search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. மாதவ் சேத் தலைமையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஹானர்..!
    X

    திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. மாதவ் சேத் தலைமையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஹானர்..!

    • நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய வியாபாரத்தில் கவனம் செலுத்த ஹானர் பிரான்டு முடிவு.
    • இந்திய ரி-என்ட்ரியை உறுதிப்படுத்தும் வகையில் ஹானர் இந்தியா பிரான்டு டீசர் வெளியீடு.

    ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் மீண்டும் தனது வியாபாரத்தை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் இந்தியாவில் ஹானர் பிரான்டுக்கு ரியல்மி நிறுவனத்தின் முன்னாள் இந்திய தலைவர் மாதவ் சேத் தலைமை வகிப்பார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த தகவல்களை உண்மையாக்கும் பட்சத்தில் ஹானர் மற்றும் மாதவ் சேத் இணைந்து நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட ரி-என்ட்ரியை உறுதிப்படுத்தி உள்ளன.

    இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிரான்டாக ஹானர் இருந்தது. அமெரிக்க அரசு ஹூவாய் நிறுவனம் மீது பிறப்பித்த வர்த்தக தடை காரணமாக, ஹானர் பிரான்டின் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய வியாபாரத்தில் கவனம் செலுத்த ஹானர் பிரான்டு முடிவு செய்தது.

    அதன்படி இந்திய ரி-என்ட்ரியை உறுதிப்படுத்தும் வகையில் ஹானர் இந்தியா பிரான்டு டீசர் ஒன்றை X தளத்தில் வெளியிட்டது. இதனை மாதவ் சேத் ரிடுவீட் செய்து இருந்தார். ரிஎன்ட்ரி பற்றி வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை. எனினும், விரைவில் ஹானர் பிரான்டிங்கில் புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், ஹானர் பிரான்டு முதலில் அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் ஹானர் 90 என்ற பெயரில் அழைக்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

    அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத மத்தியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விலை ரூ. 45 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இது ஹானர் பிரான்டு தற்போது சீனாவில் விற்பனை செய்து வரும் வேரியன்டை விட அதிகம் ஆகும். சீன சந்தையில் ஹானர் 90 ஸ்மார்ட்போனின் விலை CNY 2499 இந்திய மதிப்பில் ரூ. 28 ஆயிரத்து 705 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஹானர் 90 அம்சங்கள்:

    6.7 இன்ச் AMOLED குவாட் கர்வ்டு டிஸ்ப்ளே

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 அக்செல்லரேடெட் எடிஷன் பிராசஸர்

    8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி

    ஆன்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் ஒஎஸ் 7.1

    200MP பிரைமரி கேமரா

    12MP வைடு ஆங்கில் லென்ஸ்

    12MP சென்சார்

    50MP செல்ஃபி கேமரா

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    Next Story
    ×