிவகுக்கும் என்று தெரிகிறது.

    • போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடல் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
    • போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடலில் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய M6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடலில் 6.79 இன்ச் FHD+ 90Hz LCD ஸ்கிரீன், பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், அதிகபட்சம் 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆன்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 கொண்டிருக்கும் போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடலில் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் IP53 சான்று பெற்ற டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டிருக்கிறது.

     

    போக்கோ M6 ப்ரோ 5ஜி அம்சங்கள்:

    6.79 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன் 2460x1080 பிக்சல் ரெசல்யூஷன், அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ 613 GPU

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆன்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

    2MP டெப்த் சென்சார்

    8MP செல்பி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடல் பாரஸ்ட் கிரீன் மற்றும் பவர் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டிருக்கும் நிலையில், போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடல் விலை ரெட்மி 12 5ஜி மாடலை விட சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 9-ம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் துவங்குகிறது.

    • ஐபோன் 15 சீரிசில்- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் இடம்பெற்று இருக்கலாம்.
    • இந்த தேதியிலேயே ஐபோன் 15 சிரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

    ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே. எனினும், அந்நிறுவனம் சார்பில் இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள், அவற்றின் அம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் என ஏராளமான தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்துள்ளன.

    அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதி பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி அமெரிக்க மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை செப்டம்பர் 13-ம் தேதி விடுமுறை எடுக்க கேட்டுக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதே நாளில் முக்கிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    கோப்புப் படம்

    கோப்புப் படம்

     

    அந்த தேதியில் எந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் இதே காலக்கட்டத்தில் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த தேதியிலேயே ஐபோன் 15 சிரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 15 சீரிசில்- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. நான்கு மாடல்களும் அதன் முந்தைய வெர்ஷனில் இருந்ததை விட டிசைன் மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    • சாம்சங் க்ரிஸ்டல் விஷன் 4K UHD டிவி ப்ளிப்கார்ட், சாம்சங் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    • இந்த டிவியில் ஸ்மார்ட் வொர்க், கேமிங் மற்றும் ஸ்மார்ட் வாட்சிங் மோட்கள் உள்ளன.

    சாம்சங் நிறுவனத்தின் க்ரிஸ்டல் விஷன் 4K UHD டிவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பிளாக்ஷிப் ஸ்மார்ட் அம்சங்களான மல்டி வாய்ஸ் அசிஸ்டன்ட், ஸ்லிம்பிட் கேம் கொண்ட வீடியோ காலிங், சோலார் ரிமோட் மற்றும் IoT லைட் சென்சார்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த டிவி தரமான பிக்சர் மற்றும் சவுன்ட் அனுபவத்தை வழங்கும் பர்கலர் மற்றும் க்ரிஸ்டல் பிராசஸர் 4K உள்ளது. பர்கலர் அம்சம் ஒரு பில்லியன் ட்ரூ கலர், க்ரிஸ்டல் பிராசஸர் 4K,குறைந்த ரெசல்யூஷன் கொண்ட தரவுகளை 4K தரத்துக்கு மேம்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள HDR கான்டிராஸ்ட்-ஐ மேம்படுத்தி, பயனர்கள் அதிக நிறங்கள் மற்றும் தெளிவான விஷூவலை பார்க்க செய்கிறது.

     

    மூன்று புறமும் பெசல் லெஸ் டிசைன் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் 3D சரவுன்ட் சவுன்ட், இரண்டு விர்ச்சுவல் ஸ்பீக்கர்கள், அடாப்டிவ் சவுன்ட் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த டிவியில் பில்ட்-இன் IoT ஹப் கொண்டிருக்கிறது. இந்த அம்சம் டிவியின் பிரைட்னசை தானாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் திறன் கொண்டுள்ளது.

    இத்துடன் ஆட்டோ லோ லேடன்சி மோட், மோஷன் எக்செல்லரேட்டர் அம்சங்கள் உள்ளன. மேலும், ஸ்மார்ட் வொர்க், கேமிங் மற்றும் ஸ்மார்ட் வாட்சிங் மோட்கள் உள்ளன. இந்த டிவியுடன் வழங்கப்படும் சோலார் ரிமோட்-ஐ அறையில் உள்ள மின்விளக்கு மற்றும் வைபை ரவுட்டர்களை கொண்டே சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சாம்சங் க்ரிஸ்டல் விஷன் 4K UHD டிவி 43 இன்ச் மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 490

    சாம்சங் க்ரிஸ்டல் விஷன் 4K UHD டிவி 55 இன்ச் மாடல் விலை ரூ. 46 ஆயிரத்து 990

    சாம்சங் க்ரிஸ்டல் விஷன் 4K UHD டிவி 65 இன்ச் மாடல் விலை ரூ. 71 ஆயிரத்து 990

    புதிய சாம்சங் க்ரிஸ்டல் விஷன் 4K UHD டிவி ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டிவி-க்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது.

    • ஹெச்பி டிராகன்பிளை G4 லேப்டாப் வின்டோஸ் 11 ப்ரோ ஒஎஸ் கொண்டிருக்கிறது.
    • புதிய ஹெச்பி லேப்டாப் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    ஹெச்பி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய லேப்டாப் மாடலை- டிராகன்பிளை G4 என்ற பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹெச்பி லேப்டாப் எடை ஒரு கிலோவுக்கும் கீழ் உள்ளது. இதில் 13th Gen இன்டெல் கோர் பிராசஸர், பெரிய டச்பேட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பேக்லிட் பிரைட்னஸ் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

     

    புதிய ஹெச்பி டிராகன்பிளை G4 லேப்டாப்பில் 13.5 இன்ச் WUXGA+ டிஸ்ப்ளே, டச் ஸ்கிரன் மற்றும் OLED ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. வின்டோஸ் 11 ப்ரோ ஒஎஸ் கொண்டிருக்கும் புதிய லேப்டப் அதிகபட்சம் 32 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 5MP கேமரா வழங்கப்படுகிறது.

    புதிய ஹெச்பி டிராகன்பிளை G4 லேப்டாப் விலை ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் விற்பனை ஹெச்பி ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. இந்த லேப்டாப் ஸ்லேட் புளூ மற்றும் நேச்சுரல் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    • ஐபோன் 14 மாடல் மொத்தத்தில் ஆறு விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    • சிறப்பு விற்பனையின் கீழ் ஐபோன் 14 மாடலுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிப்பு.

    இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அமேசான் கிரேட் பிரீடம் பெஸ்டிவல் சேல் விற்பனையின் கீழ் ஐபோன் 14 மாடலுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போர் மட்டுமின்றி அனைவரும் இந்த விற்பனையில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

    பல்வேறு பிரிவுகளில் கிடைக்கும் ஏராளமான பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகை விவரங்களை அமேசான் ஏற்கனவே அறிவித்துவிட்டது. அந்த வகையில் ஐபோன் 14 மாடலுக்கான சலுகை அனைவரையும் கவரும் வகையில் அமைந்து இருக்கிறது. ஐபோன் 14 மாடலுக்கு அமேசான் வலைதளத்தில் ரூ. 13 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     

    அமேசான் கிரேட் பிரீடம் பெஸ்டிவல் சேல் விற்பனையின் கீழ் ஐபோன் 14 மாடலுக்கு 16 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஐபோன் 14 மாடலின் 128 ஜிபி மெமரி கொண்ட பேஸ் வேரியன்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது ரூ. 66 ஆயிரத்து 999 என்று குறைந்திருக்கிறது. ஐபோன் 14 மாடலின் 256 ஜிபி மெமரி மாடலுக்கு 13 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில், இதன் விலை ரூ. 89 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 77 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. ஐபோன் 14 மாடலின் 512 ஜிபி வேரியன்ட் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 94 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இத்துடன் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு ரூ. 1000 ஆயிரம் தள்ளுபடி மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல்- புளூ, மிட்நைட், பர்பில், பிராடக்ட் ரெட், ஸ்டார்லைட் மற்றும் எல்லோ என ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 மாடலில் ஏ15 பயோனிக் சிப்செட், 12MP டூயல் பிரைமரி கேமரா, 12MP செல்பி கேமரா, 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    • போக்கோ பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.
    • போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    போக்கோ நிறுவனத்தின் புதிய M6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. புதிய போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடலில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர் பற்றிய விவரங்களை அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது.

    இந்த நிலையில், போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடலின் விலை, டிசைன் ரென்டர்கள், ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் சியான் நிறத்தில் கிடைக்கும் என்றும் இரட்டை கேமரா சென்சார் மற்றும் எல்இடி பிளாஷ் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இத்துடன் செவ்வக வடிவம் கொண்ட கேமரா பம்ப் மற்றும் போக்கோ பிரான்டிங் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன் வழங்கப்படுகிறது.

    லீக் ஆன விலை விவரங்கள்:

    போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடல் மொத்தத்தில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 14 ஆயிரத்து 999, ரூ. 15 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 16 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    • நாய்ஸ் பட்ஸ் VS104 மேக்ஸ் மாடலில் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இதில் உள்ள பாஸ்ட் சார்ஜிங் வசதி 10 நிமிட சார்ஜில் 180 நிமிடங்களுக்கு பிளேபேக் வழங்குகிறது.

    நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய பட்ஸ் VS104 மேக்ஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நாய்ஸ் பட்ஸ் VS104 மேக்ஸ் மாடல் அதிகபட்சம் 25db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்குகிறது. இத்துடன் முழு சார்ஜ் செய்தால் 45 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது.

    இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, குவாட் மைக் ENC உள்ளிட்டவைகளின் மூலம் சிறப்பான காலிங் அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள 13 மில்லிமீட்டர் டிரைவர்கள் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இன்ஸ்டாசார்ஜ் வசதி மூலம் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் வரை பிளேபேக் பெற முடியும்.

     

    நாய்ஸ் பட்ஸ் VS104 மேக்ஸ் அம்சங்கள்:

    எர்கோனோமிக் டிசைன்

    13 மில்லிமீட்டர் டிரைவர்கள்

    ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி

    SBC, AAC கோடெக் சப்போர்ட்

    டச் கன்ட்ரோல்

    குவாட் மைக் மற்றும் ENC

    25db வரை ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்

    டிரான்ஸ்பேரன்சி மோட்

    45 மணி நேரத்திற்கு பிளேபேக்

    ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி

    இன்ஸ்டா சார்ஜ் - 10 சார்ஜில் 180 நிமிடங்களுக்கு பிளேடைம்

    50ms வரை லோ லேடன்சி

    ஹைப்பர் சின்க் தொழில்நுட்பம்

    IPX5 ஸ்பிலாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நாய்ஸ் பட்ஸ் VS104 மேக்ஸ் இயர்பட்ஸ் மாடலை அமேசான் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் அறிமுக சலுகையாக ரூ. 1699 விலையில் வாங்கிட முடியும். இந்த இயர்பட்ஸ் ஜெட் பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் சில்வர் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    • ரியல்மி நிறுவனத்தின் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    • சமீபத்தில் ரியல்மி 11 5ஜி மாடல் தாய்வான் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்னும் பத்து நாட்களுக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று தெரிவித்து இருக்கிறார்.

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் தாய்வான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், இதன் அம்சங்கள், டிசைன் மற்றும் இதர விவரங்கள் ஏற்கனவே அனைவரும் அறிந்ததே. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் வட்ட வடிவம் கொண்ட பெரிய கேமரா மாட்யுல் இடம்பெற்று இருக்கிறது. தோற்றத்தில் இது இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் மற்ற ரியல்மி 11 மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது.

     

    ரியல்மி 11 5ஜி அம்சங்கள்:

    6.72 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர்

    மாலி G57 MC2 GPU

    8 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0

    108MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    16MP செல்பி கேமரா

    5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 5, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    67 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    இந்திய சந்தையில் புதிய ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    • எல்ஜி சிக்னேச்சர் OLED M மாடல் மெல்லிய மற்றும் அதிநவீன கேலரி டிசைன் கொண்டிருக்கிறது.
    • இதில் உள்ள ஜீரோ கனெக்டிவிட்டி பாக்ஸ் ஏராளமான கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை வழங்குகிறது.

    எல்ஜி எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் எல்ஜி சிக்னேச்சர் OLED M உலகின் முதல் வயர்லெஸ் OLED டிவி மாடல் விற்பனையை துவங்கி இருக்கிறது. முன்னதாக இந்த டிவி 2023 சர்வதேச நுகர்வோர் மின்சாதன நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய எல்ஜி வயர்லெஸ் டிவி 97 இன்ச் OLED ஸ்கிரீன் மற்றும் ஜீரோ கனெக்ட் பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த டிவி ரியல்-டைமில் 4K 120Hz வீடியோ மற்றும் ஆடியோவை டிரான்ஸ்மிட் செய்யும் திறன் கொண்டுள்ளது. எல்ஜி சிக்னேச்சர் OLED M டிவி கேபிள்களால் ஏற்படும் சிக்கல்களை களையும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     

    இந்த டிவியில் வயர்லெஸ் ஏவி டிரான்ஸ்மிஷன் இருப்பதால் கேமிங் கன்சோல், செட்-டாப் பாக்ஸ் மற்றும் இதர சாதனங்களுடன் எளிதில் இணையும் வசதி கொண்டிருக்கிறது. இந்த டிவியில் இருக்கும் ஒற்றை கேபிள் பவர் கார்டு மட்டும் தான் எனலாம். இதில் உள்ள ஜீரோ கனெக்ட் தொழில்நுட்பம் கொண்டு பயனர்கள் கேபிள் மற்றும் இதர சாதனங்களால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க முடியும்.

    எல்ஜி சிக்னேச்சர் OLED M மாடல் மெல்லிய மற்றும் அதிநவீன கேலரி டிசைன் கொண்டிருக்கிறது. இந்த டிவி பயன்படுத்துவோர் டிவி அருகில் மேஜை எதுவும் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த டிவியில் 97 இன்ச் OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஜீரோ கனெக்டிவிட்டி பாக்ஸ் HDMI 2.1, USB, RF, LAN மற்றும் ப்ளூடூத் என ஏராளமான கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை வழங்குகிறது.

    புதிய எல்ஜி சிக்னேச்சர் M 97 இன்ச் மாடல் விலை 35 ஆயிரத்து 186 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 29 லட்சத்து 9 ஆயிரத்து 312 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை முதற்கட்டமாக தென் கொரியாவில் துவங்கி இருக்கிறது. விரைவில் சர்வதேச சந்தையில் இதன் விற்பனை துவங்க இருக்கிறது.

    ×